என் மலர்
இந்தியா

ராகுல் காந்தியை ராவணனாக சித்தரித்து பா.ஜ.க. வெளியிட்டுள்ள படம்.
ராகுல் காந்தி ராவணனாக சித்தரிப்பு: பா.ஜ.க - காங்கிரஸ் மோதல்
- புதிய யுக ராவணன் தீயவர் தர்ம எதிர்ப்பு, ராம் எதிர்ப்பு, பாரதத்தை அழிக்க அவதரித்துள்ளார்.
- ராகுல் காந்தியின் புகழ் அதிகரித்து வருவதை பா.ஜ.க.வால் ஜீரணிக்க முடியவில்லை.
திருப்பதி:
அரசியல் கட்சித் தலைவர்களை சமூக வலைதளங்களில் மாறி மாறி குற்றம் சாட்டுவதும் கேலி செய்வதும் தற்போது நடைமுறையில் உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை மிகப்பெரிய பொய்யர் என பதிவிட்டு கருத்துக்களை தெரிவித்து இருந்தது.
அதற்கு அடுத்த நாளே அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பா.ஜ.க. எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தியை 10 தலைகள் கொண்ட ராவணனாக சித்தரித்து படங்களை வெளியிட்டுள்ளனர்.
அதில் புதிய யுக ராவணன் தீயவர். தர்ம எதிர்ப்பு, ராம் எதிர்ப்பு, பாரதத்தை அழிக்க அவதரித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கு ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கிடுகு ருத்ர ராஜு, பாஜகவை கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராகுல் காந்தியின் புகழ் அதிகரித்து வருவதை பா.ஜ.க.வால் ஜீரணிக்க முடியவில்லை. சமூக வலைதளங்களில் இந்த போஸ்டர் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது அக்கட்சியின் அவநம்பிக்கையையே பிரதிபலிக்கிறது. இதனைக் கண்டித்து ஆந்திராவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
மாநிலம் முழுவதும் உள்ள கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.






