என் மலர்
ஜம்மு காஷ்மீர்
- ரகசிய தகவல் அடிப்படையில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டை.
- பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் வீரர்கள் பதிலுக்கு தாக்குதல்.
ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகர் பகுதிகளில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது. பயங்கரவாதிகளை ஒடுக்கும் வகையில் பாதுகாப்புப்படையினர் உள்ளூர் போலீசார் உதவியுடன், அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததும், அந்த இடத்திற்கு சென்று, அப்பகுதியை சுற்றிவளைத்து அவர்களை முடிக்க முயற்சி செய்வார்கள். இப்போது இருதரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச்சூடு நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
இந்த வகையில் தெற்கு காஷ்மீர் மாவட்டமான ஷோபியானின் சோட்டிகாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை அந்த பகுதியை வீரர்கள் சுற்றி வளைத்துள்ளனர்.
அந்த பகுதியில் தீவிரவாதிகள் இருக்கிறார்களா? என வீரர்கள் தேடிப்பார்க்கும்போது பயங்கரவாதிகள் வீரர்கள் நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். இதனால் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்த தொடங்கினர். இதனால் அப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகின்ற நிலையில், உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
- இந்தியா முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் இதுவரை இல்லாத வகையில் புத்தாண்டை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2024 புத்தாண்டு தினம் இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் புத்தாண்டு கலைகட்டியுள்ளது. மியூசிக் நிகழ்ச்சி அமைத்து கொண்டாடியுள்ளனர். இதுவரை இதுபோன்று புத்தாண்டு கொண்டாட்டத்தை பார்த்தது இல்லை என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலாத்துறை சார்பில் மியூசிக் நிகழ்ச்சி ஸ்ரீநகரின் காந்தா கர் (மணிக்கூண்டு) பகுதியில் நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் மணிக்கூண்டு பகுதியில் ஒன்று கூடி புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஸ்ரீநகரின் மணிக்கூண்டு பகுதியில் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா வந்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
முகமது யாசீன் என்பவர் "புத்தாண்டு கொண்டாட்டத்தை பார்க்க நான் இங்கே வந்தேன். இதுபோன்ற கொண்டாட்டத்தை இதற்கு முன்னதாக நான் பார்த்ததே இல்லை. அதுவும் லால் சவுக் பகுதியில் இதுபோன்று பார்த்தது கிடையாது. நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்" என்றார்.
ஜம்மு-காஷ்மீரில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், லால் சவுக் பகுதியில் நடைபெறுவது இதுதான் முதல் முறை. காஷ்மீர் அமைதியாக இருக்க வேண்டும். அவர்கள் அமைதியை விரும்புகிறார்கள். இதெல்லாம் அங்குள்ள மக்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை சார்ந்துதான் உள்ளது. லால் சவுக் பகுதிகள் மணப்பெண் போன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சுற்றுலா பயணிகள் கூட ஸ்ரீநகர் மணிக்கூண்டு பகுதியில் இதுபோன்று நிகழ்ச்சி நடைபெறுகிறதா... என ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவை ரத்து செய்த மத்திய அரசு, அங்குள்ள மக்களின் அமைதிக்காகவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
- நாங்கள் பாரத் ஜோடோ யாத்ராவில் ஒரு பகுதியாக இருந்தோம் என்றார் பரூக் அப்துல்லா.
- ராகுலின் பாரத் நியாய யாத்ராவிலும் பங்கேற்போம் என தெரிவித்தார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரியான பரூக் அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாங்கள் பாரத் ஜோடோ யாத்ராவில் ஒரு பகுதியாக இருந்தோம். பாரத் நியாய யாத்ராவிலும் பங்கேற்போம்.
இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தைக்கு செல்லாவிட்டால் காஷ்மீரில் (காசாவில் இருப்பதுபோல) மோசமான சூழ்நிலை ஏற்படலாம்.
