என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தை, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை புறக்கணித்துள்ளன.
- தேநீர் விருந்தில் பா.பென்ஜமின் ஆகியோர் கலந்து கெள்கிறார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை:
சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். கவர்னர் மாளிகையில் நாளை மாலை நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை தி.முக. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தை, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை புறக்கணித்துள்ளன.
ஆனால் கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் அ.தி.மு.க. பங்கேற்கிறது. அக்கட்சியின் அமைப்பு செயலாளர்கள் டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தங்கம் விலை நேற்று சவரன் ரூ.52,520-க்கு விற்பனையானது.
- ஒரு கிராம் வெள்ளி ரூ.88.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரன் ரூ.52,520-க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.52,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,555-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.88.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
- ஜனாதிபதியின் மெச்சத்தக்க சேவைக்கான விருது தமிழகத்தில் 21 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
மத்திய அரசு ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கங்களை வழங்கி வருகிறது. மெச்சத்தகுந்த பணிக்காக இது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜனாதிபதி பதக்கம் பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த 23 போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்று உள்ளன.
ஊர்க்காவல் படை டி.ஜி.பி.யாக பணியாற்றி வரும் வன்னிய பெருமாள், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் பிரிவில் பணியாற்றி வரும் வன்னிய பெருமாள், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக், ஐ.ஜி.க்கள் கண்ணன் (தென் சென்னை கூடுதல் கமிஷனர்) ஏ.ஜி.பாபு (தகவல் தொழில் நுட்ப பிரிவு), கமிஷனர் பிரவின் குமார், அபினவ், சூப்பிரண்டுகள் பெரோஸ் கான் அப்துல்லா, சுவிஷ்குமார், கிங்ஸ்லின், ஷியாமளா தேவி, பிரபாகர், பாலாஜி சரவணன் உள்ளிட்டோருக்கும் ஜனாதிபதி விருது மற்றும் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் சூப்பிரண்டுகள் ராதாகிருஷ்ணன், ஸ்டீபன், டி.எஸ்.பி.க்கள் டில்லிபாபு, மனோகரன், சங்கு, இன்ஸ்பெக்டர்கள், சந்திரமோகன், ஹரிபாபு, தமிழ்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளி, ரவிச்சந்திரன், முரளிதரன் ஆகியோருக்கும் ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் பதக்கங்களை அணிவித்து கவுரவிக்க உள்ளார்.
- மாஞ்சோலைக்கு சூழல் சுற்றுலா செல்வதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
- கனமழை பெய்ததால் தலையணையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாஞ்சோலைக்கு சூழல் சுற்றுலா செல்வதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
அதன்படி மாஞ்சோலை பகுதியில் சூழல் சுற்றுலா சேவையை நிறுத்தி வைத்துள்ளதாகவும், மறு அறிவிப்பு வரும்வரை சுற்றுலா பயணிகள் யாரும் அங்கு வர வேண்டாம் எனவும் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் இளையராஜா அறிவித்துள்ளார்.
களக்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மழைப்பகுதியை ஒட்டி கனமழை பெய்ததால் தலையணையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக தலையணையிலும் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 120 அடியாக இருந்தது.
சேலம்:
கர்நாடகாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை கடந்த மாதம் 30-ந் தேதி நிரம்பியது. பின்னர் நீர்வரத்தை விட அதிகளவில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் இந்த ஆண்டில் மேட்டூர் அணை 2-வது முறையாக நிரம்பியது. மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் நேற்று அது வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்த நிலையில் இன்று அது வினாடிக்கு 26 ஆயிரத்து 864 கனஅடியாக குறைந்து காணப்படுகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 26 ஆயிரத்து 864 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பவர்ஹவுஸ் வழியாக 21500 கனஅடியும், 16 கண்பாலம் வழியாக 2500 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதே போல் கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 123.06 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரத்து 350 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 14 ஆயிரத்து 512 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே போல் கபினி அணைக்கு வினாடிக்கு 5960 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 19 ஆயிரத்து 512 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது.
- தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.
- பத்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (புதன்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) வரை தமிழ்நாட்டில் அனேக இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் கோவை மற்றும் நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (ஆகஸ்ட் 15) நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், ஆகஸ்ட் 16 ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அனைத்து விதமான பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தினவிழாவை மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் கொண்டாட வேண்டும்.
- பிளாஸ்டிக் வகையிலான தேசிய கொடியை பயன்படுத்தக் கூடாது.
