என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அரசியல் பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.
    • ரஜினிகாந்த் நேற்றிரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    நடிகர் ரஜினிகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் விரைவில் உடல்நலம் பெற வேண்டுமென திரை, அரசியல் பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.

    உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த் விரைந்து உடல்நலம் பெற வேண்டும் என்று திரைத்துறையினர், அரசியல் பிரபலங்கள் மற்றும் பலர் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.

    அந்த வரிசையில் ரஜினிகாந்த் விரைவில் பூரண குணம் பெற வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பான எக்ஸ் தள பதிவில், "உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பூரண குணம் பெற்று விரைவில் இல்லம் திரும்ப விழைகிறேன்," என்று பதிவிட்டுள்ளார்.

    • புகாரின் பேரில் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    • மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாட்ஸ் அப் குழு மோசடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 53). இவர் பனியன் நிறுவனம் வைத்துள்ளார். இவருக்கு கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி வாட்ஸ்அப் மூலம் அழைப்பு வந்தது. அப்போது அதில் பேசிய நபர் பங்குச்சந்தையில் லாபகரமான பங்குகளுக்கான பரிந்துரைகளை வழங்குவதாக உறுதியளித்தார்.

    அந்த நபர் கூறியபடி வாட்ஸ்அப் லிங்க்குக்குள் சென்று உறுதி செய்துள்ளார். பின்னர் ராஜசேகரை வாட்ஸ்அப் குழு ஒன்றில் இணைத்துள்ளனர். தொடர்ந்து அந்த வாட்ஸ்அப் குழுவில் வந்த யாதவ் என்பவர், ராஜசேகரிடம் குறிப்பிட்ட பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார்.

    ராஜசேகரும் அவருடைய செல்போனில் யாதவ் அனுப்பிய இணைப்பை பதிவேற்றம் செய்துள்ளார். தொடர்ந்து யாதவ் கூறியபடி ராஜசேகர், பங்குச்சந்தை வாட்ஸ்அப்பில் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு பல பரிவர்த்தனைகள் மூலம் ரூ.41½ லட்சம் அனுப்பியுள்ளார். அந்த குழுவில் தனது லாப பணத்தை ராஜசேகர் கேட்ட போது எந்த பதிலும் வரவில்லை.

    அதன்பிறகே மோசடி நபர்களால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜசேகர் மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேப்போல் திருப்பூர், காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ஞானசுந்தரம் (29). இவருக்கு கடந்த ஜனவரி மாதம் வாட்ஸ்அப்பில் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி குறுஞ்செய்தி வந்தது. அதில் ஓட்டல்களை மதிப்பாய்வு செய்து கொடுத்தால் லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதனை நம்பிய ஞானசுந்தரம் சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் குழுவின் வழிகாட்டுதலின் படி செயல்பட்டுள்ளார். தொடர்ந்து ஞானசுந்தரமும், திருப்பூரில் ஓட்டல்களை மதிப்பாய்வு செய்து கொடுத்து கமிஷன் பெற்று வந்துள்ளார்.

    பின்னர் பணத்தை முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை நம்பிய ஞானசுந்தரம் ரூ.5 லட்சத்து 65 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். தொடர்ந்து ஞானசுந்தரம் செலுத்திய பணத்திற்கு லாபம் எதுவும் கிடைக்காமல் இருந்துள்ளது. இது குறித்து வாட்ஸ்அப் குழுவில் கேட்க ஞானசுந்தரத்திற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. அதன்பிறகே ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஞானசுந்தரம் மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளித்தார். மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாட்ஸ் அப் குழு மோசடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    • விருது 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் நாள் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.
    • விருதுடன், பரிசுத்தொகையாக ரூ.40.000/- ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது முதலமைச்சர் அவர்கள், மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக

    1. சின்னகாமணன், காவல் ஆய்வாளர், மத்திய நுண்ணறிவு பிரிவு விழுப்புரம் மண்டலம்,

    2. மகாமார்க்ஸ், தலைமை காவலர்-1989, விழுப்புரம் தாலுகா சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம்,

    3. கார்த்திக், தலைமை காவலர்-2963. துறையூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, திருச்சி மாவட்டம்,

    4. சிவா, இரண்டாம் நிலை காவலர்-1443, ஆயுதப்படை, சேலம் மாவட்டம்

    5. பூமாலை, இரண்டாம் நிலை காவலர் 764, ஆயுதப்படை, சேலம் மாவட்டம்,

    ஆகியோருக்கு 2024-ம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். இவ்விருது, முதலமைச்சர் அவர்களால் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் நாள் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இவ்விருதுடன், பரிசுத்தொகையாக ரூ.40.000/- ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ரஜினிகாந்த் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது என்று அப்பல்லோ முருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை போயஸ் கார்டனில் வசித்து வரும் ரஜினிகாந்த் தனது வீட்டில் இருந்தபோது அடிவயிற்றில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. செரிமான பிரச்சனையும் இருந்தது. இதைத்தொடர்ந்து நெஞ்சுவலியும் ஏற்பட்டு உள்ளது.

