search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus collide"

    பேராவூரணி அருகே பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேராவூரணி:

    பேராவூரணி அருகே உள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் இளந்தமிழன் (வயது 16). அதே கிராமத்தை சேர்ந்தவர் பாலா (16). இவர்கள் 2 பேரும் பேராவூரணி அடுத்த ஆவணத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தனர்.

    இன்று காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த ஆட்டோ மீது மோட்டார் சைக்கள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் நடுரோட்டில் விழுந்தனர். அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த பஸ் எதிர்பாராதவிதமாக கீழே கிடந்த இளந்தமிழன் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இளந்தமிழன் பரிதாபமாக இறந்தார். பாலா பலத்த காயம் அடைந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த பேராவூரணி இன்ஸ்பெக்டர் பரமானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாலாவை மீட்டு சிகிச்சைக்காக பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருமாம்பாக்கம் அருகே பஸ் மோதிய விபத்தில் 3 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பாகூர்:

    கடலூர் மாவட்டம் சி.முட்லூர் பகுதியை சேர்ந்தவர் சையதுசமீ (வயது30). இவர் அங்கு உடற்பயிற்சி கூடம் (ஜிம்) நடத்தி வருகிறார். இவரும், இவரது உடற்பயிற்சி கூடத்துக்கு வரும் அதே பகுதியை சேர்ந்த பிரவின்குமார் (21) என்பவரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு வந்து கொண்டு இருந்தனர்.

    கிருமாம்பாக்கத்தை அடுத்த பிள்ளையார்குப்பம் என்ற இடத்தில் வந்த போது பின்னால் கடலூரில் இருந்து புதுவை நோக்கி வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும் அந்த பஸ் ரோட்டில் நடந்து சென்ற கிருமாம்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்த ராஜலட்சுமி (41) என்பவர் மீதும் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சையதுசமீ, பிரவின்குமார் மற்றும் ராஜலட்சுமி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து தொடர்பாக கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிவகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் குழந்தையுடன் கணவன், மனைவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    சிவகிரி:

    நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ராயகிரி காமராஜர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 27), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சிவசக்தி (23). இவர்களுக்கு 3 வயதில் துர்கேஷ் , ஒரு வயதில் யோகேஷ் ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர்.

    மாரிமுத்து தனது மாமியார் வீட்டுக்கு குடும்பத்தினருடன் சென்று இருந்தார். அங்கிருந்து நேற்று இரவு தனது மனைவி சிவசக்தி மற்றும் குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார்.

    சிவகிரி அருகே உள்ளாறு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த போது அந்த வழியாக வந்த அரசு பஸ், முன்னே சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்றது. அப்போது பஸ் எதிர்பாராத விதமாக‌ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மாரிமுத்து உள்பட 4 பேரும் ஆளுக்கொரு திசையில் தூக்கி வீசப்பட்டனர். சிவசக்தி மற்றும் துர்கேஷ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.

    மாரிமுத்து பலத்த காயமடைந்தார். யோகேஷ் லேசான காயம் அடைந்தான். தகவல் அறிந்த வாசுதேவநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான தாய், மகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாரிமுத்துவை மேல்சிகிச்சைக்காக ராஜ பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். யோகேஷ் சிகிச்சைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டான்.

    இந்த நிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மாரிமுத்து நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆனது. விபத்து குறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் மதுரையை சேர்ந்த கண்ணன் (43) என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுபோன்ற விபத்து தருணங்களில் சிவகிரி அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சைகள் நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அங்குள்ள‌ டாக்டர் நோயாளிகளை சரியாக கவனிப்பதில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

    விபத்தில் குழந்தையுடன் கணவன், மனைவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


    ×