என் மலர்
டெல்லி
- டெல்லியில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிக்க கடும் கட்டுப்பாடு உள்ளது.
- பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் காற்று மாசு மோசடைந்ததாக ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றச்சாட்டு.
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் இரவில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று காலை மற்றும் இரவு அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்காக பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
என்றாலும், பட்டாசு வெடிக்கப்பட்டால் காற்று மாசு அதிகரித்தது. இன்று காலை காற்றின் தரநிலை மிகவும் மோசடைந்திருந்தது. இதனால ரேகா குப்தா தலைமையிலான டெல்லி அரசு, காற்று மாசுவை கட்டுப்படுத்த தவறி விட்டதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பயிர்க் கழிவுகளை விவசாயிகள் எரிக்க ஆம் ஆத்மி கட்சி அவர்களை கட்டாயப்படுத்துகிறது என்று டெல்லி மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மன்ஜிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மஜிந்தர் சிங் சிஸ்ரா கூறியதாவது:-
டெல்லியில் காற்று மாசு மோசமடைந்துள்ளதால். தீபாவளி கொண்டாடியதற்காகவும், பட்டாசு வெடித்ததற்காகவும் டெல்லி முதல்வர், பாஜக மற்றும் சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்களை ஆம் ஆத்மி தலைவர்கள் கண்டித்துள்ளனர். ஆனால் காற்று மாசுவிற்கான உண்மையான காரணம் பஞ்சாபில் பயிர்க்கழிவுகளை எரித்ததுதான்.
தீபாவளிக்கு முன்னதாக காற்றின் தரநிலை 341 (AQI) ஆக இருந்தது. தீபாவளிக்குப் பிறகு 356 ஆக அதிகரித்துள்ளது. வெறும் 15 புள்ளிகள் தான் அதிகரித்துள்ளது. பாரம்பரிய முறையில் தீபாவளியைக் கொண்டாட மக்களுக்கு எங்கள் அரசாங்கம் வாய்ப்பளித்துள்ளது என்பதை பெருமையுடன் ஒப்புக்கொள்கிறோம். பட்டாசு வெடித்ததால் 11 புள்ளிகள் மட்டுமே அதிகரித்துள்ளது.
ஆம் ஆத்மி அரசால் பஞ்சாபில் விவசாயிகள் அவர்கள் நிலத்தில் பயிர்க்கழிவுகளை எரிக்க வற்றுவத்தபடுகிறார்கள். ஆத் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் தீபாவளி இரவு அதிக அளவில் பயிர்க்கழிவுகள் எரிக்கும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பு இருந்தபோதிலும் எரிக்கப்படும் பயிர்க் கழிவுகளால், அண்டை மாநிலங்களிலிருந்து வரும் மாசுபாட்டின் தாக்கத்தை டெல்லி தாங்கி வருகிறது,
இவ்வாறு மஜிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
- பழைய டெல்லியில் உள்ள பாரம்பரியமிக்க ஸ்வீட் கடைக்கு ராகுல் காந்தி சென்றார்.
- அங்கு இரண்டு வகையான ஸ்வீட்களை செய்து அசத்தினார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பழைய டெல்லியில் உள்ள நூற்றாண்டு பாரம்பரியமிக்க பழமையான ஸ்வீட் கடையான Ghantewala sweet shop-க்கு சென்றார்.
அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மறைந்த அவரது தந்தை ராஜீவ் காந்திக்கு இமார்தி (Imarti), பெசான் லட்டுகள் (Besan Laddus) பிடிக்கும். இதை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என ஸ்வீட் கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் அன்பான வேண்டுகோள் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து ஊழியர் ஒருவர் உதவியுடன் இரண்டு ஸ்வீட்களையும் தயாரித்தார். பின்னர் அக்கடையின் ஊழியர்களுடன் தீபாவளி கொண்டாடினார்.
பின்னர் ராகுல் காந்தி வருகை தந்தது குறித்து கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் கூறியதாவது:-
அவரது தந்தை ராஜீவ்காந்திக்கு பிடித்தமான இரண்டு ஸ்வீட்களை அவரே செய்து ருசி பார்த்தார். பின்னர் கடையில் உள்ள ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அவரிடம் விரைவில் திருமணம் செய்யுங்கள். நாங்கள் காத்திருக்கிறோம். நீங்கள் திருமணம் செய்தால்தான் நாங்கள் ஸ்வீட் ஆர்டர் வாங்க முடியும் எனத் தெரிவித்தேன்.
இவ்வாறு சுஷாந்த் ஜெயின் தெரிவித்துள்ளார்.
