என் மலர்
ஆந்திர பிரதேசம்
- கதவை திறக்க கோரி நீண்ட நேரம் சத்தமிட்டும் கதவு திறக்கவில்லை.
- குழந்தை கழுத்தை இறுக்கி கொலை செய்யபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் நந்தியாலா காந்தி நகரை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி ஷன்னூபி. இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த ஆண்டு ஷன்னூபிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 19-வது நாளில் இறந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி மீண்டும் ஷன்னூபிக்கு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் காலை மகேஷ் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் மகேஷின் தாய் மற்றும் தங்கைகள் இருந்தனர்.
அப்போது ஷன்னூபியின் அறையில் இருந்து குழந்தை அலறல் சத்தம் கேட்டது. இதனால் பதறிப்போன மகேஷின் தாய் மற்றும் தங்கைகள் ஷன்னூபியின் அறைக்கு சென்று பார்த்தபோது அறை கதவு உள் பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது.
கதவை திறக்க கோரி நீண்ட நேரம் சத்தமிட்டும் கதவு திறக்கவில்லை. இதனையடுத்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது குழந்தை கழுத்தில் இருந்து ரத்தம் வழிந்தபடி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தான்.
குழந்தையை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும் குழந்தை கழுத்தை இறுக்கி கொலை செய்யபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மகேஷின் தாய் போலீசில் புகார் செய்தார் போலீசார் ஷன்னூயை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடந்த ஆண்டு பிறந்த பெண் குழந்தை மற்றும் இந்த குழந்தையும் ஷன்னூபி கழுத்தை நெரித்து கொலை செய்ததும். மேலும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை முடிந்த பிறகு விசாரணை நடத்தி கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.
- ஊழியர்களின் சம்பளம் மற்றும் திருப்பதியின் வளர்ச்சிக்கு பாஜக எதிரானது அல்ல.
- மக்கள் மற்றும் வணிகர்கள் வியாபாரிகள் வரி செலுத்தி வந்தனர். அந்தப் பணம் எங்கே போனது?
திருப்பதி:
திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது பட்ஜெட்டில் 1சதவீத நிதியை திருப்பதி மாநகர வளர்ச்சிக்காக செலவிட முடிவு செய்துள்ளது.
இதற்கு பா. ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சதினேனி யாமினி சர்மா கூறியதாவது:-
கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கோவிலுக்கு நன்கொடையாக அளிக்கும் இந்துக்களின் உணர்வுகளை திருப்பதி தேவஸ்தானம் புண்படுத்துகிறது.
திருப்பதி கோவிலின் புனிதத்தைப் பாதுகாத்து ஆன்மீக மையமாக வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக, கோவிலை பணம் புரளும் பொருளாக மாற்ற கூடாது. பக்தர்கள் மற்றும் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தாமல் ஒரு நாளும் கழிவதில்லை.
தேவஸ்தான விதிகளின்படி 1 சதவீதம் செலவழிக்க வாய்ப்பு இல்லை.
இப்போது 1 சதவீதம் என்கிறார்கள், நாளை அது 10 அல்லது 50 சதவீதமாக அதிகரிக்கும். திருமலையில் தூப தீப நைவேத்யத்திற்கான செலவுகளைச் சமாளிக்க தேவஸ்தானகருவூலம் வறண்டுவிடும்.
அதன் வசம் எந்த நிதியும் இருக்காது என்று பக்தர்கள் அஞ்சுகின்றனர். இதே போக்கு மற்ற கோவில்களிலும் தொடர்ந்தால், பக்தர்கள் கொடுக்கும் நன்கொடைக்கு யார் பொறுப்பு?
ஊழியர்களின் சம்பளம் மற்றும் திருப்பதியின் வளர்ச்சிக்கு பாஜக எதிரானது அல்ல.
ஆனால், கோவில் நிதியை ஏன் பயன்படுத்த வேண்டும்? மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் நிதியை விடுவித்து வருகிறது.
