என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கிரிவலம் வர உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கிரிவலம் வரலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை:
புரட்டாசி மாத பவுர்ணமி நாளில் கிரிவலம் வர உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
புரட்டாசி மாத பவுர்ணமி அக்டோபர் 16-ந்தேதி புதன்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் 17-ந்தேதி மாலை 5.38 மணிக்கு நிறைவுபெறுகிறது.
இது கிரிவலம் வர உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கிரிவலம் வரலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- வெடி விபத்தில் குடோனில் வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறியது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஒத்தபுலி கிராமத்தில் பழனியப்பா நகர் பகுதியில், சிவகாசி முனீஸ்நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகா கிராக்கர்ஸ் என்ற பெயரில் பட்டாசு கடை நடத்தி வருகிறார்.
அதே பகுதியில் பட்டாசுகள் இருப்பு வைப்பதற்காக குடோன் ஒன்றும் வைத்துள்ளார். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு வகையிலான பட்டாசு ரகங்களை ராஜேந்திரன் தன்னுடைய குடோனில் இருப்பு வைத்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது திடீரென ஒத்தபுலி கிராமத்தில் உள்ள ராஜேந்திரனுக்கு சொந்தமான பட்டாசு குடோன் மீது இடி, மின்னல் தாக்கியதில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடும் மழையிலும் நனைந்தவாறு பல மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த வெடி விபத்தில் குடோனில் வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறியது.
இருந்தபோதிலும், தொழிலாளர்கள் யாரும் அப்போது பணியில் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
- வடகிழக்கு பருவமழை இயல்பை வட அதிகளவில் பெய்ய வாய்ப்பு.
- தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
தென்மேற்கு பருவகாற்று தென் மாநிலங்களில் விலகும்போது வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகும். இதன் காரணமாக தமிழகத்தில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும்.அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் இறுதி வரை இந்த பருவ காலம் நீடிக்கும்.
வடகிழக்கு பருவமழை எனப்படும் இந்த காலக்கட்டத்தில் நல்ல மழை பொழிவும் இருக்கும். மிக கனத்த மழை பெய்து பாதிப்புகளையும் உருவாக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை வட அதிகளவில் பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது. அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
கனமழையின் போது மீட்பு பணிகளில் ஈடுபட மொத்தம் 300 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஒரு குழுக்கு 30 பேர் வீதம் மொத்தம் பத்து குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை பிரிவு வளாகத்தில் அவசர கட்டுப்பாட்டு மையம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ரப்பர் படகுகள் உள்பட மீட்பு கருவிகளுடன் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதோடு தமிழ்நாடு மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்துடன் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேரடி தொடர்பில் உள்ளனர்.
- பொதுமக்கள் கூடும் முக்கிய சந்திப்புகளிலும் கூடுதலாக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன.
- பாரிமுனை சந்திப்பு, வண்ணாரப்பேட்டை பகுதிகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிக்க உள்ளனர்.
சென்னை:
தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடைகள், பட்டாசுகளை வாங்குவதற்கு பொதுமக்கள் இப்போதே தயாராகி வருகிறார்கள். வருகிற 31-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் விடுமுறை நாட்களில் தி.நகரில் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூடுவார்கள்.
ஆயுத பூஜையையொட்டி 3 நாட்கள் விடுமுறை தினம் என்பதால் கடந்த 3 நாட்களாக ரங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் அலை மோதியது. இன்னும் 2 ஞாயிற்றுக்கிழமைகள் மட்டுமே இடையில் இருப்பதால் அடுத்த 2 வாரங்களும் வார இறுதி நாட்களில் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள்.
இதனை கருத்தில் கொண்டு ரங்கநாதன் தெருவின் நடுவில் 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீசார் ரகசிய கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் கள்.
பழைய குற்றவாளிகளின் புகைப்படங்கள் அடங்கிய விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துள்ள போலீசார் அவர்கள் கூட்டத்துக்குள் ஊடுருவினால் கண்டுபிடித்து கொடுக்கும் வசதியையும் ஏற்படுத்தி அதன் மூலமாக கண்காணிக்கிறார்கள்.
