என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • முதல் கணவருக்கு 2 குழந்தைகள் பிறந்தவுடன் இளம்பெண் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
    • இளம்பெண்ணின் மூத்த மகள் மீண்டும் 3 மாத கர்ப்பம் ஆனார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் ஏலூர் மாவட்டம் வட்லூரை சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இளம்பெண்ணின் கணவர் உடல்நல குறைவு காரணமாக கடந்த 2007-ல் இறந்தார்.

    கணவர் இறந்த பிறகு தனது தாய் மாமன் சதீஷ்குமார் (வயது 43) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    திருமணத்திற்கு பிறகு தனது 2 மகள்களையும் சொந்த ஊரான விசாகப்பட்டினத்தில் உள்ள பள்ளியில் சேர்த்து அங்கேயே தங்க வைத்தார்.

    முதல் கணவருக்கு 2 குழந்தைகள் பிறந்தவுடன் இளம்பெண் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

    2-வது திருமணம் செய்து கொண்ட சதீஷ்குமார் சில மாதங்களுக்கு பிறகு தனக்கு குழந்தை பெற்று தர வேண்டும். இல்லையென்றால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வேன் என அடம்பிடித்தார்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண் நீ வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்கு பதிலாக என்னுடைய மகள் மூலம் குழந்தை பெற்றுக்கொள் என கூறினார்.

    இதையடுத்து விசாகப்பட்டினத்திற்கு வந்த இளம்பெண் அங்கு 8-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தனது மூத்த மகளை 2-வது கணவரிடம் ஒப்படைத்தார். சிறுமியின் கடும் எதிர்ப்பையும் மீறி சதீஷ்குமார் பலாத்காரம் செய்தார்.

    இதனால் சிறுமி கர்ப்பமானார். சிறுமி கர்ப்பமான விஷயம் வெளியே தெரிந்தால் அவதூறாக பேசுவார்கள் என கூறி டாக்டரிடம் அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்தனர்.

    ஆனால் மீண்டும் சிறுமி கர்ப்பமாகி பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அப்போது சதீஷ்குமார் தனக்கு பெண் குழந்தை தேவையில்லை. ஆண் குழந்தை தான் வேண்டும் என அடம் பிடித்தார்.

    இதையடுத்து விசாகப்பட்டினம் சென்ற இளம்பெண் தனது 2-வது மகளை அழைத்து வந்தார். அவரையும் சதீஷ்குமார் பலாத்காரம் செய்தார். இதனால் கர்ப்பமான சிறுமிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்தனர். பிரசவத்தில் கருவிலேயே இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. இறந்த நிலையில் பிறந்த குழந்தையை தூக்கிச் சென்று கால்வாயில் வீசி விட்டனர்.

    இதனால் இளம்பெண்ணிற்கும் சதீஷ் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தனது 2 மகள்களையும் சதீஷ்குமாரிடம் விட்டு விட்டு இளம்பெண் விசாகப்பட்டினத்திற்கு சென்று அங்குள்ள போலீசில் புகார் செய்தார். போலீசார் சதீஷ்குமார் மற்றும் சிறுமிகளை அழைத்து கவுன்சிலிங் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் இளம்பெண்ணின் மூத்த மகள் மீண்டும் 3 மாத கர்ப்பம் ஆனார். இது குறித்த தகவல் அறிந்த இளம்பெண் ஏலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் சதீஷ்குமார் மீது போக்சோ மற்றும் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து சதீஷ்குமார் அவருக்கு துணையாக இருந்த சிறுமியின் தாய் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    சிறுவயதிலேயே குழந்தை பெற்ற சிறுமிகள் தவித்து வருகின்றனர்.

    • சந்திரயான்-3 ராக்கெட் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.
    • சந்திரயான்-3 மாதிரி மற்றும் ஆவணங்களை ஏழுமலையான் பாதத்தில் வைத்து வழிபாடு நடத்தினர்.

    திருமலை:

    சந்திரயான்-3 ராக்கெட் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. அதையொட்டி நேற்று காலை இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது சந்திரயான்-3 மாதிரி மற்றும் ஆவணங்களை ஏழுமலையான் பாதத்தில் வைத்து வழிபாடு நடத்தினர்.

    கோவிலில் இருந்து வெளியே வந்ததும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட உள்ளது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 23-ந்தேதி சந்திரயான்-3 ரோவர் நிலவில் தரையிறங்கும் என்றனர்.

    இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவில் தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வக இயக்குனர் அமித்குமார்பத்ரா, சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், இணை திட்ட இயக்குனர் கல்பனா உள்பட பலர் இடம் பெற்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'சந்திரயான் 3' விண்கலத்தில் உள்ள 'இன்டர்பிளானட்டரி' என்ற எந்திரம் 3 முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது.
    • ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை மதியம் 2.35 மணிக்கு சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

    ஸ்ரீஹரிகோட்டா:

    'சந்திரயான்-3' விண்கலத்தை சுமந்து செல்லும் 'எல்.வி.எம்.3 எம்-4' ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு உள்ளன. தற்போது அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை ஓட்டமும் நிறைவடைந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.