மேலும், மக்கள் மற்றும் வணிகர்கள் வியாபாரிகள் வரி செலுத்தி வந்தனர். அந்தப் பணம் எங்கே போனது? பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு கோவில் நிதியை ஊழியர்களுக்காக பயன்படுத்தியதாக அரசு வாதிடுகிறது.
உண்மையில், திருப்பதியில் ஆயிரக்கணக்கான கோடி வணிகம் மற்றும் அது வசூலிக்கும் வரிகளை கருத்தில் கொள்ள வேண்டு மானால், அரசாங்கம் தான் பணம் கோவிலுக்கு செலுத்த வேண்டும்.
திருப்பதி தேவஸ்தான தலைவர் மற்றும் அறக்கட்டளை வாரிய நியமனங்கள் அரசியல் மறுவாழ்வு மையங்களாக மாறிவிட்டன. மேலும் அவர்களின் முடிவுகள் ஏற்கத்தக்கதாக இல்லை.
பா.ஜனதா இந்த முடிவுகளை எதிர்க்கும், அதற்கு எதிராக போராடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மகள் காணாமல் போனதால் பதறிப்போன பெற்றோர்கள் மச்சிலி பட்டணம் போலீசில் புகார் அளித்தனர்.
- பனிந்திரா மற்றும் இளம்பெண் இருவரும் அப்பிக்கொண்டா கடற்கரைக்கு சென்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அப்பிக்கொண்டா பகுதியைச் சேர்ந்தவர் பனிந்திரா. இவர் மச்சிலி பட்டணம் பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார்.
இவர்களது காதலுக்கும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 29-ந்தேதி பனிந்திரா தனது காதலியை ரகசிய திருமணம் செய்து கொள்ளலாம் என அழைத்தார். அதன்படி இளம்பெண் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் யாருக்கும் தெரியாமல் வெளியேறினார்.
மகள் காணாமல் போனதால் பதறிப்போன பெற்றோர்கள் மச்சிலி பட்டணம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பண்ணை தேடி வந்தனர். பனிந்திரா தனது காதலியை அழைத்துக்கொண்டு கோபால பட்டினத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் பனிந்திரா மற்றும் இளம்பெண் இருவரும் அப்பிக்கொண்டா கடற்கரைக்கு சென்றனர். அந்த கடற்கரையில் உயரமான இடத்தில் அமர்ந்திருந்தனர். அந்த இடத்திற்கு கீழே பெரிய அளவிலான பாறைகள் உள்ளன. அதில் ராட்சத அலைகள் வந்து சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது.
அதனை இருவரும் ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது இளம்பெண் திடீரென தவறி கீழே விழுந்தார்.
உயரமான இடத்தில் இருந்து விழுந்த அவர் பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டார். அலைகள் இருந்ததால் அவர் எங்கே இருக்கிறார் என்பது பனிந்திராவுக்கு தெரியவில்லை. மேலும் அப்போது இருட்ட தொடங்கியது.
இதனால் பயந்து போன பனிந்திரா தனது காதலியை காப்பாற்ற எந்த விதமான முயற்சியும் எடுக்காமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
பாறை இடுக்கில் சிக்கிய இளம்பெண் கத்தி கூச்சலிட்டு கொண்டிருந்தார். இரவு நேரமானதால் கடற்கரையில் ஆட்கள் நடமாட்டம் இல்லை.
பாறை இடுக்குகளில் சிக்கி விடிய விடிய தவித்தார். அதிகாலை நேரத்தில் கடலில் மீன் பிடிக்க மீனவர்கள் புறப்பட்டு வந்தனர். அவர்கள் இளம்பெண்ணின் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது பாறை இடுக்கில் சிக்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணை மீட்டனர். அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
இதுகுறித்து மீனவர்கள் அந்த பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளம்பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பெற்றோரை போலீசார் எச்சரித்தனர். கடலை பார்த்துக் கொண்டிருந்த போதுதான் தவறி விழுந்து விட்டேன்.
இந்த சம்பவத்திற்கும் காதலன் பனிந்திராவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இளம்பெண் உறுதியாக கூறினார்.
