என் மலர்
ஆந்திர பிரதேசம்
- 3ம் நாள் முடிவில் இந்தியா பி அணி 309 ரன்கள் எடுத்துள்ளது.
- அந்த அணியின் அபிமன்யு சதமடித்து ஆடி வருகிறார்.
ஐதராபாத்:
துலீப் கோப்பை தொடரின் 2-ம் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி, அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா சி அணி முதல் இன்னிங்சில் 525 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இஷான் கிஷன் சிறப்பாக ஆடி சதமடித்து 111 ரன்னில் அவுட்டானார். மனவ் சுதார் 82 ரன், பாபா இந்திரஜித் 78 ரன், கெய்க்வாட் 58 ரன், ரஜத் படிதார் 40 ரன், சாய் சுதர்சன் 43 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா பி சார்பில் முகேஷ் குமார், ராகுல் சஹார் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா பி அணி இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 124 ரன்கள் எடுத்தது. கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன், ஜெகதீசன் ஆகியோர் அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஜெகதீசன் 70 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அபிமன்யு பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
மூன்றாம் நாள் முடிவில் இந்தியா பி அணி 7 விக்கெட்டுக்கு 309 ரன்கள் எடுத்துள்ளது. அபிமன்யு 143 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதேபோல், இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் இடையிலான போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா டி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 290 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சாம்ஸ் முலானி 88 ரன்னும், தனுஷ் கோடியன் 53 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா டி அணி சார்பில் ஹர்ஷித் ரானா 4 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், காவரப்பா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தேவ்தத் படிக்கல் 92 ரன்னில் அவுட்டானார்.
இந்தியா ஏ அணி சார்பில் கலீல் அகமது, அக்யூப் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இந்தியா ஏ அணி 2வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 380 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பிரதம் சிங் சதமடித்து 122 ரன்னும், மயங்க் அகர்வால் 56 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். திலக் வர்மா பொறுப்புடன் ஆடி சதமடித்து 111 ரன்னும், ஷஷ்வாத் ராவத் 64 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதையடுத்து, 486 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா டி அணி களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா டி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது.
இன்னும் 2 நாள் மீதமுள்ள நிலையில் 426 ரன்கள் எடுத்தால் இந்தியா டி அணி வெற்றி பெறும்.
- இந்தியா சி அணி முதல் இன்னிங்சில் 525 ரன்கள் குவித்தது.
- அந்த அணியின் இஷான் கிஷன் சதமடித்து அசத்தினார்.
ஐதராபாத்:
துலீப் கோப்பை தொடரின் 2-ம் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின. இதில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி, அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்தியா சி அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான கெய்க்வாட் 2-வது பந்திலேயே காயத்தால் வெளியேறினார்.
அடுத்து இறங்கிய ரஜத் படிதார் சாய் சுதர்சனுடன் சேர்ந்து பொறுப்புடன் ஆடினார். படிதார் 40 ரன்னும், சாய் சுதர்சன் 43 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர்.
கடைசி கட்டத்தில் அணியில் இணைந்த இஷான் கிஷன் சிறப்பாக ஆடி சதமடித்து 111 ரன்னில் அவுட்டானார். பாபா இந்திரஜித் அரை சதமடித்து 78 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் நாள் முடிவில் இந்தியா சி அணி 5 விக்கெட்க்கு 357 ரன்களை எடுத்திருந்தது.
இந்நிலையில், இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. கெய்க்வாட், மனவ் சுதார் இருவரும் அரை சதம் கடந்தனர். கெய்க்வாட் 58 ரன்னும், மனவ் சுதார்82 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், இந்தியா சி அணி முதல் இன்னிங்சில் 525 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா பி சார்பில் முகேஷ் குமார், ராகுல் சஹார் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா பி அணி இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 124 ரன்கள் எடுத்தது. கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன், ஜெகதீசன் ஆகியோர் அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதேபோல், இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் இடையிலான போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா டி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 290 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சாம்ஸ் முலானி 88 ரன்னும், தனுஷ் கோடியன் 53 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா டி அணி சார்பில் ஹர்ஷித் ரானா 4 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், காவரப்பா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தேவ்தத் படிக்கல் 92 ரன்னில் அவுட்டானார்.
இந்தியா ஏ அணி சார்பில் கலீல் அகமது, அக்யூப் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா ஏ அணி இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் அந்த அணி 222 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆறுதல்.
- காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆந்திரா மாநிலம் சித்தூரில் லாரி மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், மொகிலி காட் அருகே சித்தூர்-பெங்களூரு நெடுஞ்சாலையில், திருப்பதியில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆந்திர மாநில அரசுப் பேருந்து, லாரி மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளார்.