ரங்கநாதன் தெரு மட்டுமின்றி தி.நகர் மற்றும் பாண்டி பஜாரின் மற்ற பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி, தி.நகரில் போலீஸ் கமிஷனர் நேரில் சென்று விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வார். இந்த ஆண்டும் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த வாரம் போலீஸ் கமிஷனர் அருண் நேரில் சென்று தீபாவளி சிறப்பு கட்டுப்பாட்டு அறையை திறந்து வைக்கிறார்.
ரங்கநாதன் தெருவில் அமைக்கப்பட்டுள்ளது போன்று பொதுமக்கள் கூடும் முக்கிய சந்திப்புகளிலும் கூடுதலாக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன.
பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். புரசைவாக்கத்தில் டாணா தெரு சந்திப்பில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட உள்ளது.
பாரிமுனை சந்திப்பு, வண்ணாரப்பேட்டை பகுதிகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிக்க உள்ளனர்.
- அபிலேசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயபுரம்:
மாதவரம் பெருமாள் கோவில் 2-வது தெருவை சேர்ந்தவர் கொண்டையன். கொத்தனார். இவரது மகன் அபிலேஷ். சென்னை பூக் கடையில் உள்ள தனியார் கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் 1-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை செல்வதற்காக மின்சார ரெயிலில் நண்பர்களுடன் பயணம் செய்தார்.
அப்போது அபிலேஷ் ரெயில் பெட்டியின் வாசலில் தொங்கியபடி பயணம் செய்தார். இதனை அவரது நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்தனர்.
அபிலேஷ் சாகச பயணம் செய்தபோது திடீரென தண்டவாளம் அருகே இருந்த மின்கம்பத்தில் அவரது தலை மோதியது. இதில் அபிலேஷ் ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதனை கண்டு உடன் பயணம் செய்த மற்ற மாணவர்கள் அலறி கூச்சலிட்டனர். இதைத்தொடர்ந்து அடுத்த நிலையத்தில் ரெயில் நின்றதும் மாணவர்கள் இறங்கி சென்று பார்த்தனர். அங்கு தண்டவாளம் அருகே மாணவர் அபிலேஷ் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அபிலேசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அபிலேஷ் சாகச பயணம் செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி பார்ப்பவர்களை பதபதைக்க வைக்கிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மாணவர் ரீல்ஸ் எடுப்பதற்காக சாகச பயணம் செய்தாரா என்பது குறித்து ராயபுரம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ரூ.10 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்த வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
- 2025 இறுதி அல்லது 2026 தொடக்கத்தில் இந்த கட்டுமான பணிகளை முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.
சென்னை:
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.487 கோடி செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.
5 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம், ரூ.102 கோடியிலும், 10 ஆயிரம் பேர்கள் பார்வையிடும் வசதி கொண்ட கண்காட்சி அரங்கம் ரூ.172 கோடியிலும், கூட்ட அரங்குகள் அரங்கம் ஆகிய வசதிகள் ரூ.106 கோடியிலும் அமைய உள்ளது.
திறந்தவெளி அரங்கம், உணவு விடுதிகள், ரூ.10 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்த வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் வெளிப்புற பணிகளான சாலை வசதி, சுற்றுச்சுவர் வசதி, நுழைவு வாயில் உள்ளிட்டவைகள் ஆகிய பணிகள் ரூ.105 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது.
2025 இறுதி அல்லது 2026 தொடக்கத்தில் இந்த கட்டுமான பணிகளை முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.
- டேம்ஸ் சாலை சந்திப்பில் டீ குடித்துக் கொண்டிருந்தார்.
- சாலையில் கிடந்த காலி பீர் பாட்டிலை எடுத்து ராகுலின் தலையில் அடித்துள்ளனர்.
