என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • ஆந்திராவில் கிராமம் மற்றும் நகர்ப்புற மக்களுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் ஆர்.கே. செல்வமணி பணியாற்ற தொடங்கியுள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் நடிகை ரோஜா முழு நேர அரசியலில் ஈடுபட்டுள்ளார். அவர் தற்போது ஆளும் ஒய். எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார்.

    செம்பருத்தி படத்தில் அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்.கே. செல்வமணி ரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    மனைவியின் அரசியல் வாழ்க்கைக்கு அவர் உறுதுணையாக இருந்து வருகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் ஆந்திர அரசியலில் நேரடியாக தலையிடுவது இல்லை.

    இந்த நிலையில் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி ஆந்திர அரசியலில் நேரடியாக களமிறங்கியுள்ளார்.

    ஆந்திர மாநிலம் நகரியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ஆர்.கே. செல்வமணி கலந்து கொண்டார்.

    ஆந்திராவில் கிராமம் மற்றும் நகர்ப்புற மக்களுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். மக்களின் மகிழ்ச்சி இப்படியே தொடர வேண்டுமானால் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் முதல் மந்திரியாக வரவேண்டும் என்றார்.

    இதன் மூலம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் ஆர்.கே. செல்வமணி பணியாற்ற தொடங்கியுள்ளார். இது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பணத்தை ரஷ்யா, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளார்.
    • 2-வது முறையாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெறும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், காக்கிநாடா, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துவரம்புடி சந்திர சேகர ரெட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

    இவர் நேற்று தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி சேர்வதற்காக பல கட்டங்களாக தெலுங்கு தேசம் கட்சியினரிடம் ரூ.1400 கோடியை பெற்றுள்ளார்.

    தெலுங்கு தேசம் கட்சியினரிடம் பெற்ற பணத்தை ரஷ்யா, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளார்.

    இந்த விவரங்கள் அனைத்தும் மத்திய அரசிடம் உள்ளது. அதனால்தான் பவன் கல்யாண் தெலுங்கு தேசம் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்து தேர்தலில் சந்திக்க போவதாக மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.

    2-வது முறையாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெறும். அப்போது ஜெகன்மோகன் ரெட்டி முதல்-மந்திரியாக பதவி ஏற்பதும் தெலுங்கு தேசம் கட்சி காணாமல் போவதும் ஒரே சமயத்தில் நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் வைகுந்தம் க்யூகாம்ப்ளக்ஸில் தங்க வைக்காமல் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
    • நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் வைகுந்தம் க்யூகாம்ப்ளக்ஸில் தங்க வைக்காமல் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    திருப்பதி:

    புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை முன்னிட்டு நேற்று முன்தினம் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    சனிக்கிழமை காலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இன்று காலை 5 மணிக்கு பக்தர்களின் கூட்டம் கணிசமாக குறைந்து காணப்பட்டது.

    இதனால் ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரத்திலும் நேர ஒதுக்கீடு முறையில் இலவச தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 2 மணி நேரத்திலும் சாமி தரிசனம் செய்தனர்.

    நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் வைகுந்தம் க்யூகாம்ப்ளக்ஸில் தங்க வைக்காமல் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    இதனால் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்வதால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருப்பதியில் நேற்று 72,3 09 பேர் தரிசனம் செய்தனர். 26,296 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.4.50 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • வீட்டிற்கு வந்த முரளி கிருஷ்ணா தனது மகள்கள் இருவருக்கும் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடிக்க வைத்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடா, பாப்டிஸ்ட் பாம் பகுதியை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணா. இவரது மனைவி பவானி. தம்பதியின் 2 மகள்கள் பள்ளியில் படித்து வந்தனர்.

    மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட முரளி கிருஷ்ணா பவானியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து பவானியை வெட்ட முயன்றார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பவானி வீட்டில் இருந்து தெருவில் ஓடினார். மனைவியை விடாமல் துரத்தி சென்ற முரளி கிருஷ்ணா அவரை சரமாரியாக வெட்டினார்.

    பின்னர் வீட்டிற்கு வந்த முரளி கிருஷ்ணா தனது மகள்கள் இருவருக்கும் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடிக்க வைத்தார்.

    இதில் இளைய மகள் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதனைக் கண்ட முரளி கிருஷ்ணா வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அருகில் இருந்தவர்கள் பவானி மற்றும் மூத்த மகளை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு முரளி கிருஷ்ணா மற்றும் அவரது இளைய மகள் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 5 லட்சம் பேர் கட்டணமின்றி முன்பதிவு செய்யலாம்.
    • 29-ந் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு 28-ந் தேதி இரவு 7-05 மணிக்கு நடை சாத்தப்படும்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறியதாவது:-

    ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் மாதம் 23-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட உள்ளது.

