என் மலர்
ஜம்மு காஷ்மீர்
- வர்த்தகத்திற்காக பயன்படுத்தி வந்த காரை விற்க நேரிட்டது.
- நாள் ஒன்றுக்கு ரூ. 1500 முதல் ரூ. 2 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.
ஜம்மு காஷ்மீரின் செனாப் பள்ளத்தாக்கின் முதல் பெண் இ-ரிக்ஷா ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றார் 39 வயதான மீனாட்சி தேவி. கடந்த ஆண்டு இவரின் கணவருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு சிகிச்சை செலவுக்காக மீனாட்சி தேவியின் குடும்ப சூழல் தலைகீழாக மாறிப் போனது. இதன் காரணமாக மீனாட்சி தேவியின் குடும்பம் வர்த்தகத்திற்காக பயன்படுத்தி வந்த காரை விற்க நேரிட்டது.
குடும்ப சூழலில் மனம் தளராத மீனாட்சி, நிதி நிலையை எதிர்கொள்ள தானே களத்தில் இறங்க முடிவு செய்தார். அதன்படி இ-ரிக்ஷா ஓட்டி வருமானம் ஈட்டலாம் என அதற்கான பணிகளை துவங்கினார். இவரது முடிவுக்கு அவரது உறவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதே போன்று நண்பர்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷா கூட்டமைப்பினரும் இவரது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும், எதிர்ப்புகளை கடந்து செனாப் பள்ளத்தாக்கு பகுதியில் இ-ரிக்ஷா ஓட்டும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். முதற்கட்டமாக இவரது தொழில் சற்று சுமாராகவே இருந்துள்ளது. ஆனால், தற்போது தினமும் நாள் ஒன்றுக்கு ரூ. 1500 முதல் ரூ. 2 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.
"முதலில் எல்லாரும் என்ன வேற்றுகிரகவாசி போன்றே பார்த்தனர். ஆனால், எதிர்ப்புகளை கண்டு கவலை கொள்ளாமல், எனது நிலைமையை எப்படி மாற்ற வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். இதன் மூலம் எனக்கு நம்பிக்கை அதிகரித்தது. தற்போது நாள் ஒன்றுக்கு ரூ. 1500 முதல் ரூ. 2 ஆயிரம் வரை சம்பளம் ஈட்டுகிறேன். எனது வாடிக்கையாளர்களுக்கு தொடர் சேவை வழங்குவதால் என்னை யாரும் ஆட்டோ ஸ்டாண்ட்-இல் பார்க்க முடியாது," என்று மீனாட்சி தேவி தெரிவித்தார்.
- நியூ காலனியில் பாதுகாப்பு படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.
- சம்பந்தப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் குறித்து போலீசார் விசாரணை.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அரிஹல் பகுதியில் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அப்போது, அரிஹல் பகுதியில் உள்ள நியூ காலனியில் பாதுகாப்பு படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.
இதில், அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்தனர்.
சம்பந்தப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் மற்றும் எந்த அமைப்பை சேர்ந்தவர் என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- ரஜோரியில் நடந்த ஒரு நடவடிக்கையில் இரண்டு கேப்டன்கள் உட்பட ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆர்.ஆர் ஸ்வைன் இன்று தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது.
கடந்த வாரம், ரஜோரியில் நடந்த ஒரு நடவடிக்கையின்போது இரண்டு கேப்டன்கள் உட்பட ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதேபோல், ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்ற லஷ்கர்-இ-தொய்பா உயர்மட்ட தளபதி உட்பட இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் முழுமையாக முடிவடையவில்லை என்றும் பாதுகாப்புப் படையினர் இழப்புகளைச் சந்திக்க நேரிடலாம் என்றும் அதற்காக போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆர்.ஆர் ஸ்வைன் இன்று தெரிவித்தார்.
குருபூராப்பை முன்னிட்டு ஸ்ரீநகரில் உள்ள சட்டிபட்ஷாய் குருத்வாராவில் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
இந்தப் போர் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. இந்த போரினால் எந்தப் பலனும் இல்லை என்று எதிர் தரப்பு ஒப்புக்கொண்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும். அதுவரை எமது போராட்டத்தைப் பொறுத்த வரையில் இழப்புகள் ஏற்படுவது நிதர்சனம். ஆனால் அந்த இழப்புகளைச் சுமந்து கொண்டு நாம் முன்னேற வேண்டும். இந்தப் போரிலிருந்து நாம் பின்வாங்க முடியாது.
ஒவ்வொரு பனிப்பொழிவுக்கும் சில இடங்களில் ஊடுருவல் அதிகரிக்கிறது மற்றும் சில இடங்களில் குறைகிறது.
முடிந்த வரையில், உயிரிழப்பு நேர்வதை குறைக்க முயற்சிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரஜோரி மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நான்கு வீரர்கள் வீர மரணம்.