காதலியை தவிக்க விட்டு காப்பாற்றாமல் தப்பி ஓடிய காதலன் பனிந்திராவை செல்போனில் தொடர்பு கொள்ள போலீசார் முயன்றனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. போலீசார் அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- திருப்பதி தேவஸ்தான விடுதி அறைகளை வாடகைக்கு எடுக்கும் பக்தர்களுக்கு வழக்கமாக 2 சாவிகள் வழங்குவது வழக்கம்.
- கோவா பக்தர்களுக்கு ஒரு சாவி மட்டுமே விடுதி ஊழியர்கள் வழங்கி உள்ளனர்.
திருப்பதி:
கோவாவை சேர்ந்த 15 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக திருப்பதிக்கு வந்தனர்.
அவர்கள் கருடாத்ரி நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான தங்கும் விடுதியில் 2 அறைகளை எடுத்து தங்கினர். நேற்று முன்தினம் காலை தரிசனத்திற்கு சென்றனர்.
அந்த நேரத்தில் மர்மநபர்கள் அறையின் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம், 5 செல்போன்களை திருடி சென்று விட்டனர். தரிசனம் முடிந்து வந்த பக்தர்கள் அறையில் திருட்டு நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அறைக்குள் சென்று பார்த்த போது அவர்களது உடமைகள் அனைத்தும் சிதறி கிடந்தது.
திருப்பதி தேவஸ்தான விடுதி அறைகளை வாடகைக்கு எடுக்கும் பக்தர்களுக்கு வழக்கமாக 2 சாவிகள் வழங்குவது வழக்கம்.
ஆனால் கோவா பக்தர்களுக்கு ஒரு சாவி மட்டுமே விடுதி ஊழியர்கள் வழங்கி உள்ளனர். இதனால் விடுதி ஊழியர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்து உள்ளது.
இது குறித்து பக்தர்கள் திருமலை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விண்வெளிக்கு அனுப்புவதற்காக இந்திய விமானப் படையை சேர்ந்த விமானிகள் தேர்வு செய்யப்பட்டு ரஷியாவில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர்.
- இஸ்ரோ நிறுவனம் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் முன்பு பல சோதனைகளை நடத்த உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. இந்த திட்டத்தின்படி அடுத்த ஆண்டு மத்தியில் ஆளில்லா சோதனை விண்கலம் விண்வெளிக்கு செலுத்தப்பட உள்ளது. அதில் அனுப்புவதற்காக வியோமா மித்ரா என்ற பெண் ரோபோ ஒன்றை இஸ்ரோ தயார் செய்துள்ளது. அந்த ரோபோ விண்வெளியில் சோதனை செய்து இஸ்ரோவுக்கு தகவல்களை அனுப்பும்.
அதன் பிறகு அடுத்த ஆண்டு இறுதியில் 3 இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்ட்டு உள்ளது. ககன்யான் திட்டத்துக்கு இஸ்ரோவின் அதிநவீன எல்விஎம்-3 ராக்கெட்டை பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. விண்வெளி வீரர்கள் தங்குவதற்கான விண்கலம், விண்வெளி உடை, விண்வெளி பயணத்துக்கு பிறகு பூமி திரும்பும் வீரர்கள் பத்திரமாக தரையிறங்குவதற்கான பாராசூட் ஆகியவை தயாரிக்கப்பட்டுள்ளன.
விண்வெளிக்கு அனுப்புவதற்காக இந்திய விமானப் படையை சேர்ந்த விமானிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் ரஷியாவில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர்.
