என் மலர்
நீங்கள் தேடியது "delhi jawaharlal nehru university"
- மத்திய குழுவில் உள்ள மொத்தம் நான்கு இடங்களையும் இடதுசாரி கூட்டணி வென்றது.
- கடந்த ஆண்டு கையில் வைத்திருந்த இணை செயலாளர் பதவியையும் ஏபிவிபி இந்த ஆண்டு பறிகொடுத்தது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) மாணவர் சங்கத் தேர்தலில் மத்திய குழுவில் உள்ள மொத்தம் நான்கு இடங்களையும் இடதுசாரி கூட்டணி வென்றது. நேற்று தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இடதுசாரி கூட்டணியிலிருந்து பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் மத்திய குழு தலைவராக AISA வேட்பாளர் அதிதி மிஸ்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
DSF வேட்பாளர் சுனில் யாதவ் பொதுச் செயலாளர் பதவியையும், AISA வேட்பாளர் டேனிஷ் அலி இணைச் செயலாளர் பதவியையும் வென்றார்.
SFI அமைப்பின் வேட்பாளர் கே. கோபிகா பாபு துணைத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு, இடதுசாரி மாணவர் அமைப்புகள் மூன்று இடங்களை வென்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 4 இடங்களையும் வென்றடுள்ளன.
எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரி அமைப்பான ஆர்எஸ்எஸ்-இன் மாணவர் அணியான ஏபிவிபி படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு கையில் வைத்திருந்த இணை செயலாளர் பதவியையும் ஏபிவிபி இந்த ஆண்டு பறிகொடுத்தது.
- வசந்த் குஞ்ச் காவல் நிலையம் நோக்கிப் பேரணி சென்றனர்.
- ஏபிவிபி உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர்களை தாக்கியதாகக் இடதுசாரி குழுக்கள் குற்றம் சாட்டி இந்த பேரணியை நடத்தியது.
ஜவஹர்லால் நேரு பல்கலைகலைக்கழகத்தில் (ஜெஎன்யு) ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இடதுசாரி மாணவர் குழுக்கள் நேற்று வசந்த் குஞ்ச் காவல் நிலையம் நோக்கிப் பேரணி சென்றனர்.
இந்தப் பேரணியைத் தடுக்க முயன்றபோது காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆறு காவலர்கள் காயமடைந்ததாகவும், 28 மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஜெஎன்யு மாணவர் சங்கத் தலைவர் நிதீஷ் குமார், துணைத் தலைவர் மனிஷா, பொதுச் செயலாளர் பாத்திமா ஆகியோரும் அடங்குவர்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின்போது இரு தரப்பு மாணவர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் ஏபிவிபி உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர்களை தாக்கியதாகக் இடதுசாரி குழுக்கள் குற்றம் சாட்டி இந்த போராட்டத்தை நடத்தியது.
- அப்பெண் ஜப்பான் திரும்பியதும் இதுகுறித்து முறையாக புகார் அளித்துள்ளார்.
- ஜப்பான் தூதரகத்தின் மூலம் வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
ஜப்பான் தூதரக பெண் அதிகாரிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மூத்த பேராசிரியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
சில மாதங்களுக்கு முன் ஜப்பான் தூதரக பெண் அதிகாரி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு தொடர்பாக ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் (International Studies) துறையில் பணியாற்றி வந்த மூத்த பேராசிரியர் ஸ்வரன் சிங்கை அணுகியபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளக்காட்டார்.
அப்பெண் ஜப்பான் திரும்பியதும் இதுகுறித்து முறையாக புகார் அளித்துள்ளார். இந்த புகார் ஜப்பான் தூதரகத்தின் மூலம் வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. பேராசிரியர் ஸ்வரன் சிங் மீது ஏற்கனவே இதுபோன்ற பல புகார்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை நடந்த ஜேஎன்யு நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பல்கலைக்கழகத்தின் உள் புகார்கள் குழு (ஐசிசி) நடத்திய விசாரணையின் முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பேராசிரியர் ஸ்வரன் சிங் பணி ஓய்வுக்கு ஒரு வருடம் முன்னதாகவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என பல்கலைக்கழகத்தின் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.






