என் மலர்
சமையல்
வெள்ளரிக்காய் பச்சடி ஒரு மெல்லிய புளிப்பு சுவை கொண்ட அருமையான உணவு வகையாகும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் - 2
துருவிய தேங்காய் - 1 கப்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 6
பெருங்காயம் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெள்ளரிக்காயை துருவிக்கொள்ளவும்.
துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பேன் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிதளவு கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
துருவிய வெள்ளரிக்காய் மற்றும் அரைத்த விழுது ஆகியவற்றை சேர்த்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
இதில் ஏற்கனவே தாளித்து வைத்திருக்கும் பொருட்களை சேர்த்து கலக்கவும்.
சப்பாத்தி அல்லது சாதத்துடன் இந்த கலவையை பரிமாறலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெஜ் தெகிரி அல்லது காய்கறிகள் சாதம் வட மாநிலங்களில் மிகவும் புகழ்பெற்ற ரெசிபியாகும். காய்கறிகள் பிடிக்காத குழந்தைகளுக்கு இந்த மாதிரி செய்து சாப்பிட வைக்கலாம்.
தேவையான பொருட்கள்
கேரட் - 2
உருளைக்கிழங்கு - 2
காலிபிளவர் - பாதி பூ
பட்டாணி - 1 கப்
பீன்ஸ் - 100 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
தயிர் - 1/2 கப்
சீரகம் - 1 தேக்கரண்டி
கருவாப்பட்டை குச்சி - 1
கருப்பு ஏலக்காய் - 1
மிளகு - 5
இலவங்கப்பட்ட இலை - 2
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
மசாலா தூள் - 1 தேக்கரண்டி கரம்
மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி பொடி - 2 தேக்கரண்டி
நெய் - 1/2 கப்
செய்முறை
வெங்காயம், தக்காளி, பீன்ஸ், காலிபிளவர், உருளைக்கிழங்கு, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி உருகியதும் பட்டை, பிரியாணி இலை, கருப்பு மிளகு, ஏலக்காய் எல்லாம் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
அடுத்து அதில் சீரகம், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
அடுத்து தக்காளி, பச்சை மிளகாயை போட்டு வதக்கி கொள்ளுங்கள்.
அடுத்து தயிர் சேர்த்த பிறகு எல்லா காய்கறிகளையும் போடுங்கள். காய்கறிகள் நன்றாக வதங்கிய பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் என்று எல்லா மசாலாக்களையும் போட்டு கிளறிக் கொள்ளுங்கள்.
பாஸ்மதி அரிசியை கழுவி சுத்தம் செய்து அதையும் காய்கறிகளுடன் சேர்த்து கிளறுங்கள். ரெம்ப கிளற வேண்டாம். ஏனென்றால் அரிசி உடைய வாய்ப்புள்ளது. இப்பொழுது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள்.
தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து கொள்ளுங்கள். மிதமான தீயில் வைத்து 10 நிமிடங்கள் சமைத்து இறக்கவும்.
பிறகு பாத்திரத்தில் இருந்து சுடச்சுட காய்கறி சாதத்தை எடுத்து தயிர் அல்லது ரைதா வச்சு பரிமாறுங்கள்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சர்க்கரை நோய்க்கு உடனடியாக தீர்வு காண வேப்பம் டீயை குடித்து வாருங்கள். சரி வேப்பிலையை கொண்டு எப்படி டீ போடுவது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருள்கள்:
வேப்ப இலை தூள்-1 ஸ்பூன்
தண்ணீர்- 1 1/2 கப்
இலவங்கப்பட்டை தூள்-1/2 ஸ்பூன்
டீ தூள்-1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் வெப்பங்கொழுந்தை மிக்சியில் தூளாக அரைத்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வேப்பிலை தூள் மற்றும் இலவங்கப்பட்டை தூள் ஆகியவை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
தேனீராக குடிக்க விரும்புபவர்கள் டீ தூளை தண்ணீரில் சேர்த்துக் கொதித்து வைக்கவும்.
