ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படை- பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கி சண்டை

ரகசிய தகவல் அடிப்படையில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டை.பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் வீரர்கள் பதிலுக்கு தாக்குதல்.
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படை- பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கி சண்டை
Published on

ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகர் பகுதிகளில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது. பயங்கரவாதிகளை ஒடுக்கும் வகையில் பாதுகாப்புப்படையினர் உள்ளூர் போலீசார் உதவியுடன், அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததும், அந்த இடத்திற்கு சென்று, அப்பகுதியை சுற்றிவளைத்து அவர்களை முடிக்க முயற்சி செய்வார்கள். இப்போது இருதரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச்சூடு நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

இந்த வகையில் தெற்கு காஷ்மீர் மாவட்டமான ஷோபியானின் சோட்டிகாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை அந்த பகுதியை வீரர்கள் சுற்றி வளைத்துள்ளனர்.

அந்த பகுதியில் தீவிரவாதிகள் இருக்கிறார்களா? என வீரர்கள் தேடிப்பார்க்கும்போது பயங்கரவாதிகள் வீரர்கள் நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். இதனால் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்த தொடங்கினர். இதனால் அப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகின்ற நிலையில், உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com