என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    பெண்கள் அணிவும் பிரா வெறும் அழகு சார்ந்த விஷயத்துக்கானது மட்டுமல்ல. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனையும் அதில் அடங்கியிருக்கிறது.
    பெண்களின் ஆடைகளில், குறிப்பாக உள்ளாடைகளில் பிரா மிக அத்தியாவசியமான ஒன்று. பிரா தான் பெண்களின் உடலை நல்ல வடிவமைப்புடனும் கவர்ச்சியாகவும் காட்டக்கூடியது. அந்த பிராக்கள் எப்போது தங்களுடைய பொலிவை இழக்கிறதோ அப்போது பெண்களின் உடல் அழகையும் பொலிவிழக்கச் செய்யும்.

    பிராக்களைப் பார்த்துப் பார்த்து அழகாக வாங்கினால் மட்டுமே போதாது. அதை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். சிலருக்கு தங்களுடைய பிராக்களை எப்போது தூக்கி எறிந்துவிட்டு, புதியதை மாற்ற வேண்டுமெனத் தெரியாது. சிலர் தங்களுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமான உள்ளாடை இருப்பின் அதை அவ்வளவு எளிதாக மாற்றிவிட மனது வராது. ஆனால் அது முற்றிலும் தவறான பழக்கம். அடுத்து புதிதாக வாங்கும் ஏதேனும் ஒன்றை நம்முடைய மனதுக்குப் பிடித்த ஒன்றாக மாற்றிக் கொள்ள வேண்டியது தான்.

    பிராக்கள் விஷயத்தில் நீங்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா? அவை வெறும் அழகு சார்ந்த விஷயத்துக்கானது மட்டுமல்ல. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்னையும் அதில் அடங்கியிருக்கிறது.



    நாம் அஜாக்கிரதையாக இருந்தால் மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட பல ஆரோக்கிய பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

    நீங்கள் பிறந்த நாள் கொண்டாடுவது போல, நிச்சயம் 6 மாதங்களுக்கு ஒருமுறையாவது உங்கள் பழைய பிராக்களைத் தூக்கியெறிந்துவிட்டு புதிய பிராக்களை வாங்குங்கள்.

    மெட்டல் ஹூக் உள்ள பிராக்களை 6 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தினால், அது சருமத்தில் உராய்ந்து அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும்.

    ஃபிட்டான பிராக்களை அணிவது மிக முக்கியம். அது உங்கள் வடிவழகை கூட்டும். தளர்வான, ஃபிட் இல்லாத பிராக்கள் உங்கள் உடல் வடிவைக் கெடுப்பதுடன் மார்புகளை மிக அதிகமாகத் தளர்வாக்கிவிடும்.



    நன்கு கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும், நிச்சயம் உங்களின் பிராக்களின் கப் சைஸ் ஒரு வருடத்துக்கு ஆறு முறையாவது மாற்றமடையும். அதனால் குறைந்தது 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது உங்களுடைய மார்பளவை அளவெடுத்து, அதற்கேற்றாற் போல் பிராக்களை அணிந்திடுங்கள்.

    அளவுக்கு அதிகமாக இறுக்கமுடைய பிராக்களை அணிவதும் தவறு தான். அதனால்  வியர்வை வெளியேற முடியாமல் போகும். அது பாக்டீரியா தொற்றுக்களை உண்டாக்கிவிடும்.

    பிராக்களின் தோள் பட்டையில் உள்ள ஸ்ட்ரிப் லேசாக தளர்ந்தாலும் உங்களுடைய அளவில் மாற்றம் உண்டாகும். மார்பகம் தளர்ந்து போகும். அதனால் ஸ்ட்ரிப் தளர ஆரம்பிப்பது உங்களுடைய பிராக்களை நீங்கள் உடனடியாக மாற்ற வேண்டியதற்கான அறிகுறிகளில் ஒன்று.

    மாணவர்களின் கைகளில்தான் வருங்கால இந்தியாவின் வளமை அடங்கி இருக்கிறது. மாணவர்களின் வளர்ச்சியில் தான் இந்தியாவின் வளர்ச்சியும் அடங்கி இருக்கிறது.
    இந்தியாவின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பது படிப்பறிவின்மை. நாம் பெற்ற செல்வம் குறையாத செல்வம் என்று சொன்னால் அது கல்வி ஒன்றாகத்தான் இருக்க முடியும். அறியாமையைப் போக்கவல்லது கல்வி ஒன்றுதான். அதனால் தான் பெருந்தலைவர் காமராஜர், சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளைத் தகர்க்கக்கூடிய சக்தி கல்விக்கு மட்டும்தான் உண்டு என்ற அடிப்படையில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் கல்விக் கூடங்கள் தமிழகத்தில் வளர்ச்சியைடந்தன.