10 நிமிடம் கழித்த பிறகு அடுப்பை அனைத்து விட வேண்டும்.
இந்த டீயை தினமும் குடித்து வந்தால் சர்க்கரை நோயிக்கு உடனடி தீர்வு காணலாம்...
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பீட்ரூட் உடம்பில் உள்ள இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். ஆனால் சிலருக்கு பீட்ரூட் சாப்பிட பிடிக்காது. இதனால் அனைவரும் கவரும் படி பீட்ரூட்டில் சுவையான, இனிப்பான பாயாசத்தை செய்து கொடுங்கள்.
தேவையான பொருள்கள்:
பீட்ரூட்- 4
பால்- 1 கப்
நெய்- 1 கப்
சர்க்கரை- 3/4 கப்
ஏலக்காய் பொடி- தேவையான அளவு
முந்திரி- தேவையான அளவு
செய்முறை:
பீட்ரூட்டை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.
மிக்சியில் நறுக்கிய பீட்ரூட்டை போட்டு வழுவழுப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் நெய் ஊற்றி காய்ந்தவுடன் அதில் நறுக்கிய முந்திரியை பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும்.
பிறகு அதில் பீட்ரூட்டை சேர்த்து கிளறிவிட வேண்டும்.
சிறிது நேரம் கழித்து கொஞ்சம் நெய் விட்டு கிளறவும்.
5 நிமிடத்திற்கு பிறகு அதில் பால் சேர்த்து 15 நிமிடம் சமைக்கவும்.
அடுத்து அதில் ¾ கப் சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
ஏழு நிமிடத்திற்கு பிறகு சிறிது நெய் சேர்த்து இறக்கினால் சூடான பீட்ரூட் பாயாசம் தயார்.
கடைசியில் பீட்ரூட் பாயாசத்தை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதன் மேல் முந்திரியை அலங்கரித்து சூடாக பறிமாறுங்கள்..
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தயிர் பச்சடியில் வெங்காய பச்சடி,வெள்ளரிக்காய் பச்சடி என பல வகை சமைக்கலாம். உடலுக்கு குளிர்ச்சி ஊட்டும் விதமாக அன்னாசிப்பழத் தயிர் பச்சடி எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்..
தேவையான பொருள்கள்:
அன்னாசிப் பழம் - 1 கப்
தயிர் - 3/4 கப்
பச்சை மிளகாய் - 2
தேங்காய் துருவல் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
கடுகு- 2 ஸ்பூன்
எண்ணெய் -2 ஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்.
செய்முறை:
அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சூடானதும் கடுகு,வெந்தயம் சேர்த்து தாளித்த பிறகு நறுக்கிய அன்னாசி பழம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், சீரகம், தேங்காய்த்துருவல் தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து தேவைபட்டால் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
கடைசியில் தயிர் சேர்த்து இறக்கி விட வேண்டும்.
இதனை பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டாலே சுவை அள்ளும்..
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பொங்கலில் பல்வேறு வகைகள் உள்ளன. அந்த வகையில் தைப்பொங்கல் ஸ்பெஷலாக கரும்பு சாறு பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கரும்பு சாறு - 1 லிட்டர்
அரிசி - அரை கப்
நெய் - விருப்பத்திற்கு ஏற்ப
சுக்கு - சிறிதளவு
முந்திரி - 1 கைப்பிடியளவு
திராட்சை - 1 கைப்பிடியளவு
பால் - அரை கப்
செய்முறை
சுக்கை நன்றாக பொடித்து கொள்ளவும்.
கடாயில் நெய்யை விட்டு நெய் சூடானதும் முந்திரி சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து தனியாக வைக்கவும்.
அதே கடாயில் தயாராக வைத்துள்ள கரும்பு சாறை ஊற்றவும். பிறகு கரும்பு சாறை கொதிக்க விடவும். கரும்பு சாறு கொதிக்கும் போது அதனுடன் பாலை சேர்க்கவும்.
