என் மலர்
நீங்கள் தேடியது "தெலுங்கு டைடன்ஸ்"
- 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த ஆட்டத்தில் புனேரி பல்தான் அணி தோல்வி அடைந்தது.
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நான்காவது கட்டமாக தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.
இன்று நடந்த போட்டியில் தெலுகு டைட்டன்ஸ், புனேரி பல்தான் அணிகள் மோதின.
இதில் சிறப்பாக ஆடிய தெலுகு டைட்டன்ஸ் அணி 40-31 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. இது தெலுகு டைட்டன்ஸ் அணி பெற்ற 9வது வெற்றி ஆகும். இதன்மூலம் பிளே ஆப் சுற்றையும் உறுதி செய்துள்ளது.
மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி 33-23 என்ற புள்ளிக் கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தியது.
- புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
- குஜராத் அணியை தெலுகு டைட்டன்ஸ் அணி வீழ்த்தியது.
ஜெய்ப்பூர்:
12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு நடந்த முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது.
இறுதியில், சிறப்பாக ஆடிய தெலுகு டைட்டன்ஸ் அணி 30-29 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தெலுகு டைட்டன்ஸ் அணி 5-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.