    பக்தர்களின் கோரிக்கையை ஏற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி ரூ 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 2 லட்சமும், 5 லட்சம் இலவச தரிசன டிக்கெட்டுகள் என மொத்தம் 7 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் 5 லட்சம் பேர் கட்டணமின்றி முன்பதிவு செய்யலாம்.

    மலையில் உள்ள ஓட்டல்களில் பக்தர்களுக்கு அதிக விலையில் உணவு வழங்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வருகின்றன.

    பக்தர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்க அன்னமைய்யா மாளிகை மற்றும் நாராயணகிரி பகுதியில் ஓட்டல்கள் அமைக்க சுற்றுலாத் துறைக்கு கட்டிடங்கள் வாடகைக்கு விடப்படும்.

    வரும் 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழாவை பிரமாண்ட முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    கருட சேவை நடைபெறும் 19-ந் தேதி மலை பாதையில் பைக்குகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை திருமலையில் பக்தர்களுக்கு அறை வாடகை விடுவது நிறுத்தப்படும். வரும் 29-ந் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு 28-ந் தேதி இரவு 7-05 மணிக்கு நடை சாத்தப்படும்.

    மறுநாள் அதிகாலை 3 .15 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏழுமலையான் கோவிலில் 3-வது சனிக்கிழமையை யொட்டி நேற்று முதலே ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

    இன்று காலை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர். 30 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 72, 104 பேர் தரிசனம் செய்தனர். 25,044 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.80 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.

    கடந்த மாதம் ஏழுமலையான் கோவிலில் 1 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. ரூ 110 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

    • முழுநேர அரசியலில் ஈடுபடும் என்னைப் போன்ற பிடிவாதமான ஒருவன், என் போக்கில் ஏராளனமான கருத்துக்களைக் கூறலாம்.
    • என்.டி.ராமராவ் காலத்திலிருந்தே தெலுங்கு தேசம் கட்சிக்கு சொந்த அடித்தளம் இருந்தது.

    திருப்பதி:

    ஜனசேனா கட்சியின் (ஜேஎஸ்பி) தலைவர், நடிகர் பவன் கல்யாண் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சந்திரபாபு நாயுடுவை பொய் வழக்குகளில் சிக்க வைப்பதை எதிர்க்கும் மக்கள் தங்கள் கவலைகளை வெளிப்படையாகக் கூறமாட்டார்கள்.

    திரைப்படத் துறை வெவ்வேறு குழுக்களைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் அதன் சொந்த அரசியல் சார்புகளைக் கொண்டிருக்கின்றன, அவை எச்சரிக்கையாக உள்ளன.

    "முழுநேர அரசியலில் ஈடுபடும் என்னைப் போன்ற பிடிவாதமான ஒருவன், என் போக்கில் ஏராளனமான கருத்துக்களைக் கூறலாம். இருப்பினும், திரையுலகில் உள்ளவர்கள் எந்த ஒரு அரசியல் கட்சியையும் பகைத்துக் கொள்ளத் தயாராக இருக்க மாட்டார்கள், ஏனெனில் அவர்களுக்கு அன்றாடம் போராட வேண்டிய சொந்தப் பிரச்சனைகள் உள்ளன.

    மறைந்த ஆந்திர சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா மற்றும் பிரபல குணச்சித்திர நடிகர் எம். பிரபாகர் ரெட்டி ஆகியோர் காங்கிரசின் தீவிர ஆதரவாளர்களாக அறியப்பட்டவர்கள். என்.டி.ராமராவ் காலத்திலிருந்தே தெலுங்கு தேசம் கட்சிக்கு சொந்த அடித்தளம் இருந்தது.

    சந்திரபாபு நாயுடு செய்த நல்ல பணியை ஆதரித்ததற்காக, தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த் போன்ற ஒரு நட்சத்திரத்தை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கேலி செய்திருக்க கூடாது. அது துரதிர்ஷ்டவசமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறுமி தனியாக இருப்பதை கண்ட உடற்பயிற்சி கூட பயிற்சியாளர் சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து உடற்பயிற்சி கூடத்திற்கு அழைத்துச் சென்றார்.
    • போலீசார் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஐதராபாத் மேடிப்பள்ளியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் முதல் மாடியில் தனி நபர் ஒருவர் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார்.

    இந்த உடற்பயிற்சி கூடத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார்.