மேலும், ராகுல் காந்தி அவரது வீட்டிற்கு, நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு ஸ்வீட் வாங்க விரும்பினார். இது உங்கள் கடை போன்றது" என்று தெரிவித்ததாகவும் கூறினார்.
முன்னதாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் "பழைய டெல்லியில் உள்ள புகழ்பெற்ற மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கந்தேவாலா இனிப்புக் கடையில் இமார்டி மற்றும் பெசன் லட்டுகளை தயாரிக்க முயற்சித்தேன். பல நூற்றாண்டுகள் பழமையான இந்த மதிப்புமிக்க கடையின் இனிப்பு இன்றும் அப்படியே உள்ளது. தூய்மையானது, பாரம்பரியமானது மற்றும் இதயத்தைத் தொடுவது. தீபாவளியின் உண்மையான இனிப்பு தட்டில் மட்டுமல்ல, உறவுகளிலும் சமூகத்திலும் உள்ளது" என வீடியோ வெளியிட்டு குறிப்பிட்டிருந்தார்.
- இன்று காலை விக்ராந்த் போர்க்கப்பலில் வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார்.
- அப்போது இந்தியா விரைவில் மாவோயிஸ்ட், நக்சலைட்டுகளை ஒழிக்கும் விளிம்பில் இருப்பதாக தெரிவித்தார்.
இந்திய பிரதமர் இன்று ஜனாதிபதி மாளிகை சென்று ஜனாதிபதி திரவுபதி முர்மு-வை சந்தித்தார். அப்போது பூங்கொத்து கொடுத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
அதேபோல் துணை ஜனாதிபதி பொன் ராதாகிருஷ்ணனையும் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
உலகம் முழுவதும் இன்று தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் வீரர்கள் மத்தியில் தீபாவளி கொண்டாடினார். வீரர்கள் இனிப்பு வழங்கினார். பின்னர் போர் விமான சாகசங்களை கண்டு களித்தார்.
வீரர்கள் மத்தியில் பேசும்போது "கடந்த சில வருடங்களில் பாதுகாப்புப்படை வீரர்களின் வீரம் மற்றும் தைரியத்தால், இந்தியா மற்றொரு முக்கியமான சாதனையைப் படைத்துள்ளது. இந்த சாதனை, மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தை ஒழிப்பது பற்றியது.
இந்தியா நக்சலைட், மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திலிருந்து விடுதலையின் விளிம்பில் உள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு முன்னதாக 125 மாவட்டங்களில் மாவோயிஸ்ட் வன்முறை அதிகமாக இருந்தது. இந்த மாவட்டங்களில் எண்ணிக்கை தற்போது 11 மாவட்டங்களாக குறைந்துள்ளன. 11 மாவட்டங்களில் 3 மாவட்டங்களில் மட்டுமே அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மாவோயிஸ்ட் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு, முதன்முறையாக சுதந்திரமான காற்றை சுவாசித்து, தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்" என்றார்.
- தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையை தொடர்ந்து மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
சுயசார்பு உற்பத்தியை கொண்டாடுங்கள்.
140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பை கொண்டாடுவோம்.
தீபாவளி நாளில் இந்தியர்களின் படைப்பாற்றலைக் கொண்டாடுவோம்
இந்தியப் பொருட்களை வாங்குவதை உறுதி செய்யுங்கள்
நீங்கள் வாங்கியதை சமூக ஊடகங்களில் பகிருங்கள். இப்படி செய்வதன் மூலம் மற்றவர்களும் உள்நாட்டு பொருட்களை வாங்க ஊக்குவியுங்கள் என பதிவிட்டுள்ளார்.
- 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி தோல்வி அடைந்தது.
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நான்காவது கட்டமாக தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.
இன்று நடந்த போட்டியில் யு மும்பா, அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இதில் சிறப்பாக ஆடிய இரு அணிகளும் புள்ளிகளைக் குவித்தன. 37-37 என சமனிலை பெற்றதால் டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.
இதில் யு மும்பா அணி 7-4 என்ற கணக்கில் வென்றது. இதன்மூலம் பிளே ஆப் சுற்றையும் உறுதி செய்துள்ளது.
மற்றொரு போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி 38-27 என்ற புள்ளிக் கணக்கில் புனேரி பல்தான் அணியை வீழ்த்தியது.
- ராகவ் சதா- நடிகை பரினீதி சோப்ரா கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
- இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை பிறந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராகவ் சதா. இவர் நடிகை பரினீதி சோப்ராவை கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார்.