    இந்தியாவின் வளர்ச்சியே மாணவர்களின் கையில்தான். மாணவன் என்றால் மாண்+அவன் என்று பிரிக்கலாம். மாண் என்றால் பெருமை. மாணவன் என்றால் பெருமைக்குரியவன், மாண்புடையவன் என்று பொருள். அதனால்தான் மாணவர்கள் என்று இந்தப் பருவத்தினரை ஊக்கப்படுத்தி வருகின்றார்கள். பெருமைமிக்க திறமைகள் இப்பருவத்தில்தான் கிடைக்கும்.

    மாணவர்களின் கைகளில்தான் வருங்கால இந்தியாவின் வளமை அடங்கி இருக்கிறது. மாணவர்களின் வளர்ச்சியில் தான் இந்தியாவின் வளர்ச்சியும் அடங்கி இருக்கிறது. மாணவர்களின் சுயதிறன் திண்மை பெற வேண்டும் என்றால், கல்வியின் தரம் உயர வேண்டும். முக்கியமாக விஞ்ஞானம், கணிதம், கணினிப் பயிற்சி கற்பிக்கப்பட வேண்டும். கல்விப் புரட்சி ஒன்றுதான் மாணவர்களின் சிந்திக்கும் சக்தியை வளர்க்கச் செய்யும்.

    தொட்டனைத்தூறும் மணற்கேணி போல் தோண்டத் தோண்டப் பெருக்கெடுக்கும் வல்லமை படைத்தது படிப்பறிவு ஒன்றுதான். படிக்கும் போதே ஒரு லட்சியத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். லட்சியப் பாதையில் எத்தனையோ சறுக்கல்களும், தோல்விகளும் நம் பயணத்தை தடை செய்யக்கூடும். ஆனால், தோல்வி நமது வாழ்க்கைக்கு வேண்டுமானால் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் தோல்வி என்பது நம் தன்னம்பிக்கையை எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது.

    மாவீரன் அலெக்சாண்டரின் ஆசிரியர் அரிஸ்டாடில், எந்த ஒரு பிரச்சினை என்றாலும், அதை ஆராயும் முறையையும், கேள்வி கேட்கும் நேர்த்தியையும் புகட்டினார். ஒரு மாவீரன் உருவானான். மாணவர்-ஆசிரியர் இடையே அத்தகைய அறிவுப் பரிமாற்றம் ஏற்பட வேண்டும். அதனால்தான் பள்ளிக்கூடங்களின் வகுப்பறைகள் தான் ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது என்று கூறப்படுகிறது. பாரதியின் ஆத்திச்சூடி போல் புதிய கல்வித்திட்டம் அறிவொளிமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்கட்டும்.

    இன்றைய மாணவர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம். ஏனெனில், மாணவர்கள் எவ்வாறு அமைகிறார்களோ அந்த வகையில்தான் இந்தியா செல்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இந்தியாவின் நலனில் அக்கறை உள்ளது. சுதந்திர இந்தியாவின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாப்போம், நாட்டை வல்லரசாக உயர்த்துவோம் என்று உறுதிகொள்ளுங்கள். 
    காபியில் உள்ளடங்கி இருக்கும் காபின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது. எனினும் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு காபினின் பங்களிப்பு அவசியமானதாக இருக்கிறது.
    காபியில் உள்ளடங்கி இருக்கும் காபின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது. எனினும் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு காபினின் பங்களிப்பு அவசியமானதாக இருக்கிறது. தினமும் இரண்டு கப் காபி பருகுவதன் மூலம் கல்லீரல் நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக 63 ஆயிரம் காபி பிரியர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் 45 வயது முதல் 74 வயதுக்கு உட்பட்டவர்கள். 15 ஆண்டுகளாக அவர்கள் பருகும் காபியின் அளவு பற்றி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. அதில் 114 பேர் கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்கள்.

    இதையடுத்து காபி அதிக அளவிலும், குறைந்த அளவிலும் பருகுபவர்களை தரம் பிரித்து சாதக, பாதக அம்சங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். இறுதியில் தினமும் இரண்டு கப் காபி பருகுவதுதான் உடல்நலத்திற்கும், கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கிறார்கள்.