    அடுக்குமாடி குடியிருப்பில் 7 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். சக நண்பர்களுடன் விளையாடுவதற்காக சிறுமி வீட்டிலிருந்து வெளியே வந்தார்.

    சிறுமி தனியாக இருப்பதை கண்ட உடற்பயிற்சி கூட பயிற்சியாளர் சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து உடற்பயிற்சி கூடத்திற்கு அழைத்துச் சென்றார்.

    அங்கு 3 மணிநேரம் அடைத்து வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். வீட்டில் இருந்து விளையாட சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது தாய் மகளை தேடிச் சென்றார்.

    அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் விளையாடிக் கொண்டு இருந்த சிறுமிகளுடன் தனது மகள் இல்லாத இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் மகளை தேடி அலைந்து திரிந்தார்.

    அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சில பெண்கள் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று கதவை தட்டினர். கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. சிறிது நேரம் கழித்து உடற்பயிற்சி கூட பயிற்சியாளர் கதவை திறந்தார்.

    அவரிடம் சிறுமி குறித்து விசாரித்தபோது சிறுமி உள்ளே இருப்பதாக தெரிவித்தார். அப்போது பெண்கள் சிறுமியை ஏன் உடற்பயிற்சி கூடத்திற்குள் நீண்ட நேரம் வைத்திருந்தாய் என கேள்வி கேட்டபோது அவர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார்.

    இதனால் சந்தேகம் அடைந்த பெண்கள் பயிற்சியாளரை சரமாரியாக தாக்கி, போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடற்பயிற்சி கூட பயிற்சியாளரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • புதிய யுக ராவணன் தீயவர் தர்ம எதிர்ப்பு, ராம் எதிர்ப்பு, பாரதத்தை அழிக்க அவதரித்துள்ளார்.
    • ராகுல் காந்தியின் புகழ் அதிகரித்து வருவதை பா.ஜ.க.வால் ஜீரணிக்க முடியவில்லை.

    திருப்பதி:

    அரசியல் கட்சித் தலைவர்களை சமூக வலைதளங்களில் மாறி மாறி குற்றம் சாட்டுவதும் கேலி செய்வதும் தற்போது நடைமுறையில் உள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை மிகப்பெரிய பொய்யர் என பதிவிட்டு கருத்துக்களை தெரிவித்து இருந்தது.

    அதற்கு அடுத்த நாளே அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பா.ஜ.க. எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தியை 10 தலைகள் கொண்ட ராவணனாக சித்தரித்து படங்களை வெளியிட்டுள்ளனர்.

    அதில் புதிய யுக ராவணன் தீயவர். தர்ம எதிர்ப்பு, ராம் எதிர்ப்பு, பாரதத்தை அழிக்க அவதரித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.

    இதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதற்கு ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கிடுகு ருத்ர ராஜு, பாஜகவை கடுமையாக சாடியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராகுல் காந்தியின் புகழ் அதிகரித்து வருவதை பா.ஜ.க.வால் ஜீரணிக்க முடியவில்லை. சமூக வலைதளங்களில் இந்த போஸ்டர் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது அக்கட்சியின் அவநம்பிக்கையையே பிரதிபலிக்கிறது. இதனைக் கண்டித்து ஆந்திராவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    மாநிலம் முழுவதும் உள்ள கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். 

    • பா.ஜ.க.வுடன் சென்றால் ஓட்டு கிடைக்காது என பவன் பேசி உள்ளார்.
    • பா.ஜ.க.வுக்கு ஒரு குறிப்பிட்ட சிந்தனை உள்ளது. மாநிலத்தில் எங்களுக்கு பலம் உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திராவில் பிரபல நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் வாராஹி யாத்திரை நடத்தி வருகிறார்.

    யாத்திரையின்போது ஆளும் கட்சிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசி வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பவன் கல்யாண் பேசும்போது பிரதமர் மோடி ஜெகன்மோகனுக்கும் அவரது ஆட்சிக்கும் ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

    இதனால்தான் ஜெகன்மோகன் யாரையும் மதிக்காமல் சர்வாதிகாரப் போக்கில் ஆட்சி நடத்தி வருகிறார். ஆந்திராவில் பா.ஜ.க. தனித்து நின்றால் சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியாது என்றார்.

    பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பவன் கல்யாண் திடீரென இப்படி பேசியது அவர் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணியில் இருப்பதாக அவர் ஏற்கனவே கூறியுள்ளார். ஆனால் பா.ஜ.க. தனது கூட்டணியில் பவன் கல்யாண் இருப்பதாக கூறியது.