சென்னை:
சுதந்திர தினம் நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்படும். அந்தவகையில் தேசிய கொடியை ஏற்றும் நிகழ்ச்சியில் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள் குறித்த சுற்றறிக்கையை, பள்ளிகளுக்கு கல்வித் துறை வெளியிட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-
அனைத்து விதமான பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தினவிழாவை மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் கொண்டாட வேண்டும். பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்கரித்து தேசிய கொடி ஏற்றி விழாவை கொண்டாடலாம்.
ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து விழாவில் பங்கு பெற செய்ய வேண்டும். பிளாஸ்டிக் வகையிலான தேசிய கொடியை பயன்படுத்தக் கூடாது. மேலும், தேசிய கொடியை தலைகீழாகவோ, கிழிந்ததையோ ஏற்றக்கூடாது. தேசிய கொடியை ஏற்றுவதில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- கோவில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம்.
- தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது.
சென்னை:
கோவில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம், இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது.
ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம், தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம்.
ஆனால் தேங்காய் உடைப்பதில் ஒரு சிறிய தத்துவ தகவல். இதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது.
தேங்காயின் மேல் கடுமையான ஓடும், அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும், அதனுள் நீரும் உள்ளது.
உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும்.
உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.
இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது.
ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.
ஈசுவர சன்னிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தைக் காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.
இவ்வளவு உட்கருத்து இருப்பதால்தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம் முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணரவேண்டும்.
- 1872-ம் ஆண்டு தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது.
- முதலீடு செய்யும் பணத்திற்கு 10% முதல் 11% வரை வட்டி உறுதி என கவர்ச்சிகரமான விளம்பரம்.
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் என்ற கட்சி நடத்தி வருபவர் தேவநாதன். இவர் வின் டிவி உரிமையாளர் ஆவார். கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பாரபரியம் மிக்க மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் (Mylapore Hindu Permanent Fund Nidhi Limited) நிறுவனத்தின் மீது கிட்டத்தட்ட 140 பேர் தற்போது புகார் அளித்துள்ளார்கள். இதில் 50 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். ஆனால் 500 கோடி ரூபாய்க்கு மேல் அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் மாயம் ஆகியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள தேற்கு மாடவிதியில் 1872-ம் ஆண்டு தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் 150 ஆண்டுகள் பழமையானது. 5 ஆண்டுகளுக்கு மேலாக நிறுவாக இயக்குனராகவும், உரிமையாளரகவும் இருந்தவர்தான் தேவநாதன்.
இந்நிறுவனத்திற்கு சென்னையில் மட்டும் 5 கிளைகள் உள்ளன. தற்போது 5000-க்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகையாகயும் இதில் உறுப்பினராகவும் உள்ளனர். இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு 10% முதல் 11% வரை வட்டி உறுதி என கவர்ச்சிகரமான விளம்பரத்தை அளித்து அதை நம்பி தமிழக முழுவதுமே பல்லாயிர கணக்கானோர் நிறந்தர வைப்பு தொகையாக ரூ. 525 கோடிக்கு மேல் முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிறுவனத்தில் குறைந்தபட்ச வைப்பு நிதியாக 1 லட்சம் எனவும் அதிக பட்சமாக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நிரந்தர வைப்பு தொகையாக செலுத்தலாம். முக்கியமாக செலுத்தும் பணத்திற்கு 10 முதல் 11% வட்டி அளிக்கப்படும் என்றும் அதை நம்பி தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் 10 லட்சம் வரையிலும், 50 லட்சம் வரையிலும், 2 கோடி வரையிலுமே ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வு தொகை மற்றும் வட்டி தொகை முறையாக வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தினமும் மயிலாப்பூர் பகுதியில் உள்ள இந்த நிதி நிறுவனத்தில் சென்று பணத்தை கேட்டுவந்துள்ளனர். ஆனால் அதற்கு அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை .
அதனால் கடந்த ஜூன் மாதம் 6-ம்தேதி முதலீட்டாளர்கள் இந்நிதி நிறுவனத்தில் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் அறிவுரை படி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளனர். 140-க்கும் மேற்பட்டோர் புகார்களை அளித்துள்ளனர். இந்த புகார் அளிக்கப்பட்ட பிறகுதான் வழக்கு பதிவு செய்து விசாரணையும் தொடங்கியது.