பரினீதி சோப்ரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள பதிவில் "இப்போ அவன் வந்துட்டான்! எங்களுடைய பையன்.
முன்பு வாழ்ந்த வாழ்க்கையை நம்மால் நினைவில் கொள்ளவே முடியாது! கைகள் நிரம்பியுள்ளன, எங்களுடைய இதயங்கள் நிறைந்துள்ளன. முதலில் நாங்கள் ஒருவருக்கொருவதாக இருந்தோம். இப்போது எங்களுக்கு எல்லாம் இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
- கணவனை விட்டு கள்ளக்காதலுடன் சில காலம் தங்கியபோது கர்ப்பம்.
- வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தந்தையாக கள்ளக்காதலன் விரும்பியதால் ஏற்பட்ட விபரீதம்.
கள்ளக்காதலில் கர்ப்பம்: கணவன், 2 குழந்தைகளுடன் வாழ விரும்பிய பெண்- கள்ளக்காதலன் எடுத்த விபரீத முடிவு/ An Extramarital Affair Pregnancy Then Double Murder In Delhi
டெல்லியில் கள்ளக்காதலியின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு சொந்தம் கொண்டாடி, கள்ளக்காதலன் விபரீத முடிவு எடுத்ததால் இருவருடைய உயிரும் பறிபோனது.
மத்திய டெல்லியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 23). இவரது மனைவி ஷாலினி (22). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. ஷாலினி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
கொஞ்சம் நாட்களுக்கு முன்னதாக ஷாலினுகும் ஆஷு என்ற சைலேந்திரா (வயது 34) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது, ஆஷு உள்ளூர் கிரிமினல் எனத் தெரிகிறது.
கள்ளக்காதலால் ஷாலினி கர்ப்பம் அடைந்துள்ளார். ஷாலினி வயிற்றில் உள்ள குழந்தைக்கு தான் தந்தையாக போகிறோம் என ஆஷு சந்தோசம் அடைந்துள்ளார். அந்த நிலையில்தான் ஷாலினியும், ஆகாஷும் சமரசம் அடைந்து இரண்டு குழந்தைகளுடன் மீண்டும் ஒன்றிணைந்து வாழ முடிவு செய்துள்ளனர்.
தன்னை விட்டு ஷாலினி பிரிந்து செல்ல முடிவு செய்ததால் கள்ளக்காதலி மற்றும் அவரது கணவனை தீர்த்துக்கட்ட ஆஷு முடிவு செய்துள்ளார்.
நேற்றிரவு ஷாலின் தனது கணவன் இ-ரிக்ஷாவில் தாயாரை பார்க்க சென்றுள்ளார். இ-ரிக்ஷாவில இருவரையும் பார்த்த ஆஷு கத்தியால், கணவனை குத்த முயன்றுள்ளார். அப்போது, ஷாலின் கணவர் சுதாரித்து தடுக்க முயன்றுள்ளார். இதனால அவர் மீது கத்தி குத்து விழுந்துள்ளது. இருந்தாலும் பெரிய காயமின்றி தப்பிவிட்டார்.
உடனே, ரிக்ஷாவில் இருந்து ஷாலியை கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். இதில் ஷாலினி ரத்த வெள்ளத்தில் மயக்கமானார். அப்போது ஆகாஷ் தனது மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆஷு அவரை வெறிக்கொண்டு தாக்க முயன்றுள்ளார். ஆனால், ஆகாஷ் நேர்த்திய தடுத்து கத்தியை அவரிடம் இருந்து பறித்துள்ளார். அத்துடன் ஆஷுவை சரமரியாக குத்தியுள்ளார். இதில் ஆஷுவும் படுகாயம் அடைந்துள்ளார்.
பின்னர் மூன்று பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஷாலினி மற்றும் அவரது கள்ளக்காதலன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆகாஷ் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சமப்வம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- வசந்த் குஞ்ச் காவல் நிலையம் நோக்கிப் பேரணி சென்றனர்.
- ஏபிவிபி உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர்களை தாக்கியதாகக் இடதுசாரி குழுக்கள் குற்றம் சாட்டி இந்த பேரணியை நடத்தியது.
ஜவஹர்லால் நேரு பல்கலைகலைக்கழகத்தில் (ஜெஎன்யு) ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இடதுசாரி மாணவர் குழுக்கள் நேற்று வசந்த் குஞ்ச் காவல் நிலையம் நோக்கிப் பேரணி சென்றனர்.
