என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நீதியைக் காக்க தன்னுடைய உயிரையே தந்த மன்னர் ஆட்சி செய்த இடம்.
    • புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா, மாபெரும் பண்பாட்டு விழாவாக இது நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    மதுரை நகரத்தின் மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும் மா மதுரை விழா வெங்கடேசன் எம்.பி. தலைமையில் மதுரையில் நடக்கிறது.

    இந்த விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.

    பாண்டிய மன்னர்கள் தலைநகராக ஆட்சி செய்த நகரம்.

    ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியப் பாண்டியன் ஆட்சி செய்த நகரம்.

    "தவறு செய்தவன் மன்னனே ஆனாலும்" என்று மன்னனைக் கண்ணகி கேள்வி கேட்ட மண் இது.

    நீதியைக் காக்க தன்னுடைய உயிரையே தந்த மன்னர் ஆட்சி செய்த இடம்.

    திருமலை நாயக்கரும், ராணி மங்கம்மாளும் ஆண்ட பூமி.

    புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் இருக்கும் கோயில் நகரம் இது.

    அனைத்துக் கலைகளும் ஒருங்கே இருக்கும் பண்பாபாட்டுச் சின்னமாக இந்தக் கோவில் கருதப்படுகிறது.

    புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா, மாபெரும் பண்பாட்டு விழாவாக இது நடைபெற்று வருகிறது.

    1866-ம் ஆண்டே நகராட்சியான ஊர் இது.

    சென்னைக்கு அடுத்ததாக 2-வது மாநகராட்சியாக 1971-ம் ஆண்டு மதுரையைதான் மாநகராட்சி ஆக்கினார் அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி.

    அண்ணல் காந்தி தன்னை அரையாடை மனிதராக மாற்றிக்கொண்ட இடமும் இந்த மதுரை தான்.

    ஏன் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய தி.மு.க. இளைஞரணி தொடங்கப்பட்டதும் இந்த மதுரை மண்ணில் இருந்துதான்.

    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இத்தகைய மதுரையை மதுரைக்காரர்கள் மட்டுமல்ல; எல்லோரும் போற்றலாம்; மதுரையைப் போற்றுவோம் என்று கொண்டாடலாம்!

    இந்த ஆண்டு மதுரை போற்றும் விழாவை ஆர்வத்துடன் முன்னெடுத்துச் செல்லும் இந்திய தொழில் கூட்டமைப்பான சி.ஐ.ஐ. அமைப்புடன் இணைந்து உள்ள இளையோர் அமைப்பான "யங் இந்தியன்ஸ்" அமைப்பை பாராட்டுகிறேன். ஊரைப் போற்றும் இளைஞர்களாக நீங்கள் வளர்வது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

    ஊரைப் பாதுகாக்க வேண்டும். அதன் பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் நவீன வசதிகள் எல்லாவற்றையும் ஏற்படுத்தியும் தரவேண்டும். பழமைக்கு பழமையாக, புதுமைக்கு புதுமையாக இளைஞர்கள் இயங்க வேண்டும். பொழுதுபோக்கு விழாவாக இல்லாமல், பண்பாட்டுத் திருவிழாவாக இதை நீங்கள் நடத்திக்கொண்டு வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

    தமிழ் மொழி, தமிழ் இனம் என்ற பெருமையும் பெருமிதமும் உள்ளவர்களாக எதிர்காலத் தலைமுறை வளர வேண்டும்!

    இதுபோன்ற விழாக்கள் கூட்டுறவு எண்ணத்தையும், ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்ற உணர்வையும் உருவாக்கும். சாதி, மத வேறுபாடுகளுக்கு இடமளிக்காமல், இதுபோன்ற பண்பாட்டு விழாக்களை எல்லோரும் கொண்டாட வேண்டும்.

    மனிதநேயம் போற்றுவோம்! மக்கள் ஒற்றுமை போற்றுவோம்! என்ற அடிப்படையில் இதுபோன்ற விழாக்கள் மாநிலம் முழுவதும் நடைபெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மதுரை மேயர் இந்திராணி, தளபதி எம்.எல்.ஏ., கலெக்டர் சங்கீதா, மாமதுரை விழா தலைவர் விக்ராந்த் கார்மேகம், பைசல் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் 7-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர்,ஆக.8-

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் 7-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்பு களின் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம்.

