என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இந்தியா கூட்டணி தலைவர்கள் சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.
சென்னை:
இந்தியா கூட்டணி தலைவர்கள் சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் கார்கே பங்கேற்றார். சிவசேனா, சமாஜ்வாடி, ராஷ்டீரிய ஜனதா தளம், கம்யூனிஸ்டு தலைவர்களும் கலந்துகொண்டனர்.
தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். இதற்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் காணொலி காட்சியில் மற்ற தலைவர்களுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இந்நிலையில், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
- நட்சத்திரம்: கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.
- தமிழ் மாதம்: சித்திரை, ஆவணி
கிழமை: ஞாயிறு
தேதிகள்: 1, 10, 19, 28
நட்சத்திரம்: கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.
தமிழ் மாதம்: சித்திரை, ஆவணி
ராசி: மேஷத்தில் உச்சம், சிம்மத்தில் ஆட்சி
நிறம்: சிவப்பு
ரத்தினம்: மாணிக்கம் (சிவப்பு)
தானியம்: கோதுமை
ஆடை (வஸ்திரம்): சிவப்பு.
- ஏசி பெட்டியில் கஞ்சா ஆயில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
ரெயில்களில் கஞ்சா கடத்தி வருவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து ரெயில்வே போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி கஞ்சா கடத்தி வரும் நபர்களை பிடித்து கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் டாட்டா நகர்-எர்ணாகுளம் செல்லும் ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து இன்று காலை சேலம் வந்த அந்த ரெயிலில் சேலம் போதை தடுப்பு பிரிவு போலீசார் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் உதவியுடன் சோதனை செய்தனர்.
அப்போது ஏசி பெட்டியில் கஞ்சா ஆயில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மதிப்பு ரூ.2 கோடியாகும். இதை ஏ.சி பெட்டியில் பணிபுரியும் உதவி பணியாளர் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த தீபக் செட்டி (31) என்பதும், ஏ.சி பெட்டியில் பெட்ஷீட், தலையணை வழங்கும் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
இவர் கஞ்சா ஆயில் பந்தை கேரளாவிற்கு கடத்தி செல்ல இருந்தார். இவருக்கு இதை யார் வழங்கினார்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து வருகின்ற ஜனவரி 15-ஆம் தேதி வாக்கில் விலகுவதற்கான வாய்ப்புள்ளது.
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- கட்சி தொடங்குவது எளிது தொடர்வது என்பது கடினமானது என கூறினார்.
- விரைவில் 39 தொகுதி வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
சென்னை:
சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, தென்சென்னை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக பேராசிரியர் தமிழ்ச்செல்வி அறிவிக்கப்பட்டுள்ளார். விரைவில் 39 தொகுதி வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

கூட்டத்தில் சீமான் பேசியதாவது:- மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் சிலர் புரிந்து கொள்ளவில்லை. முதல்கட்ட தலைவர்களே இல்லாதபோது இரண்டாம் கட்ட தலைவர் என்பதா? தலைவருக்கு என்ன தகுதி உள்ளது. கட்சி தொடங்குவது எளிது தொடர்வது என்பது கடினமானது என கூறினார்.
- டோக்கனை மட்டும் வழங்கிவிட்டு கைரேகை பதியவில்லை எனக் கூறி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை.
- பொங்கல் பரிசு பெற்ற மூதாட்டி மாலைமலர் நாளிதழுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
அம்பத்தூர்:
அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வருபவர் வள்ளியம்மாள் (70). இவரது கணவர் தாமோதரன் இறந்து ஐந்து வருடங்கள் ஆகும் நிலையில் இவரது மகனும் மாரடைப்பில் இறந்து விட்டார்.
இந்த நிலையில் அவருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டும் சுமார் 2 வருட காலமாக ரேசன் கடைகளில் எந்த விதமான பொருட்களும் வழங்கப்படவில்லை. வெள்ள நிவாரணம் முதல் பொங்கல் தொகுப்பு மற்றும் பணம் வரை இதுவரை தனக்கு வழங்கப்படவில்லை எனவும் ரேசன் கடைக்குச் சென்று கேட்கும் பொழுது கைரேகை சரிவர பதியவில்லை என கூறி அலட்சியப்படுத்தி அனுப்பி வருவதாகவும் இதனால் மனவேதனையில் இருப்பதாகவும் வள்ளியம்மாள் கண் கலங்கினார்.
பொங்கல் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கனை மட்டும் வழங்கிவிட்டு கைரேகை பதியவில்லை எனக் கூறி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை.
