என் மலர்
லைஃப்ஸ்டைல்

வேர்க்கடலை கத்தரிக்காய் காரக்குழம்பு
மிகவும் சிம்பிளான வேர்க்கடலை கத்தரிக்காய் காரக்குழம்பு செய்யலாம் வாங்க...
வேர்க்கடலையில் சட்னி, துவையல் முதலிய ரெசிபிகள் செய்வதுண்டு. இன்று புதிய முறையில் வேர்க்கடலையை வைத்து காரக்குழம்பு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்..
தேவையான பொருள்கள்:
வேர்க்கடலை - 1/2 கப்
கத்தரிக்காய் - 1
தேங்காய் துண்டு - 2
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு -1 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
புளிக்கரைசல் - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
மிளகாய்த்தூள் - 1 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
கத்தரிக்காய், சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முதலில் வேர்க்கடலையை நன்றாக அலசி கொண்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகத்தூள், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், கத்தரிக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பிறகு வேக வைத்த வேர்க்கடலை, புளி கரைசல், மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்த தேங்காய் ஆகியவை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
தேவைப்பட்டால் கொஞ்சம் உப்பு சேர்த்து கொள்ளவும்.
குழம்பு பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும்.
சுவையான வேர்க்கடலை கத்தரிக்காய் குழம்பு தயார்..
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story