    இதற்காக தற்போது முதலே விநாயகர் சிலைகள் உற்பத்தி செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவ ட்டம் அலகுமலை அருகே விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்து ள்ளது. சுமார் ஒரு அடி முதல் 5 அடி வரையிலான விநாயகர் சிலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வர்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த வருடம் கோமாதா விநாயகர் , சிவன் பார்வதி யுடன் கூடிய விநாயகர், முருகனோடு அமர்ந்துள்ள விநாயகர் , ஆஞ்சநேயர் தூக்கி செல்வது போன்ற விநாயகர் உள்ளிட்ட வடிவ ங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்து அமைப்புகள் தங்கள் பகுதிகளுக்கு தேவையான விநாயகர் சிலைகளை பதிவு செய்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்திக்கு ஓரிரு நாட்கள் முன்னதாக இங்கிருந்து விநாயகர் சிலைகளை எடுத்து செல்வர்.

    விநாயகர் சிலைகள் வழிபாட்டிற்கு பின்பு ஆறு மற்றும் குளங்களில் கரை க்கும் போது மாசு ஏற்படு த்தாத வகையில் உற்பத்தி செய்ய வேண்டும் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாசு ஏற்படுத்தாத வகை யிலான பொருட்களை கொண்டு சிலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக சிலை வடிவ மைப்பாளர்கள் தெரிவி த்துள்ளனர்.* * * திருப்பூர் அலகுமலை பகுதியில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வர்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

    • பேனரில் மியா கலிஃபா பால்குடம் எடுப்பது போன்ற புகைப்படத்தை அச்சிட்டுள்ளனர்.
    • பேனர் அச்சிட்ட சில இளைஞர்களுக்கு 18 வயது கூட பூர்த்தி ஆகவில்லை.

    ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு உகந்ததாகக் கருதுகின்றனர். அந்த நாளில் கோவில்களில் விளக்கு பூஜை என்ற கூட்டு வழிபாட்டினை பெண்கள் மேற்கொள்வார்கள்.

    காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் ஆலயத்தில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நாளை நடைபெறவுள்ளது.

    இந்த விழாவிற்கு அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் பேனர் அடித்துள்ளனர். அந்த பேனரில் பிரபல பார்ன் நடிகை மியா கலிஃபா பால்குடம் எடுப்பது போன்ற புகைப்படத்தை இளைஞர்கள் அச்சிட்டுள்ளனர்.

    அந்த பேனர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த பேனரில் இளைஞர்கள் ஆதார் கார்டு வடிவில் தங்களது பெயர், வயது உள்ளிட்ட விவரங்களை அச்சிட்டுள்ளனர். அதில் உள்ள சில இளைஞர்களுக்கு 18 வயது கூட பூர்த்தி ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது.
    • 700.400 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    திருச்சி

    திருச்சி விமான நிலை யத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய் , இலங்கை, அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் தங்கம் பல்வேறு முறைகளில் மறைத்து கடத்தி வரும் பயணிகளிடமிருந்து தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் இருக்கை ஒன்றில் பார்சல் இருந்தது தெரிய வந்தது. இதனை அறிந்த விமான நிறுவன ஊழியர்கள் உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக விமானத்தில் ஏறி சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது இருக்கையின் அடியில் மறைத்து 6 பார்களாக எடுத்து வரப்பட்ட 700.400 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.47.50 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அந்த இருக்கையில் அமர்ந்து வந்த பயணியின் ஆவணங்களை சோதனை செய்தபோது அந்த பயணி விமான நிலைய வளாகத்திற்குள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில் தான் கொண்டு வந்த தங்கத்தை இருக்கையில் வைத்து விட்டு வந்ததாக தெரிவித்ததை தொடர்ந்து அந்த பயணியை கைது செய்து, தங்கத்தை பறிமுதல் செய்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 10 இடங்களில் கருவிகள் பொருத்தப்பட்டு வருகிற்து.
    • முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடியும்.