    அதேவேளையில் டீ, பழ ஜூஸ் போன்ற பானங்கள் பருகுவதற்கும் கல்லீரல் அழற்சி நோய்க்கும் சம்பந்தம் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுப்பழக்கத்திற்கு அடிமையாவதுதான் கல்லீரல் அழற்சி நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. உலகளவில் அமெரிக்கர்கள்தான் கல்லீரல் அழற்சி நோயால் அதிக அளவு பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

    நமது அன்றாடவேலைகளில் பலவிதமான செய்திகளையும் பலன்களையும் கொண்டது நடைப்பயிற்சி மட்டுமே. நடைபயிற்சி தரும் நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.
    நடை நம்மை சிறந்த வகையில் நிதானப்படுத்துகிறது. உடல் தன்னைத்தானே அறியும் முயற்சியே நடைப்பயிற்சி. அதுசாலை ஓர நடைபாதையாக இருக்கலாம், நதியின் கரையாக இருக்கலாம், வனத்தில் நடக்கலாம், வெறுமனே குடியிருப்புப் பகுதிகளுக்குள் செல்வதாகவும் இருக்கலாம். நடப்பது என்பது ஒரு அறிதல், கண்டுபிடிப்பு, உரையாடல், நட்பு செயல்பாடு, ஒரு தியானம், பிரதிபலிப்பு, பிரார்த்தனை. நமது அன்றாடவேலைகளில் பலவிதமான செய்திகளையும் பலன்களையும் கொண்டது நடைப்பயிற்சி மட்டுமே.

    நடைப்பயிற்சியில் கடைசி தூரத்தை எட்டும்போது நீங்கள் உங்கள் உடலை சவாலுக்கு இழுக்கிறீர்கள். உங்கள் உடலில் வியர்வை பொங்கி வழியும்போது விளையாட்டு, வலி இரண்டுமே இருக்கிறது. அன்றாடம் நடக்கும் தூரத்தைவிட கூடுதலாக ஒரு மைல் நடைப்பயிற்சியைப் பூர்த்தி செய்துவிட்டு, ஓய்ந்துபோய் ஒரு தேநீருக்காகவோ, பிஸ்கெட் சாப்பிடவோ அமர்பவர் உணரும் சாதனையை போர்வீரன்கூட உணரவே முடியாது.

    வாழ்க்கையின் கொண்டாட்டமான தருணங்களில் ஒன்றாக நடை இருக்கிறது. நடக்கும்போது வெவ்வேறு புலன்களும் செயல்படுகின்றன. நீங்கள் பார்க்கிறீர்கள், நீங்கள் தொடுகிறீர்கள், நிற்கிறீர்கள், எதையோ நினைவுக்குக் கொண்டுவர முயல்கிறீர்கள். நாம் நடக்கும்போது உலகத்துடன் உரையாடுவது மட்டுமின்றி, ஆழமான புரிதலுக்காகக் கேள்வியும் கேட்கிறோம்.

    நகரங்கள் நடப்பவர்களுக்கு சாத்தியமற்றதாக மாறிவருகிறது. பாதசாரிகள் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறார்கள். ஒருவரின் நடை அவருடைய உயிரியலோடு தொடர்புடையதுதான். ஆனால் ஒரு நகரத்தின் வரலாற்றுடன் நுட்பமான தொடர்புடையது. சிறந்த நகரங்கள் பாதசாரிகள் வழியாகவே உயிர்ப்புடன் உள்ளன. அவர்களது நடைச் சடங்குகள் நகரத்தை வரையறுக்கின்றன. எல்லா இடங்களையும் பரிச்சயம் உள்ளதாக மாற்றுகின்றன. நகரில் ஓடும் மிதிவண்டிகள் இன்னும் மனிதத்தன்மை மிகுந்தவையாக இருக்கின்றன. ஆனால் ஒரு கார் நம்மைக் கடக்கும்போது, நகரம் மனிதத் தன்மையை இழந்துவிடுகிறது.

    பாதசாரிகளை முன்னிட்டுத்தான் நகர்ப்புறத் திட்டமிடுதல் தொடங்கப்படவேண்டும். நகர்ப்பகுதிகளில் நடந்துசெல்லாமல் நம்மால் முறைசாராப் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ளமுடியாது. அந்த முறைசாராப் பொருளாதார வழிமுறைகளில்தான் நம்மில் 70 சதவீத குடிமக்கள் வாழ்கின்றனர்.