இப்போது கொதித்துக் கொண்டிருக்கும் பால் கரும்பு சாறு கலவையில் தயாராக வைத்துள்ள அரிசியை சேர்க்கவும். அரிசி மென்மையாக மாறும் வரை வேக விடவும். நன்றாக வெந்ததும் அதில் வறுத்த முந்திரி, திராட்சை, சுக்குத்தூள சேர்த்து கிளறி இறக்கவும்.
இப்போது இனிப்பான கரும்பு சாறு பாயாசம் தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காலையில் எளிய முறையில் சத்தான சுவையான உணவு செய்ய நினைத்தால் அவல் பொங்கல் செய்யலாம். இன்று அதன் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அவல் – 1 1/2 டம்ளர்,
பாசிப்பருப்பு – 1/2 டம்ளர்,
உப்பு – தேவையான அளவு,
பெருங்காயம் – சிறிதளவு,
கொத்தமல்லி – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள் :
எண்ணெய் – 1 தேக்கரண்டி,
நெய் – 2 தேக்கரண்டி,
மிளகு – 1 தேக்கரண்டி,
சீரகம் – 1 தேக்கரண்டி,
பச்சைமிளகாய் – 2,
இஞ்சி – 1 துண்டு,
முந்திரிப்பருப்பு – 2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை – 1 தேவைக்கு.
செய்முறை :
இஞ்சி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அவலை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் 5 நிமிடம் ஊற வையுங்கள். பின்னர் தண்ணீரை வடித்து விட்டு தனியாக வைக்கவும். பாசிப்பருப்பை உதிரும் அளவில் வேக வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும். பின்னர் அவல் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் வேக வைத்து வைத்துள்ள பாசிப்பருப்பினை சேர்த்து அதனுடன் உப்பு, காயம் சேர்த்து 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து வேக விடவும்.
பொங்கல் தயாரானதும் இன்னும் சிறிது நெய் சேர்த்துக் கலந்து கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
டேஸ்டி, ஹெல்தி அவல் பொங்கல் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே கிரில்டு இறால் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
இறால் - 500 கிராம்
பூண்டு - 4-5 பெரியது
எலுமிச்சை சாறு - 3 மேசைக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
அரைத்த மிளகு - 1 தேக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி இலை - 2 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
கொத்தமல்லி இலையை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இறாலை நன்றாக சுத்தம் செய்து அதனுடன், நசுக்கிய பூண்டு, எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய், அரைத்த மிளகு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
கிரில்லை சூடாக்கி அனைத்து இறால்களையும் ஒரே லேயராக பெரிய ஆவன்-ப்ரூப் பாத்திரத்தில் வைக்கவும்.
பாத்திரத்தை கிரில்ன் கீழ் வைக்கவும்.
இறாலின் ஒரு புறத்தை 2-3 நிமிடங்கள் கிரில் செய்யவும்.
பாத்திரத்தை வெளியே எடுத்து, இறால்களைத் திருப்பவும். மறுபுறமும் 2-3 நிமிடங்கள் கிரில் செய்யவும்.
பின் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான கிரில்டு இறால் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இட்லியில் பொடி இட்லி, ரவை இட்லி என பல வகைகள் உண்டு. இன்று சிறுகீரையை வைத்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருள்கள் :
இட்லி மாவு- 1 கிலோ
சிறுகீரை - 1 கட்டு
சிறுபருப்பு - 100 கிராம்
காய்ந்தமிளகாய் - 6
தக்காளி - 1
வெங்காயம் - 2
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 4 பல்
செய்முறை :
முதலில் கீரையை ஆய்ந்து நன்றாக தண்ணீரில் அலசி கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு குக்கரில் தேவையான தண்ணீர் ஊற்றி சிறுபருப்பு, காய்ந்தமிளகாய், தக்காளி, வெங்காயம், பூண்டு மற்றும் சிறுகீரை ஆகியவை சேர்த்து 1 விசில் வரும் வரை விடவும்.
