என் மலர்
இந்தியா

காற்று மாசு: பயிர்க்கழிவுகளை எரிக்க பஞ்சாப் விவசாயிகளை கட்டாயப்படுத்துகிறது ஆம் ஆத்மி: டெல்லி அமைச்சர் குற்றச்சாட்டு
- டெல்லியில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிக்க கடும் கட்டுப்பாடு உள்ளது.
- பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் காற்று மாசு மோசடைந்ததாக ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றச்சாட்டு.
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் இரவில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று காலை மற்றும் இரவு அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்காக பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
என்றாலும், பட்டாசு வெடிக்கப்பட்டால் காற்று மாசு அதிகரித்தது. இன்று காலை காற்றின் தரநிலை மிகவும் மோசடைந்திருந்தது. இதனால ரேகா குப்தா தலைமையிலான டெல்லி அரசு, காற்று மாசுவை கட்டுப்படுத்த தவறி விட்டதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பயிர்க் கழிவுகளை விவசாயிகள் எரிக்க ஆம் ஆத்மி கட்சி அவர்களை கட்டாயப்படுத்துகிறது என்று டெல்லி மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மன்ஜிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மஜிந்தர் சிங் சிஸ்ரா கூறியதாவது:-
டெல்லியில் காற்று மாசு மோசமடைந்துள்ளதால். தீபாவளி கொண்டாடியதற்காகவும், பட்டாசு வெடித்ததற்காகவும் டெல்லி முதல்வர், பாஜக மற்றும் சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்களை ஆம் ஆத்மி தலைவர்கள் கண்டித்துள்ளனர். ஆனால் காற்று மாசுவிற்கான உண்மையான காரணம் பஞ்சாபில் பயிர்க்கழிவுகளை எரித்ததுதான்.
தீபாவளிக்கு முன்னதாக காற்றின் தரநிலை 341 (AQI) ஆக இருந்தது. தீபாவளிக்குப் பிறகு 356 ஆக அதிகரித்துள்ளது. வெறும் 15 புள்ளிகள் தான் அதிகரித்துள்ளது. பாரம்பரிய முறையில் தீபாவளியைக் கொண்டாட மக்களுக்கு எங்கள் அரசாங்கம் வாய்ப்பளித்துள்ளது என்பதை பெருமையுடன் ஒப்புக்கொள்கிறோம். பட்டாசு வெடித்ததால் 11 புள்ளிகள் மட்டுமே அதிகரித்துள்ளது.
ஆம் ஆத்மி அரசால் பஞ்சாபில் விவசாயிகள் அவர்கள் நிலத்தில் பயிர்க்கழிவுகளை எரிக்க வற்றுவத்தபடுகிறார்கள். ஆத் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் தீபாவளி இரவு அதிக அளவில் பயிர்க்கழிவுகள் எரிக்கும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பு இருந்தபோதிலும் எரிக்கப்படும் பயிர்க் கழிவுகளால், அண்டை மாநிலங்களிலிருந்து வரும் மாசுபாட்டின் தாக்கத்தை டெல்லி தாங்கி வருகிறது,
இவ்வாறு மஜிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.






