என் மலர்tooltip icon

    பஞ்சாப்

    • குல்விந்தர் கவுருக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன
    • பல்வேறு பஞ்சாப் விவசாய சங்கங்கள் குல்விந்தர் கவுருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

     வடமேற்கு மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைநகரமாக விளங்கும் சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து, நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஹிமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை குல்விந்தர் கவுர் என்ற மத்திய தொழிற்பாதுகாப்புப்படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்த விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது.

    மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்- ஹரியானா விவசாயிகள் வருடக்கணக்கில் போராடியது தெரிந்ததே. இதற்கிடையில் பாஜக அரசுக்கு எதிராக போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா பேசி வருகிறார்.

    இதன் காரணமாகவே பெண் காவலர் கங்கானாவை கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து குல்விந்தர் கவுர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அவர் எம்.பியாக இருக்கும் ஒருவரை தாக்கியதற்காக கைது நேற்று கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் குல்விந்தர் கவுருக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. பழம்பெரும் நடிகை சாபனா அஸ்மி உள்ளிட்டோர் கங்கானாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில் பல்வேறு பஞ்சாப் விவசாய சங்கங்கள் குல்விந்தர் கவுருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் குலவுந்தருக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால் மாபெரும் அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது.

     

    இந்த சம்பவத்துக்கு பிறகு கங்கனா வெளியிட்ட வீடியோவில் பஞ்சாபியர்கள் அனைவரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்ற தொனியில் பேசி மத நம்பிக்கைகளை புண் படுத்தியுள்ளதால் அவர் மீது எப்.ஐ.ஆர் பதிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 

     

    • அம்பாலாவிலிருந்து வந்த இந்த இரண்டு ரயில்களும் மதோபூர் நரகில் ஸ்ரீஹிந் பகுதியில் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது
    • இந்த விபத்தில் ரயிலின் லோக்கோ பைலட்கள் இருவர் பலத்த காயமடைந்தனர்.

    பஞ்சாப் மாநிலம் பதேர்கர் சாகிப் மாவட்டத்தில் இன்று 9ஜூன் 20 அதிகாலை இரண்டு சரக்கு ரயில்கள் மோதிக்கொண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரயிலின் லோக்கோ பைலட்கள் இருவர் பலத்த காயமடைந்தனர்.




     


    அம்பாலாவிலிருந்து வந்த இந்த இரண்டு ரயில்களும் மதோபூர் நரகில் ஸ்ரீஹிந் பகுதியில் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தங்களுக்கு அதிகாலை 4 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். அதிகாலை சுமார் 3.45 மணிக்கு இந்த விபத்து நடந்தது என்று கூறப்படுகிறது.

    விபத்தில் படுகாயமடைந்த இரேன்ப்து லோக்கோ பைலைட்களுக்கும் பதேர்கர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களை மேல் சிகிச்சைக்காக பாட்டியாலாவில் ரஜீந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

    அம்பலா- ஸ்ரீஹிந் ரயில்வே தடத்தில் அதிக அளவிலான ரயில்கள் இயக்கப்படுவதால் மிதமிஞ்சிய போக்குவரத்து நிறைந்த வழித்தடமாக உள்ளது. இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு கிடம்பத்தால் மற்ற ரயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பயணிகள் ரயில்கள்  செல்ல முடியாததால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கிடையில் இந்த விபத்து குறித்து ரயில்வே நிர்வாகம் விசாரித்து வருகிறது.

    • நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
    • ஜார்கண்டில் 5 மணிக்கே வாக்குப்பதிவு முடிக்கப்பட்டது.

    543 தொகுதிகளை கொண்ட இந்திய பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த 2½ மாதங்களுக்கு மேலாக நடந்து வந்த இந்த தேர்தலில் ஏற்கனவே 6 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றிருந்தது.

    இதில் 485 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. மேலும் குஜராத்தின் சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகி இருந்தார்.

    இதைத்தொடர்ந்து 7-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நேற்று நடந்தது. இதில் மீதமுள்ள 57 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

    அந்தவகையில் பஞ்சாப் (13 தொகுதிகள்), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (9), பீகார் (8), ஒடிசா (6), இமாசல பிரதேசம் (4), ஜார்கண்ட் (3) மற்றும் சண்டிகார் (1) என 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் இந்த தேர்தல் நடந்தது.

    நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அதேநேரம் ஜார்கண்டில் 5 மணிக்கே வாக்குப்பதிவு முடிக்கப்பட்டது.

