என் மலர்tooltip icon

    சமையல்

    ஜவ்வரிசியில் அதிக அளவிலான புரதம் இருப்பதால், தசைகளை வலுவூட்டவும் செல்களைப் புதுப்பிக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் செய்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
    தேவையான பொருட்கள் :

    ஜவ்வரிசி - ஒரு கப்,
    பொட்டுக்கடலை - அரை கப் (மாவாக அரைக்கவும்),
    அரிசி மாவு, கேரட் துருவல் - தலா அரை கப்,
    வெங்காயம் - 4,
    இஞ்சி, பச்சை மிளகாய் - தேவையான அளவு,
    தேங்காய் துருவல் - தேவைக்கு
    எண்ணெய் - தேவைக்கு
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    இஞ்சி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஜவ்வரிசியை முதல் நாள் ஊற வைத்து, மறுநாள் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியுடன், பொட்டுக்கடலை, அரிசி மாவு, கேரட் துருவல், வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொட்டிய பிசைந்து வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடை போல மெல்லியதாக தட்டி, சுற்றிலும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக எடுக்கவும்.

    இதை வெல்லம் அல்லது ஏதாவது ஒரு சட்னியுடன் சாப்பிடலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    திடீரென விருந்தினர் வந்து விட்டால் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு விரைவாக இந்த ரெசிபியை செய்யலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    கெட்டித் தயிர் - 1 கப்
    தண்ணீர் - 1/2 கப்
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிது
    கொத்தமல்லித்தழை - சிறிது

    வறுத்து அரைக்க :

    துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
    தனியா - 1 தேக்கரண்டி
    மிளகு - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி

    தாளிக்க :

    எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
    மிளகாய் வத்தல் - 1
    கடுகு - 1 தேக்கரண்டி
    பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி

    செய்முறை :

    துவரம் பருப்பு, கொத்தமல்லி, மிளகு, சீரகம் எல்லாவற்றையும் மிக்ஸ்சியில் கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

    தயிர், தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு, பொடித்து வைத்துள்ள பொடி எல்லாவற்றையும் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல், கடுகு, பெருங்காயத்தூள் போடவும்.

    கடுகு வெடித்தவுடன் தயிர் கலவையை ஊற்றி கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

    நுரை கூடி வரும் போது அடுப்பை அணைக்கவும்.

    சுவையான தயிர் ரசம் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கின்றது. சோளத்தில் இருக்கும் இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
    தேவையான பொருட்கள்

    பொடியாக அரிந்த பேபிகார்ன் - கால் கப்
    பொட்டுக்கடலை - 3 டீஸ்பூன்
    ஊறவைத்த நிலக்கடலை - 25 கிராம்
    சீரகத் தூள் - கால் டீஸ்பூன்
    ஆம்சூர் பொடி - தேவையான அளவு
    தனியா பவுடர் - கால் டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 1
    பூண்டுப் பற்கள் - 3
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    காய்ந்த மிளகாய், பூண்டு, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் பொடித்துக்கொள்ளுங்கள்.

    பொடியாக நறுக்கிய பேபி கார்னுடன் பொட்டுக்கடலை, ஊறவைத்த நிலக்கடலை, சீரகத் தூள், ஆம்சூர் பொடி, தனியாத் தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள்.

    அரைத்த காய்ந்த மிளகாய், பூண்டு, உப்பு கலவையை பேபிகார்ன் கலவையுடன் கலந்து மாலை நேரச் சிற்றுண்டியாகச் சாப்பிடலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் சூடு குறைய, வயிற்று புண் குணமாக தேங்காய் பால் குடிக்கலாம். இன்று தேங்காய் பால் சேர்த்து சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 2 கப்,
    தேங்காய் - அரை மூடி
    வெங்காயம் - 2,
    பச்சை மிளகாய் - 2,
    பச்சை பட்டாணி - அரை கப்
    இஞ்சி-பூண்டு விழுது - கால் டீஸ்பூன்,
    பட்டை - 3,
    லவங்கம் - 5,
    ஏலக்காய் - 3,
    பிரியாணி இலை - 2,
    கறிமசால் பொடி - கால் டீஸ்பூன்,
    முந்திரி - 50 கிராம்,
    நெய் - 100 கிராம்,
    புதினா, கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    தேங்காயை அரைத்து 4 கப் பால் எடுத்து கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி ஊறவைத்து கொள்ளவும்.

    ப.மிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றிச் சூடேறியவுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.

    பின்பு பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம், புதினா சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை பட்டாணி, தேங்காய்ப் பால், கறி மசால் பொடி, உப்பு சேர்த்துக் கொதி வரும் வரை காத்திருக்கவும்.

    கொதி வந்ததும் அரிசியைச் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும்.

    பின்னர் மீதம் உள்ள நெய்யில் முந்திரியை வறுத்து, சாதத்துடன் சேர்த்துக் கிளறவும்.

    கமகம வாசனைக்குக் கொத்தமல்லி இலையை சேர்க்கவும்.

