என் மலர்
கர்நாடகா
- இந்தி மொழியில் அந்த ஆட்டோ டிரைவரை இளம்பெண் திட்டினார்.
- கன்னடர்களை வெளிமாநிலந்தவர் கீழ்த்தரமாக நடத்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக தலைநகர் பெங்களூரு போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்றது. இந்நிலையில் பெல்லந்தூரில் தனது ஸ்கூட்டர் மீது ஆட்டோ உரசியதால் வடமாநில இளம்பெண் ஆத்திரமடைந்தார்.
இதனையடுத்து, அவர், ஆட்டோ டிரைவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இளம்பெண் தனது செருப்பை கழட்டி ஆட்டோ டிரைவரை தாக்கினார்.
மேலும் இந்தி மொழியில் அந்த ஆட்டோ டிரைவரை இளம்பெண் திட்டியதாக கூறப்படுகிறது. இதை ஆட்டோ டிரைவரின் பக்கத்தில் இருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆட்டோ டிரைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை விசாரித்த போலீசார் இந்த விவாகரத்தில் வடமாநில பெண் மீது தான் தவறு உள்ளது என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்து வடமாநில பெண்ணும் அவரது கணவரும் ஆட்டோ டிரைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கோரினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
- வீடியோவை காட்டி மிரட்டி அழைத்துச்சென்று மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
- கைது செய்யப்பட்ட அனைவரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
கர்நாடகாவின் பெல்காமில் 15 வயது சிறுமி 6 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
சிறுமியுடன் டிசம்பர் 2024 இல் இளைஞர் ஒருவர் நட்பு கொண்டார். பின்னர் அந்த இளைஞன் சிறுமியை ஒரு ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்று தனது 5 நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தான்.
அதை மொபைல் போன் கேமராவில் பதிவு செய்த அவன் வீடியோவை வைரலாக்குவேன் என்று மிரட்டி சிறுமியை மிரட்டி வந்தான்.
பின்னர் ஜனவரி 2025 இல், அதே நபர்களில் மூன்று பேர் மீண்டும் சிறுமியை வீடியோவை காட்டி மிரட்டி அழைத்துச்சென்று மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இந்த முறை பாதிக்கப்பட்ட சிறுமி தனது துயரத்தை குடும்பத்தினரிடம் கூறினார். குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று காவல் ஆணையர் போர்ஸ் பூஷன் குலாப்ராவ் தெரிவித்தார். தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியை தேடி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
- இந்தி மொழியில் அந்த ஆட்டோ டிரைவரை இளம்பெண் திட்டினார்.
- கன்னடர்களை வெளிமாநிலந்தவர் அண்மை காலமாக கீழ்த்தரமாக நடத்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக தலைநகர் பெங்களூரு போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்றது. இந்நிலையில் பெல்லந்தூரில் தனது ஸ்கூட்டர் மீது ஆட்டோ உரசியதால் இளம்பெண் ஆத்திரமடைந்தார்.
ஆட்டோ டிரைவரை வழிமறித்து தகராறில் இளம்பெண் அவரை தனது செருப்பால் தாக்கினார்.
மேலும் இந்தி மொழியில் அந்த ஆட்டோ டிரைவரை இளம்பெண் திட்டியதாக கூறப்படுகிறது. இதை ஆட்டோ டிரைவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
பெங்களூருவில் கன்னடர்களை வெளிமாநிலந்தவர் அண்மை காலமாக கீழ்த்தரமாக நடத்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே ஆட்டோ டிரைவர் கொடுத்த புகாரின்பேரில் பெல்லந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கர்நாடக மாநில அரசு சட்டமன்றத்தில் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியது.
- இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு கடந்த 23ஆம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
புகையிலை பொருட்களை வாங்குவதற்கும், பொது இடங்களில் உபயோகிக்கவும் வயது வரம்பு 18 ஆக இருந்தது. இந்த வயது வரம்பை 21ஆக உயர்த்தும் வகையில் கர்நாடக மாநில அரசு சட்டமன்றத்தில் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியது.
இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு கடந்த 23ஆம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தெடர்ந்து சட்டம் அமலுக்கு வருவதாக கர்நாடக மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த சட்டத்தின்படி 21 வயதிற்கு உட்பட்டோர் எந்தவொரு பொது இடத்திலும் புகையிலை தயாரிப்பு பொருட்களை பயன்படுத்தப்பட்டது. அதாவது புகைப்பிடித்தல், புகையிலை எச்சில் துப்புவது சட்டத்தை மீறுவதாகவும்.
எனினும், 30 அறைகளை கொண்ட ஓட்டல் அல்லது 30 பேர் அமரும் வகையிலான ரெஸ்டாரன்ட் அல்லது விமான நிலைங்களில் புகைப்பிடிப்பதற்கான தனி இடங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் ஹூக்கா பார்கள் திறக்கவும், செயல்படவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடைக்காரர்கள் 21 வயதிற்கு உட்பட்டோருக்கு புகையிலை விற்பனை செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.
- மாணவர்களுக்கு அறிகுறி இருந்தால் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் நேற்று மாலை வரை 234 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி 1 முதல் மற்ற இணை நோய்கள் இருந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்க உள்ளன. இந்த நிலையில், பள்ளிக் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் பெற்றோர்கள் அவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையின்படி பொருத்தமான சிகிச்சை மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவும். உடல்நிலை சரியான பின்னர்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.
குழந்தைகள் பள்ளிகளுக்கு காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறியுடன் வந்தால், அவர்களுக்கு பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து, வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால், பொருத்தமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை வழங்க வேண்டும் என அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களுக்கு கர்நாடக மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 26ஆம் தேதி கொரோனா தொற்று தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையாக ஆலோசனை நடத்தினார். அப்போது பள்ளிகளுக்கு அறிவுறுத்த முடிவு எடுக்கப்பட்டது.
- கர்நாடகாவில் நிர்மிதி கேந்திரா திட்ட இயக்குனர் கங்காதர் ஷிரோ வீடு, அலுவலகத்தில் லோக் ஆயுக்தா சோதனை நடத்தி வருகிறது.
- வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லோக் ஆயுக்தா சோதனை நடத்துகிறது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் நிர்மிதி கேந்திரா திட்ட இயக்குனர் கங்காதர் ஷிரோ வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் லோக் ஆயுக்தா போலீஸ் சூப்பிரண்டு ஹனுந்தராய தலைமையிலான போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த சோதனையில் ஏராளமான தங்க நகைகள், வெள்ளி நகைகள், மற்றும் விலை உயர்ந்த வாகனங்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
- ஆறுகள், நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- வழக்கமாக ஜூன் மாத இறுதி முதல் ஜூலை மாத இறுதி வரை அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும்.
பெங்களூரு:
கர்நாடகாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் பருவமழை கொட்டி வருவதால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீரவரத்து அதிகரித்துள்ளது. மேலும் ஆறுகள், நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. வழக்கமாக ஜூன் மாத இறுதி முதல் ஜூலை மாத இறுதி வரை அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும். ஆனால் இந்த முறை மே மாதமே கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.
கடந்த 80 ஆண்டுகளில் மே மாதத்தில் கடந்த 1954, 1961, 2022-ம் ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் 4-வது முறையாக மே மாதத்தில் அணையின் நீர்மட்டம் 100 அடியை அணை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மங்களூரு டவுன் கொட்டார சவுக்கி பகுதியில் ராஜகால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- நிலச்சரிவில் இருந்து காந்தப்பா பூஜாரி, அவரது மகன் சீதாராம் பூஜாரி ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
மங்களூரு:
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. 7-வது நாளாக நேற்று தட்சிண கன்னடா உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை முடிவடைந்த 24 மணி நேரத்தில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் 26.44 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
மங்களூரு டவுன் கொட்டார சவுக்கி பகுதியில் ராஜகால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மங்களூரு டவுனில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 1,000-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது.