இந்த விசாரணையின் 140 பேர் புகார் அளித்தில் அவர்களிடம் இருந்து ரூ. 50 கோடிக்கு அதிகமாக மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது என விசாரணையிலும் தெறிய வந்துள்ளது.
இந்த விசாரணைக்கு பிறகுதான் வின் டிவி தேவநாதனை திருச்சியில் வைத்து பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்து அவரிடம் அங்கேயே விசாரணையும் நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில்தான் 140 பேர் 50 கோடிக்கும் மேலாக முதலீடு செய்துள்ளார்கள் என்று தெறியவந்தது.
இந்த முதலீடு செய்த பணத்தை எங்கு எவ்வாறு மறைத்து வைத்துள்ளார் இல்லை வேறு யாரிடமும் முதலீடு செய்துள்ளாரா? என்று கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- அமலாக்கத்துறை நேற்று மாலை கைது செய்ததாக தெரிவித்துள்ளது.
- நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 27 வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை கடந்த மார்ச் மாதம் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர்.
போதைப்பொருள் கடத்தல் ஆயிரக்கணக்கான கோடியில் சர்வதேச அளவில் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டதால், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை ஜாபர் சாதிக்கிற்கு எதிராக வழக்குப்பதிவு செய்து கடந்த ஜூன் மாதம் அவரை கைது செய்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை தற்போது பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை முகமது சலீம் கைது செய்யப்பட்டார் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்த 15 நாட்கள் அனுமதி வழங்கக்கோரி மனுதாக்கல் செய்தது. ஆனால் முதன்மை செசன்ஸ் நீதிபதி அவரை ஆகஸ்ட் 27-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
அமலாக்கத்துறையின் மனு தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளார்.
- வெடி சத்தம் போல் பயங்கர சத்தத்துடன் வங்கி தீப்பற்றி எரிந்தது.
- அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே செல்வதற்குள் மேலாளர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள புதுக்குடி சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஸ்ரீதரன் (வயது 52) இந்த வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.
இவருக்கு உதவியாக தற்கால பணியாளராக பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். இந்த வங்கியுடன் இ-சேவை மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த இ-சேவை மையத்தில் ஒரு பெண் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று மதியம் இ-சேவை மையத்தில் உள்ள பெண், ஸ்ரீதரனின் உதவியாளரும் மதியம் உணவுக்கு வெளியே சென்று உள்ளனர். ஸ்ரீதரன் மட்டும் வங்கியில் தனியாக இருந்துயுள்ளார்.
அந்நேரத்தில் திடீரென வங்கியின் உள் வெடி சத்தம் போல் பயங்கர சத்தம் கேட்டது. அத்துடன் வங்கி தீப்பிடித்து எரிந்தது. மளமளவென தீ பரவி வங்கி முழுவதும் தீ பரவியது. அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் தீ முழுமையாக பரவி புகை மூட்டமாக மாறியது. அருகில் உள்ளவர்கள் கண்ணாடி கதவுகளை உடைத்து உள்ளே சென்றனர்.
உள்ளே சென்றவர்கள் ஸ்ரீதரனை மீட்க முயன்றனர். அதற்குள் மூச்சுதிணறல் ஏற்பட்டு ஸ்ரீதரன் உயிரிழந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் கம்ப்யூட்டர் பேட்டரி வெடித்து வங்கியில் தீப்பிடித்ததாக கூறப்பட்டது.
பின்னர் போலீசார் விசாரணையின்போது வங்கியில் பெட்ரோல் மற்றும் தீப்பெட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீதரன் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ், 2028 ஜனவரி மாதம் வரை டி.என்.பி.எஸ்.சி. தலைவராக இருப்பார்.
- கடந்த 2 ஆண்டுகளாக டி.என்.பி.எஸ்.சி.க்கு புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார். தற்போது, தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி வரும் பிரபாகர், 2028 ஜனவரி மாதம் வரை இந்த பதவியில் இருப்பார்.
டி.என்.பி.எஸ்.சி. தலைவராக இருந்த பாலச்சந்திரன், 2022 ஜூனில் ஓய்வு பெற்றார். அதன்பின், உறுப்பினராக இருந்த முனியநாதன், பொறுப்பு தலைவராக செயல்பட்டு வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.
இதற்கு முன்னதாக டி.என்.பி.எஸ்.சி., தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்தது. அதனை கவர்னர் ஆர்.என்.ரவி பரிசீலிக்காமல் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