பின்னர் வெந்த கீரையை மிக்சியில் அரைத்து இட்லி மாவில் சேர்த்து கலக்கி கொள்ளவும்.
அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து மாவை ஊற்றி 15 நிமிடம் வேக வைத்தால் சுவையான.. அரோக்கியம் மிக்க சிறுகீரை இட்லி தயார்...
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெண்டைக்காயில் சர்க்கரை, அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு, வயிற்றுப் புண், பார்வைக் குறைபாடு என சகல நோய்களையும் தீர்க்கும் மருத்துவக் குணம் அதில் உள்ளது.
தேவையான பொருட்கள் :
வெண்டைக்காய் - 13,
ஓரளவு புளிப்பு உள்ள மோர் - 500 மில்லி,
காய்ந்த மிளகாய் - 2,
தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப்,
மிளகு, தனியா, கடலைப்பருப்பு, கடுகு, வெந்தயம் - தலா ஒரு தேக்கரண்டி,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெண்டைக்காயை நீள துண்டுகளாக நறுக்கி, எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், மிளகு, தனியா, கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுக்கவும்.
இதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்து, மோருடன் கலந்து தேவையான உப்பு சேர்க்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து, மோர் கலவையை ஊற்றி, வதக்கிய வெண்டைக்காயும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
சூப்பரான வெண்டைக்காய் மோர்க்குழம்பு தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தமனியை சுற்றி கொழுப்புகள் படிவதை தடுத்து இதயத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும். புளி ஜூஸை தொடர்ந்து பருகுபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.
உடலில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்வதிலும் புளியின் பங்களிப்பு முக்கியமானது. தமனியை சுற்றி கொழுப்புகள் படிவதை தடுத்து இதயத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும். புளி ஜூஸை தொடர்ந்து பருகுபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.
தேவையான பொருட்கள்
புளிச் சாறு - அரை கப்
நாட்டு சர்க்கரை அல்லது தேன் - தேவையான அளவு
எலும்பிச்சை துண்டுகள் - 1
தண்ணீர் - விருப்பத்திற்கு ஏற்ப
செய்முறை
புளியங் பழத்தில் கொடைகளை நீங்கி விட்டு புளிச்சாற்றை பிழித்து அதை நாட்டு சர்க்கரை அல்லது தேனோடு கலந்து கொள்ள வேண்டும்.
தேவையான அளவு குளிர்ந்த நீரை அந்த கரைசலில் சேர்க்க வேண்டும்
எலுமிச்சை துண்டுகளை அதில் பிழிந்து விட்டு, ஐஸ் க்யூப்களை கலந்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது சத்தான புளி ஜூஸ் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வேர்க்கடலையில் சட்னி, துவையல் முதலிய ரெசிபிகள் செய்வதுண்டு. இன்று புதிய முறையில் வேர்க்கடலையை வைத்து காரக்குழம்பு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்..
தேவையான பொருள்கள்:
வேர்க்கடலை - 1/2 கப்
கத்தரிக்காய் - 1
தேங்காய் துண்டு - 2
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு -1 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
புளிக்கரைசல் - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
மிளகாய்த்தூள் - 1 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
கத்தரிக்காய், சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முதலில் வேர்க்கடலையை நன்றாக அலசி கொண்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகத்தூள், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், கத்தரிக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பிறகு வேக வைத்த வேர்க்கடலை, புளி கரைசல், மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்த தேங்காய் ஆகியவை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
தேவைப்பட்டால் கொஞ்சம் உப்பு சேர்த்து கொள்ளவும்.
குழம்பு பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும்.
சுவையான வேர்க்கடலை கத்தரிக்காய் குழம்பு தயார்..
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