தேரளகட்டே அருகே பெல்மா கிராமத்தில் கனகெரே பகுதியில் வீடு இடிந்து 10 வயது சிறுமி பாத்திமா இறந்தாள். உருமனே கோடி பகுதியில் காதப்பா பூஜாரி(வயது 70) என்பவர் தனது மனைவி பிரேமா(65), மகன் சீதாராம் பூஜாரி(35), மருமகள் அஸ்வினி(30), பேரன்கள் ஆர்யன்(2½), ஆருஷ்(1½) ஆகியோருடன் வசித்து வந்தார். தொடர் கனமழை காரணமாக நேற்று அதிகாலை அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் காந்தப்பா பூஜாரியின் வீடும் சிக்கி உள்ளது. நிலச்சரிவு ஏற்படும் சத்தம் கேட்டு காந்தப்பா பூஜாரி, அவரது மனைவி பிரேமா, மகன் சீதாராம் பூஜாரி உள்ளிட்டோர் வெளியே ஓடி வந்தனர். அதேபோல் அஸ்வினியும் தனது 2 மகன்களை தூக்கிக் கொண்டு வெளியே ஓடி வர முயற்சித்து உள்ளார்.
நிலச்சரிவில் இருந்து காந்தப்பா பூஜாரி, அவரது மகன் சீதாராம் பூஜாரி ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர்.ஆனால் பிரேமா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். அதேபோல் தனது 2 மகன்களையும் தூக்கிக் கொண்டு அஸ்வினி வெளியே ஓடிவரும்போது வீடு நிலச்சரிவில் சிக்கி இடிய ஆரம்பித்தது. இதில் சிக்கி அவரது 2 குழந்தைகளும் உயிரிழந்தனர். அஸ்வினி மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களை மீட்கும் பணி 8 மணி நேரம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் நேற்று ஒரேநாளில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் பெல்தங்கடி தாலுகா உஜ்ஜிரி கிராமத்தைச் சேர்ந்த விஜேஷ் ஜெயின்(27) என்பவர் மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று அப்பகுதியில் மழையால் சரிந்து விழுந்த மின்கம்பத்தை மீண்டும் சீரமைத்து மின்சார இணைப்பு கொடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி பலியானார்.
இதேபோல் மங்களூரு அருகே தொட்டபெங்கெரே பகுதியை சேர்ந்த யஷ்வந்த்(38), கமலாக்ஷா(32) ஆகிய 2 பேர் ஒரு சிறிய படகில் அரபிக்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில் கடலில் படகு மூழ்கி அவர்கள் 2 பேரும் பலியானார்கள். இதன்மூலம் நேற்று ஒரேநாளில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
- அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரசில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
- ராஜினாமா முடிவை ஒரு வாரம் ஒத்திவைத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா கொலுத்தமஜ்லு என்ற கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்ரகீம் என்கிற இம்தியாஸ் (32).
இவர் இந்த பகுதியில் உள்ள ஜூம்மா மசூதி செயலாளராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை மர்ம நபர்கள் சிலர் வெட்டி கொலை செய்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவியது. மேலும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த கொலை வழக்கு விசாரணையை அரசு தவறாக கையாண்டதாகவும், மங்களூரு, உடுப்பி, சிவமொக்கா மாவட்டங்களில் தொடர்ச்சியான பழிவாங்கும் கொலைகளை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்று காங்கிரசில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் அரசு இந்த கொலை வழக்குகளை கையாண்ட விதத்தை கண்டித்து மங்களூரு ஷாதி மஹாலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.
அப்போது தட்சிண கன்னட கொலை வழக்கை சரியாக விசாரிக்காத காங்கிரஸ் அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக கன்னட காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் எம்.எஸ்.முகம்மது மற்றும் தட்சிண கன்னட சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சாகுல் அமீது ஆகியார் அறிவித்தனர்.
அவர்களை தொடர்ந்து 8 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பல முஸ்லிம் மாநகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் உள்பட 200 பேர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து விட்டதாக அறிவித்தனர்.
