என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பெண்ணுக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த ராஜேஷ் ஷர்மா பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிவித்துள்ளார்.
    • சம்பவம் குறித்து இண்டிகோ ஏர்லைன்ஸ் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.

    சென்னை:

    டெல்லியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பெண்ணுக்கு பின்னால் அமர்ந்திருந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண் புகார் கூறியதை அடுத்து விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியதும் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

    கைதானவர் 45 வயதான ராஜேஷ் ஷர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அப்பெண் ஜெய்ப்பூர் மற்றும் டெல்லிக்கு பயணம் செய்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அப்பெண்ணுக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த ராஜேஷ் ஷர்மா பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிவித்துள்ளார்.

    கடந்த 9-ந்தேதி நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து இண்டிகோ ஏர்லைன்ஸ் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.

    • மங்களகரமான சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையில், அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகள்!
    • சரஸ்வதி தேவி நம் அனைவருக்கும் செழிப்பையும் மகிழ்ச்சியையும் வழங்குவாள்.

    ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை சுப தினத்தில் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்!

    சரஸ்வதி தேவி நம் பாதையை தனது கலைத்திறன் மற்றும் ஆழ்ந்த ஞானத்தால் ஒளிரச் செய்து, அறியாமை இருளை அகற்றி, நம் அனைவருக்கும் வளத்தையும் மகிழ்ச்சியையும் வழங்கட்டும்.

    இந்த ஆயுத பூஜை நமக்கு மிகச் சிறந்த புதுமை மற்றும் மீள்திறன் உலகை வடிவமைக்கத் தேவையான சிறந்த படைப்பாற்றல் மற்றும் திறன்களை உரித்தாக்கட்டும். ஒரே குடும்பமாக நாம் இணைந்து, 2047ஆம் ஆண்டுக்குள் அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் முழுமையாக வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்கதைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.100-க்கு விற்பனை.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க நினைப்போர் கவலை அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,095-க்கும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,760-க்கு விற்பனையாகிறது.

    தங்கதைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.102-க்கும் கிலோவுக்கு இரண்டாயிரமும் பார் வெள்ளி ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    10-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,200

    09-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,240

    08-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800

    07-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800

    06-10-2024 ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    10-10-2024- ஒரு கிராம் ரூ. 100

    09-10-2024- ஒரு பவுன் ரூ. 100

    08-10-2024- ஒரு பவுன் ரூ. 102

    07-10-2024- ஒரு பவுன் ரூ. 103

    06-10-2024 ஒரு பவுன் ரூ. 103

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • மாவட்ட அளவில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் வரும் 15ம் தேதி வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால், அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, முன்னெச்சரிக்கையை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது

    பேரிடர்களை கையாளுவதற்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    கன முதல் மிக கனமழை பெய்யும் பட்சத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாவட்ட அளவில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி கடிதம் எழுதியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓட்டுனர் பார்த்திபனை, பணிநீக்கம் செய்து போக்குவரத்து துறை நடவடிக்கை.
    • பேருந்தை, ஓட்டுநர் ரீல்ஸ் பார்த்தபடி இயக்கியது சமூக வலைதளங்களில் பரவியது.

    செல்போனில் ரீல்ஸ் பார்த்தபடி அரசுப் பேருந்து இயக்கிய தற்காலிக ஓட்டுனர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    திருப்பதியில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி வந்த பேருந்தை, ஓட்டுநர் ரீல்ஸ் பார்த்தபடி இயக்கியது சமூக வலைதளங்களில் பரவியது.

    இதைதொடர்ந்து, விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த தற்காலிக ஓட்டுனர் பார்த்திபனை, பணிநீக்கம் செய்து போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாழ்த்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    • நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துப் புதிய முயற்சிகளும் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள்.

    ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகளையும், பயன்படுத்தும் வாகனங்களையும், அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய திருநாள்களில். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துப் புதிய முயற்சிகளும் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்று முதல் 14-ந்தேதி வரையில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
    • கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து போரூர் செல்லும் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை.

    சென்னை:

    சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மவுண்ட் பூந்தமல்லி ரோடு-ஆர்மி ரோடு சந்திப்பில் புகாரி ஓட்டல் சந்திப்பு முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை மெட்ரோ ரெயில் பணிகள் மேற்கொள்வதால், கத்திப்பாரா நோக்கி செல்லும் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் செல்ல பரிந்துரைக்கப்பட்டு இன்று முதல் 14-ந்தேதி வரையில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

    * கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து போரூர் செல்லும் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவை வழக்கம் போல் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

    * போரூரில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் பெல் ராணுவ சாலை சந்திப்பிலிருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலையில் நேராக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அவர்கள் மவுண்ட் பூந்தமல்லி சாலை - பெல் ராணுவ சாலை சந்திப்பில் புதியதாக அமைந்துள்ள சாலை வழியாக டிபென்ஸ் காலனி 1-வது அவென்யூவில் (வலதுபுறம் திரும்பி) இலகுரக வாகனங்கள் மட்டும் செயிண்ட் தாமஸ் மருத்துவமனை வழியாக பட்ரோடு சென்று இலக்கை அடையலாம்.

