என் மலர்
டெல்லி
- தீமை மற்றும் பொய்யின் மீது நன்மை மற்றும் நீதியின் வெற்றியை விஜய தசமி கொண்டாடுகிறது.
- தைரியம், ஞானம் மற்றும் பக்தி எப்போம் நம் பாதைகளை வழிநடத்தட்டும்.
புதுடெல்லி :
நாடு முழுவதும் இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தீமை மற்றும் பொய்யின் மீது நன்மை மற்றும் நீதியின் வெற்றியை விஜய தசமி கொண்டாடுகிறது. தைரியம், ஞானம் மற்றும் பக்தி எப்போம் நம் பாதைகளை வழிநடத்தட்டும்.
எனது சக இந்தியர்களுக்கு இனிய விஜய தசமி வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
- பொருளாதார குற்றங்கள் அதிகம் நிகழ்ந்த பெருநகரங்களில் மும்பை முதலிடத்தில் உள்ளது.
- நிதி மோசடி அதிகம் நிகழ்ந்த மாநிலங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது.
புதுடெல்லி
தேசிய குற்ற ஆவண காப்பகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் பதிவாகும் குற்ற வழக்குகளின் புள்ளிவிவரங்களை வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில், பொருளாதாரம் மற்றும் சைபர் குற்ற வழக்குகள் தொடர்பான ஆய்வு முடிவுகளை சமீபத்தில் அந்த அமைப்பு வெளியிட்டது. அதன் விபரம் வருமாறு:
கடந்த 2023-ல் நம் நாட்டில் நிதி மோசடி அதிகம் நிகழ்ந்த மாநிலங்களில் 27,675 வழக்குகளுடன் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. தெலுங்கானா 26,321 வழக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 19,803 நிதி மோசடி வழக்குகளில் மகாஷ்டிரா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 2023-ல் பொருளாதார குற்றங்கள் அதிகம் நிகழ்ந்த பெருநகரங்களில் மும்பை 6,476 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. இது, முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 484 வழக்குகள் குறைவாக பதிவாகியுள்ளன. தெலுங்கானாவின் ஐதராபாத், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ஆகியவை பொருளாதார குற்றங்கள் அதிகம் நிகழும் பெருநகரங்களின் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
கடந்த 2023-ல் சைபர் குற்றங்கள் அதிகம் பதிவான நகரமாக கர்நாடகாவின் பெங்களூரு உள்ளது. இங்கு மட்டும் 17,631 வழக்குகள் பதிவானது தெரியவந்துள்ளது. தெலுங்கானாவின் ஐதராபாத் 4,855 வழக்குகளுடன் இரண்டாமிடத்திலும், மும்பை 4,131 வழக்குடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
- உக்ரைன் - ரஷியா இடையிலான போர் 3 ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது.
- இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது.
புதுடெல்லி:
உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையே 3 ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சர்வதேச நாடுகள் முயற்சித்து வருகின்றன. எனினும் இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
உக்ரைன்–ரஷியா போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என இந்தியாவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், வரும் டிசம்பர் மாதத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகிறார். அதிபர் புதின் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு நிகழ்த்தும் அவர், சுகோய்-57 ரக போர் விமான விற்பனை, எஸ்- 400 ஏவுகணைகள் டெலிவிரி ஆகியவை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது இரு தரப்பிலும் பாதுகாப்பு, எரிசக்தி, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அனைத்து மாநிலங்களுக்கும் வரிபகிர்வு நிதியாக ரூ.1,01,603 கோடியை மத்திய அரசு விடுவிப்பு.
- ம.பி-க்கு ரூ.7,976 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வாக ரூ.4,144 கோடியை மத்திய அரசு விடுவித்து அறிவித்துள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு அனைத்து மாநிலங்களுக்கும் வரிபகிர்வு நிதியாக ரூ.1,01,603 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
அதிகபட்சமாக பாஜக ஆளும் உபிக்கு ரூ.18,227 கோடி, பீகாருக்கு ரூ.10,219 கோடி, ம.பி-க்கு ரூ.7,976 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தெலங்கானாவிற்கு ரூ.2136 கோடி, கர்நாடகாவிற்கு 3,705 கோடி, கேரளாவிற்கு 1956 கோடி நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சமாக கோவாவிற்கு ரூ.392 கோடி விடுக்கப்பட்டுள்ளது.
- ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கி 100 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது.
- சுதந்திரப் போராட்டத்தின் போது ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி. ஹெட்கேவர் சிறையில் அடைக்கப்பட்டார்
நாளைய தினம் ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கி 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த நூற்றாண்டு கொண்டாத்திற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை ஆர்எஸ்எஸ் ஏற்பாடு செய்து வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கியதன் நூற்றாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, சிறப்பு ரூ. 100 நாணயம் மற்றும் அஞ்சல் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.
இந்த விழாவில் பேசிய மோடி, "ஆங்கிலேய ஆட்சியில் நடந்த கொடுமைகளை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கடுமையாக போராடினர். சுதந்திரப் போராட்டத்தின் போது ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி. ஹெட்கேவர் உட்பட ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்" என்று தெரிவித்தார்.
- 2025 ஜனவரியில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் 55 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகின்றனர்.
- விலைவாசியை கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாதமும் விலைக்குறியீட்டு எண்ணை கணக்கிடுவர்.
7-வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் அகவிலைப்படி நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 55 சதவீதம் அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலை ஆகிய 6 மாதங்களின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு இருக்கும்.
மத்திய அரசின் புள்ளியியல்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள நுகர்வு பொருட்களின் விலைவாசியை கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாதமும் விலைக்குறியீட்டு எண்ணை கணக்கிடுவர். அதனடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.
அதன்படி, 2025 ஜனவரியில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் 55 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகின்றனர்.
மத்திய அரசின் புள்ளியியல்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள நுகர்வு பொருட்களின் விலைவாசியை கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாதமும் விலைக்குறியீட்டு எண்ணை கணக்கிடுவர். அதனடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.
கடந்த ஜனவரிக்குப் பின் புள்ளியியல் துறை எடுத்த கணக்கீடுப்படி, விலைக்குறியீடானது ஜனவரியில் 56.3 என்று இருந்தது. பிப்ரவரியில் 56.6 என்றும், மார்ச்சில் 57.0 ஆகவும், ஏப்ரலில் 57.6 ஆகவும், மே மாதத்தில் 57.8 ஆகவும் உயர்ந்தது. ஜூனில் இது 58.17 ஆக அதிகரித்து உள்ளது. எனவே இவ்விலைக் குறியீட்டின் அடிப்படையில் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதுதொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- குடிபோதையில் இருந்த ரிஷி வரமறுத்து அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
- கேமராவில் பதிவான காட்சியில் உணவு டெலிவரி பார்ட்னரும் உள்ளார்.
ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவு அருந்தும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது. இதனால் வேலையில்லாமலும், பகுதி நேரமாக பணிபுரிய விரும்பும் பலருக்கு ஆன்லைன் உணவு டெலிவரி வேலை பயனுள்ளதாக உள்ளது.
இதுவே சில நேரங்களில் உணவு டெலிவரி செய்பவருக்கும், ஆர்டர் செய்பவருக்கும் தொந்தரவாகவே அமைந்துள்ளது. பெரும்பாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவுகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் டெலிவரி செய்ய வேண்டும் என்று ஊழியர்கள் சாலைகளில் வேகமாக செல்லும் போது விபத்துகளிலும் சிக்குகிறார்கள். மேலும் டெலிவரி செய்த உணவுக்கு உரிய பணம் கிடைக்காமலும் ஊழியர்கள் சிரமம் படுகிறார்கள். அதுபோல் ஒரு சம்பவம் ஒன்றுதான் டெல்லியில் நடந்துள்ளது. அதுகுறித்து பார்ப்போம்...