மேலும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் கட்சி அலுவலகத்துக்கு திரும்ப செல்லமாட்டோம் என்று அறிவித்துள்ளனர். ஆனால் எழுத்து பூர்வ ராஜினாமா கடிதம் கொடுக்கபடவில்லை. இதற்கிடையே ராஜினாமா முடிவை ஒரு வாரம் ஒத்திவைத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- போலீசார் 188 கிராம் தங்க நகைகள், 550 கிராம் வெள்ளி மற்றும் 1500 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
- மூன்று மனைவிகளும் வெவ்வேறு இடத்தில் வசித்து வருவதாகவும், அவர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மூன்று மனைவிகள் மற்றும் 9 குழந்தைகளை பராமரிப்பதற்காக ஒருவர் தொழில்முறை திருடனாக மாறிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பொலீஸ் நிலையத்தில் ஏராளமான கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலீசார் பபாஜான் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 188 கிராம் தங்க நகைகள், 550 கிராம் வெள்ளி மற்றும் 1500 ரூபாய் ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பபாஜானை கைது செய்ததன் மூலம் 8 திருட்டு வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில், தனக்கு மூன்று மனைவிகள் உள்ளதாகவும், அவர்கள் பெங்களூருவின் புறநகர் பகுதிகளில் வெவ்வேறு இடத்தில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மூன்று மனைவிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும், அவர்கள் மூலம் 9 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரையும் பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இவர்களுக்காக தொழில்முறை திருடனாக மாறியதாகவும் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தினரை பராமரிக்க தொழில்முறை திருடனாக ஒருவர் மாறியது அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தக் லைஃப் பட போஸ்டர்களை கிழித்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
- கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் கண்டனம் தெரிவித்தார்.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தக் லைஃப் பட விழா நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் கமல்ஹாசன் பேசும் போது தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக பேசினார். இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
கமல்ஹாசனை கண்டித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் கன்னட அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மேலும், தக் லைஃப் பட போஸ்டர்களை கிழித்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் கண்டனம் தெரிவித்தார்.
இதற்கிடையே கர்நாடக கலாச்சாரஅமைச்சர் சிவராஜ் தங்கட்சி கூறியதாவது:-
கன்னட நிலம், நீர், மற்றும் மொழி பிரச்சினையில் ஈடுபட்டுள்ள எந்த வொரு பெரிய நபரையும் பொறுத்து கொள்வது என்ற கேள்விக்கே இடமில்லை. கமல்ஹாசன் உடனடியாக மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவரது அனைத்து படங்களும் மாநிலத்தில் தடை செய்யப்படும்.
நடிப்பதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும் நம் மொழி தேவை. இப்போது விளம்பரத்துக்காக இதைப்பற்றி பேசுகிறீர்களா? முன்னதாக சோனுநிகம் கன்னடர்களை பற்றி இதே போல் பேசினார். பின்னர் மன்னிப்பு கேட்டார். அவர்கள் அனைவருக்கும் பாடம் கற்பிக்க வேண்டும்.
கமல்ஹாசன் பல கன்னட படங்களில் நடித்துள்ளார். ஒரு மூத்த நடிகர் இது போன்ற அறிக்கையை வெளியிடுவது சரியல்ல. அவரது படங்கள் வெளியிடுவதை தடை செய்ய திரைப்பட வர்த்தக சபைக்கும் கடிதம் எழுதப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவர் அசோகா கூறுகையில்," கன்னட மொழியை அவமதித்த கமலின் புதிய அல்லது பழைய படங்களை திரையிட கன்னடர்கள் அனுமதிக்கக்கூடாது.
அரசாங்கமும், கன்னட ஆதரவு அமைப்புகளும் இந்த படங்களை புறக்கணிக்க வேண்டும். கமல்ஹாசன் பல கன்னட படங்களில் நடித்துள்ளார். அவர் பல தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்துள்ளார்.
கன்னட திரைப்பட தயாரிப்பாளர்களின் கடனை அடைக்க அவர் நியாயமாக பேசியிருக்க வேண்டும். அதற்கு மாறாக அவர் கன்னடத்தை அவமதித்துள்ளார். அவரது செயல் சகிக்க முடியாதது" என்றார்.
- இன்று கடலோர, மலை மாவட்டங்களில் 6-வது நாளாக மழை பெய்து வருகிறது.
- காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. பல இடங்களில் நிலச்சரிவு, மரங்கள் சாய்ந்து விழுந்தது உள்ளிட்ட பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் வீடு இடிந்து விழுந்து, மரம் சாய்ந்து விழுந்து இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் 5-வது நாளாக நேற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது.
இன்று கடலோர, மலை மாவட்டங்களில் 6-வது நாளாக மழை பெய்து வருகிறது. குடகு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி நதியின் பிறப்பிடமான தலைக்காவிரியில் கனமழை கொட்டி தீர்க்கிறது. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தோனிகல்லு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளம் சூழ்ந்த தோனிகல்லு கிராமத்தில் 80 குடும்பங்கள் பரிதவித்தது. இதனால் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அவர்களை மீட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.