    இதனுடன் பெப்பர் சிக்கன் அல்லது மட்டன் குழம்பு சேர்த்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கடலைப்பருப்பு சார்ந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது அதிலுள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து போன்றவற்றால் உணவு உண்ட திருப்தி கிடைக்கும்.
    தேவையான பொருட்கள்

    கடலைப் பருப்பு - 50 கிராம்,
    காய்ந்த மிளகாய் - 8 முதல் 10,
    பெருங்காயம் - சிறு துண்டு,
    புளி - சிறிய நெல்லிக்காய் அளவு,
    தேங்காய்த் துருவல் - கால் மூடி,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    தாளிக்க

    எண்ணெய் - அரை டீஸ்பூன்
    கடுகு, உளுந்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை

    வாணலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் போட்டு நன்றாகச் சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள்.

    ஆறியதும் அவற்றுடன் புளியையும் தேங்காய்த் துருவலையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு அரைத்தெடுங்கள்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ளபொருட்களை போட்டு தாளித்து அரைத்த சட்னியில் போட்டு கலந்து பரிமாறவும்.

    இதைத் துவையல் போல கெட்டியாகவும் வைத்துக்கொள்ளலாம் அல்லது சிறிது நீர் சேர்த்து சட்னியாகவும் சாப்பிடலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் கடைகளில் செய்வது போல வித விதமாக சாப்பிட கேட்டு பெற்றோரை தொல்லை செய்வார்கள். இன்று ரோட்டு கடையில் செய்யும் கொத்து பரோட்டாவை முட்டை சேர்த்து செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்:

    பரோட்டா - 2
    முட்டை - 1
    வெங்காயம் - 2
    எண்ணெய்  -  4 ஸ்பூன்
    தக்காளி - 1
    பச்சை மிளகாய்  - 2
    உப்பு - தேவையான அளவு
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    கொத்தமல்லி - தேவையான அளவு
    இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
    கரம் மசாலா தூள் -  1 ஸ்பூன்
    தனி மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

    செய்முறை:

    பரோட்டாவை சிறிது துண்டுகளாக பிரித்து தனியாக வைத்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளி, ப.மிளகாயை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, தனி மிளகாய் தூள் சேர்ந்து நன்றாக பச்சை வாடை போகும் வரை கிளறி விடவும்.

    அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக உதிரியாக வரும் வரை வதக்கவும்.

    அடுத்து துண்டுகளாக நறுக்கிய பரோட்டாவை சேர்த்து மிதமான தீயில் மசாலாவுடன் சேர்த்து கலக்கவும் .

    10 நிமிடம் கழித்து வாசனைக்காக கொத்தமல்லி சிறிது சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

    சுட சுட சுவையான ரோட்டு கடை முட்டை கொத்து பரோட்டா தயார். இதில் சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து உண்டால் சுவையாக இருக்கும்..

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கொத்தமல்லி தோசை, வெங்காய தோசை, சிக்கன் கறி தோசை... என விதமான தோசைகள் உள்ளது. தக்காளியில் கூட சுவையான மொறு மொறு தோசை செய்யலாம்.
    தேவையான பொருள்கள் :

    தக்காளி - 3
    கேழ்வரகு மாவு - 250 கிராம்
    வெங்காயம் - 1
    இட்லி மாவு - 100 கிராம்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    காய்ந்த மிளகாய் - 2
    உப்பு -தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    சீரகம் - 1 ஸ்பூன்

    செய்முறை:

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்சியில் கேழ்வரகு மாவு, தக்காளி, காய்ந்த மிளகாய், சீரகம், கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ள வேண்டும்.

    பின்னர் இட்லி மாவில் அரைத்த கலவையை தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

    நறுக்கிய வெங்காயத்தையும் மாவில் சேர்த்து கலக்கி கொள்ளவும்.

    அடுத்து அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு அதில் மாவை ஊற்றி பொன்னிறமாக வரும் வேளையில் தோசையை திருப்பி எடுத்தால் சுவையான மொறு மொறு கேழ்வரகு தக்காளி தோசை தயார்..

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாந்தி, வாய்க்கசப்பு, வயிற்று மந்தம் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் இஞ்சி பர்ஃபி சாப்பிடலாம். இஞ்சி பர்ஃபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிஞ்சு இஞ்சி அல்லது சுக்குப் பொடி - 100 கிராம்
    கருப்பட்டி அல்லது சர்க்கரை அல்லது வெல்லம் - ஒரு கப்
    நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்

    செய்முறை :

    இஞ்சியைத் தோல் சீவி மிக்சியில் போட்டு கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் விட்டு கருப்பட்டி அல்லது சர்க்கரை அல்லது வெல்லத்தை சேர்த்து கம்பி பாகு பதம் வரும்வரை காய்ச்சுங்கள். (சிறிது பாகை எடுத்து தண்ணீரில் போட்டால் கரையாமல் இருக்கும். இது தான் பாகு பதம்).

