என் மலர்tooltip icon

    டெல்லி

    • இருவருக்கும் சர்வதேச அளவிலான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருப்பது அம்பலமானது.
    • கைதான 2 பேரும் தற்கொலை தாக்குதல் பயிற்சி எடுத்தவர்கள் என தெரியவந்துள்ளது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லி மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் அட்னான் உள்பட 2 பேரை பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

    இருவருக்கும் சர்வதேச அளவிலான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருப்பது அம்பலமானது. மேலும் கைதான 2 பேரும் தற்கொலை தாக்குதல் பயிற்சி எடுத்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் டெல்லியில் குண்டு வைக்கவும் அவர்கள் சதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

    • கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன.
    • காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும்.

    ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அந்த இருசக்கர வாகனம் பேருந்துக்கு அடியே சென்று சிக்கிக்கொண்டதால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

    தீவிபத்தின்போது பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். தீவிபத்து ஏற்பட்டபோது கண்ணாடி ஜன்னலை உடைத்து பலர் குதித்து உயிர் தப்பினர். இந்த பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்த 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பேருந்து தீ விபத்து சம்பவத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக ஏற்பட்ட உயிர் இழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது.

    இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    பேருந்து தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவியும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    • மாநில மருந்துகள் சோதனை ஆய்வகங்கள் 60 மருந்து மாதிரிகள் ‘‘நிலையான தரம் இல்லாதவை’’ என்று அடையாளம் கண்டுள்ளன.
    • சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து ஒரு மாதிரி, போலி மருந்தாக அடையாளம் காணப்பட்டது.

    புதுடெல்லி:

    வழக்கமான ஒழுங்குமுறை கண்காணிப்பு நடவடிக்கையின்படி, நிலையான தரம் இல்லாத (என்.எஸ்.கியூ) மற்றும் போலியான மருந்துகளின் பட்டியல் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் இணையதளத்தில் மாதாந்திர அடிப்படையில் காட்டப்படுகிறது.

    மத்திய மருந்துகள் ஆய்வகங்கள் செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர மருந்து எச்சரிக்கையில் பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட 52 மாதிரிகள் ''நிலையான தரம் இல்லாதவை'' என்று கண்டறிந்து உள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மாநில மருந்துகள் சோதனை ஆய்வகங்கள் 60 மருந்து மாதிரிகள் ''நிலையான தரம் இல்லாதவை'' என்று அடையாளம் கண்டுள்ளன.

    மருந்து மாதிரிகளை நிலையான தரம் இல்லாதவையாக அடையாளம் காண்பது என்பது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட தர அளவுருக்களில் மருந்து மாதிரியின் தோல்வியின் அடிப்படையில் செய்யப்படுகிறது. தோல்வி என்பது அரசாங்க ஆய்வகத்தால் சோதிக்கப்பட்ட தொகுப்பின் மருந்து தயாரிப்புகளுக்கு குறிப்பிட்டது, மேலும் சந்தையில் கிடைக்கும் பிற மருந்து தயாரிப்புகள் குறித்து எந்த கவலையும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    செப்டம்பரில், சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து ஒரு மாதிரி, போலி மருந்தாக அடையாளம் காணப்பட்டது, இது ஒரு அங்கீகரிக்கப்படாத உற்பத்தியாளரால் மற்றொரு நிறுவனத்திற்குச் சொந்தமான பிராண்ட் பெயரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. இந்த விஷயம் விசாரணையில் உள்ளது, மேலும் சட்டம் மற்றும் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த மருந்துகள் அடையாளம் காணப்பட்டு சந்தையில் இருந்து அகற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, மாநில கட்டுப்பாட்டாளர்களுடன் இணைந்து நிலையான தரம் இல்லாதவை மற்றும் போலி மருந்துகளை அடையாளம் காணும் இந்த நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படுகிறது.

    • 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
    • நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது.

    புதுடெல்லி:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நான்காவது கட்டமாக தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.

    முதல் கட்டமாக நடந்த லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவுக்கு வந்தன.

    இந்நிலையில், லீக் சுற்று முடிவில் புனேரி பால்டன், தபாங் டெல்லி, பெங்களூரு புல்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், யு மும்பா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

    தமிழ் தலைவாஸ் உள்பட 4 அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின.

    போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். நாளை பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் தொடங்குகிறது.

    • ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் எடுத்த 2-வது பெரிய முடிவு இது.

    புதுடெல்லி:

    ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடந்தது. அதில், முப்படைகளின் போர்த்திறனை அதிகரிப்பதற்காக ரூ.79,000 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் எடுத்த 2-வது பெரிய முடிவு இதுவாகும்.

    கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி, ரூ.67 ஆயிரம் கோடி மதிப்புள்ள ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இதில் இந்திய கடற்படைக்காக போர்க்கப்பல்கள், 30 எம்எம் ரக கடற்படை பீரங்கிகள், அதிநவீன இலகுரக நீர்மூழ்கி குண்டுகள் உள்ளிட்டவை அடங்கும்.

    போர்க்கப்பல்கள், கனரக சாதனங்களையும், தரைப்படை வீரர்களையும் ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும். இலகுரக நீர்மூழ்கி குண்டுகள், எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தகர்க்க பயன்படும்.

    இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்காக, நாக் ஏவுகணை அமைப்பு, எம்கே-2 ரக ஏவுகணைகள், எலக்ட்ரானிக் உளவு அமைப்பு உள்ளிட்டவை வாங்கப்படுகின்றன. எதிரிகளின் போர் வாகனங்கள், பதுங்கு குழிகள் ஆகியவற்றை தகர்க்க எம்கே-2 ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்படும்.