    நெல்லை:

    தமிழகத்தில் கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் உள்ளிட்ட மாற்றங்களை முன்கூட்டியே உடனுக்குடன் கண்டறியும் வகையில் 450 இடங்களில் இ.டபிள்யூ.எஸ். எனும் ஆரம்ப எச்சரிக்கை நவீன கருவிகளை அமைக்கும் பணிகளை பேரிடர் மேலாண்மை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

    நெல்லை மாநகராட்சி மூலமாக கேபாசிட்டிஸ் என்னும் திட்டத்தின் கீழ் ரூ.88 லட்சம் மதிப்பில் தாமிரபரணி, ராமநதி மற்றும் கடனா நதிகளில் வெள்ளப்பெருக்கினை முன்கூட்டியே கண்காணித்து எச்சரிக்கை குறுஞ்செய்திகளை அனுப்பும் வகையில் 10 இடங்களில் கருவிகள் பொருத்தப்பட்டு வருகிற்து.

    தனியார் நிறுவனத்தின் மூலம் அமைக்கப்படும் இந்த கருவிகள் விரைவில் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு அதன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கருவிகள் தாமிரபரணி, கடனா, ராமநதி வழித்தடங்களான கோபாலசமுத்திரம், கோவில்குளம், ஆழ்வார்குறிச்சி, ஆலடியூர், பொட்டல்புதூர், கல்லிடைக்குறிச்சி, முக்கூடல், முறப்பநாடு, சேரன்மகாதேவி, கொக்கிரகுளம் ஆகிய இடங்களில் அமைகிறது.

    இதன் மூலம் ஆறுகளில் எவ்வளவு வெள்ளம் வரும்? எப்போது வரும்? என்பது உள்ளிட்ட அனைத்து விபரங்களும் எஸ்.எம்.எஸ். மூலம் அந்தந்த பகுதி மக்களுக்கு தெரியப்படுத்தப்படும். இதன் மூலம் வெள்ள அபாயத்தை முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடியும்.

    இந்த தகவல்கள் மாநகராட்சி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை, முக்கிய அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். இதில் சேரன்மகாதேவி மற்றும் கொக்கிரகுளத்தை தவிர மற்ற இடங்களில் கருவி அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

    இந்த கருவியில் காமிரா, சென்சார் வசதி, சோலார் பேனல் உள்ளிட்ட நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கருவிகள் அமைப்பது குறித்து கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா ஆகியோர் மற்ற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இ.ஓ.எஸ்.-08 செயற்கைக்கோள் மொத்தம் 176 கிலோ எடை கொண்டது.
    • இ.ஓ.ஐ.ஆர். கருவி பேரிடர் மேலாண்மை சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக இரவிலும் துல்லியமான படம் எடுக்க உதவும்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ சார்பில் கார்டோ சாட், ஸ்காட்சாட், ரிசர்ட் உள்ளிட்ட பல்வேறு செயற்கைக்கோள்கள் தொலை தொடர்பு பயன்பாட்டுக்காக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் புவிக்கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இ.ஓ.எஸ்.-08 எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ தற்போது வடிவமைத்துள்ளது.

    இந்த செயற்கைக்கோளை சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவுவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து வருகிற 15-ந்தேதி காலை 9.17 மணிக்கு எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

