என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    தயிர் ரசம்
    X
    தயிர் ரசம்

    10 நிமிடத்தில் செய்யலாம் தயிர் ரசம்

    திடீரென விருந்தினர் வந்து விட்டால் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு விரைவாக இந்த ரெசிபியை செய்யலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    கெட்டித் தயிர் - 1 கப்
    தண்ணீர் - 1/2 கப்
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிது
    கொத்தமல்லித்தழை - சிறிது

    வறுத்து அரைக்க :

    துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
    தனியா - 1 தேக்கரண்டி
    மிளகு - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி

    தாளிக்க :

    எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
    மிளகாய் வத்தல் - 1
    கடுகு - 1 தேக்கரண்டி
    பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி

    செய்முறை :

    துவரம் பருப்பு, கொத்தமல்லி, மிளகு, சீரகம் எல்லாவற்றையும் மிக்ஸ்சியில் கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

    தயிர், தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு, பொடித்து வைத்துள்ள பொடி எல்லாவற்றையும் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல், கடுகு, பெருங்காயத்தூள் போடவும்.

    கடுகு வெடித்தவுடன் தயிர் கலவையை ஊற்றி கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

    நுரை கூடி வரும் போது அடுப்பை அணைக்கவும்.

    சுவையான தயிர் ரசம் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×