என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜம்மு காஷ்மீரில் 300 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 36 பேர் உயிரிழப்பு
    X

    ஜம்மு காஷ்மீரில் 300 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 36 பேர் உயிரிழப்பு

    • விபத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.
    • ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, எக்ஸ் தளத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் உள்ள படோடே- கிஷ்ட்வார் தேசிய நெடுஞ்சாலையில் துருங்கல்- அசார் பகுதி அருகே உள்ள 300 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நொறுங்கியது. இதில் பயணித்த ஏராளமான பயணிகள் படுகாயமடைந்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்டு குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.

    இதில், 36 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், 19 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கிஷ்த்வார் மற்றும் தோடா ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்ல ஹெலிகாப்டர் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

    இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், "காயமடைந்தவர்கள் தேவைக்கேற்ப மாவட்ட மருத்துவமனை கிஷ்த்வார் மற்றும் ஜிஎம்சி தோடாவுக்கு மாற்றப்படுகிறார்கள். மேலும் காயமடைந்தவர்களை மாற்ற ஹெலிகாப்டர் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்" என்றார்.

    ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, எக்ஸ் தளத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மேலும், விபத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.

    அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    Next Story
    ×