- தொடர் வேட்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள காலகோட் காட்டுப் பகுதியில் இந்திய பாதுகாப்புப்படை வீரர்களுக்கும், பயங்கிரவாதிகளுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
நேற்றில் இருந்து நடைபெற்றும் வரும் சண்டையில் இந்திய வீரர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர். இதில் இருவர் அதிகாரிகள் ஆவார்கள். இருந்தபோதிலும், வீரர்கள் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் இருந்து பின்வாங்கவில்லை.
இறுதியாக இன்று 2-வது நாள் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார்.
பயங்கரவாதியின் பெயர் குவாரி எனத் தெரியவந்துள்ளது. இவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உயர் பதவி வகித்த பாகிஸ்தான் பயங்கரவாதி எனத் தெரிய வந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்தில் மீண்டும் பயங்கரவாதத்தை புதுப்பிக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். குகைகளில் மறைந்து இருந்து ஐஇடி-யை கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றவர், துப்பாக்கிச்சுடும் பயற்சி பெற்றவர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றவர்" என ஜம்முவின் பாதுகாப்பு மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதற்கிடையே இந்திய வீரர் ஒருவர் மரணம் அடைந்தார். இதன்மூலம் இந்தியா சார்பில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
- ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்தது.
- பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படைவீரர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பாதுகாப்புப் படைவீரர்கள் அப்பகுதிக்குச் சென்றனர். அவர்களைக் கண்டதும் மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.
இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் வீரர்கள் மற்றும் 2 அதிகாரிகளும் அடங்குவர்.
இதையடுத்து அப்பகுதியில் மறைந்துள்ள பயங்கரவாதிகளைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரக ஆலோசகர் மதுசூதன் பதிலடி கொடுத்தார்.
- சர்வதேச சமூகம் வெளிப்படையான, சமமான நிதியுதவியில் பணியாற்ற வேண்டும்.
நியூயார்க்:
ஐ.நா. சபையில் காஷ்மீர் விவகாரத்தை பற்றி பாகிஸ்தான் தொடர்ந்து பேசி வருகிறது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கிறது.
இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், காஷ்மீர் விவகாரம் பற்றி பாகிஸ்தானின் ஐ.நா. தூதர் முனீர் சுக்ரம் பேசினார். இதற்கு ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரக ஆலோசகர் மதுசூதன் பதிலடி கொடுத்தார்.
அவர் கூறும்போது, இந்தியாவுக்கு எதிராக ஒரு நிரந்தரப் பிரதிநிதி (பாகிஸ்தான் தூதர்) முன் வைத்து உள்ள தேவையற்ற மற்றும் வழக்கமான கருத்துக்களை நிராகரிக்க சில வினாடிகளுக்கு மேல் எடுத்துக் கொள்ளமாட்டேன். அதற்கு பதில் அளித்து நான் அவர்களை கண்ணியப்படுத்த மாட்டேன்.
சர்வதேச கவனத்தை கவர பாகிஸ்தான், ஐ.நா. கூட்டங்களில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி வருகிறது என்றார்.
மேலும் அவர் கூறும்போது, சர்வதேச சமூகம் வெளிப்படையான, சமமான நிதியுதவியில் பணியாற்ற வேண்டும். கடன் பொறிகளின் தீய சுழற்சிக்கு வழிவகுக்கும் நிதியுதவியின் ஆபத்துக்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சீனாவை மறைமுகமாக குறிப்பிட்டார்.
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா கடன்களை கொடுத்து தனது பொறியில் சிக்க வைப்பதாக குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- 370 பிரிவு நீக்கப்பட்டால், துப்பாக்கி சண்டையில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்றார்கள்.
- துப்பாக்கிச்சண்டை நடைபெற்று ஒருவாரம் கூட முடியவில்லை.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் தேசிய மாநாடு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா குல்காம் மாவட்டத்தில் நடந்த பேரணில் கலந்த கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
எங்களுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது. தேர்தல், வேலைவாய்ப்பின்மையை தீர்ப்போம், வளர்ச்சியடையச் செய்வோம் என்ற பேரில் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு மத்திய அரசால் துரோகம் இழைக்கப்படுகிறது.
இதுவரை மின்சாரம் தடைக்கு தீர்வு காணப்படாதது ஏன்?. இன்று, ஏராளமாக பணம் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அப்படி இருக்கும்போது, 14 மணி நேர மின்சார தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?.
காஷ்மீரில் பல்வேறு மனப்பான்மை கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்றால், அதற்கு 370-வது பிரிவுதான் காரணம். 370 பிரிவு நீக்கப்பட்டால், துப்பாக்கி சண்டையில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்றார்கள். ஆனால், இந்த பகுதியில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று ஒருவாரம் கூட முடியவில்லை.
5 பேர் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் பயங்கரவாதிகள் என்று அரசு சொல்கிறது. இதில் நான்கு பேர் 2020-ல் ஆயுதத்தை கையில் எடுத்தவர்கள். 2021-ல் ஒருவர் கையில் எடுத்தார். இதெல்லாம் 2019-க்குப் பிறகுதான். அரசு தோல்வி அடைந்ததைத்தான் இது காட்டுகிறது. இது உங்களின் (மத்திய அரசு) ஏமாற்றத்தை காட்டுகிறது. ஜம்மு-காஷ்மீர் மக்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்த மக்களையும் ஏமாற்றிவிட்டீர்கள்.
இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
- விபத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.
- ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, எக்ஸ் தளத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் உள்ள படோடே- கிஷ்ட்வார் தேசிய நெடுஞ்சாலையில் துருங்கல்- அசார் பகுதி அருகே உள்ள 300 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நொறுங்கியது. இதில் பயணித்த ஏராளமான பயணிகள் படுகாயமடைந்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்டு குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.
இதில், 36 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், 19 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கிஷ்த்வார் மற்றும் தோடா ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்ல ஹெலிகாப்டர் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், "காயமடைந்தவர்கள் தேவைக்கேற்ப மாவட்ட மருத்துவமனை கிஷ்த்வார் மற்றும் ஜிஎம்சி தோடாவுக்கு மாற்றப்படுகிறார்கள். மேலும் காயமடைந்தவர்களை மாற்ற ஹெலிகாப்டர் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்" என்றார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, எக்ஸ் தளத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், விபத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.
அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
- நாட்டை காக்கும் ராணுவ வீரர்கள் எல்லையில் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர்.
- சி.ஆர்.பி.எப். வீரர்கள் தீபம் ஏற்றி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
ஸ்ரீநகர்:
நாடு முழுவதும் மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். புத்தாடை உடுத்தியும், பட்டாசு வெடித்தும் தீபாவளி அனைவராலும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களும் ஜம்மு காஷ்மீர் எல்லையில் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 76-வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள், பணிக்கு இடையே பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர். அனைவரும் ஒரு குடும்பம் போன்று தீபாவளியைக் கொண்டாடுவதாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.
சி.ஆர்.பி.எப். வீரர்கள் தீபம் ஏற்றி பட்டாசு வெடித்தும், இனிப்புகளைப் பகிர்ந்துகொண்டும் ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
- சோபியான் மாவட்டத்தில் பயங்கிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை.
- தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதி சுட்டுக்கொலை.
ஜம்மு-காஷ்மீரில் மறைந்திருக்கும் தீவிரவாதிகளை தேடும் பணியில் அம்மாநில காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்புப்படை வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயலும் பயங்கரவாத செயல்களையும் தடுத்து வருகிறார்கள்.
இன்று சோபியான் மாவட்டத்தில் உள்ள கதோஹலன் என்ற இடத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் தடை செய்யப்பட்ட டி.ஆர்.எஃப் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதி ஒருவர் சுட்டு வீழ்த்தப்பட்டார்.
இதுதொடர்பான முழுத் தகவல் விரைவில் தெரிவிக்கப்படும் என காஷ்மீர் மண்டல காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சந்தேகத்திற்கிடமான பொருள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- மர்ம நபர்கள் யார்? அவர்களின் சதி திட்டம் என்ன? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு:
ஜம்முவில் உள்ள நர்வால்-சித்ரா நெடுஞ்சாலையில் போலீஸ் சோதனை சாவடி ஒன்று உள்ளது.
இதன் அருகே சந்தேகத்திற்கிடமான பொருள் கிடப்பதாக நேற்று மாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக அங்கு போலீசாரும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்களும் விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது 2 கிலோ எடை உள்ள டைமர் அடிப்படையிலான மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் சாதனம் ( ஐ.இ.டி.) டிபன் பாக்சில் பொருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த சாலையில் உடனடியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் டிபன் பாக்ஸ் வெடிகுண்டை செயல் இழக்க செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டை வைத்த மர்ம நபர்கள் யார்? அவர்களின் சதி திட்டம் என்ன? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காசாவில் அனைத்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது
- காசாவில் ரத்தம் சிந்தப்படுவதை இந்தியா தடுக்க வேண்டும் என்றார் ஃபரூக்
பாலஸ்தீன காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைகிறது.
காசா மீது வான்வழி மற்றும் தரைவழியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது. காசாவில் குடிநீர், எரிபொருள், மருந்து, உணவு உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில், முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவின் இல்லத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் குப்கர் மக்கள் கூட்டணி தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து காசா பிரச்சனை குறித்து ஃபரூக் அப்துல்லா கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
காசா மருத்துவமனைகளில் மருந்து, நீர், மின்சாரம் எதுவும் இல்லை. நம் நாட்டு மக்கள் காசா மக்களுக்கு ஆதரவாக துணை நின்று குரல் கொடுக்க வேண்டும். அங்கு அமைதி திரும்ப இந்தியா முயற்சி எடுக்க வேண்டும். அகிம்சையை போதித்த மகாத்மா காந்தி பிறந்த நாடு இந்தியா. காசாவில் ரத்தம் சிந்தப்படுவதை தடுக்க அனைத்து வழிகளையும் இந்தியா ஆராய வேண்டும்.
இவ்வாறு ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.






