என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க நடவடிக்கை- அமைச்சர் கணேசன்
    X

    சிகிச்சை பெற்று வரும் மாணவனை அமைச்சர் சி.வெ. கணேசன் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

    விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க நடவடிக்கை- அமைச்சர் கணேசன்

    • ரெயில்வே விபத்து குறித்து கடலூர் மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • விசாரணையின் முடிவில் முழுவிவரம் தெரியவரும்.

    பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமத்திக்கப்பட்டனர். காயமடைந்த மாணவர்கள் மற்றும் வேன் டிரைவர், மாணவர்களை காப்பற்ற சென்ற செம்மங்குப்பத்தை சேர்ந்த அண்ணாதுரை ஆகியோரை அமைச்சர் சி.வெ. கணேசன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பன், சபா.ராஜேந்திரன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், டாக்டர் பிரவின் அய்யப்பன், ஒன்றிய செயலாளர் வெங்கட் ராமன் ஆகியோர் இன்று கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் அமைச்சர் சி.வெ. கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரெயில் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். 2 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். அதில் ஒரு மாணவன் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் முதலமைச்சர் என்னையும், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தையும் செல்போனில் தொடர்பு கொண்டு காயமடைந்தவர்களுக்கு உரிய உதவிகள் செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோரை பார்த்து ஆறுதல் கூறினேன். காயமடைந்தவர்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டுமென அவர்களது பெற்றோர் விருப்பப்பட்டால் அதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ரெயில்வே விபத்து குறித்து கடலூர் மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின் முடிவில் முழுவிவரம் தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×