    * மற்ற வாகனங்கள் கண்டோன்மென்ட் சாலையில் இடது புறம் திரும்பி சுந்தர் நகர் 7-வது குறுக்கு தெரு, தனகோட்டி ராஜா தெரு- சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் தெற்கு பகுதி சாலை வழியாக ஒலிம்பியா 100 அடி சாலை சந்திப்பு அடைந்து வாகனங்கள் கத்திப்பாராவை அடைய வலது புறமாகவும், வடபழனியை அடைய இடது புறமாகவும் தங்கள் இலக்குகளை நோக்கி செல்லலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நடப்பாண்டில் முன்கூட்டியே ஆண்டு அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.
    • இந்த அட்டவணையில் மேலும் தேர்வு குறித்த அறிவிப்புகள் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசின் கீழ் வரும் துறை சார்ந்த பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் எந்தெந்த பணியிடங்களுக்கு எப்போது அறிவிப்பு வெளியாகும்? அவர்களுக்கான தேர்வு எப்போது நடக்கும்? என்பது உள்ளிட்ட விவரங்களை ஆண்டு அட்டவணையாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிடும். வழக்கமாக இந்த ஆண்டு அட்டவணை, முந்தைய ஆண்டின் இறுதியில் வெளியிடப்படும். ஆனால் நடப்பாண்டில் முன்கூட்டியே ஆண்டு அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

    அந்த அட்டவணையில், அடுத்த ஆண்டில் (2025) 7 விதமான தேர்வுகளை நடத்துவது தொடர்பான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதாவது, குரூப்-1 பதவிகளுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, முதல்நிலைத் தேர்வு ஜூன் மாதம் 15-ந்தேதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர, ஒவ்வொரு ஆண்டும் அதிகம் பேர் போட்டியிடக் கூடிய குரூப்-4 பதவிகளுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் 25-ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்வு ஜூலை மாதம் 13-ந்தேதி நடத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.



    அதன் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான (நேர்முகத்தேர்வுடன் கூடிய) தேர்வு குறித்த அறிவிப்பு மே மாதம் 7-ந்தேதியும், தேர்வு ஜூலை மாதம் 21-ந்தேதியும் நடைபெறும் எனவும், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான (நேர்முகத்தேர்வு அல்லாத) தேர்வு குறித்த அறிவிப்பு மே மாதம் 21-ந்தேதி வெளியிடப்பட்டு, ஆகஸ்டு 4-ந்தேதி தேர்வு நடத்தப்படும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

    டிப்ளமோ, ஐ.டி.ஐ. தரத்திலான தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு ஜூன் மாதம் 13-ந்தேதியும், எழுத்துத்தேர்வு ஆகஸ்டு 27-ந்தேதியும் நடைபெற உள்ளது. குரூப்-2, 2 ஏ பதவிகளுக்கான அறிவிப்பு ஜூலை மாதம் 15-ந்தேதியும், முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 28-ந்தேதியும், ஒருங்கிணைந்த சிவில் பணிகளுக்கான குரூப்-5ஏ தேர்வுக்கான அறிவிப்பு அக்டோபர் 7-ந்தேதியும், அவர்களுக்கான தேர்வு டிசம்பர் 21-ந்தேதியும் நடத்தப்பட உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. ஆண்டு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அட்டவணையில் மேலும் தேர்வு குறித்த அறிவிப்புகள் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு பதவிக்கும் எவ்வளவு காலி இடங்கள் உள்ளன? என்பது பற்றிய அறிவிப்பு, அதற்கான அறிவிப்பாணை வெளியிடும்போது தெரிவிக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருக்கிறது.

    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து வழிபடுகின்றனர்.
    • தென்மாவட்டங்களில் காணும் இடமெல்லாம் சுவாமி வேடங்களை அணிந்த பக்தர்களாகவே காட்சியளிப்பதால் தசரா திருவிழா களைகட்டியது.