சென்னை எழும்பூர் அருகே உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் டீ குடிக்க அழைத்த நபரை தாக்கிய கணவன்-மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெரு ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் (வயது 20) என்பவர் நேற்று முன் தினம் மதியம் டேம்ஸ் சாலை சந்திப்பில் டீ குடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாகப் பிரபு என்பவரும் அவரது மனைவி காயத்திரியும் வந்துள்ளனர். இவர்கள் ராகுலின் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. எனவே பிரபுவையும், காயத்திரியையும் டீ குடிக்க அழைத்துள்ளார் ராகுல். அப்போது கணவன் மனைவி இருவரும், "நாங்கள் என்ன பிச்சைக்காரர்களா? ஓசியில் டீ குடிக்க" என்று ராகுலிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் சாலையில் கிடந்த காலி பீர் பாட்டிலை எடுத்து ராகுலின் தலையில் அடித்துள்ளனர். இதில் ரத்தக்காயம் ஏற்பட்டு ராகுல் நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையே இந்த தாக்குதல் தொடர்பாக ராகுல் அளித்த புகாரின் பேரில் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்கின் கீழ் பிரபு, காயத்ரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். ராகுலுக்கும் இவர்களுக்கும் ஏற்கனவே முன்பகை இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் போலீஸ் விசாரணைக்கு பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- தமிழ்நாட்டில் மக்கள் பேராதரவோடு பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
- ரெயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் பிரமாண்டமான வளர்ச்சி நடந்துள்ளது.
மதுரை:
மதுரையில் பா.ஜ.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த மத்திய இணை மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் மக்கள் பேராதரவோடு பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. வருகிற 15-ந்தேதி வரை உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். ஜனநாயக முறையில் பா.ஜ.க.வில் மட்டுமே உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. 11 கோடி இலக்கு வைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. வேறு எந்த கட்சியிலும் இப்படி ஜனநாயக முறையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதில்லை.
தமிழ்நாட்டில் திட்டமிட்டு ஒரு கருத்தை மத்திய அரசுக்கு எதிராக ரெயில் விபத்தில் பரப்பி வருகின்றனர். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் திட்டமிட்டு இதனை செய்து வருகின்றனர். மெரீனாவில் 5 பேர் உயிரிழந்தார்கள். அதுபற்றி தி.மு.க. கூட்டணி கட்சிகள் பேசினார்களா? மெரீனா சம்பவத்தை மறைக்க தி.மு.க. ரெயில் விபத்தில் நாடகமாடி வருகிறார்கள்.
ரெயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் பிரமாண்டமான வளர்ச்சி நடந்துள்ளது. தொடர்ந்து இந்தியாவில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புல்லட் ரெயில் இன்னும் ஒரு வருடத்தில் வர உள்ளது. ரெயில் நிலையங்களுக்கு தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில் ஏன் வந்தோம் என இருக்கும். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை.
ரெயில் விபத்து குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். ஆனால் ஒட்டு மொத்த ரெயில்வேயும் வேலை செய்யவில்லை என தி.மு.க. இந்தியா கூட்டணி ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்து கொண்டுள்ளனர். மெரினா நிகழ்ச்சியின் போது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?
மெட்ரோ ரெயில், பேருந்து வசதி செய்து கொடுக்கவில்லை. தண்ணீர், ஆம்புலன்ஸ் இல்லாமல் 5 பேர் இறந்தார்கள். இதற்காக நாம் ஒரு தனி விசாரணையை நடத்த தேவையில்லை. ரெயில் விபத்தில் என்.ஐ.ஏ. விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வருவார்கள். தி.மு.க.வின் மூன்றரை வருட ஆட்சி முழுக்க முழுக்க வேதனையான ஆட்சியாகவே இருந்திருக்கிறது.
பல்வேறு கட்டணங்களையும், வரிகளையும் உயர்த்தி உள்ளனர். எந்தப்பக்கம் சென்றாலும் மனமகிழ் மன்றங்கள் தான் உள்ளன. போதைப்பொருளை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் தலையில் வரி மேல் வரி கட்டண உயர்வை விதித்துள்ளனர்.
விஜய் வருகிற 27-ந்தேதி மாநாடு நடத்துகிறார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். அவருடைய செயல்பாடு, கொள்கைகளை பொறுத்து தான் மக்கள் முடிவெடுப்பார்கள். நடிகர், நடிகை என பிரித்து பார்க்க விரும்பவில்லை.
விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து சொல்லாதது ஏன் என மக்கள் கேள்வி கேட்டார்கள். நாங்களும் கேள்வி கேட்டோம். அதனால் அவர் விஜயதசமி, ஆயுதபூஜைக்கு வாழ்த்து சொல்லியிருப்பார். அரசியலில் நிரந்தர எதிரி, நண்பன் இல்லை என்ற திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். இதற்கு தேசிய தலைமை கூட்டணி குறித்து முடிவெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கொண்டாட்டத்துக்கு பிறகு தேர்தல் நடத்தப்படலாம்.
- நவம்பர் 2-வது அல்லது 3-வது வாரத்தில் வாக்குப்பதிவு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை பதவிக்காலம் நவம்பர் மாதம் 26-ந்தேதி முடிவடைகிறது.
81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையின் பதவிகாலம் ஜனவரி 5-ந்தேதி முடிவடைகிறது. இதனால் இந்த இரு மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடந்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அடுத்த வாரம் அறிவிக்கும் என்று தெரிந்தது.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கொண்டாட்டத்துக்கு பிறகு தேர்தல் நடத்தப்படலாம். நவம்பர் 2-வது அல்லது 3-வது வாரத்தில் வாக்குப்பதிவு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2019-ம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே கட்டமாக அக்டோபர் 24-ந் தேதி நடைபெற்றது. ஜார்க்கண்டில் கடந்த முறை (2019) 5 கட்டங்களாக நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை நடைபெற்றது. சமீபத்தில் ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதனால் ஜார்க்கண்டில் இந்த தடவை வாக்குப்பதிவை வேகமாக நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளது.
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பாரதிய ஜனதா, அஜித்பவார் கூட்டணி ஆட்சியும் ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி ஆட்சியும் நடைபெற்று வருகின்றன.
இந்த 2 மாநில தேர்தலோடு 2 எம்.பி. தொகுதி மற்றும் சட்டசபை இடைத்தேர்தலும் நடத்தப்படுகிறது.
ராகுல் காந்தி 2 தொகுதியில் வெற்றி பெற்றதால் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. நூருல் இஸ்லாம் மரணம் அடைந்ததால் பாசிர்ஹாப் தொகுதி காலியாக உள்ளது. இதனால் இந்த 2 தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது.
மேலும் பல்வேறு மாநிலங்களில் 45-க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. அங்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அரியானாவில் பாரதிய ஜனதாவும், காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியும் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தன.
- குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை உள்ளதால் எந்த நேரமும் கூட்டம் நிறைந்திருக்கும்.
- டாக்டரிடமும், மருத்துவமனை பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அரியலூர்:
அரியலூர் நகரின் மையப்பகுதியில் அரசு கல்லூரியும், அரசு மருத்துவக்கலூரிக்கு செல்லும் சாலையில் தனியார் மருத்து வமனை அமைந்துள்ளது. இது குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை உள்ளதால் எந்த நேரமும் கூட்டம் நிறைந்திருக்கும்.
இந்த சாலையில் இரவு பகலாக மக்கள் மிக அதிகமாக சென்று வருவார்கள். இந்த நிலையில் ஆயுதபூஜை அன்று இரவு பூஜையை முடித்துவிட்டு சீக்கிரமாக மருத்துவமனையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். மறுநாள் காலையில் சுமார் 10 மணியளவில் மருத்துவமனையை திறந்தபோது பின்பக்க கதவு உடைத்து உள்ளே நுழைந்து மேஜையின் பூட்டை உடைத்து உள்ளேயிருந்த
விலை உயர்ந்த மருந்து, மாத்திரைகள், பணத்தை திருடிசென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும்.