இஸ்ரோ நிறுவனம் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் முன்பு பல சோதனைகளை நடத்த உள்ளது. இந்த நிலையில் ககன்யான் திட்டத்தின் முதல் சோதனையை இஸ்ரோ நிறுவனம் வருகிற 21-ந்தேதி நடத்த உள்ளது. இந்த சோதனையானது ராக்கெட்டை விண்வெளிக்கு செலுத்தி, மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து வங்காள விரிகுடா கடலை அடைந்த பிறகு அதை பத்திரமாக மீட்டெடுப்பதாகும். இதை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்தார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நடத்தப்படும் இந்த சோதனையானது இந்திய விண்வெளி வீரர்கள் தங்கி இருக்கும் விண்கலத்தின் பகுதியை சோதிக்கும் நோக்கம் கொண்டதாகும்.
விண்கலம் விண்வெளிக்கு செல்லும்போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதில் இருந்து தப்பித்து அவர்களை கடற்படை வீரர்கள் காப்பாற்றும் முறை பற்றிய ஒத்திகையாகும்.
இதுகுறித்து மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறுகையில், 'இந்த சோதனையின் வெற்றியானது முதல் ஆளில்லா ககன்யான் திட்டத்துக்கும், அதன்பிறகு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கும் அடித்தளம் அமைக்கும்' என்றார்.
- சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு எப்பொழுது வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம் என கோவில் அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.
- திருப்பதியில் நேற்று 71,361 பேர் தரிசனம் செய்தனர். 24,579 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
திருப்பதி:
திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி கூறியதாவது :-
ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரமோற்சவம் வருகிற 15-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி நிறைவு பெறுகிறது.
இதில் முக்கிய வாகன சேவையான கருட சேவை 19-ந்தேதியும், 21-ந்தேதி புஷ்பக விமானம், 22-ந்தேதி தங்க ரதம், 23-ந்தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. கருட சேவை வழக்கமாக இரவு 7 மணிக்கு தொடங்கப்படும்.
ஆனால் அதனை 1 மணி நேரத்திற்கு முன்னதாக தொடங்கினால் காலை முதல் நான்கு மாட வீதியில் காத்திருக்கும் பக்தர்களை விரைவில் சாமி தரிசனம் செய்து வைக்க முடியும்.
இது தொடர்பாக கோவில் அர்ச்சகர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
அவர்களும் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு எப்பொழுது வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.
இதுகுறித்து மீண்டும் ஒரு முறை அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அர்ச்சகர்களுடன் ஆலோசித்து கருட சேவை மட்டும் மாலை 6.15-க்கு அல்லது 6.30 மணிக்கே தொடங்குவது குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதியில் நேற்று 71,361 பேர் தரிசனம் செய்தனர். 24,579 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.69 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
இன்று காலை பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. நேர ஒதுக்கீடு இலவச தரிசன பக்தர்கள் சுமார் 6 மணிநேரமும் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- நரசிம்ம ரெட்டி 1984-ம் ஆண்டு ரூ.650 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
- தற்போது ரூ.40,000 சம்பளமாக வாங்கும் நரசிம்ம ரெட்டிக்கு எங்கிருந்து இவ்வளவு சொத்துக்கள் கிடைத்தது என விசாரணை நடத்தினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர் நரசிம்ம ரெட்டி (வயது 55). நெல்லூரில் உள்ள துணை வட்டாரப் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வருகிறார்.
நரசிம்ம ரெட்டி வருமானத்திற்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ரமாதேவி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் நரசிம்ம ரெட்டி வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
சோதனையின் போது அவரது வீட்டில் இருந்து 2 கிலோ தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் ரூ 1. 1 கோடி மதிப்பிலான இன்சூரன்ஸ் முதலீடுகள், ரூ. 10 லட்சம் மதிப்பிலான பாலிசி ஆவணங்கள், நெல்லூரில் வாங்கப்பட்டுள்ள 18 வீட்டு மனை பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன.
அவரது மேஜையில் இருந்து ரூ.7.5 லட்சம் மதிப்பிலான ரூ.2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டன.
மொத்தம் ரூ.9 கோடி மதிப்பிலான பொருட்கள், பணம் கைபற்றப்பட்டுள்ளன.
