என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    அவல் பொங்கல்
    X
    அவல் பொங்கல்

    அவல் வைத்து சூப்பரான சத்தான பொங்கல் சமைக்கலாம்

    காலையில் எளிய முறையில் சத்தான சுவையான உணவு செய்ய நினைத்தால் அவல் பொங்கல் செய்யலாம். இன்று அதன் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அவல் – 1 1/2 டம்ளர், 
    பாசிப்பருப்பு – 1/2 டம்ளர், 
    உப்பு – தேவையான அளவு, 
    பெருங்காயம் – சிறிதளவு, 
    கொத்தமல்லி – தேவையான அளவு

    தாளிக்க தேவையான பொருட்கள் : 

    எண்ணெய் – 1 தேக்கரண்டி, 
    நெய் – 2 தேக்கரண்டி, 
    மிளகு – 1 தேக்கரண்டி, 
    சீரகம் – 1 தேக்கரண்டி, 
    பச்சைமிளகாய் – 2, 
    இஞ்சி – 1 துண்டு, 
    முந்திரிப்பருப்பு – 2 தேக்கரண்டி, 
    கறிவேப்பிலை – 1 தேவைக்கு.

    செய்முறை :

    இஞ்சி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அவலை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் 5 நிமிடம் ஊற வையுங்கள். பின்னர் தண்ணீரை வடித்து விட்டு தனியாக வைக்கவும். பாசிப்பருப்பை உதிரும் அளவில் வேக வைக்கவும். 

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும். பின்னர் அவல் சேர்த்து வதக்கவும். 

    அடுத்து அதில் வேக வைத்து வைத்துள்ள பாசிப்பருப்பினை சேர்த்து அதனுடன் உப்பு, காயம் சேர்த்து 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து வேக விடவும்.

    பொங்கல் தயாரானதும் இன்னும் சிறிது நெய் சேர்த்துக் கலந்து கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். 

    டேஸ்டி, ஹெல்தி அவல் பொங்கல் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×