ஒரு பக்கம் பாகிஸ்தானும், மறுபுறம் சீனாவும் உள்ளன. போர் மூண்டால் காஷ்மீர் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
நம் நண்பர்களை மாற்றலாம், ஆனால் நம் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது என அடல் பிகாரி வாஜ்பாய் கூறியதை நினைத்துப் பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
- இதில் படுகாயமடைந்து 8 ஆண்டு கோமாவில் இருந்த ராணுவ வீரர் மரணமடைந்தார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் ஹாஜி நகா கிராமத்தில் 2015, நவம்பர் மாதம் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் இந்திய ராணுவம் ஒரு ஆபரேஷனை நடத்தியது. குப்வாராவின் கலரூஸ் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கர்னல் கரன்பீர் சிங் நாட் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கர்னல் கரன்பீர் சிங் கோமா நிலைக்குச் சென்றார்.
தனது கணவர் கண் விழிப்பார் என அவரது மனைவியும், அவரது குழந்தைகளும் 8 ஆண்டாகக் காத்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த ஞாயிறு அன்று கர்னல் கரன்பீர் சிங் நாட் காலமானார். அவர் 20 ஆண்டு இந்திய ராணுவத்தில் பணிபுரிந்துள்ளார். சென்னை ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற இவர், கடந்த 1998-ம் ஆண்டு ராணுவத்தில் இணைந்தார். அங்கு பல்வேறு பிரிவுகளில் 14 ஆண்டு பணிபுரிந்த இவர் அதன்பின் பிராந்திய ராணுவத்தில் இணைந்து நாட்டுக்காக சேவை புரிந்தார்.
கர்னல் கரன்பீர் சிங் நாட் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- நாம் பாகிஸ்தானுடன் ஏன் பேசத் தயாராக இல்லை? என கேள்வி எழுப்பினார்.
- அடுத்த காசாவாக ஜம்மு காஷ்மீர் மாறிவிடும் என்றார் பரூக் அப்துல்லா.
ஸ்ரீநகர்:
தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரியுமான பரூக் அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:
நமது நண்பர்களை மாற்றலாம். ஆனால் அண்டை வீட்டாரை மாற்றமுடியாது என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியிருந்தார்.
அண்டை நாட்டுடன் நட்பாக இருந்தால் இருவரும் முன்னேற முடியும். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை தொடரவேண்டியது அவசியம். தற்போது நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராகப் போகிறார்.
நாங்கள் இந்தியாவுடன் பேசத் தயார் என சொல்கிறார்கள். பாகிஸ்தானுடன் பேச நாம் ஏன் தயாராக இல்லை?
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால், இஸ்ரேலியப் படைகளால் குண்டுவீசித் தாக்கப்படும் காசாவிற்கு ஏற்பட்ட கதியை இந்தியா சந்திக்க நேரிடும். அடுத்த காசாவாக ஜம்மு காஷ்மீர் மாறிவிடும் என தெரிவித்தார்.
- காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டம் சுரான்கோட் பகுதியில் ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் பலியானார்கள்.
- அதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த 3 வாலிபர்களை ராணுவத்தினர் விசாரணைக்காக பிடித்து சென்றனர்.
ஸ்ரீநகர்:
கடந்த 21-ந் தேதி, காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டம் சுரான்கோட் பகுதியில் ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் பலியானார்கள். அதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த 3 வாலிபர்களை ராணுவத்தினர் விசாரணைக்காக பிடித்து சென்றனர். 3 பேரும் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, நேற்று சுரான்கோட் பகுதிக்கு சென்று, பலியானோர் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற திட்டமிட்டு இருந்தார்.
அவரது பயணத்தை தடுக்கும்வகையில், அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருப்பதாக மக்கள் ஜனநாயக கட்சி, தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் குற்றம்சாட்டி உள்ளது. அதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.
- பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் முன்னாள் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.
- பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தின் கண்ட்முல்லா பகுதியில் உள்ள மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் முன்னாள் போலீஸ் அதிகாரி முகமது ஷபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என்றும், பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.
சில தினங்களுக்கு முன் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 4 பேர் பலியாகினர்.
- ரஜோரி பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
- பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீர்:
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள்மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் உடனடியாக பதிலடி கொடுத்தனர். அப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவத்தினர் பலப்படுத்தி வருகின்றனர்.
- கிஷ்த்வார் மாவட்டத்தில் இன்று மாலை 4.18 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கத்தால் உயிர்சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் ஏதும் இல்லை.