    நடப்பது குறைந்தால் பஜாரும், சாலையோர காபிக்கடையும் மறைய தொடங்குகின்றன. வாழ்வதற்கு கட்டுப்படியாகும் நகரத்தை நமது நடை வழியாகவே உருவாக்க முடியும். டீக்கடைக்காரர், பேல்பூரி விற்பவர், வடை, பஜ்ஜி கடைகள், வெற்றிலை கடைக்காரர், பூ விற்பவர், குப்பை அள்ளுபவர் அனைவரும் வாழ்வதற்கு தகுந்த நகரம் எனில் அதுதன் இதயத்தில் பாதசாரிகளைப் புரிந்துகொண்டதாக இருக்க முடியும்.
    குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். பேரீச்சம் பழத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பேரீச்சம் பழத்தில் கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பேரீச்சம்பழம் - ஒரு கப்
    கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன்
    உலர்திராட்சை - அரை கப்
    பனை வெல்லம் - அரை கப்
    பாதாம், முந்திரி கலவை - அரை கப்
    தேங்காய்ப்பால் - 2 கப்
    சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்



    செய்முறை:

    பாதாம், முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பேரீச்சம் பழத்தை கொட்டையை எடுத்து விட்டு தனியாக வைக்கவும்.

    பனை வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.

    சோள மாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.

    வெறும் வாணலியில் கசகசாவை வறுத்து, ஆறிய பின் மிக்ஸியில் பவுடராக அரைக்கவும்.

    பேரீச்சம்பழத்தினை உலர் திராட்சை சேர்த்து மிக்ஸியில் தண்ணீர்விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும்.

    அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு உருகியதும் பாதாம், முந்திரி சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    அதே பாத்திரத்தில் அரைத்த பேரீச்சம் விழுது சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும்.

    பின்பு அதனுடன் பனை வெல்லம் சேர்த்துக் கிளறவும்.

    பிறகு சோள கரைசல், தேங்காய்ப்பால் சேர்த்துக் கலக்கவும்.

    கசகசா பவுடர் சேர்த்துக் கொதிவிட்டு இறக்கவும்.

    திக்கான பதம் வந்தவுடன் மேலே வறுத்த பாதாம், முந்திரி சேர்த்து அலங்கரித்து சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறலாம்.

    சூப்பரான பேரீச்சம்பழ கீர் ரெடி.

    அடுத்து அதனுடன் வேகவைத்த பருப்பை, சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    கடைசியாக நறுக்கிய கொத்தமல்லித்தழைத் தூவிப் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உலகளவில் கொடிய நோய் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாக கொசுக்கள் இருக்கின்றன. ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் கொசுகடியால் நோய் வாய்ப்பட்டு உயிரிழக்கிறார்கள்.
    உலகளவில் கொடிய நோய் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாக கொசுக்கள் இருக்கின்றன. அளவில் சிறியதாக இருக்கும் இவை உயிருக்கே உலை வைக்கும் தன்மை கொண்டவை. ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் கொசுகடியால் நோய் வாய்ப்பட்டு உயிரிழக்கிறார்கள். மலேரியா, மஞ்சள் காமாலை, டெங்கு, மூளை அழற்சி, சிக்குன்குனியா, ஜிகா வைரஸ் போன்ற பல்வேறு நோய் பாதிப்புகளை கொசுக்கள் ஏற்படுத்துகின்றன.

    மலேரியா: இது ஒருவகை ஒட்டுண்ணி நோயாகும். இது அனோபிலீஸ் என்ற கொசு மூலம் பரவுகிறது. இந்த கொசுக்கள் வெப்ப மண்டல பிரதேசங்களில் உயிர்வாழும் தன்மை கொண்டவை. மலேரியா நோய் பாதிப்புக்கு காய்ச்சல்தான் தொடக்க அறிகுறியாக இருக்கும். சாதாரண உடல்நல பாதிப்பாகத்தான் ஆரம்பத்தில் தெரியும். பின்னர் தலைவலி, தசை வலி, குறைந்த ரத்த அழுத்தம், சுய நினைவை இழக்கும் நிலைக்கு ஆளாகுதல், கடும் குளிர் போன்ற அறிகுறிகள் தென்பட தொடங்கும். மெல்ல மெல்ல நோயின் தாக்கம் அதிகமாகி கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஸ்போரோசோயிட்டுகள் எனும் ஒட்டுண்ணிகள் ரத்த ஓட்டத்தில் ஊடுருவி சிவப்பு அணுக்களுக்கு பாதிப்பை உண்டாக்கிவிடும்.