    • 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
    • நேற்று நடந்த ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி பெற்றது.

    புதுடெல்லி:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நான்காவது கட்டமாக தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.

    நேற்று நடந்த போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின. ஆரம்பம் முதலே பாட்னா அணி அதிரடியாக ஆடி புள்ளிகளைக் குவித்தது.

    இறுதியில், பாட்னா பைரேட்ஸ் அணி 33-18 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் 18 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்று 16 புள்ளிகள் பெற்றுள்ள பாட்னா பைரேட்ஸ் அணி பிளே ஆப் சுற்றில் நுழைந்தது.

    மற்ற போட்டிகளில் பெங்களூரு புல்ஸ் குஜராத் அணியையும், யுபி யோதாஸ் யு மும்பா அணியையும் வீழ்த்தியது.

    • இளைஞர் காங்கிரஸின் தலைவராக கிருஷ்ணா அல்லவாரு பதவி வகித்து வந்தார்.
    • காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இந்திய இளைஞர் காங்கிரஸின் தலைவராக மணீஷ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இளைஞர் காங்கிரஸின் தலைவராக பதவி வகித்த கிருஷ்ணா அல்லவாருவின் பங்களிப்புகளை கட்சி பாராட்டுகிறது என்று வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

    • கொல்லப்பட்டவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • சுட்டுக்கொல்லப்பட்ட 4 குற்றவாளிகளும் பீகார் தேர்தலில் பெரிய அளவில் வன்முறையை கட்டவிழ்க்க திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    டெல்லி ரோஹினி பகுதியில் இன்று அதிகாலை 2.20 மணி அளவில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 4 குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    டெல்லி, பீகார் போலீசார் இணைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரஞ்சன் பதக், பிம்லேஷ், மகோட்டா, மணீஷ் பதக், அமன் தாக்கூர் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சுட்டுக்கொல்லப்பட்ட 4 குற்றவாளிகளும் பீகார் தேர்தலில் பெரிய அளவில் வன்முறையை கட்டவிழ்க்க திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 



    • 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
    • நேற்று நடந்த ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி பெற்றது.

    புதுடெல்லி:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நான்காவது கட்டமாக தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.

    நேற்று நடந்த போட்டியில் தொடக்கம் முதலே பாட்னா அணி அதிரடியாக ஆடி புள்ளிகளைக் குவித்தது.

    இறுதியில், பாட்னா பைரேட்ஸ் அணி 61-26 என்ற புள்ளிக் கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தியது. இதன்மூலம் 17 போட்டிகளில் 7-ல் வெற்றி பெற்று 14 புள்ளிகள் பெற்றுள்ள பாட்னா பைரேட்ஸ் அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

    • 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
    • இன்று நடந்த ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி பெற்றது.

    புதுடெல்லி:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நான்காவது கட்டமாக தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.

    இன்று நடந்த போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி 54-24 என்ற புள்ளிக் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.

    பெங்கால் வாரியர்ஸ் அணி 18 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்றது. 12 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதன்மூலம் நடப்பு தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் அணியாக வெளியேறியது.

    மற்றொரு போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 45-34 என்ற புள்ளிக் கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

    • டிரம்ப் இந்தியாவின் கொள்கையை அறிவிப்பது கடந்த 6 நாட்களில் இது 4-வது முறையாகும்.
    • டிரம்பிடமிருந்து ரஷிய எண்ணெய் பற்றிய தகவல்களையும் பெறுகிறோம்.

    பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தீபாவளி வாழ்த்துகளை பரிமாறி கொண்டார்.

    இதுகுறித்து நிருபர்களிடம் டிரம்ப் கூறும்போது," ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளதாகவும் மேலும் கொள்முதலை குறைக்கும்" என்றார்.

    ரஷியாவிடம் இருந்து இந்தியா அதிக எண்ணெய் வாங்க போவதில்லை என்று டிரம்ப் மீண்டும் கூறியதற்கு காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மோடி மறைப்பதை டிரம்ப் வெளிப்படுத்துகிறார் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி இறுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேசியதை ஒப்புக்கொண்டுள்ளார். டிரம்ப் தனக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்ததாக மட்டுமே கூறினார். ஆனால் மோடி எதை மறைத்தாலும், டிரம்ப் வெளிப்படுத்துகிறார்.

    ரஷியாவிடம் இருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி குறித்து பேசிய தாகவும் இந்த இறக்குமதி நிறுத்தப்படும் என்று அவருக்கு உறுதி அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். டிரம்ப் இந்தியாவின் கொள்கையை அறிவிப்பது கடந்த 6 நாட்களில் இது 4-வது முறையாகும்.

    முதலில் டிரம்ப்பிடம் இருந்து ஆபரேஷன் சிந்தூர் பற்றிய தகவல்களைப் பெற்றோம். இப்போது அவரிடமிருந்து ரஷிய எண்ணெய் பற்றிய தகவல்களையும் பெறுகிறோம். பிரதமர் மோடி எதை மறைக்கிறார்? அவர் எந்த அழுத்தத்தில் இருக்கிறார்? அவர் எதற்கு பயப்படுகிறார்? ஹவ்டி மோடி-நமஸ்தே டிரம்ப் முற்றிலும் கெட்டுப்போனது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
    • நேற்று நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்தது.

    புதுடெல்லி:

    12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

    இந்நிலையில், நேற்று இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பெங்கால் வாரியர்ஸ் அணி 44-43 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 12-வது தோல்வியாகும்.

    மற்றொரு போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 50-32 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    ×