டெல்லியின் நரேலாவில் குடிபோதையில் இருந்த ஆசிரியர் ஒருவர் டெலிவரி செய்யப்பட்ட உணவுக்கு பணம் கொடுக்க மறுத்துள்ளார். மேலும் தகாத வார்த்தைகளால் பேசியும் உள்ளார். இதனால் செய்வதறியாது இருந்த உணவு டெலிவரி பார்ட்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்தபோது அவர் குடிபோதையில் இருந்ததை தொடர்ந்து அவரை காவல்நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர். ஆனால் குடிபோதையில் இருந்த ரிஷி வரமறுத்து அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
இதனால் ரிஷியை போலீசார் வலுக்கட்டாயாக வீட்டில் இருந்து அழைத்து செல்லும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் கேமராவில் பதிவான காட்சியில் உணவு டெலிவரி பார்ட்னரும் உள்ளார்.
காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட ரிஷி, உணவு டெலிவரி பார்ட்னருக்கு வழங்க வேண்டிய பணத்தை வழங்கினார். இதனை தொடர்ந்து அவருக்கு போலீசார் உரிய அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
உணவு டெலிவரி பார்ட்னருக்கு நிறைய ஆர்டர்கள் இருந்ததால் அவர் புகார் அளிக்காததால் ரிஷியை போலீசார் விடுவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆகஸ்ட் மாதத்தில் 3.1% ஆக இருந்த சராசரி பணவீக்கம் 2.6% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
- வீடு, வாகனக் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.
வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன் வட்டியான ரெப்போவில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
* ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 5.5 சதவீதமாக தொடரும்.
* இதன் விளைவாக, STF விகிதம் 5.25% ஆகவும், MSF விகிதம் மற்றும் வங்கி விகிதம் 5.75% ஆகவும் உள்ளது.
* ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமின்றி தொடர பணவியல் கொள்கைக் குழு முடிவு செய்தது. இதன் விளைவாக இந்த ஆண்டுக்கான சராசரி பணவீக்கம் திருத்தப்பட்டு, ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்ட 3.7% ஆகவும், ஆகஸ்ட் மாதத்தில் 3.1% ஆகவும் இருந்து 2.6% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
* இந்த ஆண்டு Q4 மற்றும் அடுத்த ஆண்டு Q1 க்கான தலைப்பு பணவீக்கம் கீழ்நோக்கி திருத்தப்பட்டுள்ளது மற்றும் சாதகமற்ற அடிப்படை விளைவுகள் இருந்தபோதிலும் இலக்குடன் பரவலாக சீரமைக்கப்பட்டுள்ளது.
* ஆண்டுக்கான முக்கிய பணவீக்கம் மற்றும் அடுத்த ஆண்டு Q1 கட்டத்திலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படாததால் வீடு, வாகனக் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.
- உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- நடப்பு தொடரில் இந்தியா இதுவரை 4 தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
புதுடெல்லி:
மாற்றுத் திறனாளிகளுக்கான 12-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று நடந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் (எப்.44 பிரிவு) இந்திய வீரர் சந்தீப் சர்கார் 62.82 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார்.
இதில் இன்று நடந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் (எப்.64 பிரிவு) இந்திய வீரர் சுமித் அன்டில் 71.37 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
நடப்பு தொடரில் இந்தியா 4 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் என 9 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது.
- விமான கட்டுப்பாட்டு அறைக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
- டெல்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து தலைநகர் டெல்லிக்கு இன்று காலை இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் சுமார் 200 பேர் பயணித்தனர்.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமான கட்டுப்பாட்டு அறைக்கு இ-மெயில் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடத்தினர்.
சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒட்டுமொத்த உலக நாடுகளும் போரை வேண்டாம் என இறங்கி வந்தன.
- போரை தொடங்க வேண்டாம் என அமெரிக்கா கேட்டுக்கொண்டது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. மே மாதம் 7ஆம் தேதி அதிகாலை பாகிஸ்தான் நாடடிற்குள் புகுந்த இந்திய விமானப்படை விமானங்கள், அங்குள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.
இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. தாக்குதல்களை இந்தியா திறம்பட எதிர்த்தது பதிலடி கொடுத்து வந்தது. இந்த சண்டை மே 10ஆம் தேதி வரை நீடித்தது. பின்னர் இருநாட்டு ராணுவத் தலைவர்கள் பேச்சுவார்த்தை முடிவில் சண்டை முடிவுக்கு வந்தது.