    டெங்கு: ஏடீஸ் வகை கொசுக்கள் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு காரணமாக இருக்கின்றன. இது தொற்றுநோய் வகையை சார்ந்தது. இந்த நோய் பாதிப்புக்கு ஆளானவரின் ரத்தத்தை உறிஞ்சும் கொசுக்கள், மற்ற நபர்களை கடிக்கும்போது அவருக்கும் டெங்கு நோய் பாதிப்பு உண்டாக்கிவிடும். நோய் பாதிப்புக்குள்ளாகுபவர்களுக்கு மூட்டு மற்றும் தசை பகுதியில் கடும் வலி உண்டாகும். இது எலும்பு முறிவு காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. வெப்ப மண்டல பகுதியில்தான் இந்த நோய் அதிகமாக பரவும். கொசு கடித்தாலும் 4 முதல் 7 நாட்களுக்கு பிறகுதான் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி கள் தென்பட தொடங்கும். கடுமையான தலை வலி, கண் வலி, குமட்டல், வாந்தி, மூட்டுவலி, மார்பு, முகம், கை, கால் போன்ற பகுதிகளில் வீக்கம், கடுமையான காய்ச்சல் போன்ற பாதிப்புகள் உண்டாகும். ஆரம்பத்தில் நோய் தாக்கம் லேசாக இருக்கும். பின் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

    சிக்குன்குனியா: ஏடீஸ் ஏஜிப்டி கொசுக்கள் இந்த நோயை பரப்பும் தன்மை கொண்டவை. கடுமையான மூட்டுவலி, உடல் வீக்கம், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். ஏறக்குறைய இந்த நோயும் டெங்கு காய்ச்சலுக்கான பாதிப்புகளை கொண்டிருக்கும். கொசு கடித்த 4 நாட்களுக்குள்ளே நோய்க்கான அறிகுறிகள் தென்பட தொடங்கிவிடும். குமட்டல், வாந்தி, உடல் வீக்கம், ரத்த ஓட்டத்தில் பாதிப்பு, மலச்சிக்கல், தலைச்சுற்று, விரல்களில் குளிர்த்தன்மை, தொண்டை வலி, கடுமையான தலைவலி போன்ற பிரச்சினைகள் தலைதூக்கும்.

    ஜிகா வைரஸ்:
    சிக்குன்குனியா, டெங்கு போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களால் இந்த வைரஸ் பரவுகிறது. இரண்டு நாட்களில் நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கும். மூட்டுவலி, காய்ச்சல், வீக்கம், தலைவலி, சோம்பல், விழி வெண்படல அழற்சி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

    மூளை அழற்சி: இது கொசுக்களால் பரவும் ஒரு வகை வைரஸ் நோயாகும். இதன்மூலம் மூளைக்குச் செல்லும் மென்படலத்தில் வீக்கம் ஏற்படும். கடும் காய்ச்சல், கழுத்து விறைப்பு, வலிப்பு நோய், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். 
    தாய்மைக் காலத்தில் ஆண், தன் மனைவிக்கு இன்னொரு தாயாக வேண்டும். கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு, என்பது இருவருக்கும் விருப்பம் இருக்கும் சூழலில் உறவு வைத்துக் கொள்ளலாம்.
    ஆணும் பெண்ணும் இரண்டறக் கலந்து இன்னொரு உயிர் கருவான பின் அது செல்ல மழலையாக பூமியை எட்டிப் பார்க்கும் வரை தாம்பத்திய உறவை சில கட்டுப்பாட்டுடன் தொடர வேண்டியுள்ளது.  தாய்மைக் காலத்தில் ஆண், தன் மனைவிக்கு இன்னொரு தாயாக வேண்டும். தாம்பத்திய நேரத்திலும் ஆண் அத்தகைய பரிவுடனே பெண்ணைக் கையாள வேண்டும்.

