search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "militancy"

    • ரஜோரியில் நடந்த ஒரு நடவடிக்கையில் இரண்டு கேப்டன்கள் உட்பட ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
    • ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆர்.ஆர் ஸ்வைன் இன்று தெரிவித்தார்.

    ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது.

    கடந்த வாரம், ரஜோரியில் நடந்த ஒரு நடவடிக்கையின்போது இரண்டு கேப்டன்கள் உட்பட ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதேபோல், ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்ற லஷ்கர்-இ-தொய்பா உயர்மட்ட தளபதி உட்பட இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் முழுமையாக முடிவடையவில்லை என்றும் பாதுகாப்புப் படையினர் இழப்புகளைச் சந்திக்க நேரிடலாம் என்றும் அதற்காக போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆர்.ஆர் ஸ்வைன் இன்று தெரிவித்தார்.

    குருபூராப்பை முன்னிட்டு ஸ்ரீநகரில் உள்ள சட்டிபட்ஷாய் குருத்வாராவில் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

    இந்தப் போர் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. இந்த போரினால் எந்தப் பலனும் இல்லை என்று எதிர் தரப்பு ஒப்புக்கொண்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும். அதுவரை எமது போராட்டத்தைப் பொறுத்த வரையில் இழப்புகள் ஏற்படுவது நிதர்சனம். ஆனால் அந்த இழப்புகளைச் சுமந்து கொண்டு நாம் முன்னேற வேண்டும். இந்தப் போரிலிருந்து நாம் பின்வாங்க முடியாது.

    ஒவ்வொரு பனிப்பொழிவுக்கும் சில இடங்களில் ஊடுருவல் அதிகரிக்கிறது மற்றும் சில இடங்களில் குறைகிறது.

    முடிந்த வரையில், உயிரிழப்பு நேர்வதை குறைக்க முயற்சிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காணாமல் போன ஐ.பி.எஸ் அதிகாரியின் சகோதரர் பயங்கரவாதியாக மாறி, ஆயுதங்களுடன் நிற்கும் புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #JammuKashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரர் ஷம்சுல் ஹக் என்பவர் கடந்த மே மாதம் காணாமல் போனாதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ஷம்சுல் ஹக்கை தேடி வந்தனர்.

    இந்நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தபடி, ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் ஷம்சுல் ஹக் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ஷம்சுல் ஹக், ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தில் மே மாதம் 22-ம் தேதி இணைந்ததாக அந்த புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், புகைப்படத்தின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜம்மு காஷ்மீரில் இளைஞர்கள் பயங்கரவாத இயக்கத்துடன் இணைவது இயல்பான ஒன்றாக கருதப்பட்டாலும், ஐ.பி.எஸ் அதிகாரியின் சகோதரர் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #JammuKashmir
    ×