லடாக்கில் இன்று மாலை 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, 15 நிமிடங்கள் இடைவௌியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே நேரத்தில் ஜம்மு- காஷ்மீரின் கிஷ்த்வாரில் இன்று லேசான தீவிர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
தேசிய நிலநடுக்கவியல் மையம் கூற்றுபடி, இன்று மாலை 3.48 மணிக்கு 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை 4.01 மணியளவில் 4.8 மற்றும் 3.8 தீவிரம் கொண்ட இரண்டு நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில், கிஷ்த்வார் மாவட்டத்தில் இன்று மாலை 4.18 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் ஏதும் இல்லை.
- ஜம்மு காஷ்மீர் எல்லையில் 300 பயங்கரவாதிகள் ஊடுருவ நேரம் பார்த்து காத்திருக்கின்றனர்.
- கடும் பனிப்பொழிவு காலம் தொடங்குவதற்கு முன் ஊடுருவ அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஜம்மு:
தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அசோக் யாதவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஏவுதளங்களில் சுமார் 250 முதல் 300 பயங்கரவாதிகள் ஊடுருவ காத்திருப்பதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. நாங்களும் ராணுவமும் பாதிக்கப்படக்கூடிய அனைத்துப் பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தி எச்சரிக்கையாக இருக்கிறோம்.
எல்லையில் பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் உள்ளனர். கண்காணிப்பு பணிகள் அங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எந்த ஊடுருவல் முயற்சியையும் முறியடிக்க உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்தார்.
- சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதுதான் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.
- லடாக்கை யூனியன் பிரதேசமாக பிரித்தது செல்லும் எனவும் தீர்ப்பில் கூறியிருந்தது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. ஒரு தரப்பினர் இந்த தீர்ப்பை வரவேற்ற போதிலும் ஜம்மு- காஷ்மீர் தலைவர் ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரின் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா கூறியதாவது:-
உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கிறோம். ஆனால், இதே உச்சநீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் சட்டப்பிரிவு 370 நிரந்தரமானது எனத் தெரிவித்துள்ளனர். அது இன்னும் அப்படியே இருக்கிறதா? எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும். ஒருநாள் நாங்கள் மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்லலாம். அதன்பின் என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்று நாம் பார்க்க வேண்டும்.
70 ஆண்களுக்குப் பிறகு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்னும் 200 ஆண்டுகளில் இது மீண்டும் கொண்டு வரப்படலாம். யாருக்கு தெரியும்" என்றார்.
உச்சநீதிமன்றம் நீதிபதிகள் ஐந்து பேரில் மூன்று பேர் ஒரே தீர்ப்பையும் மற்ற இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பையும் வழங்கினார். ஒட்டுமொத்தமாக சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதுதான். அதை நீக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மற்றும் 2024 செப்டம்பர் மாதத்திற்குள் சடடமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. லடாக்கை யூனியன பிரதேசமாக அறிவித்தது செல்லும் எனவும் தெரிவித்தனர்.
- உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கவலை அளிக்கிறது- குலாம் நபி ஆசாத்
- இந்த தீர்ப்பு ஏமாற்றம்தான். ஆனால், மனம் தளரவில்லை- உமர் அப்துல்லா
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்புரிவு 370-ஐ ரத்து செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். அடுத்தாண்டு செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும். லடாக்கை யூனியன் பிரதேசமாக பிரித்தது செல்லும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் கூறுகையில் "உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கவலை அளிக்கிறது. துரதிருஷ்டவசமானது. ஜம்மு-காஷ்மீர் மக்கள் இந்த தீர்ப்பா் மகிழ்ச்சியடையவில்லை." என்றார்.
உமர் அப்துல்லா கூறியதாவது:-
இந்த நிலையை அடைய பா.ஜனதாவுக்கு தசாப்தங்கள் எடுத்துக் கொண்டுள்ளது. நாங்கள் நீண்ட காலத்திற்காக தயாராகியுள்ளோம். இந்த தீர்ப்பு ஏமாற்றம்தான். ஆனால், மனம் தளரவில்லை. தொடர்ந்து போராடுவோம்.
இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்தார்.