    தாய்மை காலத்தில் கணவனின் அருகாமை அவளுக்கு முன்பை விட அதிகமாகத் தேவைப்படுகிறது. ஆனால், தாம்பத்திய உறவில் அவளது விருப்பங்கள் மாறுகிறது. வேறு ஏதாவது ஒரு விஷயத்தில் டென்ஷனானால் கூட அது நெருக்கமான நேரத்தில் விருப்பமின்மையாக வெளிப்படும். கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு, என்பது இருவருக்கும் விருப்பம் இருக்கும் சூழலில் உறவு வைத்துக் கொள்ளலாம்.

    பெண்ணின் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல் ஆண் வற்புறுத்தக் கூடாது. நெருக்கம் இறுக்கமான அணைப்பு, அன்பு முத்தம் என பெண் விரும்பும் விளையாட்டுக்களாக இருக்கலாம். அவளுக்குப் பிடித்ததெல்லாம் கேட்டுக் கேட்டுத் தரலாம். செக்ஸ் வைத்து கொள்ளும் பொஷிசனை பெண்ணுக்கு வசதியாக மாற்றிக் கொள்ள வேண்டும். பெண்ணைக் கஷ்டப்படுத்தாமல், அவளது வயிற்றை அழுத்தாமல், தன் ஆற்றல் முழுவதையும் வெளிப்படுத்தாமல் ஆண் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும்.

    கர்ப்ப காலத்தில் 6 வாரம் முதல் 12 வாரம் வரை தாம்பத்தியம் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். முதல் மூன்று மாதங்களை தம்பதியர் கவனத்துடன் கடக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் பெண்ணுக்கு வாந்தி, மயக்கம், உடலில் சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். மேலும் பெண்ணுக்கு ஏற்படும் மூட் மாற்றங்களையும் கவனத்தில் கொண்டு அவள் அதிலிருந்து வெளியில் வர ஆண் அன்பு செய்ய வேண்டும்.

    கர்ப்ப காலத்தை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு மூன்று மாதமும் ஒரு பிரிவாக எடுத்துக் கொள்ளலாம். இந்தக் காலகட்டத்தில் பெண்ணின் தாய்மை High risk pregnency, No risk pregnency என இரண்டு வகையாக இருக்க முடியும். லோ ரிஸ்க் பிரக்னன்சியாக இருந்தாலும் முதல் மூன்று மாதங்களில் உடலுறவில் ஆண் முரட்டுத்தனமாக நடந்து கொண்டால் கரு கலைந்திட வாய்ப்புள்ளது. ஆண் மிகவும் மென்மையாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

    தாய்மைக் காலத்தில் பெண்ணிடத்தில் ஆண் இன்பம் தேடுவதை விட்டு அவளை மகிழ்ச்சிப்படுத்தி மகிழ்வதில் முழுமை காண வேண்டும்.

    இரண்டாவது மூன்று மாதங்களில் கட்டாயம் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் பெண்ணின் பிறப்புறுப்புப் பகுதியில் ரத்த ஓட்டம் நன்றாகவே இருக்கும். இந்தக் காலகட்டத்தில் உடலுறவு கொள்ளும்போது பெண்ணால் அதிகளவு இன்பத்தை உணர முடிகிறது.

    பெண்ணின் வயிற்றை அழுத்தாமல் அவளுக்கு உடலுறவின் போது எந்தக் கஷ்டமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் காலகட்டத்தில் உடலுறவு கொள்வதால் தாயின் மகிழ்ச்சி ஹார்மோன் அதிகமாகச் சுரந்து தாய்க்கும் சேய்க்கும் நன்மை அளிக்கும். கர்ப்ப காலத்தில் பெண்ணின் பாசிட்டிவ் எண்ணங்களை அதிகரிக்கச் செய்து டென்ஷன் குறைக்கிறது.



    தாய்மைக்கு முன் உடலுறவு கொள்ளும் போது கருத்தரித்து விடுமோ என்ற டென்ஷன் இருக்கும். அதற்காக கருத்தடை முறைகளை உபயோகிப்பார்கள். கரு உருவானதில் இருந்து குழந்தைப் பிறப்பு வரை பெண்ணுக்கு மாதவிடாய் நாட்கள் இல்லை என்பதைப் பெண் மகிழ்ச்சியாகவே உணர்கிறாள். உடலுறவின் போது பெண்ணுறுப்பிலேயே ஆண் எந்த வித சந்தேகம், தயக்கம் இன்றி விந்தைச் செலுத்தலாம்.