இந்தப் பேரணியைத் தடுக்க முயன்றபோது காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆறு காவலர்கள் காயமடைந்ததாகவும், 28 மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஜெஎன்யு மாணவர் சங்கத் தலைவர் நிதீஷ் குமார், துணைத் தலைவர் மனிஷா, பொதுச் செயலாளர் பாத்திமா ஆகியோரும் அடங்குவர்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின்போது இரு தரப்பு மாணவர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் ஏபிவிபி உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர்களை தாக்கியதாகக் இடதுசாரி குழுக்கள் குற்றம் சாட்டி இந்த போராட்டத்தை நடத்தியது.
- திருமணம் 14 மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக முறிந்தது
- நீதிபதிகள் அனில் ஷேத்ரபால் மற்றும் நீதிபதி ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
விவாகரத்து வழக்குகளில் நிரந்தர ஜீவனாம்சம் வழங்குவது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளது.
டெல்லியில் வழக்கறிஞர் ஒருவருக்கும் குரூப்-ஏ இந்திய ரயில்வே அதிகாரியாக பணியாற்றும் பெண்ணுக்கும் கடந்த 2010 இல் நடந்த திருமணம் 14 மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக முறிந்தது.
தனது மனைவி தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும், மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகவும் கூறி கணவர் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் மனைவி அதை மறுத்தார்.
இதை விசாரித்த குடும்ப நீதிமன்றம், கணவரின் வாதங்களுடன் உடன்பட்டு விவாகரத்து வழங்கியது. இருப்பினும், நிரந்தர ஜீவனாம்சம் கோரிய மனைவியின் கோரிக்கையை நிராகரித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, மனைவி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அனில் ஷேத்ரபால் மற்றும் நீதிபதி ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள மனைவி ரூ. 50 லட்சம் கோரியதும் தெரியவந்த நிலையில் இதை கருத்தில் கொண்ட நீதிபதிகள், "உண்மையிலேயே நிதி உதவி தேவைப்படுபவர்கள் மட்டுமே பராமரிப்பு கோர வேண்டும். இந்த வழக்கில், மேல்முறையீட்டாளர் (மனைவி) நிதி ரீதியாக நிலையானவர்.
அவர்கள் குறுகிய காலம் தான் ஒன்றாக இருந்துள்ளனர். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, குடும்ப நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட எந்த காரணமும் இல்லை" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
- பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஆப்கானிஸ்தானின் 3 கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர்.
- பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாக்டிகா மாகாணம் அர்குன், பர்மல் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஆப்கானிஸ்தானின் 3 இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பி.சி.சி.ஐ. வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி ஆப்கானிஸ்தானில் நடத்திய வான்வழி தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த நேரத்தில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் உயிரிழந்த கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்துக்கு ஆதரவாக பி.சி.சி.ஐ. நிற்கும். இந்த தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தானில் நடைபெற உள்ள முத்தரப்பு டி20 போட்டியில் இருந்து ஆப்கானிஸ்தான் அணி விலகி உள்ளது.
- ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என அதிபர் டிரம்ப் தெரிவித்து வருகிறார்.
- பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சியை அந்த மாநில மக்கள் தூக்கி வீச தயாராகி விட்டார்கள் என்றார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:
பாகிஸ்தான் மீதான இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் தாக்குதலை நிறுத்தியது நான்தான் என 52-வது முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமரை 2 முறையும், ராணுவ தளபதியை 2 முறையும் டிரம்ப் சந்தித்த பிறகும், பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை.
ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என 2 முறை டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலக விவகாரங்களைப் பேசும் மோடி, இந்த விவகாரத்தில் மெளனமாக இருப்பது ஏன்?
பீகாரில் நிதிஷ்குமார் மற்றும் பா.ஜ.க. ஆட்சியை அந்த மாநில மக்கள் தூக்கி வீச தயாராகி விட்டார்கள் என்றும், நிதிஷ்குமார் எடுப்பார் கைப்பிள்ளை என்றும் கடுமையாக தெரிவித்துள்ளார்.
- 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த ஆட்டத்தில் புனேரி பல்தான் அணி தோல்வி அடைந்தது.
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நான்காவது கட்டமாக தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.
இன்று நடந்த போட்டியில் தெலுகு டைட்டன்ஸ், புனேரி பல்தான் அணிகள் மோதின.
இதில் சிறப்பாக ஆடிய தெலுகு டைட்டன்ஸ் அணி 40-31 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. இது தெலுகு டைட்டன்ஸ் அணி பெற்ற 9வது வெற்றி ஆகும். இதன்மூலம் பிளே ஆப் சுற்றையும் உறுதி செய்துள்ளது.
மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி 33-23 என்ற புள்ளிக் கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தியது.