இது குறித்த செய்தி நேற்று மாலை மலரில் வெளிவந்தது. இதை பார்த்து உடனடியாக உணவு பொருள் வழங்கல் துறை உயர் அதிகாரிகள் அம்பத்தூர் மண்டல உணவு பொருள் வழங்கல் உதவி ஆணையருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்று காலை கள்ளிக்குப்பம் கங்கை நகரில் உள்ள நியாய விலை கடைக்கு விரைந்து வந்த அதிகாரிகள் மூதாட்டியை கடைக்கு அழைத்து வந்து பொங்கல் பரிசு தொகுப்பு, வேட்டி சேலை, மற்றும் ரூ.1000 ரொக்க பணம் ஆகியவற்றை வழங்கினர். மேலும் மழை நிவாரணம் ரூபாய் 6 ஆயிரம் பெறுவதற்கு வழிவகை செய்வதாகவும் அதற்கு முதல் கட்டமாக அதற்குண்டான படிவத்தையும் பூர்த்தி செய்து எடுத்துச் சென்றுள்ளனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்க பணம் பெற்ற மூதாட்டி மாலைமலர் நாளிதழுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
- கடையில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
- போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அண்ணா மடுவு கண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவர் அந்த பகுதியில் மின் சாதன பொருட்கள் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அருகே உள்ள ஒரு வீட்டுக்கு மின்சாதன பொருட்களை பழுது பார்ப்பதற்காக துரைசாமி கடையை திறந்து வைத்து விட்டு சென்றுள்ளார். அப்போது கடையில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேலும் கடையில் பழுது பார்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ், வாசிங்மிசின் உள்பட பழைய மின் சாதன பொருட்களிலும் தீ பிடித்து மள மளவென எரிய தொடங்கியது.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை உற்றி தீயை அணைத்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் இது குறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இதில் கடையில் இருந்த பிரிட்ஜ், வாசிங்மிசின் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பழைய மின் சாதன பொருட்கள் எரிந்து சேதமானது.
பின்னர் இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிய வந்தது. மேலும் போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தென் சென்னை மேற்கு மாவட்ட பா. ம. க. செயலாளர் அ. முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது.
- அன்புமணி ராமதாஸ், அவரது மனைவி சவுமியா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தனர்.
சென்னை
தமிழ்நாடு மலர் காய்கனி வியாபாரிகள் நல சங்கம், கீரை மொத்த வியாபாரிகள் சங்கம் மற்றும் தென் சென்னை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து நடத்தும் 5-ம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா கோயம்பேடு கீரை மார்க்கெட் வணிக வளாகத்தில் தென் சென்னை மேற்கு மாவட்ட பா. ம. க. செயலாளர் அ. முத்துக்குமார் தலைமை யில் நடைபெற்றது. பா. ம. க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அவரது மனைவி சவுமியா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தனர்.
பா. ம. க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ., வடக்கு மண்டல இணை பொது செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே. மூர்த்தி, மாநில தேர்தல் பணி குழு செயலாளர் மு. ஜெயராமன், ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அமைப்பு செயலாளர் ஈகை தயாளன், மாவட்ட தலைவர் கே. எம். ஏழுமலை, மாநில செயற்குழு உறுப்பினர் மு. தாமோதரன், நெடி பு. நல்லதம்பி, ஓம்சக்தி ஜெயமூர்த்தி, மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் கீரை வை. கோவிந்தராஜ் மற்றும் ஏராளமான பெண்கள் விழாவில் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை
தமிழ்நாடு மலர் காய்கனி வியாபாரிகள் நல சங்கம், கீரை மொத்த வியாபாரிகள் சங்கம் மற்றும் தென் சென்னை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
- முதலீடு செய்தவர்களுக்கு அவர்களின் பணத்தை திரும்பப்பெற்றுத்தராததை நியாயப்படுத்த முடியாது.
- டி.ஜி.பி நிலையிலான காவல் அதிகாரி ஒருவரை சிறப்பு அதிகாரியாக நியமிக்கவும் அரசு முன்வர வேண்டும்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிதி நிறுவன மோசடிகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் பணத்தைப் பெற்றுத்தர எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
மதுரம் புரமோட்டர்ஸ் மட்டுமின்றி வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த எல்.என்.எஸ். சர்வதேச நிதிச்சேவை நிறுவனம் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் ஒரு லட்சம் பேரிடம் ரூ.6,000 கோடியை முதலீடாக பெற்று ஏமாற்றியுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆரூத்ரா கோல்டு நிறுவனம் 93,000 பேரிடம் ரூ.2125 கோடியையும், திருச்சியைச் சேர்ந்த எல்பின்ஸ் நிதி நிறுவனம் 7,000 பேரிடமிருந்து ரூ,.500 கோடியையும் முதலீடாக வசூலித்து திருப்பித்தராமல் ஏமாற்றியிருப்பதாக பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை தெரிவித்திருக்கிறது.