நாயுடு சம்பவத்தை பார்வையிட்டார் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ உதவிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- படுகாயம் அடைந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
கர்நாடக மாநிலம் சிக்க பல்லாபூரை சேர்ந்த 5 பேர் திருப்பதி-அனந்தபூர் தேசிய நெடுஞ்சாலையில் பாக்ராபேட்டை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே தக்காளி ஏற்றிக் கொண்டு வந்த லாரி பயங்கர வேகத்தில் எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது.
இந்த விபத்தில் கார் முழுவதும் நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து பரிதாபமாக 3 பேர் இறந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழகத்தில் இருந்து அதிக அளவில் சிறப்பு பஸ்களை இயக்க ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்தனர்.
- நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா அக்டோபர் 4-ந்தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த ஆண்டு பிரமோற்சவ விழாவையொட்டி அக்டோபர் 1-ந் தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. 4-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவ விழா தொடங்குகிறது.
8-ந் தேதி தங்க கருட சேவையும் 12-ந் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
விழாவில் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வது வழக்கம்.
இதனால் தமிழகத்தில் இருந்து அதிக அளவில் சிறப்பு பஸ்களை இயக்க ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு பஸ் போக்குவரத்து கழக அதிகாரிகளை ஆந்திர மாநில அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் தமிழகத்தில் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 150 சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதேபோல் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பிலும் எவ்வளவு பஸ்கள் இயக்கலாம் என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 67,668 பேர் தரிசனம் செய்தனர். 23,157 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
ரூ.3.56 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- இயற்கைப் பேரிடராக அறிவிக்க அம்மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தனர்.
- பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குத் திரைப் பிரபலங்கள் நிதி வழங்கினர்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் மழையை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆந்திராவின் குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களும் குறிப்பாக விஜயவாடா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்குத் தெலுங்கு திரைப் பிரபலங்கள் நிதி வழங்கினர்.
இதே போன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கினார்.
வெள்ள பாதிப்பு நிதி உதவி வழங்கிய நடிகர் சிம்புவுக்கு ஆந்திர பிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான எக்ஸ் தள பதிவில் அவர், "ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 3 லட்சம் நன்கொடை அறிவித்த பிரபல தமிழ் நடிகர் திரு சிலம்பரசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இக்கட்டான காலங்களில் மக்களுக்கு ஆதரவாக இருங்கள், உங்கள் ஆதரவு மாநில அரசின் நிவாரணத் திட்டங்களை வலுப்படுத்தும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- லாரியில் பயணம் செய்தவர்கள் முந்திரிப் பருப்பு மூட்டைகளுக்கு அடியில் சிக்கி உயிருக்கு போராடினர்.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டம் பொரம்பலம் என்ற இடத்தில் இருந்து முந்திரி பருப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
லாரியில் டிரைவர் உட்பட 10 பேர் இருந்தனர். 2 மாவட்டங்களை இணைக்கும் சிலகவரி பகலு என்ற இடத்தில் லாரி சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது.
லாரியில் பயணம் செய்தவர்கள் முந்திரிப் பருப்பு மூட்டைகளுக்கு அடியில் சிக்கி உயிருக்கு போராடினர்.
விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் லாரிக்கு அடியில் சிக்கியவர்களை மீட்டனர். விபத்து ஏற்படுத்திய டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
லாரிக்கு அடியில் சிக்கிய 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை JCB இயந்திரம் கொண்டு போலீசார் அழிக்க முயன்றனர்.
ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் வாகன சோதனையின்போது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை JCB இயந்திரம் கொண்டு போலீசார் அழிக்க முயன்றனர். அப்போது அந்த இடத்திற்கு முந்தியடித்து கொண்டு வந்த மதுபிரியர்கள் மதுபாட்டில்களை தூக்கிச் சென்றனர். மதுபிரியர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- வைகுண்டம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள அனைத்து அறைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
- திருப்பதியில் நேற்று 83 ஆயிரத்து 960 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வார இறுதி நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா விடுமுறை காரணமாக சனிக்கிழமை மாலை முதல் ஏழுமலையானை தரிசிப்பதற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது.
நேற்று காலை ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள அனைத்து அறைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து 8 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் நேற்று 83 ஆயிரத்து 960 பேர் தரிசனம் செய்தனர். 32 ஆயிரத்து 342 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.96 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்குத் தெலுங்கு திரைப் பிரபலங்கள் நிதி வழங்கி வருகின்றனர்.
- நடிகர் பிரபாஸ் தெலங்கானா- ஆந்திரா பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் மழையை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திராவின் குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களும் குறிப்பாக விஜயவாடா கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்நிலையில்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்குத் தெலுங்கு திரைப் பிரபலங்கள் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் தனது சொந்த பணத்திலிருந்து ரூ.1 கோடியை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இதேபோல் நடிகர் பிரபாஸ் தெலங்கானா- ஆந்திரா பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.
