தேசிய நெடுஞ்சாலையில் கண்டுபிடிக்கப்பட்ட டிபன்பாக்ஸ் வெடிகுண்டு- போலீசார் செயல் இழக்க செய்தனர்

சந்தேகத்திற்கிடமான பொருள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.மர்ம நபர்கள் யார்? அவர்களின் சதி திட்டம் என்ன? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் கண்டுபிடிக்கப்பட்ட டிபன்பாக்ஸ் வெடிகுண்டு- போலீசார் செயல் இழக்க செய்தனர்
Published on

ஜம்மு:

ஜம்முவில் உள்ள நர்வால்-சித்ரா நெடுஞ்சாலையில் போலீஸ் சோதனை சாவடி ஒன்று உள்ளது.

இதன் அருகே சந்தேகத்திற்கிடமான பொருள் கிடப்பதாக நேற்று மாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக அங்கு போலீசாரும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்களும் விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது 2 கிலோ எடை உள்ள டைமர் அடிப்படையிலான மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் சாதனம் ( ஐ.இ.டி.) டிபன் பாக்சில் பொருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த சாலையில் உடனடியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் டிபன் பாக்ஸ் வெடிகுண்டை செயல் இழக்க செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டை வைத்த மர்ம நபர்கள் யார்? அவர்களின் சதி திட்டம் என்ன? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com