    உடலுறவின் போது இருவரும் அதிகபட்ச இன்பத்தை அடையலாம். பிரசவத்துக்கு சில வாரங்கள் வரையும் கூட பாதுகாப்புடன் உடலுறவு வைத்துக் கொள்ளலாம். மூன்றாவது மூன்று மாதங்களில் பெண் வயிறு பெரிதாகியிருக்கும். உடலுறவு கொள்ளும்போது பெண்ணுக்கு சில அசௌகரியங்கள் இருக்கும். குழந்தையை சுமப்பதும் பெற்றுக் கொள்வது பெண்ணுடைய வேலை மட்டுமே என ஆண் எண்ணக் கூடாது.

    தான் தகப்பன் என்ற பொறுப்பில் இருப்பதாக ஆண் உணர வேண்டும். உணர்வு ரீதியாக அவளுக்கு எந்த நிலையிலும் நான் உறுதுணையாக இருப்பேன் என்ற நம்பிக்கையை ஆண் தன் செயலால் உண்டாக்க வேண்டும். உடலளவில் மன அழுத்தங்கள் இன்றி உடலுறவின் வழியாக மகிழ்வுறுவதால் பெண்ணின் பிரசவம் எளிதாகும்.

    தாய்மைக் காலத்தில் உறவுக்கு முன்பும் பின்பும் பிறப்புறுப்புக்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். நம் செயல்களால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதிலும் கவனம் அவசியம். பிரசவத்தை நெருங்கும் போது உடலுறவு கொள்வதால் பிரச்னைகள் ஏற்படுமா என்பதை மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்வது அவசியம்.

    குழந்தைப் பிறப்புக்குப் பின் சில நாட்களிலேயே ஏதாவது ஒரு வகையில் செக்ஸ் வைத்துக் கொள்ள ஆணுக்கு விருப்பம் ஏற்படும். ஆனால் பெண்ணுக்கு குழந்தைப் பிறப்பினால் ஏற்பட்ட உடல் மாற்றங்கள், சோர்வு, தூக்கமின்மை என்று பல விஷயங்களும் அவளை பலவிதமான மனக்குழப்பங்களுக்கு ஆளாக்க நேரும். சுகப்பிரசவம் என்றால் கூட பிறப்புறுப்புப் பகுதியால் சிறிதாக தையல் போட்டிருப்பார்கள்.

    அந்தக் காயம் ஆறும் வரை பெண்ணுடன் தாம்பத்தியம் வைத்துக் கொள்ள முடியாது. அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறந்திருந்தால் சில மாதங்கள் பெண்ணுக்கு ஓய்வு தேவைப்படும். குழந்தை பிறந்த பின் பெண்ணின் மார்பில் பால் சுரப்பு இருக்கும். அடிக்கடி குழந்தை பசிக்கு அழும் போதெல்லாம் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும்.

    பெண் தனது மார்பகத்தை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டியிருக்கும். குழந்தைப் பிறப்புக்கு முன்னும், பின்னும் வரை பெண்ணுக்கு பிறப்புறுப்பில் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு இதனால் அரிப்பு ஏற்படலாம். எனவே இது போன்ற பிரச்னைகள் இருப்பின் மகப்பேறு மருத்துவரிடம் தெரிவித்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    தாம்பத்தியத்தால் பெண்ணுறுப்பில் நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். பனிக்குட சிசுவுக்கு பாதிப்பின்றி தாய்மைக் காலத்திலும் தாம்பத்தியம் தொடரலாம். 
    நாண், சப்பாத்தி, பூரி, சாதத்துடன் சாப்பிட பஞ்சாப் ஸ்பெஷல் தாபா தால் தட்கா அருமையாக இருக்கும். இன்று இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துவரம்பருப்பு - 200 கிராம்
    வெங்காயம் - 200 கிராம்
    தக்காளி - 100 கிராம்
    நெய் - 100 கிராம் (அல்லது தேவைக்கேற்ப)
    சீரகம் - 10 கிராம்
    காய்ந்த மிளகாய் - 10 கிராம்
    நறுக்கிய பூண்டு - 50 கிராம்
    கறுப்பு உளுந்து - 200 கிராம்
    மிளகாய்த்தூள் - 20 கிராம்
    மஞ்சள்தூள் - சிறிதளவு
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - 10 கிராம்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் நெய்விட்டு, சூடானதும், சீரகத்தையும் காய்ந்த மிளகாயையும் சேர்க்கவும்.

    சீரகம் பொரிந்ததும் நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக குழைய வெந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், உப்பு சேர்க்கவும்.