    இதுபற்றி மனைவி லதா மற்றும் குடும்பத்தினரிடம் ரஜினிகாந்த் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ரஜினி காந்தை உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்த தகவல் வெளியானதும் அவரது ரசிகர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர். இதனையடுத்து ரஜினிகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று கவர்னர் ஆர்என் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அறிக்கை மூலம் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எனது அருமை நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் பூரண நலமடைய விழைகிறேன் என கூறியுள்ளார்.

    முன்னதாக, நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது என்று அப்பல்லோ முருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

    • கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
    • இரண்டாவது முறையாக ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 67 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

    இதற்கிடையே, இந்த வழக்கில் ஜாமின் கோரி சடையன், வேலு, கெளதம் ஜெயின் உள்ளிட்டோர் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சடையன், கெளதம் மற்றும் ஜெயின் ஆகிய 3 பேரின் ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    சிபிசிஐடி விசாரணை நடந்துவருவதால் ஜாமின் வழங்கக்கூடாது என அரசுத்தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • பக்தர்கள் ரோப் கார் சேவை மூலம் விரைவாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    • படிப்பாதை மற்றும் விஞ்ச் சேவையை பக்தர்கள் பயன்படுத்தி மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் ரோப் கார் சேவை மூலம் விரைவாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், ரோப் கார் சேவை 40 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வருடாந்திர பராமரிப்புக்காக ரோப் கார் சேவை வருகிற 7-ந்தேதி முதல் 40 நாட்களுக்கு நிறுத்தப்பட உள்ளதாகவும் படிப்பாதை மற்றும் விஞ்ச் சேவையை பக்தர்கள் பயன்படுத்தி மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • சிறப்பு பேருத்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    சென்னை:

    போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    04/10/2024 (வெள்ளிக்கிழமை) 05/10/2024 (சனிக்கிழமை) 06/10/2024 (ஞாயிறு) விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை. திருச்சி. கும்பகோணம் மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 04/10/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 260 பேருந்துகளும், 05/10/2024 (சனிக்கிழமை) 200 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை நாகை, வேளாங்கண்ணி ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 04/10/2024 வெள்ளிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் 05/10/2024 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூரு, திருப்பூர் ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 04/10/2024 அன்று 15 பேருந்துகளும் 05/10/2024 அன்று 15 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 5,939 பயணிகளும் சனிக்கிழமை 3.869 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 6,667 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள பயணத்திற்கு www.Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    • சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

    சென்னை:

    தமிழக அமைச்சரவை சமீபத்தில் மாற்றப்பட்டது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் சில புதிய அமைச்சர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டது.

    இந்த நிலையில், அமைச்சரவை கூட்டம் மாற்றி அமைக்கப்பட்ட பிறகு முதல் அமைச்சரவை கூட்டம் வருகிற 8-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் 8-ந்தேதி காலை 11 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. 

    • கட்சி ஆரம்பித்தபோது இருந்த பல மாநில பொறுப்பாளர்கள் தற்போது கட்சியில் இல்லை.
    • எங்கள் வாழ்க்கையில் 14 வருடத்தை வீணடித்துவிட்டோம்.

    கிருஷ்ணகிரி:

    நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் கரு.பிரபாகரன் இன்று அவரது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எவ்வளவோ நடக்குது வலி தாங்க முடியல. கட்சி ஆரம்பித்தபோது இருந்த பல மாநில பொறுப்பாளர்கள் தற்போது கட்சியில் இல்லை

    ஒரு மண்டல செயலாளர் மனைவி ஏரி வேலைக்கு தான் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் எளிமையான கட்சின்னு சொல்றீங்க... உங்களுடைய வீட்டில் 5 கார், 3 பேருக்கு 15 வேலை ஆட்கள், மாதம் 2.5 லட்சம் வாடகை என சொகுசாக வாழ்கிறார்கள்.

    எங்கள் வாழ்க்கையில் 14 வருடத்தை வீணடித்துவிட்டோம். இனி யாரும் உங்கள் இளமையை அழித்து விடாதீர்கள்.

