என் மலர்
விளையாட்டு

புரோ கபடி லீக்: டெல்லியை நொறுக்கி பிளே ஆப் சுற்றை தக்கவைத்தது பாட்னா பைரேட்ஸ்
- 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- நேற்று நடந்த ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நான்காவது கட்டமாக தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த போட்டியில் தொடக்கம் முதலே பாட்னா அணி அதிரடியாக ஆடி புள்ளிகளைக் குவித்தது.
இறுதியில், பாட்னா பைரேட்ஸ் அணி 61-26 என்ற புள்ளிக் கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தியது. இதன்மூலம் 17 போட்டிகளில் 7-ல் வெற்றி பெற்று 14 புள்ளிகள் பெற்றுள்ள பாட்னா பைரேட்ஸ் அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.
Next Story






