என் மலர்
இந்தியா

அங்கன்வாடிக்கு சென்ற சிறுமியை கடத்தி பலாத்காரம்- வாலிபர் கைது
- அங்கன்வாடி மையத்திற்கு சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது தாய் சிறுமியை தேடிச் சென்றார்.
- சிகிச்சைக்காக சிறுமியை சித்திப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், செரியல் அடுத்த யெல்லதாசூர் நகரை சேர்ந்த 5 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் சிறுமி வழக்கம் போல் அங்கன்வாடி மையத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது வாலிபர் சிறுமியை வலுக்கட்டாயமாக அவரது வீட்டிற்குள் கடத்தி சென்றார். அங்கு வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அங்கன்வாடி மையத்திற்கு சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது தாய் சிறுமியை தேடிச் சென்றார்.
அப்போது சிறுமி அழுதபடி சாலையில் நடந்து வந்தார். மகளைக் கண்ட அவரது தாய் சிறுமியிடம் விசாரித்தார்.
சிறுமி நடந்த சம்பவங்கள் குறித்து தனது தாயிடம் கூறினார். மேலும் சிறுமியின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வழிவதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து சிகிச்சைக்காக சிறுமியை சித்திப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து சிறுமியின் தாய் சித்திபேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.