    'சந்திரயான் 3' விண்கலத்தில் உள்ள 'இன்டர்பிளானட்டரி' என்ற எந்திரம் 3 முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. ராக்கெட்டில் உள்ள 'புரபுல்சன்' பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ. தொலைவுக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைத்து பொருத்தப்பட்டு உள்ளது.

    பின்னர் லேண்டர் பகுதி நிலவில் மெதுவாக தரையிறங்கும் பகுதியாகும். ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ராக்கெட்டுக்கான இறுதிக் கட்டப்பணியான 25½ மணி நேர கவுண்ட்டவுன் இன்று பகல் 1 மணிக்கு தொடங்கியது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை மதியம் 2.35 மணிக்கு சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

    நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் 3-வது விண்கலமான 'சந்திரயான்-3', விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜசேகர் ரெட்டி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • ராஜசேகர் ரெட்டிக்கு தெரிந்த நபர்கள் தான் அவரை கொலை செய்திருக்க வேண்டும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், மதனப்பள்ளி அருகே உள்ள போடிமல்லதின்னா கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் ரெட்டி. இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் தக்காளி பயிரிட்டு சந்தையில் விற்பனை செய்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு அவதி அடைந்து வந்தார்.

    இந்நிலையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் கடந்த 20 நாட்களில் ராஜசேகர் ரெட்டிக்கு ரூ.30 லட்சம் வருவாய் கிடைத்தது. இதனால் ராஜசேகர் ரெட்டி திடீரென லட்சாதிபதியானார்.

    நேற்று ராஜசேகர் ரெட்டி தக்காளி வியாபாரத்தை முடித்துக் கொண்டு வசூலான பணத்துடன் தனது பைக்கில் வந்தார். அவரை மர்மநபர்கள் வழி மறித்தனர்.

    அவரை கை, கால்களை கட்டி மறைவான இடத்திற்கு கடத்தி சென்றனர். அங்கு ராஜசேகர ரெட்டியிடம் பணத்தைக் கேட்டு அடித்து துன்புறுத்தினர்.

    அவர் பணத்தைக் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் ராஜசேகர் ரெட்டியை அடித்து கொலை செய்தனர்.

    பின்னர் பிணத்தை வீசிவிட்டு சென்றனர். அந்த வழியாக சென்றவர்கள் ராஜசேகர் ரெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு மதனப்பள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜசேகர் ரெட்டி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    ராஜசேகர ரெட்டியிடம் உள்ள ரூ.30 லட்சத்தை பறிக்க அவரை கடத்திச் சென்று துன்புறுத்தியதாகவும் பணம் தர மறுத்ததால் அவரை கொலை செய்து வீசியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    ராஜசேகர் ரெட்டிக்கு தெரிந்த நபர்கள் தான் அவரை கொலை செய்திருக்க வேண்டும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவாண் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.
    • சந்திரயான்-3 சிறிய மாதிரியை ஏழுமலையான் சன்னதியில் வைத்து வழிபாடு நடத்தினர்.

    திருப்பதி:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையின் புதிய சாதனையாக சந்திரயான்-3 விண்கலம் நாளை பிற்பகல் 2.35 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

    ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவாண் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விண்ணில் செலுத்தப்படும் சந்திரயான்-3 விண்கலம் வெற்றி பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று காலை சாமி தரிசனம் செய்தனர்.

    அப்போது சந்திரயான்-3 சிறிய மாதிரியை ஏழுமலையான் சன்னதியில் வைத்து வழிபாடு நடத்தினர்.

    சந்திரயான்-3 நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு, ஆறு சக்கரங்களைக் கொண்ட ரோவர் வெளியே வந்து சந்திரனில் அது பணி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சந்திரயான்-3 விண்கலத்தின் மூலமாக, நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கும் 4-வது நாடு என்ற பெருமையை நமது நாடு பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • நேற்று இரவு திருப்பதி மலை பாதையில் சிறுத்தை ஒன்று நடமாடியது.
    • தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருப்பதி:

    திருப்பதி மலைப்பாதை அருகே சிறுத்தைகள் நடமாடி வருகின்றன. கடந்த மாதம் 3 வயது சிறுவனை சிறுத்தை கவ்வி தூக்கி சென்றது.

    அங்கிருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் விரட்டிச் சென்றதால் சிறுவனை விட்டு சென்றது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து மலை பாதையில் இரவு நேரங்களில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    மேலும் விலங்குகள் நடமாடக்கூடிய பகுதிகளில் ஆயுதம் எழுதிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .

    இந்நிலையில் நேற்று இரவு திருப்பதி மலை பாதையில் சிறுத்தை ஒன்று நடமாடியது.

    இதை கண்ட பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் சிறுத்தை நடமாடிய பகுதியில் வலைகளைக் கொண்டு வேலி அமைத்தனர். இதன் மூலம் இந்த பகுதியில் சிறுத்தை நடைபாதைக்கு வராமல் தடுக்க முடியும் என தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.

    • சிதைக்கப்பட்ட மாநிலத்தை நிச்சயமாக மீண்டும் வளர்ச்சி பாதையில் கொண்டு வருவேன்.
    • ஜெகன் மோகன் ரெட்டியின் நாசகார ஆட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று நான் நம்புகிறேன்.

    திருப்பதி:

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அவரது கட்சி அலுவலகத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது அரசின் கண்மூடித்தனமான முடிவுகளுக்கு ஆந்திரா பலியாகி உள்ளது.

    ஜெகன் மோகன் ரெட்டி தனது திறமையின்மை மற்றும் பழிவாங்கும் மனப்பான்மையால் போலவரம் திட்டத்தையும், அமராவதியையும் முற்றிலுமாக அழித்துவிட்டார்.

    தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, அனைத்து சவால்களையும் முறியடித்து, மக்கள் நலனுக்கான சொத்துக்களை உருவாக்கும்.

    ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் மக்கள் ஒன்றிணைந்தார்கள். அதுபோல ஆந்திர மாநிலத்தின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் ஏன் மக்கள் ஒன்றிணைய முடியவில்லை.

    சிதைக்கப்பட்ட மாநிலத்தை நிச்சயமாக மீண்டும் வளர்ச்சி பாதையில் கொண்டு வருவேன்.

    "மக்களுக்காக இன்னும் என்ன செய்ய முடியும் என்பதையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம்," மாநிலத்தை பிரித்ததை விட, ஜெகன் அரசின் திறமையற்ற ஆட்சியால் மாநில மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    "நான் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியும். ஆனால், ஜெகன் மோகன் ரெட்டியின் நாசகார ஆட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று நான் நம்புகிறேன்".

    தற்போது, தெலுங்கானாவின் தொலைதூரப் பகுதிகளில் கூட ஒரு ஏக்கருக்கு 50 கோடி ரூபாய், ஆந்திராவில் 10 ஏக்கருக்கு கூட இந்தத் தொகை கிடைப்பது மிகவும் கடினம் என்ற நிலை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அங்கன்வாடி மையத்திற்கு சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது தாய் சிறுமியை தேடிச் சென்றார்.
    • சிகிச்சைக்காக சிறுமியை சித்திப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், செரியல் அடுத்த யெல்லதாசூர் நகரை சேர்ந்த 5 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் சிறுமி வழக்கம் போல் அங்கன்வாடி மையத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது வாலிபர் சிறுமியை வலுக்கட்டாயமாக அவரது வீட்டிற்குள் கடத்தி சென்றார். அங்கு வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    அங்கன்வாடி மையத்திற்கு சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது தாய் சிறுமியை தேடிச் சென்றார்.

    அப்போது சிறுமி அழுதபடி சாலையில் நடந்து வந்தார். மகளைக் கண்ட அவரது தாய் சிறுமியிடம் விசாரித்தார்.

    சிறுமி நடந்த சம்பவங்கள் குறித்து தனது தாயிடம் கூறினார். மேலும் சிறுமியின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வழிவதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து சிகிச்சைக்காக சிறுமியை சித்திப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து சிறுமியின் தாய் சித்திபேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • பெண்கள் குறித்து தவறாக பேசியதற்கு பவன் கல்யாண் மன்னிப்பு கேட்க வேண்டும்.
    • ஜெகன்மோகன் ரெட்டி எப்போதாவது பவன் கல்யாண் குடும்ப உறுப்பினர்களை விமர்சித்து பேசி இருக்கிறாரா.

    திருப்பதி:

    ஜனசேனா கட்சி தலைவரும் பிரபல நடிகருமான பவன் கல்யாண் ஆந்திராவில் 30 ஆயிரம் பெண்கள் காணாமல் போனதாக பேசியுள்ளார்.

    இதற்கு மாநில மகளிர் ஆணையம் மற்றும் பல்வேறு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தது.

    இந்த நிலையில் ஆந்திர மாநில விளையாட்டு துறை அமைச்சர் ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பெண்கள் குறித்து தவறாக பேசியதற்கு பவன் கல்யாண் மன்னிப்பு கேட்க வேண்டும். பெண் கடத்தலில் தெலுங்கானா மாநிலம் 6-வது இடத்தில் உள்ளது.

    தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை பவன் கல்யாண் விமர்சனம் செய்து பேச முடியுமா? அவ்வாறு பேசினால் அவர் ஐதராபாத்தில் வசிக்க முடியுமா.

    முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தாரையும் விமர்சனம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜெகன்மோகன் ரெட்டி எப்போதாவது பவன் கல்யாண் குடும்ப உறுப்பினர்களை விமர்சித்து பேசி இருக்கிறாரா.

    வரும் சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தோல்வி அடையும் என பவன் கல்யாணுக்கு எந்த மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு எழுதிக் கொடுப்பதை பவன் கல்யாண் வெட்கமின்றி படிக்கிறார். இவர்களால் ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவனை கொலை செய்த பின்னர் அவர் படிக்கும் பள்ளி வளாகத்தில் பிணத்தை வீசி விட்டு கண்களை எடுத்து சென்றனர்.
    • மாணவனின் பிணத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஏலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், ஏலூர் மாவட்டம், மறுமுலாவை சேர்ந்தவர் கோகுல ஸ்ரீனிவாச ரெட்டி. இவர் தன்னார்வலராக வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி ராமலட்சுமி. இவரது மகன்கள் ஹர்ஷவர்தன் ரெட்டி மற்றும் அகில்வர்தன் ரெட்டி (வயது 9).

    அலிரமூடு கூடமில் உள்ள பழங்குடியினர் நல விடுதியில் தங்கி அங்குள்ள பள்ளியில் ஹர்ஷவர்தன் ரெட்டி 6-ம் வகுப்பும், அகில்வர்தன் ரெட்டி 4-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    நேற்று முன்தினம் இரவு மாணவர்கள் அனைவரும் உணவு சாப்பிட்டுவிட்டு தங்களது அறைகளில் தூங்கினர். நள்ளிரவு மர்ம நபர்கள் அகில்வரதன் ரெட்டி அறைக்குள் புகுந்தனர். தூங்கிக் கொண்டிருந்த அவரை தூக்கிக் கொண்டு வெளியே சென்றனர்.

    பின்னர் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்தனர். அவரது 2 கண்களை கத்தியால் குத்தி பிடுங்கினர். மாணவனை கொலை செய்த பின்னர் அவர் படிக்கும் பள்ளி வளாகத்தில் பிணத்தை வீசி விட்டு கண்களை எடுத்து சென்றனர்.

    நேற்று காலை அகில்வர்தன் ரெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்ட மாணவர்கள் இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சிங்கங்க ராஜூக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மோப்பநாய் கொண்டு சோதனை நடத்தினர். அது மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    மாணவனின் பிணத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஏலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவனின் கண்களை எடுக்க கொலை செய்தார்களா? அல்லது அகில்வர்தன் ரெட்டி சக மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நாளை அங்குரார்ப்பணம் நடக்கிறது.
    • 3 நாட்கள் பவித்ரோற்சவம் நடக்கிறது.

    திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 3 நாட்கள் பவித்ரோற்சவம் நடக்கிறது. அதையொட்டி நாளை (புதன்கிழமை) மாலை அங்குரார்ப்பணம், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை யாக சாலை பூஜை, பவித்ர பிரதிஷ்டை, சயனாதிவாசம் நடக்கிறது.

    14-ந்தேதி யாகசாலையில் வைதீக காரிய கர்மங்கள், பவித்ர மாலைகள் சமர்ப்பணம், 15-ந்தேதி யாகசாலையில் வைதீக காரிய கர்மங்கள் மற்றும் பவித்ர பூர்ணாஹுதி நடக்கிறது. இதோடு பவித்ரோற்சவம் நிறைவடைகிறது. மேற்கண்ட 3 நாட்கள் காலை நேரத்தில் உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனமும், மாலை நேரத்தில் திருவீதி உற்சவமும் நடக்கிறது.

    பவித்ரோற்சவ விவரம் அச்சிடப்பட்ட புத்தகத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி. தர்மாரெட்டி நேற்று தேவஸ்தான நிர்வாகக் கட்டிடத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வெளியிட்டார். அந்தப் புத்தகத்தை கோவில் துணை அதிகாரி நாகரத்னா மற்றும் அர்ச்சகர் ஆனந்தகுமார் தீட்சிதர், கோவில் ஆய்வாளர் சலபதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    • விபத்தில் 5 பெண்கள், 6 வயது சிறுமி உள்பட 7 பேர் பலியானார்கள்.
    • பஸ்சில் மொத்தம் 45 பேர் பயணித்தனர்.

    அமராவதி:

    ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் இன்று அதிகாலை திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 5 பெண்கள், 6 வயது சிறுமி உள்பட 7 பேர் பலியானார்கள். 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பஸ்சில் மொத்தம் 45 பேர் பயணித்தனர்.

    ×