search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    இபிஎஸ் மீது விழுந்த செல்போன்... அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு
    X

    இபிஎஸ் மீது விழுந்த செல்போன்... அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு

    • கடந்த காலங்களில் அ.தி.மு.க. தொடர்ந்து தக்க வைத்திருந்த 40 சதவீத வாக்கு வங்கியை சுட்டிக்காட்டினார்.
    • தற்போது 10 சதவீத வாக்குகளை அ.தி.மு.க. இழந்து இருக்கிறது. இழந்த வாக்குகளை நாம் மீட்டெடுக்க வேண்டும்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் படுதோல்வியை சந்தித்தது. ஒரு இடத்தில் கூட வெற்றி முடியாமல் போனது. சில இடங்கில் டெபாசிட் இழந்ததோடு 3-ம் இடத்துக்கும் தள்ளப்பட்டது.

    இதனால் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் செயல்பட வலியுறுத்தி இருந்தார்.

    இந்த நிலையில், அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டை தலைமை கழகத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது கடந்த காலங்களில் அ.தி.மு.க. தொடர்ந்து தக்க வைத்திருந்த 40 சதவீத வாக்கு வங்கியை சுட்டிக்காட்டினார். ஆனால் தற்போது 10 சதவீத வாக்குகளை அ.தி.மு.க. இழந்து இருக்கிறது. இழந்த வாக்குகளை நாம் மீட்டெடுக்க வேண்டும். அதற்கு ஏற்ப பணியாற்றுங்கள் என்று அறிவுரை வழங்கினார்.

    முன்னதாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருக்கும் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் எல்இடி டிஜிட்டல் விளம்பர பலகையை திறந்து வைத்தார்.

    அப்போது, எடப்பாடி பழனிசாமியின் தோள் மீது செல்போன் ஒன்று திடீரென வந்து விழுந்தது. இதனால் அவர் சற்று அதிர்ச்சியடைந்தார். அங்கு கூடியிருந்த நிர்வாகிகள் யாருடைய செல்போன் என்று ஆவேசமாக கேட்டனர்.

    Next Story
    ×