    பவன் கல்யாண் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தேஸ்வரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    கூட்டணி தொடர்பாக எந்த முடிவையும் மத்திய தலைமை எடுக்கும். கொள்கை முடிவுகளை இப்போதெல்லாம் எடுக்க முடியாது. பவன் கல்யாண் இன்னும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறார். பா.ஜ.க.வுடன் சென்றால் ஓட்டு கிடைக்காது என பவன் பேசி உள்ளார். ஜனசேனாவில் இருந்து எத்தனை பேர் சட்டசபைக்கு சென்று உள்ளனர்.

    பா.ஜ.க.வுக்கு ஒரு குறிப்பிட்ட சிந்தனை உள்ளது. மாநிலத்தில் எங்களுக்கு பலம் உள்ளது.

    தெலுங்கு தேசம் கட்சியுடன் பவன் கல்யாண் கட்சி கூட்டணி உறுதி செய்யப்படலாம். எங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை தலைமைதான் முடிவு செய்யும். பவன் கல்யாண் பேச்சுக்கள் குறித்து பா.ஜ.க. தலைமையிடம் புகார் செய்யப்படும் என்றார்.

    இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பவன் கல்யாண் அறிவித்துள்ளார். மேலும் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.

    • 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள பெற்றோா் நேரடி தரிசனத்தைப் பெற முடியும்.
    • ஏழுமலையான் கோவிலில் நேற்று 76, 526 பேர் சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தரிசனத்துக்கான நடை முறையை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

    1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள பெற்றோா் நேரடி தரிசனத்தைப் பெற முடியும். பெற்றோா் ஆதாா் அட்டை குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

    பெற்றோா் மற்றும் குழந்தைகளின் உடன் பிறந்தவா்கள் அனுமதிக்கப்படுவார்கள். அவா்களின் அனைவரின் ஆதாா் அட்டைகளையும் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். அவா்கள் உடன் வரும் உறவினா்களுக்கு அனுமதி இல்லை.

    தரிசனத்துக்கு தகுதியுள்ளவா்கள் நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை சுபதம் நுழைவுவாயிலில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா்.

    1 மாதத்தில் ஒரு முறை மட்டுமே அவா்கள் தரிசனம் பெற முடியும். தரிசனம் முடிக்க அவா்களுக்கு சுமாா் 2 மணி நேரம் தேவைப்படும். தெற்கு மாட வீதியில் திருமலை நம்பி சந்நிதியை அடுத்து சுபதம் நுழைவாயில் உள்ளது.

    அவா்களுக்கு தரிசன டிக்கெட் அல்லது முன்பதிவு தேவையில்லை. நேரில் வந்தாலே போதும்.

    இந்த தரிசனம் தினமும் நடைமுறையில் உள்ளது. சிறப்பு விழா நாட்கள், பக்தா்கள் கூட்டம் அதிகம் உள்ள நாட்களில் இந்த தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்யவும் வாய்ப்புள்ளது.

    எனவே, 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோா் இவற்றைக் கவனத்தில் கொண்டு தங்களின் பயணத்தைத் தொடர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஏழுமலையான் கோவிலில் நேற்று 76, 526 பேர் சாமி தரிசனம் செய்தனர். 32,238 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.54 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்துக்கு 16 மணி நேரமாகிறது.

    • மாநிலத்தில் அமைச்சர்கள் மட்டும் தான் பெண்களா? மற்றவர்கள் பெண்கள் இல்லையா?
    • அமைச்சர் ரோஜா படத்தின் டிரெய்லர் மட்டும் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா ஆபாச படத்தில் நடித்ததாக கூறி தெலுங்கு தேசம் கட்சியினர் சட்டசபையில் சிடிக்கள் காட்டினர். இதுகுறித்து அந்த கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தி சமீபத்தில் பேசினார்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் ரோஜா தன்னை நிர்வாண வீடியோவில் நடித்ததாக சித்ரவதை செய்கின்றனர் என கண்ணீர் விட்டு அழுதார். இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் மாநில மகளிர் அணி தலைவி வாங்கலபுடி அனிதா கூறியதாவது:-

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி மற்றும் அவர்களது மருமகள் பிராமணியை தரக்குறைவான வார்த்தைகளில் பேசிய ரோஜா மீது காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

    மாநிலத்தில் அமைச்சர்கள் மட்டும் தான் பெண்களா? மற்றவர்கள் பெண்கள் இல்லையா? கடந்த காலங்களில் சட்டசபையில் ரோஜா பேசிய வார்த்தைகளை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.

    பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தி பேசியதை மறைக்க ரோஜா கண்ணீர் விட்டு அழுதபடி பேசினார். ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ரோஜாவை பற்றி பேசியதால், 200 போலீசார் பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தியின் வீட்டிற்கு வந்து கைது செய்தனர்.

    ஆனால், தெலுங்குப் பெண்கள் மீது தொடர்ந்து தகாத கருத்துகளை தெரிவித்து வருபவர்கள் மீது புகார்கள் வந்தாலும், காவல்துறை நடவடிக்கை எடுப்பது இல்லை.

    ரோஜாவை யாரும் பெண்ணாக கருதுவதில்லை. ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் உள்ளவர்கள் அமைச்சர் ரோஜாவை வெறுக்கிறார்கள். அமைச்சர் ரோஜா பெண்களிடம் அனுதாபம் பெறுவதற்காக ஒரு நாள் அழுதார்.

    ஆனால் 4½ ஆண்டுகால ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து பெண்களும் கதறி அழுகிறார்கள். அமைச்சர் ரோஜா படத்தின் டிரெய்லர் மட்டும் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் ஒரிஜினல் படத்தைக் வெளியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விக்ரம் லேண்டர் தமது நீண்ட உறக்கத்தில் இருந்து எழும் என்ற நம்பிக்கை மங்கி வருகிறது.
    • இன்னும் 14 நாட்கள் காத்திருந்து அடுத்த சூரிய உதயம் வரை லேண்டரை செயல்படுத்த முயற்சிக்கப்படும்.

    சந்திரயான் - 3 விண்கலம் கொண்டு சென்ற விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக சிவசக்தி புள்ளியில் தரை இறங்கியது. அங்கு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. ஒரு குறிப்பிட்ட அளவிலான ஆய்வுகளை செய்துவந்த நிலையில், நிலவில் சூரியன் அஸ்தமித்தது. இதனால் 14 நாட்கள் லேண்டரும், ரோவரும் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. மீண்டும் சூரியன் உதிக்க ஆரம்பித்ததும் உறக்க நிலையில் இருந்து ரோவர் மற்றும் லேண்டரை மீண்டும் எழுப்பி ஆய்வில் ஈடுபட விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்றனர்.

    குறிப்பாக சூரியனின் கதிர்களால் லேண்டரில் உள்ள மின்கலங்கள் மின்னேற்றப்பட்டு ஏனைய ஆய்வுகளை தெளிவாக மேற்கொள்ள விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். ஆனால் லேண்டர் மற்றும் ரோவரில் இருந்து எந்தவிதமான சமிக்ஞைகளும் கிடைக்காததால் இஸ்ரோ தனது நம்பிக்கையை இழந்து வருகிறது. குறிப்பாக, சூரியன் உதயமாகி ஒரு சில வாரங்கள் கடந்த நிலையில் ரோவர் எந்தவித முன்னேற்றத்தையும் காட்டவில்லை.

    இந்த நிலையில் மீண்டும் கடந்த மாதம் 30-ந்தேதி முதல் நிலவில் சூரியன் மறைந்து மெல்ல மெல்ல அங்கே இருள் சூழ ஆரம்பித்துள்ளது. சூரியனின் வெப்பமயமாதல் இல்லாததால் அங்கு வெப்பநிலை வீழ்ச்சி அடைய தொடங்கி உள்ளது. இதனால் உறக்கத்தில் இருக்கும் லேண்டரும், ரோவரும் மீண்டும் எழுந்திருக்கும் என்ற விஞ்ஞானிகள் மத்தியில் இருந்த நம்பிக்கை மெல்ல மெல்ல அஸ்தமித்து வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் விக்ரம் லேண்டர் தமது நீண்ட உறக்கத்தில் இருந்து எழும் என்ற நம்பிக்கை மங்கி வருகிறது. இருந்தாலும் இன்னும் 14 நாட்கள் காத்திருந்து அடுத்த சூரிய உதயம் வரை லேண்டரை செயல்படுத்த முயற்சிக்கப்படும். அடுத்த 14 நாட்களும் ரோவர் கடும் குளிரை தாங்கி மீண்டும் எழ முயற்சிக்க வேண்டிய இக்கட்டில் உள்ளது. இந்த சூழ்நிலை நம்பிக்கையை இழக்கும் விளிம்பில் தங்களை நிறுத்தியுள்ளது. இந்த முயற்சியால் வெற்றிகரமான பணிகளுக்காக காத்திருக்கிறோம். தவறினால் இந்தியாவின் நிலவு தூதராக எப்போதும் இந்த லேண்டர் அங்கேயே இருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    ×