இந்த மோசடிகளின் மொத்த மதிப்பு ரூ.8,625 கோடி ஆகும். மதுரம் புரமோட்டர்ஸ் போன்ற நிறுவனங்கள் மூடப்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாகியும், அதில் முதலீடு செய்தவர்களுக்கு அவர்களின் பணத்தை திரும்பப்பெற்றுத்தராததை நியாயப்படுத்த முடியாது. நிதி நிறுவன மோசடிகள் தொடர்பான வழக்குகளையும் விரைவுபடுத்தி, நிதிநிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு அவர்களின் பணத்தைத் திரும்பப் பெற்றுத்தர வேண்டும். அதற்கான பணிகளை கண்காணிப்பதற்காக டி.ஜி.பி நிலையிலான காவல் அதிகாரி ஒருவரை சிறப்பு அதிகாரியாக நியமிக்கவும் அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 1,224 கோவில்களில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளது.
- இந்த மாத இறுதிக்குள் மேலும் 40 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
சென்னை:
அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று கோவில்களின் கட்டண சேவைகளில் விரைவாக கட்டண சீட்டுகளை வழங்கிடும் வகையிலும், கட்டணச் சீட்டு மையங்களில் கூட்டத்தினை தவிர்க்கவும், பக்தர்கள் எளிய முறையில் பற்று அட்டை மற்றும் கடன் அட்டை மூலமாக கட்டணச் சீட்டு பெறும் வகையில் இரண்டாம் கட்டமாக, 260 கோவில்களுக்கு 315 கையடக்க கருவிகளை மண்டல இணை ஆணையர்களிடம் வழங்கினார். பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 1,224 கோவில்களில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மேலும் 40 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 2024-ம் ஆண்டு இறுதிக்குள் 2 ஆயிரம் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்திடும் வகையில் செயலாற்றி கொண்டிருக்கிறோம்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்து உள்ள இடத்தினை மக்களின் பயன்பாட்டிற்கு உகந்த வகையில், அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று இறுதி முடிவினை எடுக்கும். ஆகவே தற்போது இதில் தேவையற்ற சர்ச்சையை கிளப்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விமான டிக்கெட் முன்பதிவை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடங்கி உள்ளது.
- சென்னையில் இருந்து லட்சத்தீவுக்கு நேரடி விமான சேவை தொடங்க உள்ளது.
சென்னை:
அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ந்தேதி நடக்கிறது. நாடு தழுவிய அளவில் கும்பாபிஷேக விழாவை வெகு விமரிசையாக கொண்டாட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதனையொட்டி சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. ரூ.6,499 என்ற கட்டணத்தில் விமான சேவை முன்பதிவு தொடங்கியது.
சென்னையில் இருந்து அயோத்திக்கு பகல் 12:40-க்கு புறப்படும் விமானம் மாலை 3:15-க்கு சென்றடையும். அயோத்தியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6:20-க்கு சென்னை வந்து சேர உள்ளது.
இதற்கான விமான டிக்கெட் முன்பதிவை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடங்கி உள்ளது. வரும் பிப்.1 முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
மேலும் சென்னையில் இருந்து லட்சத்தீவுக்கு நேரடி விமான சேவை தொடங்க உள்ளது. சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கும் அடுத்த மாதம் முதல் கூடுதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- மறைந்த ஜனனியின் சேவை மனப்பான்மையைப் போற்றுகிறேன்.
- ஜனவரி 29-ஆம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பூரணம் அம்மாள் கௌரவிக்கப்பட உள்ளார்கள்.
சென்னை:
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மதுரை ஒத்தக்கடை கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள் சார்பாகவும், அப்பள்ளியில் பயிலும் வருங்கால அறிஞர்கள் சார்பாகவும் பூரணம் அம்மாள் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்து, அவரின் செல்வ மகள் மறைந்த ஜனனியின் சேவை மனப்பான்மையைப் போற்றுகிறேன்.
"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" எனும் பாரதியின் வரிகளுக்கு ஏற்ப வாழும் பூரணம் அம்மாள் அவர்களின் தொண்டு மகத்தானது!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி ஜனவரி 29-ஆம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பூரணம் அம்மாள் கௌரவிக்கப்பட உள்ளார்கள் என கூறியுள்ளார்.
1.5 ஏக்கர் நிலத்தை அரசுப் பள்ளிக்கு வழங்கிய "ஆயி என்ற பூரணம் அம்மாள்" அவர்களை வணங்குகிறேன்! போற்றுகிறேன்!
— Anbil Mahesh (@Anbil_Mahesh) January 13, 2024
மதுரை ஒத்தக்கடை கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள் சார்பாகவும், அப்பள்ளியில் பயிலும் வருங்கால அறிஞர்கள் சார்பாகவும் பூரணம் அம்மாள் அவர்களுக்கு நன்றிகளைத்… pic.twitter.com/d4QYcGUjzk