    இ.ஓ.எஸ்.-08 செயற்கைக்கோள் மொத்தம் 176 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் ஓராண்டாகும். இது தரையில் இருந்து 475 கி.மீ. தொலைவில் உள்ள புவி தாழ் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ப்ராரெட் பேலோடு, குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்- ரிப்ளெக்டோமெட்ரி பேலோடு மற்றும் சிக் யுவி டோசிமீட்டர் ஆகிய 3 ஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இ.ஓ.ஐ.ஆர். கருவி பேரிடர் மேலாண்மை சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக இரவிலும் துல்லியமான படம் எடுக்க உதவும். இதேபோல் ஜி.என்.எஸ்.எஸ்-ஆர் கருவி மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகளை கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும். சிக் யுவி டோசி மீட்டர் (SiC UV Dosimeter) விண்ணில் புற ஊதா கதிர்வீச்சு அளவை கண்காணித்து எச்சரிக்கை அளிக்கும். இது மனிதர்களை விண்ணுக்கும் அனுப்பும் ககன்யான் திட்ட விண்கலத்திலும் இடம் பெற உள்ளது. மேலும் எதிர்கால தொழில்நுட்ப தேவைக்கான ஆய்வுகளை இந்த கருவிகள் மேற்கொள்ள உள்ளன என்றும் இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நம்ப வேண்டாம் என்று லைகா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
    • அறிவிப்புகள் லைகா அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியாகும்.

    தென்னிந்திய திரையுலகில் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனம் லைகா. பல்வேறு பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிலையில், லைகா நிறுவனத்தின் புதிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வழங்குவதாக கூறும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று லைகா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "லைகா புரொடக்ஷன்ஸில் நடிக்க வாய்ப்பு தருவதாக பலர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அழைப்புகளை விடுப்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. லைகா தயாரிக்கும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அல்லது ஆடிஷன் பற்றிய அறிவிப்புகள் எங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியாகும்."

    "நாங்கள் அறிவிக்காத ஆடிஷன் மற்றும் வாய்ப்பு வழங்குவதாக கூறும் தகவல்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் மேற்கொள்ளப்படும் கேஸ்டிங் அழைப்புகள் மற்றும் ஆடிஷன்களுக்கு அழைப்பு விடுக்கும் மூன்றாம் தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். எச்சரிக்கையாக இருங்கள்," என்று தெரிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கூடுதல் வேலையின் காரணமாக பராமரிப்பு பணிகளை வரும் 18-ம் தேதி வரையில் நீடிக்க சென்னை கோட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • நெல்லையிலிருந்து வரும் 16-ம் தேதி காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வரும் வந்தே பாரத் ரெயில் ரத்து.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணி வரும் 14-ம் தேதி வரையில் மேற்கொள்ளப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சில கூடுதல் வேலையின் காரணமாக பராமரிப்பு பணிகளை வரும் 18-ம் தேதி வரையில் நீடிக்க சென்னை கோட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இதனால் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து மற்றும் பகுதி நேர ரத்து செய்யப்பட உள்ளது.

    * நெல்லையிலிருந்து வரும் 16-ம் தேதி காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வரும் வந்தே பாரத் ரெயில் (வண்டி எண்.20666) ரத்து செய்யப்படுகிறது.

    * செங்கோட்டையிலிருந்து வரும் 15, 16 ஆகிய தேதிகளில் மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் பொதிகை அதிவிரைவு ரெயில் (12662) செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.

    மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து வரும் 16, 17 ஆகிய தேதிகளில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவிரைவு ரெயில் (12661), அதற்கு மாற்றாக செங்கல்பட்டிலிருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும்.

    * நெல்லையிலிருந்து வரும் 15, 16 ஆகிய தேதிகளில் இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு ரெயில் (12632) செங்கல்பட்டில் நிறுத்தப்படும்.

    மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து வரும் 16, 17 ஆகிய தேதிகளில் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் அதிவிரைவு ரெயில் (12631), அதற்கு மாற்றாக செங்கல்பட்டிலிருந்து 9.10 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும்.

    * கன்னியாகுமரியிலிருந்து வரும் 15-ம் தேதி மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலானது செங்கல்பட்டிலேயே நிறுத்தப்படும். மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து வரும் 16, 17 ஆகிய தேதிகளில் மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12633), அதற்கு மாற்றாக செங்கல்பட்டிலிருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும்.

    * கன்னியாகுமரியிலிருந்து வரும் 14-ம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு டெல்லி ஹசரத் நிஜாமுதின் செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயில் (12641) விழுப்புரம், வேலூர், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா் ஆகிய மாற்றுப்பாதை வழியாக டெல்லி ஹசரத் நிஜாமுதின் செல்லும்.

    * மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து திருச்சி வரும் அதிவிரைவு ரெயில் (12663) வரும் 15-ம் தேதி பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாற்றுப்பாதை வழியாக திருச்சி செல்லும்.

    * சென்னை எழும்பூரில் இருந்து இன்று (8-ம் தேதி) முதல் வரும் 17-ம் தேதி வரை காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் இரவு 9 மணிக்கு பதிலாக இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செம்மொழி பூங்கா தொடர்பாக இவர் வெளியிட்ட பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
    • கிறிஸ்துவ மத போதகர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு

    சென்னை:

    'பிரியாணி மேன்' என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருபவர் அபிஷேக் ரபி.

    இவர் தன்னுடைய யூட்யூப் சேனல்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    செம்மொழி பூங்கா தொடர்பாக இவர் வெளியிட்ட பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

    இந்நிலையில் தனது யூடியூப் பக்கத்தில் அபிஷேக் ரபி, பெண்களை பற்றி அவதூறான கருத்துக்களை கூறி இருந்ததாக பெண் ஒருவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    இதனையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் யூடியூபர் அபிஷேக் ரபி மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

    இந்நிலையில், யூடியூபர் அபிஷேக் ரபி மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கிறிஸ்துவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதாக பிலிப் நெல்சன் லியோ என்ற மத போதகர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    • முதலமைச்சர் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வருகிற 27-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.
    • மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்ல இருக்கும் நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதால், இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

    சென்னை:

    தமிழக அமைச்சரவையின் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி நடந்தது. அதன்பிறகு பாராளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக சட்டசபையின் மானிய கோரிக்கை விவாத கூட்டம் ஆகியவை தொடர்ந்து நடந்ததால் அமைச்சரவை கூட்டம் எதுவும் நடைபெறவில்லை.

    இந்தநிலையில் வருகிற 13-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் அதில் விவாதிக்கப்படும் பொருள்கள் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வருகிற 27-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். மீண்டும் அவர் அடுத்த மாதம் (செப்டம்பர்) 14-ம் தேதி தான் சென்னை திரும்புகிறார். எனவே தான் இந்த அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இந்த கூட்டத்தில் அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் அங்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு தேவையான திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யலாம் என்று கூறப்படுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்ல இருக்கும் நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதால், இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

    • வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 63-வது இடத்தில் உள்ளது.

    இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் மோதினர்.

    இந்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.

    இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    இந்த நிலையில் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வினேஷ் போகத், நீங்கள் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் ஒரு சாம்பியனாக இருப்பீர்கள். ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் தகுதி நீக்கம் உங்களின் வலிமையையும், திறமையையும் குறைக்காது.

    சில கூடுதல் கிராம்கள் உங்கள் நட்சத்திர பயணம் மற்றும் சாதனைகளை மறைக்க முடியாது.

    நீங்கள் எப்பொழுதும் நம் தேசத்தின் பெருமைமிக்க மகளாக இருப்பீர்கள்.

    இந்த ஏமாற்றத்தின் தருணத்தில் நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். நீங்கள் ஒரு போர்வீரரைப் போல் எழுந்து முன்புபோல் வெற்றி பெறுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
    • உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிப்பு.

    ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 63-வது இடத்தில் உள்ளது.

    இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் மோதினர்.

    இந்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.

    இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    இந்த நிலையில் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டிருக்கிறார்.

    அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    வினேஷ், நீங்கள் ஒவ்வொரு வகையிலும் உண்மையான சாம்பியன்.

    உங்கள் திறன், வலிமை மற்றும் இறுதிப் போட்டிக்கான குறிப்பிடத்தக்க பயணம் மில்லியன் கணக்கான இந்திய மகள்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.

    தகுதி நீக்கத்தால் மனதையும் சாதனைகளையும் குறைத்துவிட முடியாது.

    நீங்கள் ஒரு பதக்க வாய்ப்பை இழந்தாலும், உங்கள் அபாரமான உறுதியால் அனைவரின் மனதையும் வென்றுள்ளீர்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×