    குலசேகரன்பட்டினம்:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    தசரா திருவிழாவையொட்டி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெரும்பாலான ஊர்களிலும் விரதம் இருந்து காப்பு கட்டி பல்வேறு வேடங்களை அணிந்த பக்தர்கள் ஒவ்வொரு ஊரிலும் வீதி வீதியாக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களின் அருகில் பிறை அமைத்து தங்கியிருந்து அம்மனை வழிபடுகின்றனர்.

    ஒவ்வொரு தசரா குழுவிலும் காளி, சிவன், பிரம்மன், விஷ்ணு, விநாயகர், முருகபெருமான், ராமர், கிருஷ்ணர், நாராயணர், அனுமர் உள்ளிட்ட பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்த பக்தர்கள் அணிவகுத்து செல்வது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. அரசன், குறவன், கரடி, கிளி, புலி போன்ற வேடங்களையும் சில பக்தர்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து வழிபடுகின்றனர்.

    தசரா குழுவினருடன் நாட்டுப்புற கலைஞர்களும் சென்று கரகாட்டம், சிலம்பாட்டம், மேற்கத்திய நடனம் போன்றவற்றை நடத்துகின்றனர். தென்மாவட்டங்களில் காணும் இடமெல்லாம் சுவாமி வேடங்களை அணிந்த பக்தர்களாகவே காட்சியளிப்பதால் தசரா திருவிழா களைகட்டியது.

    குலசேகரன்பட்டினம் கோவிலில் தசரா திருவிழாவின் 9-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணிக்கு அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் 10-ம் திருநாளான நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி, மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

    விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    • அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
    • எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இடம் கிடைக்காத வெகு தூரம் பயணிப்போர் ஆம்னி பஸ்களில் பயணித்தனர்.

    சென்னை:

    ஆயுத பூஜை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. நாளை (சனிக்கிழமை) விஜயதசமி, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை ஆகும்.

    எனவே கல்வி, பணி நிமித்தமாக வெளியூர்களில் தங்கியிருப்போர் நேற்று முன்தினம் முதலே சொந்த ஊர்களுக்கு பயணிக்க தொடங்கினர். அவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விரைவு பஸ்களில் பயணிக்க 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருந்தனர். சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பஸ்களுடன், கடந்த 2 நாட்களாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. இவற்றில் பயணிக்க வந்தவர்களால் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

    பஸ் நிலையங்களை அடைய மாநகர பஸ், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் போன்றவற்றில் பயணித்தவர்களால் அங்கும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

    அதே நேரம், சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த வாகனங்களில் ஊர் சென்றதாலும், பூஜை பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கடை தெருவுக்கு வந்ததாலும் முக்கிய சாலை, நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இது ஒருபுறம் இருக்க, சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த ரெயில்களின் முன்பதிவில்லாத பெட்டிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது.

    வழக்கமான ரெயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காத பொதுமக்களின் வசதிக்காக, சென்னையில் இருந்து கன்னியாகுமரி, தாம்பரத்தில் இருந்து கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சிறப்பு ரெயில்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

    எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இடம் கிடைக்காத வெகு தூரம் பயணிப்போர் ஆம்னி பஸ்களில் பயணித்தனர். அவர்கள், வழக்கத்தை விட அதிக தொகை செலுத்தி பயணிக்க வேண்டியிருப்பதாக கவலை தெரிவித்தனர். இவ்வாறு கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து அரசு பஸ், ஆம்னி பஸ் மூலம் 3 லட்சத்துக்கு மேற்பட்டோரும், ரெயில்கள் மூலம் சுமார் 4 லட்சத்திற்கு மேற்பட்டோர் என மொத்தமாக சுமார் 7 லட்சத்துக்கு மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டதாக தெரிகிறது.

    இதுமட்டுமின்றி பலர் தங்கள் சொந்த வாகனம் மூலம் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர்.

    • தொடர் விடுமுறையால் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர்.
    • மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி, ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். இதற்காக சிறப்பு பேருந்துகள், ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்நிலையில், ஆயுதபூஜை அன்று விடுமுறை தினம் என்பதால் சென்னையில் மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால

    அட்டவணைப்படி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூலூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் புறநகர் ரெயில்களும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    • முரசொலி நாளிதழை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர்.
    • முரசொலி செல்வம் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

    முரசொலி மாறனின் சகோதரரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் முரசொலி நாளிதழை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர்.

    முரசொலி செல்வம் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், முரசொலி செல்வம் மறைவுக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரேமலதா விஜயகாந்த் எக்ஸ் வலைதளத்தில், விஜயகாந்த் உடன் நல்ல நட்புடன் பழகியவர் முரசொலி செல்வம். முரசொலி செல்வம் மறைவு தி.மு.க.வுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ×