என் மலர்
இந்தியா

கடந்த 80 ஆண்டுகளில் மே மாதத்தில் 4-வது முறையாக 100 அடியை எட்டிய கிருஷ்ணராஜ சாகர் அணை
- ஆறுகள், நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- வழக்கமாக ஜூன் மாத இறுதி முதல் ஜூலை மாத இறுதி வரை அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும்.
பெங்களூரு:
கர்நாடகாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் பருவமழை கொட்டி வருவதால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீரவரத்து அதிகரித்துள்ளது. மேலும் ஆறுகள், நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. வழக்கமாக ஜூன் மாத இறுதி முதல் ஜூலை மாத இறுதி வரை அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும். ஆனால் இந்த முறை மே மாதமே கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.
கடந்த 80 ஆண்டுகளில் மே மாதத்தில் கடந்த 1954, 1961, 2022-ம் ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் 4-வது முறையாக மே மாதத்தில் அணையின் நீர்மட்டம் 100 அடியை அணை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.