கூட்டுறவு வங்கிக் கிளைகளில் உள்ள அவரது லாக்கரை திறந்து சோதனை செய்தால் மேலும் முக்கிய ஆவணங்கள் சிக்கும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நரசிம்ம ரெட்டி 1984-ம் ஆண்டு ரூ.650 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். தற்போது ரூ.40,000 சம்பளமாக வாங்கும் நரசிம்ம ரெட்டிக்கு எங்கிருந்து இவ்வளவு சொத்துக்கள் கிடைத்தது என விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் தனது அலுவலகம் மற்றும் சோதனை சாவடிகளில் லஞ்சமாக பெற்ற பணத்தை அதிக வட்டிக்கு கொடுத்து சொத்து சேர்த்ததாக தெரிவித்துள்ளார்.
- ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லியில் உள்ள லோகேஷுக்கு சம்மன் அனுப்பினர்.
- லோகேஷ் சிஐடி அலுவலகத்தில் ஆஜரானதால் அப்பகுதியில் ஏராளமான தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர்.
திருப்பதி:
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் அமராவதியில் சுற்றுச்சாலை அமைக்கப்பட்டது. இதில் ஊழல் நடந்ததாக சிஐடி அதிகாரிகள் சந்திரபாபு நாயுடு அவரது மகன் லோகேஷ் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதில் லோகேஷ் 14-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். இதுகுறித்து சிஐடி அதிகாரிகள் விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லியில் உள்ள லோகேஷுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் லோகேஷ் விசாரணைக்கு ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்தார். இதுகுறித்து சிஐடி அதிகாரிகள் ஆந்திரா ஐகோர்ட்டில் லோகேஷ் ஆஜராக உத்தரவு வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரணை செய்த ஐகோர்ட்டு நீதிபதி இன்று சிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென உத்தரவு பிறப்பித்தனர்.
விசாரணையின்போது லோகேஷ்டன் அவரது வக்கீல்கள் இருக்கலாம் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி லோகேஷ் இன்று காலை சிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் விசாரணை தொடங்கியது. மாலை 5 மணி வரை சிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
லோகேஷ் சிஐடி அலுவலகத்தில் ஆஜரானதால் அப்பகுதியில் ஏராளமான தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர்.
இதனால் சிஐடி அலுவலகத்தை சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- டெல்லியில் இருந்து வக்கீல்கள் வந்தாலும் சந்திரபாபு நாயுடுவை வெளியே கொண்டு வர முடியாது.
- பெண்களை இழிவு படுத்தி பேசுவது வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் ஆசிய ஆடவர் டென்னிஸ் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சகோத் மைனேனிக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது.
விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ரோஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சந்திரபாபு நாயுடுவை சிஐடி கைது செய்த பிறகு யாரை கொல்லலாம் என தெலுங்கு தேசம் கட்சியினர் யோசித்து வருகின்றனர்.
டெல்லியில் இருந்து வக்கீல்கள் வந்தாலும் சந்திரபாபு நாயுடுவை வெளியே கொண்டு வர முடியாது.
பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி தனது தொகுதியிலும் வீட்டிலும் பெண்களிடம் என்ன மாதிரி நடந்து கொள்வார் என்பது அவரது பேச்சில் தெரிய வந்துள்ளது.
பெண்களை இழிவு படுத்தி பேசுவது வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும். என்னை இழிவாக பேசி ஒரு வார காலமாகியும் அவர் மன்னிப்பு கேட்காததால் அவர் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்க முடிவு செய்து உள்ளேன். சகோ மைனேனி சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் பல பதக்கங்களை வென்றாலும் அவரை ஊக்கவிக்கவில்லை. உதவி தொகையும் வழங்காமல் பாகுபாடு காட்டினார்.