    இந்நிலையில், 7ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.36 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    • ஹர்சிம்ரத் கவுரின் மாமனார் பிரகாஷ் சிங் பாதல்.
    • பதிண்டா தொகுதி சிரோன்மணி அகாலிதளத்தின் கோட்டையாகும்.

    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலம் பதிண்டா பாராளுமன்ற தொகுதியில் சிரோன்மணி அகாலிதளம் சார்பில் 4-வது முறையாக போட்டியிடுகிறார் ஹர்சிம்ரத் கவுர். இவருடைய கணவர் சுக்பீர் சிங் பாதல்.

    ஹர்சிம்ரத் கவுரின் மாமனார் பிரகாஷ் சிங் பாதல். இவர் பஞ்சாப் மாநிலத்தில் 5 முறை முதல்-மந்திரியாக இருந்தவர். பதிண்டா தொகுதி சிரோன்மணி அகாலிதளத்தின் கோட்டையாகும்.

    ஹர்சிம்ரத் கவுர், தனது வேட்பு மனுவுடன் இணைத்துள்ள பிரமாண பத்திரத்தில் தனக்கு ரூ.198 கோடிக்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    நாளை (சனிக்கிழமை) நடைபெறும் கடைசி கட்ட தேர்தலில் களத்தில் இருக்கும் 904 வேட்பாளர்களில், இவரே அதிக சொத்து உள்ள வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏ.சி. யூனிட்டிற்கான ஸ்டெபிலைசர் இல்லாததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • வீடியோ வைரலாகி வரும் நிலையில், பயனர்கள் பலரும் வெப்ப அலை தொடர்பாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    வட இந்தியாவில் பல மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசுகிறது. டெல்லியில் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவில் 126 டிகிரி வெயில் கொளுத்தியது. இதே போல ராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் கடும் வெப்ப அலையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

    இந்நிலையில் கடும் வெப்ப அலை காரணமாக பஞ்சாபில் ஒரு கட்டிடத்தின் வெளிப்புற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ஏ.சி.யூனிட் தீப்பற்றி எரியும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏ.சி. யூனிட்டிற்கான ஸ்டெபிலைசர் இல்லாததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    எனினும் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், பயனர்கள் பலரும் வெப்ப அலை தொடர்பாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • அவர்கள் டாக்டர் அம்பேத்கரின் அரசியல் சாசனத்தின் உணர்வை அவமதிக்கிறார்கள்.
    • அவர்களின் சதியை அம்பலப்படுத்தியதால் என்னை திட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

    பிரதமர் மோடி இன்று பஞ்சாப் மாநிலம் ஹோஷி யார்பூரில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    பல தசாப்தங்களுக்குப் பிறகு, மத்தியில் முழு பெரும்பான்மை அரசாங்கம் ஹாட்ரிக் அடிக்கப் போகும் நேரம் வந்துவிட்டது. மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைத்த பிறகு, ஆதம்பூரில் உள்ள விமான நிலையத்திற்கு குரு ரவிதாசின் பெயரை சூட்டுவோம். ஏழைகள் நலனே எனது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை. இதில் பெரிய உத்வேகம் குரு ரவிதாஸ் ஆவார்.

    பா.ஜனதாவின் 3-வது பதவிக்காலத்தின் முதல் 125 நாட்களுக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. 10 ஆண்டுகளில் நாடு வரலாறு காணாத வளர்ச்சியை அடைந்துள்ளது.

    தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் இடஒதுக்கீட்டை யாரையும் பறிக்க விடமாட்டேன் என்று நான் உறுதிமொழி எடுத்து உள்ளேன். என்னுடைய இந்த முயற்சியால் காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணி கட்சிகள் கொதிப்படைந்து உள்ளன. எஸ்.சி.-எஸ்.டி., ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை பறித்ததுதான் அவர்களின் சாதனை. அவர்கள் டாக்டர் அம்பேத்கரின் அரசியல் சாசனத்தின் உணர்வை அவமதிக்கிறார்கள்.

    தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு மட்டும் கொடுக்க நினைக்கிறார்கள். அவர்களின் சதியை அம்பலப்படுத்தியதால் என்னை திட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

    அவர்களின் வாக்கு வங்கியின் மீதுள்ள அன்பின் காரணமாக, பிரிவினையின் போது கர்தார்பூர் சாஹிப் மீதான இந்தியாவின் உரிமையை அவர்களால் திருத்த முடியவில்லை. இதே வாக்கு வங்கிக்காக ராமர் கோவில் கட்டுவதை தொடர்ந்து எதிர்த்தனர். சமாதான அரசியலுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தையும் எதிர்க்கிறார்கள்.

    இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் அரசியல் சாசனத்தைப் பற்றி பேசி வருகிறார்கள். இவர்கள் தான் எமர்ஜென்சி காலத்தில் அரசியல் சட்டத்தை கழுத்தை நெரித்தவர்கள்.

    1984-ம் ஆண்டு சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டபோது, அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி சிந்திக்கவில்லை. ஊழலில் காங்கிரஸ் இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளது.

    இவ்வாறு மோடி பேசினார்.

    • போதைப்பொருள் பிரச்சனை பஞ்சாபில் இன்று கூட இருந்து வருகிறது. அது அதிகரித்து கொண்டிருக்கிறது.
    • அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

    ராகுல் காந்தி இன்று பஞ்சாப் மாநிலம் லூதியானா காங்கிரஸ் வேட்பாளர் அமரிந்தர் சிங்கை ஆதரித்து தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசினார்.

    அப்போது ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-

    போதைப்பொருள் பிரச்சனை பஞ்சாபில் இன்று கூட இருந்து வருகிறது. அது அதிகரித்து கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். பஞ்சாப் முழு அதிகாரம் மற்றும் ஆக்ரோசத்துடன் போதைப்பொருளுக்கு எதிராக போராட வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக நேற்று மல்லிகார்ஜூன கார்கே, "பஞ்சாப் மாநிலத்தின் எதிர்காலத்திற்கு போதைப்பொருள் பிரச்சனை மிகப்பெரிய சவாலாகியுள்ளது. நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு சூழ்நிலை மோசமடைந்து வருகிறது. போதைக்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக விவசாயிகள் நிலைத்தை விற்று, தங்களது குழந்தைகளை வெளிநாட்டிற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். வேலை வாய்ப்புகள் கிடைக்காததால் ஒவ்வொருவரும் இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்" எனக் கூறியிருந்தார்.

    காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இந்தியா கூட்டணியில் உள்ளன. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் இரு கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைமையினா ஆட்சி நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

    • அவர்களால் அரசு கூட அமைக்க முடியாது. 200 இடங்களை தாண்டி அவர்களால் பிடிக்க முடியாது.
    • பா.ஜனதா மகாராஷ்டிராவில் பலவீனமாக உள்ளது. மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் கடும் போட்டி நிலவுகிறது.

    பஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 1-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகாரஜூன கார்கே இன்று அமிர்தசரஸ் நகரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    அப்போது மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறுவோம் எனக் கூறி வருகிறது. ஆனால், அவர்களுடைய சீட் எண்ணிக்கை குறையும்போது, எங்களுடைய எண்ணிக்கை அதிகரிக்கும். 400 இலக்கை அவர்கள் மறந்துவிட வேண்டியதுதான். அது அர்த்தமற்றது. அவர்களால் அரசு கூட அமைக்க முடியாது. 200 இடங்களை தாண்டி அவர்களால் பிடிக்க முடியாது.

    பா.ஜனதா மகாராஷ்டிராவில் பலவீனமாக உள்ளது. மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் கடும் போட்டி நிலவுகிறது. அப்படி இருக்கும்போது எப்படி 400 இடங்கை பிடிக்க முடியும்.

    நான் அரசியலில் இணைந்தது பதவிக்காக இல்லை. நான் சிறுவயதில் இருந்து, மோடி வயதை காட்டிலும் கிட்டதட்ட அதிக ஆண்டுகள் மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலில் இருக்கிறேன். இதனால் எனதை பதவியை பற்றி யோசிக்காமல், ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு அவருடைய பதவி குறித்து அமித் ஷா யோசிக்க வேண்டும்.

    இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அக்னிபாத் திட்டம் கிழித்து குப்பைத் தொட்டியில் வீசுவோம்.
    • இணை அமைச்சர் வி.கே.சிங் ராணுவத்தில் தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கனவே 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், ஜூன் 1 அன்று 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் பிரதான கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த மே 22 அன்று ஹரியானா மாநிலத்தில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது பேசிய அவர், "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பிரதமர் மோடி கொண்டு வந்த அக்னிபாத் திட்டம் கிழித்து குப்பைத் தொட்டியில் வீசுவோம். இத்திட்டத்தை பிரதமர் அலுவலகம் உருவாக்கியதே தவிர, ராணுவம் அல்ல. முதல் முறையாக இந்திய ராணுவ வீரர்களை தொழிலாளர்களாக மோடி மாற்றியுள்ளார்" என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், "ராகுல்காந்தி முதலில் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்றிவிட்டு, பிறகு அக்னிபாத் திட்டம் குறித்து பேசட்டும் என்று விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

    இணை அமைச்சர் வி.கே.சிங் ராணுவத்தில் தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2 பேரை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் குர்மீத் ராம் ரஹீமுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    • 2002-ம் ஆண்டு தேரா சச்சா ஆசிரமத்தின் மேலாளர் ரஞ்சித் சிங் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    அரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா ஆசிரமம் உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம், பெண் துறவிகள் 2 பேரை பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இதனிடையே கடந்த 2002-ம் ஆண்டு தேரா சச்சா ஆசிரமத்தின் மேலாளர் ரஞ்சித் சிங் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆசிரமத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து 'பூரா சச்' என்ற பெயரில் எழுதப்பட்ட கடிதம் பத்திரிகைகளில் வெளியானது. இதன் பின்னணியில் ரஞ்சித் சிங் இருந்ததால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பான வழக்கில் குர்மீத் ராம் ரஹீம், கிருஷ்ணலால், ஜஸ்பீர் சிங், சப்தில் சிங், இந்திரசேனா உட்பட பலர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், குர்மீத் ராம் ரஹீம் உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

    இந்நிலையில் இந்த தண்டனையை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் குர்மீத் ராம் ரஹீம் சிங் மேல்முறையீடு செய்தார்.

    அந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், குர்மீத் ராம் ரஹீம் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

    • லூதியானாவில் நடந்த கூட்டத்தில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் பங்கேற்றார்.
    • அப்போது பேசிய அவர், ஆம் ஆத்மிக்கு 13 மக்களவை தொகுதிகளைக் கொடுங்கள் என்றார்.

    சண்டிகர்:

    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்துக்காக இன்று பஞ்சாப் மாநிலம் வந்தார். லூதியானாவில் நடந்த கூட்டத்தில் கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    இன்று, நான் உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளேன். இது மத்திய அரசுக்கான தேர்தல். மத்தியில் நாம் பலவீனமாக இருக்கிறோம்.

    மத்தியில் ஆட்சி அமைந்தால் நமது கைகள் வலுவடையும். எனவே ஆம் ஆத்மி கட்சிக்கு 13 மக்களவை தொகுதிகளைக் கொடுங்கள். அதனால் உங்கள் உரிமைகளை மையத்தில் இருந்து கொண்டு வரலாம்.

    நாட்டில் சர்வாதிகாரம் நடந்து கொண்டிருக்கிறது. இரு நாட்களுக்கு முன் லூதியானாவுக்கு வந்த உள்துறை மந்திரி அமித் ஷா, ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு பஞ்சாப் அரசு ஒழிக்கப்படும். பகவந்த் மான் பதவி விலகுவார். அவரை முதல் மந்திரி பதவியில் இருந்து நீக்குவோம் என மிரட்டியுள்ளார். அவர்கள் இலவச மின்சாரத்தை நிறுத்த முடிவு செய்துள்ளார்கள். எனவே, ஒரு வாக்கு கூட பா.ஜ.க.வுக்கு ஆதரவாக விழக்கூடாது.

    அனைத்து வாக்குகளும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக போடப்பட வேண்டும். பஞ்சாப்புக்கு கிடைக்க வேண்டிய ரூ.9,000 கோடி அவர்களால் தடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

    • பிரான்சிலும் சுதந்திரதேவி வடிவம் கொண்ட சிற்பம் ஒன்று பொதுவெளியில் உள்ளது.
    • கிரேன் மூலம் அந்த சிலையை கட்டிடத்தின் மொட்டைமாடியில் நிறுவி அதனோடு அவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    அமெரிக்கா என்றாலே நினைவுக்கு வருவது சுதந்திர தேவி சிலையாகும். நியூயார்க் நகரில் உள்ள துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, பிரான்ஸ் நாட்டு கட்டிட கலைஞரால் வடிவமைக்கப்பட்டது.

    பிரான்சிலும் சுதந்திரதேவி வடிவம் கொண்ட சிற்பம் ஒன்று பொதுவெளியில் உள்ளது. இந்தநிலையில் பஞ்சாப்பில் தாரன் தரன் மாவட்டத்தில் சுதந்திரதேவி சிலையை வடிவமைத்து புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் மாடியில் அதன் உரிமையாளர்கள் நிறுவி உள்ளனர்.

    கிரேன் மூலம் அந்த சிலையை கட்டிடத்தின் மொட்டைமாடியில் நிறுவி அதனோடு அவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


    ×