என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பாகிஸ்தான் தாக்குதலில் ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழப்பு: பிசிசிஐ கண்டனம்
- பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஆப்கானிஸ்தானின் 3 கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர்.
- பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாக்டிகா மாகாணம் அர்குன், பர்மல் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஆப்கானிஸ்தானின் 3 இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பி.சி.சி.ஐ. வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி ஆப்கானிஸ்தானில் நடத்திய வான்வழி தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த நேரத்தில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் உயிரிழந்த கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்துக்கு ஆதரவாக பி.சி.சி.ஐ. நிற்கும். இந்த தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தானில் நடைபெற உள்ள முத்தரப்பு டி20 போட்டியில் இருந்து ஆப்கானிஸ்தான் அணி விலகி உள்ளது.