    இந்த பக்குவம் வந்தவுடன் அரைத்த இஞ்சி விழுதை பாகில் சேர்த்து கைவிடாமல் நன்றாக கலக்கவும்.

    இந்தக் கலவை நன்றாக நுரைத்து திக்கான பதம் வந்ததும் அரை டேபிள் ஸ்பூன் நெய்,  ஏலக்காய்ப்பொடி தூவி கொஞ்சம் உப்பு தூவி இறக்குங்கள்.

    இப்பொழுது ஒரு தட்டில் நெய்யை தடவி அதன் மேல் இந்தக் கலவையைக் கொட்டுங்கள்.

    சூடாக இருக்கும் போதே சதுர வடிவில் பர்ஃபியாக வெட்டி சற்று ஆறியதும் அவற்றை தனியாக எடுங்கள்.

    சூடான காரசாரமான இனிப்பான இஞ்சி பர்ஃபி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தக்காளியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வெள்ளரிக்காய், தக்காளியை வைத்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பழுத்த பெங்களூர் தக்காளி - 3,
    பெரிய வெங்காயம் - 1,
    கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது,
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    வெள்ளரிக்காய் - 1/2 துண்டு,
     
    செய்முறை :

    தக்காளி, வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காயை போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.

    குறிப்பு: சாலட் செய்ய நாட்டுத்தக்காளி, ஹெப்பிரிட் தக்காளியைப் பயன்படுத்தாமல், பெங்களூர் தக்காளியை பயன்படுத்தினால் சாலட் புளிக்காது.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் கேழ்வரகு ரிப்பன் முறுக்கு செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரிப்பன் முறுக்கு செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 2 கப்,
    அரிசிமாவு - கால் கப்
    பொட்டுக்கடலை மாவு - அரை கப்,
    மிளகாய்த்தூள், பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள், சோம்புத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பூண்டு விழுது, பெருங்காயத்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, முறுக்கு மாவு பதத்தில் கலந்துகொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் நெருப்பை சிம்மில் வைத்துக்கொள்ளவும்.

    முறுக்குக் குழாயில் ரிப்பன் அச்சுப் போட்டு மாவை முறுக்கு அச்சில் வைத்து காய்ந்த எண்ணெயில் ரிப்பன்களாகப் பிழியவும். சிவந்தது வெந்ததும் எடுக்கவும்.

    கேழ்வரகு ரிப்பன் முறுக்கு தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த கஷாயம் தொண்டைக்கு இதமாக இருக்கும். தோல் பிரச்சனைக்கு மிகவும் நல்லது. கரும்புள்ளிகளை போக்கும். கண்களில் இருக்கும் கருவளையம் மறைந்துவிடும்....
    தேவையான பொருட்கள்

    கிராம்பு - 10
    வெண்ணெய் - கால் டீஸ்பூன் 
    பனை வெல்லம் - தேவையான அளவு

    செய்முறை: 

    10 கிராம்புகளைப் பொடித்துக்கொள்ளவும். 

    நான்கு அல்லது ஐந்து கிராம்புடன் பொடித்த கிராம்புத் தூளை சேர்த்து மூன்று கப் தண்ணீர் விடவும். 

    அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து ஒரு கப்பாகச் சுண்டியதும், வடிகட்டி பனை வெல்லத்தை சேர்க்கவும். 

    கால் டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பருகலாம். 

    பலன்கள்: தொண்டைக்கு இதமாக இருக்கும். தோல் பிரச்னைக்கு மிகவும் நல்லது. கரும்புள்ளிகளை போக்கும். கண்களில் இருக்கும் கருவளையம் மறைந்துவிடும்....

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆந்திராவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஸ்பைஸி சிக்கன் ஒன்றாகும். இப்போது இந்த ஸ்பைஸி சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையானப் பொருட்கள் :

    சிக்கன் – அரை கிலோ
    வெங்காயம் – 3
    இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
    தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் – சிறிதளவு
    எண்ணெய் – தேவையான அளவு
    உப்பு – தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை – சிறிதளவு
    தண்ணீர் – தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் சிக்கனைக் கழுவி சுத்தம் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

    பின் வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சிக்கனைப் போட்டு வதக்க வேண்டும். சிக்கன் நன்கு வதங்கியதும், அதில் மஞ்சள்தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    பிறகு சிக்கன் பாதி வெந்ததும், அதனுடன் மிளகாய்த்தூள் மற்றும் சிறிதளவு உப்பு போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறி மூடி வைக்க வேண்டும். அதன் பின்பு அரைத்து வைத்திருக்கும் வெங்காய விழுதைப் போட்டு நன்கு கிளறி விடவும்.

    சிக்கன் முக்கால் பதம் வெந்ததும் அதில் கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் போட்டு சிறிது நேரம் மூடிவைத்து அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும். 

    பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்கினால், ஆந்திரா ஸ்பைஸி சிக்கன் தயார்..!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×