முன்னதாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர்கள் பொது நிவாரண நிதிக்கு நடிகர்கள் மகேஷ் பாபு, சிரஞ்சீவி, பாலய்யா, பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர். அல்லு அர்ஜுன் ஆகியோர் தலா ரூ.50 லட்சம் நிதியுதவி அளிப்பதாக தெரிவித்தனர்.
ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்ற தெலுங்கு தேசம் வெற்றி பெட்ரா நிலையில் சாநிரபாபு நாயுடு முதலமைச்சர் ஆனார். அதே கூட்டணியில் இடம்பெற்ற ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வராக பணியேற்றது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை இவர்களின் வலையில் விழுந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
- மதியாலா வெங்கடேஸ்வரி என்பவர் 4 வருடங்களுக்கு முன்னர் இந்தோனேசியா சென்று அங்கிருந்து பல சைபர் குற்றங்களில் ஈடுபட்டவர்
ஆந்திரப் பிரதேச மாநிலம் தெனாலியில் 4 பேரை சயநைட் கலந்த பானத்தைக் குடிக்கவைத்து கொலை செய்த சீரியல் கில்லர் பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முனகப்பா ரஜினி, மதியாலா வெங்கடேஸ்வரி, குர்லா ராமனம்மா ஆகிய நடுத்தர வயது பெண்மணிகள் மூவர் தெனாலி பகுதியில் உள்ளவர்களைக் குறிவைத்து அவர்களிடம் சினேகமாகப் பேசி சயனைட் கலந்த குளிர்பானங்களைக் குடிக்க வைத்துள்ளனர்.
அதை குடித்தவர்கள் சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததும் அவர்களிடம் இருக்கும் பெறுமதியான பொருட்களைத் திருடிச்சென்றுள்ளனர். கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை இவர்களின் வலையில் விழுந்த 4 பெண்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களிடம் இருந்து உயிர்பிழைத்தவர்கள் அளித்த புகாரில் பேரில் விசாரணை நடத்தி வந்த ஆந்திர போலீசார் தற்போது இவர்கள் மூவரை கைது செய்துள்ளனர் சயனைடும் திருடப்பட்ட பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பெண்களுக்கு சயனைட் சப்ளை செய்து வந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மூவரில் 32 வயதான மதியாலா வெங்கடேஸ்வரி என்பவர் 4 வருடங்களுக்கு முன்னர் கம்போடியா சென்று அங்கிருந்து பல சைபர் குற்றங்களில் ஈடுபட்டவர் என்பதும் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கேரளாவில் ஜாலி ஜோசப் என்ற பெண்மணி 14 வருடத்தில் தனது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் உட்பட 6 பேரை சயனைட் மூலம் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆகஸ்டு மாதம் 22 லட்சத்து 42 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
- திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக நடந்து வரும் பக்தர்களுக்கு விரைவு திவ்ய தரிசன டோக்கன் வழங்கும் நடைமுறை மீண்டும் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் நெற்றியில் நாமத்துடன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார்கள்.
கோவில் வளாகத்தில் திருநாமம் இட பக்தர்களிடம் ரூ.10 முதல் 20 வரை வசூல் செய்கிறார்கள். ஒரு சில பக்தர்களை அடாவடியாக வழிமறித்து நெற்றியில் திருநாமமிட்டு அதிக அளவில் பணத்தை பிடுங்குகிறார்கள்.
இதனை தவிர்க்க ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நெற்றியில் இலவசமாக திருநாமம் இட ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பதி மலையில் உள்ள ஏடிசி பகுதியில் இந்த திட்டத்தை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளாராவ் நேற்று தொடங்கி வைத்தார். ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக நெற்றியில் திருநாமம் செலுத்தி வருகின்றனர். இதனால் இனிமேல் ரூ.10 கட்டணம் செலுத்தி திருநாமமிட வேண்டியது இல்லை.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆகஸ்டு மாதம் 22 லட்சத்து 42 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். கோவில் உண்டியலில் ரூ.125 கோடியே 67 லட்சம் காணிக்கை வசூலாகி உள்ளது.
1 கோடியே 6 லட்சம் லட்டுகள் விற்பனையாகி உள்ளன. திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக நடந்து வரும் பக்தர்களுக்கு விரைவு திவ்ய தரிசன டோக்கன் வழங்கும் நடைமுறை மீண்டும் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
தங்கும் அறைகளுக்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு எத்தனை அறைகள் உள்ளன. எப்போது அறைகள் கிடைக்கும் என்பதை பற்றி விவரங்களை அறிவிப்புகள் மூலம் வெளியிட தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.