ஆனால் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஜாதி மதம் அரசியல் கட்சி வேறுபாடு இன்றி ஊக்குவித்து வருகிறார். அரசு வேலையுடன் கூடிய பயிற்சி மையம் விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சோதனை அடிப்படையில் தங்க சுரங்கங்கள் மூலம் மாதத்திற்கு ஒரு கிலோ தங்கம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
- தங்க சுரங்கங்கள் முழுமையான உற்பத்தியை தொடங்கும் போது ஆண்டுக்கு 750 கிலோ எடையுள்ள தங்கத்தை உற்பத்தி செய்யும்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டம், ஜோனகிரி, எர்ரகுடி, பகதி ராய் உள்ளிட்ட பகுதிகளில் டெக்கான் கோல்ட் மைன்ஸ் என்ற பெயரில் ஜியோ மைசூர் சர்வீஸ் இந்தியா லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் தங்க சுரங்கங்களை அமைத்து வருகிறது.
இந்த தங்க சுரங்கங்கள் இந்தியாவின் முதல் பெரிய தனியார் தங்க சுரங்கம் ஆகும். அடுத்த ஆண்டு அக்டோபர், நவம்பருக்குள் தங்க சுரங்கங்கள் உற்பத்தியை தொடங்கும் என நிர்வாக இயக்குனர் ஹனுமா பிரசாத் தெரிவித்தார்.
சோதனை அடிப்படையில் இந்த தங்க சுரங்கங்கள் மூலம் மாதத்திற்கு ஒரு கிலோ தங்கம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தங்க சுரங்கங்கள் முழுமையான உற்பத்தியை தொடங்கும் போது ஆண்டுக்கு 750 கிலோ எடையுள்ள தங்கத்தை உற்பத்தி செய்யும்.
தங்க சுரங்கங்கள் அமைக்கும் பணி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்காக அந்நிறுவனம் ரூ.200 கோடியை முதலீடு செய்து உள்ளன என தெரிவித்தனர்.
- விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
- சந்திரபாபு நாயுடு தவிர குற்றம் சாட்டப்பட்ட மற்ற அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி:
ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.
சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் கேட்டு விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் பலமுறை மனு தாக்கல் செய்யப்பட்டன.
சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு மீது ஆந்திராவில் பைபர் நெட், அங்கல்லு கலவரம், இன்னர் ரிங் ரோடு ஊழல் உள்ளிட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த 3 வழக்குகளிலும் ஜாமீன் வழங்க கோரி சந்திரபாபு நாயுடு ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு ஆந்திரா ஐகோர்ட்டு மற்றும் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இவரது மனுக்கள் மீது இன்று ஒரே நாளில் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இன்று காலை விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது சந்திரபாபு நாயுடு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
சந்திரபாபு நாயுடு தவிர குற்றம் சாட்டப்பட்ட மற்ற அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரா ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனுக்கள் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விசாரணைக்கு வர உள்ளது.
- வாலிபர் ஒருவர் தனது பாக்கெட்டில் இருந்த மின் டெட்டனைட்டர் குண்டை எம்.எல்.ஏ.வின் காரின் மீது வீசினார்.
- எம்.எல்.ஏ.வின் கார் மீது எதற்காக குண்டு வீசினார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், பெனுகொண்டா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சங்கர நாராயணன்.
இவர் நேற்று மாலை கட்டம்தண்டா பஞ்சாயத்து குட்பட்ட கல்வி தண்டா பெனுகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் அரசு திட்டங்கள் குறித்து பொது கூட்டங்களில் பேசினார்.
பின்னர் தனது காரில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவர் தனது பாக்கெட்டில் இருந்த மின் டெட்டனைட்டர் குண்டை எம்.எல்.ஏ.வின் காரின் மீது வீசினார். டெட்டனெட்டர் வெடிக்காததால் அதிர்ஷ்டவசமாக எம்.எல்.ஏ உயிர் தப்பினார்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு காரின் மீது குண்டு வீசிய வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
அங்கு வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் குடிப்பள்ளியை சேர்ந்த கணேஷ் என்பதும் பாலசமுத்திரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவர் மற்றும் டெட்டனேட்டர் ஆபரேட்டராக செயல்பட்டது தெரியவந்தது.
கணேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். எம்.எல்.ஏ.வின் கார் மீது எதற்காக குண்டு வீசினார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.