தகவல் அறிந்த அரியலூர் போலீசார் விரைந்து சென்று மோப்ப நாய் உதவியுடன் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். டாக்டரிடமும், மருத்துவமனை பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து தீவிர விசாரனை மேற்கொண்டுள்ளனர். அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- மாநாட்டு திடல் முழுவதும் மின் விளக்குகள் அமைப்பதற்காக 3 ஆயிரம் கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
- மாநாட்டின் நுழைவு வாயில் முன்பு 100 அடி உயர கொடிக்கம்பத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்ற உள்ளார்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டியில் விஜய் கட்சியின் மாநாட்டில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த கொடியை நிரந்தரமாக பறக்கவிட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்து உள்ளார். இதற்கான கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்சியின் முதல் மாநாடு வருகிற 27-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெறுகிறது. இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் மாநாட்டுக்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் மேற்பார்வையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது மேடை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளதையடுத்து அதன் உள்புறம் அலங்கரிக்கும் பணிகள் நடைபெற உள்ளது. நேற்று மாநாட்டு திடலில் முளைத்துள்ள செடிகள் மீண்டும் முளைக்காத வகையில் அவற்றின் மீது களைக்கொல்லி மருந்துகள் அடிக்கப்பட்டன. மாநாட்டு திடல் முழுவதும் மின் விளக்குகள் அமைப்பதற்காக 3 ஆயிரம் கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்கள் அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளத்துக்கு செல்லாத வகையில் அங்கு இரும்பு தகடுகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
காவல் துறையின் அறிவுறுத்தலின் பேரில் அங்குள்ள திறந்த நிலையில் உள்ள கிணற்றின் மேல் பகுதியில் பெரிய இரும்பு கர்டர்கள் அமைத்து அதை முழுமையாக மூடும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநாட்டின் முகப்பு வாயில் ஜார்ஜ் கோட்டை போன்று பிரமாண்ட வடிவில் அமைக்கப்பட உள்ளது.

மாநாட்டில் வாகனம் நிறுத்தும் இடத்தை உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரகுமார் குப்தா ஆய்வு செய்த காட்சி.
அவ்வப்போது மழை பெய்து இடையூறு ஏற்படுத்தினாலும் மாநாட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மாநாட்டின் நுழைவு வாயில் முன்பு 100 அடி உயர கொடிக்கம்பத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்ற உள்ளார். இதற்காக கொடிக்கம்பம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
மாநாடு முடிந்தாலும் அந்த கம்பத்தில் கொடி நிரந்தரமாக பறந்திட வி.சாலையை சேர்ந்த மணி என்பவருக்கு சொந்தமான அந்த நிலம் 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்த தனியாருக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்தும் இடத்தை விழுப்புரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திர குமார் குப்தா ஆய்வு செய்தார். கார், வேன், பஸ் போன்ற வாகனங்கள் எந்த இடத்தின் வழியாக உள்ளே நுழைந்து, எங்கே எந்தெந்த வாகனங்கள் நிற்கிறது என்ற விவரத்தை கட்சியின் வக்கீல் அரவிந்தனிடம் கேட்டறிந்தார்.
விக்கிரவாண்டி டி.எஸ்.பி. நந்தகுமார், இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், த.வெ.க. மாவட்டத் துணைத் தலைவர் வடிவேல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- வீரத்தியாகி சங்கரலிங்கனாருக்கு நாம் அனைவரும், நமது நெஞ்சு நெக்குருக வணக்கம் கூறுகிறோம்.
- பேரறிஞர் அண்ணா நெக்குருகப் போற்றிய விருதுநகர் சங்கரலிங்கனார் ‘தமிழ்நாடு’ என்ற பெயர்பெற 76 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தம் இன்னுயிரையே ஈந்த நாள் இன்று!
சென்னை:
வீரத்தியாகி சங்கரலிங்கனார் நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
"வீரத்தியாகி சங்கரலிங்கனாருக்கு நாம் அனைவரும், நமது நெஞ்சு நெக்குருக வணக்கம் கூறுகிறோம்.
அவர் காட்டிய தியாகப் பாதையில் செல்வதென்பது அனைவருக்கும் சாத்தியமானதல்ல; ஆனால் அவருடைய தியாகத்தை மதிக்க மறுப்பவர், மறந்து திரிபவர், தமிழராகார், மனிதராகார்!"-எனப் பேரறிஞர் அண்ணா நெக்குருகப் போற்றிய விருதுநகர் சங்கரலிங்கனார் 'தமிழ்நாடு' என்ற பெயர்பெற 76 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தம் இன்னுயிரையே ஈந்த நாள் இன்று!
அந்த உத்தமத் தியாகிக்குத் தமிழ்நாடு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.