    கட்சியில் இருந்து விலகிய முன்னணி பொறுப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் கட்சியை கட்டமைத்தால் இணைந்து செயல்பட தயார். இல்லையென்றால் விலகியவர்களை ஒன்றிணைத்து புதிய தமிழ் தேசிய இயக்கம் அமைக்கப்படும் என்று கூறினர்.

    • கடந்த காலங்களில் அ.தி.மு.க. தொடர்ந்து தக்க வைத்திருந்த 40 சதவீத வாக்கு வங்கியை சுட்டிக்காட்டினார்.
    • தற்போது 10 சதவீத வாக்குகளை அ.தி.மு.க. இழந்து இருக்கிறது. இழந்த வாக்குகளை நாம் மீட்டெடுக்க வேண்டும்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் படுதோல்வியை சந்தித்தது. ஒரு இடத்தில் கூட வெற்றி முடியாமல் போனது. சில இடங்கில் டெபாசிட் இழந்ததோடு 3-ம் இடத்துக்கும் தள்ளப்பட்டது.

    இதனால் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் செயல்பட வலியுறுத்தி இருந்தார்.

    இந்த நிலையில், அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டை தலைமை கழகத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது கடந்த காலங்களில் அ.தி.மு.க. தொடர்ந்து தக்க வைத்திருந்த 40 சதவீத வாக்கு வங்கியை சுட்டிக்காட்டினார். ஆனால் தற்போது 10 சதவீத வாக்குகளை அ.தி.மு.க. இழந்து இருக்கிறது. இழந்த வாக்குகளை நாம் மீட்டெடுக்க வேண்டும். அதற்கு ஏற்ப பணியாற்றுங்கள் என்று அறிவுரை வழங்கினார்.

    முன்னதாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருக்கும் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் எல்இடி டிஜிட்டல் விளம்பர பலகையை திறந்து வைத்தார்.

    அப்போது, எடப்பாடி பழனிசாமியின் தோள் மீது செல்போன் ஒன்று திடீரென வந்து விழுந்தது. இதனால் அவர் சற்று அதிர்ச்சியடைந்தார். அங்கு கூடியிருந்த நிர்வாகிகள் யாருடைய செல்போன் என்று ஆவேசமாக கேட்டனர்.

    • சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில் திருப்பூர் தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூர்:

    காஞ்சிபுரம் சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை பறிக்கும் நிர்வாகத்தை கண்டித்து திருப்பூர் ரெயில் நிலையம் அருகே சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில் திருப்பூர் தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

    இதில் பங்கேற்றவர்கள் சாம்சங் நிறுவனத்தின் செல்போன்களை சாலையில் போட்டு உடைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 

    • மதுக்கடையை மீண்டும் மூடுவது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
    • போலீசாருக்கும் அ.ம.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    திருச்சி:

    திருச்சி உறையூர் லிங்கநகர் பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்தது. இந்த கடையை மூடக்கோரி அப்போது மக்கள் போராட்டம் நடத்தினர். இதன்காரணமாக அந்த கடை மூடப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் அந்த மது கடை மீண்டும் திறக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து மதுக்கடையை மீண்டும் மூடுவது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. அதற்கு நடவடிக்கை எடுக்கப்படாததால் திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஸ்குமார் தலைமையில் லிங்கநகர் மதுபான கடை அருகே ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றனர்.

    மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதிக்காததால் மக்களை கலைந்து போகும்படி தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும் அ.ம.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்பு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் உள்பட 100-க்கும் மேற்பட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து உறையூர் கைத்தறி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கும் சிறிது நேரம் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள் அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம், தன்சிங், ராமமூர்த்தி, வண்ணை லதா, ஹேமலதா, பகுதி செயலாளர்கள் கல்நாயக் சதீஷ்குமார், கமுருதீன், முன்னாள் கவுன்சிலர் கதிரவன், மதியழகன், கருப்பையா, உமாபதி, ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன்,

    குப்புசாமி, சங்கர் பாலன், அணி செயலாளர்கள் பெஸ்ட் பாபு, நாகநாதர் சிவகுமார், தண்டபாணி, வக்கீல் பிரகாஷ், ஜான் கென்னடி, என்.எஸ். தருண், சாந்தா, நாகூர் மீரான், நல்லம்மாள், கல்லணை குணா, மலைக்கோட்டை சங்கர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், மற்றும் கழக மாவட்ட, பகுதி, ஒன்றிய, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×