ஆனால், வர்த்தக ஒப்பந்தத்தை முன்வைத்து இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஆனால் இந்தியா- பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் 3ஆவது நாடு தலையீடு இல்லை என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.
இதற்கிடையே இந்திய எதிர்க்கட்சிகள் 3ஆவது நாடு தலையீட்டை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில்தான் டி.வி. விவாதத்தின்போது இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரான ப. சிதம்பரம் 26/11 தாக்குதலின்போது போரை தொடங்க வேண்டாம் என்று அமெரிக்கா சொன்னதாக தெரிவித்துள்ளார். இதற்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
டி.வி. விவாதத்தின்போது "அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் காண்டலீசா ரைஸ் என்னிடமும், பிரதமரிடமும் (அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்) போரை தொடங்க வேண்டாம். ஆயுதம் மூலம் (போர்) பதிலடி கொடுப்பதை மறுபரிசீலனை செய்யுங்கள் எனத் தெரிவித்தார். ஆனால், நான் இது தொடர்பாக அரசு முடிவு எடுக்கும் எனக் கூறினேன். ஆனால், எனது மனதில் பதிலடி கொடுக்க வேண்டும் சிந்தனை ஓடியது. மொத்த உலகமும் இந்திய அரசிடம், போரை தொடங்க வெண்டும் எனத் தெரிவிக்க முன் வந்தது" என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நுகர்வோர் விவகாரத்தறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி "வெளிநாட்டு அதிகாரத்தில் 26/11 தாக்குதலின்போது அரசு தவறான கையாண்டது தொடர்பாக ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் தெரிந்ததை, 17 வருடங்களுக்குப் பிறகு சிதம்பரம் ஒப்புக்கொண்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
- விளையாட்டு களத்தில் ஆபரேஷன் சிந்தூர். முடிவு அதே முடியவுதான்- இந்தியா வெற்றி- பிரதமர் மோடி.
- எந்தவொரு 3ஆவது நடுவரின் உத்தரவால் சிறந்த கேப்டன் போர் நிறுத்தத்தை அறிவிக்கமாட்டார்- காங்கிரஸ்.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கான சூப்பர் 4 சுற்று போட்டியின்போது, பாகிஸ்தான் அணி வீரர்கள் கடுமையான சைகைகளில் ஈடுபட்டனர். அபிஷேக் சர்மா, சுப்மன் கில் வாக்குவாத்தில் ஈடுபட, பாகிஸ்தான் பேட்ஸ்மேன் துப்பாக்கியால் சுடுவது போன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப், 6 விமானங்களை சுட்டு வீழ்த்தியது போன்றும், விமானம் கீழே விழுந்து நொருங்குவது போன்றும் சைகை காட்டினார். இது கடும் பேசும்பொருளானது. பிசிசிஐ இது தொடர்பாக ஐசிசி-யிடம் புகார் அளித்தது.
இந்த பரபரப்புக்கு இடையில் நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா கடைசி ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்றதும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரிடம் இருந்து கோப்பையை வாங்க இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் மறுத்துவிட்டார்.
இந்திய அணி வெற்றி பெற்றதும் இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் "விளையாட்டு களத்தில் ஆபரேஷன் சிந்தூர். முடிவு அதே முடிவுதான்- இந்தியா வெற்றி பெற்றது! நம்முடைய கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள்" என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கெரா, அந்த பதிவை டேக் செய்து "பிரதமர் ஜி, முதலில் கிரிக்கெட் போட்டியை போர்க்களத்துடன் ஒப்பிடுவது சரியானது அல்ல.
2ஆவது, நீங்கள் எந்த வகையிலும் ஒப்பீடு செய்திருந்தால், அதன்பின் இந்திய அணியிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது, வெற்றியை (ஆபரேஷன் சிந்தூர்) நெருங்கி வந்தபோது, எந்தவொரு 3ஆவது நடுவரின் உத்தரவால் சிறந்த கேப்டன் போர் நிறுத்தத்தை அறிவிக்கமாட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் சண்டை தன்னுடைய தலையீடு காரணமாக நிறுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதை வைத்துதான் கெரா இவ்வாறு தெரிவித்து்ளளார்.