    அடுத்து அதனுடன் வேகவைத்த பருப்பை, சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    கடைசியாக நறுக்கிய கொத்தமல்லித்தழைத் தூவிப் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன் உடல் பாகங்களையும் தயார்படுத்த ஸ்ட்ரெச்சிங், வார்ம் அப் பயிற்சிகள் அவசியமானது தானா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    முன்பு எல்லாம் பாடி பில்டர்கள், விளையாட்டு வீரர்கள் மட்டுமே ஜிம்முக்குச் செல்வார்கள். இன்றோ இல்லத்தரசிகள் முதல் முதியவர்கள் வரை எல்லாதரப்பினரும் ஜிம்முக்குப் படை எடுக்கிறார்கள்.

    பொதுவாக, காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதே மிகவும் நல்லது. வொர்க் அவுட் செய்யும் முன் வெறும் வயிற்றில் இருப்பது நல்லது. குறைந்தபட்சம் சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்த பிறகு வொர்க் அவுட் செய்யலாம்.

    ஜிம்முக்குள் நுழைந்ததுமே சினிமாவில் ஹீரோக்கள் உடற்பயிற்சி செய்வதைப் போல கடினமான வெயிட்ஸ் தூக்குவது, டம்பிள்சை தூக்கி புஜபலம் பார்ப்பது என வீரதீர சாகசங்களில் இறங்காதீர்கள். இதனால், ஒரே நாளில் கை, காலில் சுளுக்கோ ரத்தக்கட்டோ ஏற்பட்டு உடற்பயிற்சியே வேண்டாம் என்று ஜிம்மைவிட்டு ஓடும் மனநிலைக்குச் சென்றுவிடுவீர்கள்.

    கடினமான மெஷின் வொர்க் அவுட்ஸ் எல்லாம் உடலை நன்கு மேம்படுத்தி வைத்திருப்பவர்களுக்கானவை. தொடக்க நிலையில் உடல் தசைகளை உடற்பயிற்சிக்கு ஏற்ப மேம்படுத்த வேண்டியது அவசியம். எனவே, தலை முதல் பாதம் வரை உள்ள எல்லா இணைப்புகளையும், உடல் பாகங்களையும் தயார்படுத்த ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள், வார்ம் அப் பயிற்சிகள் மிகவும் அவசியம்.

    ஜிம் ட்ரெய்னரிடம் கலந்து ஆலோசித்து எத்தனை நாட்களுக்கு வார்ம் அப், ஸ்ட்ரெச்சிங் மட்டும் செய்துகொண்டிருக்க வேண்டும் என முடிவு செய்தபின் அடுத்தகட்ட உடற்பயிற்சிக்குள் நுழையுங்கள். அவரவர் உடல்வாகுக்கு ஏற்ப பயிற்சிகள் மாறுபடும். எந்தவிதமான உடற்பயிற்சி என்றாலும் ஊக்கத்துடன் ஈடுபட வேண்டியது அவசியம். ஜிம் ட்ரெய்னரின் பரிந்துரை இல்லாமல் நீங்களாக கண்டதையும் தூக்கி பயிற்சி செய்து உடலைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். 
    நம்முடன் பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்ட கைப்பைகளில் நமது தேவைகள் மட்டுமல்லாது, ஆரோக்கியமும் ஒளிந்திருக்கிறது. கைப்பைகளின் ஆரோக்கியத்திற்கும், சுத்தத்திற்கும் சில வழிகள்...
    அழகிய கைப்பை உங்கள் அடையாளங்களில் ஒன்று. அன்றாடத் தேவை என்றாலும், அவசரத் தேவையென்றாலும், நமது கைகள் முதலில் தேடுவது கைப்பையைத்தான். ஏனெனில் பணமாக இருக்கலாம் அல்லது அடையாள அட்டையாக, உணவுப் பொருளாக, மேக்கப் உபகரணங்களாக, இப்படி தேவையான எதுவாக இருந்தாலும், எல்லாம் கைப்பைக்குள்தான் அடைக்கலமாகி இருக்கும். நம்முடன் பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்ட கைப்பைகளில் நமது தேவைகள் மட்டுமல்லாது, ஆரோக்கியமும் ஒளிந்திருக்கிறது. நாம் கைப்பைகளை கவனமாக பாதுகாப்பதுடன், சுத்தமாகவும் பராமரிக்க வேண்டும். கைப்பைகளின் ஆரோக்கியத்திற்கும், சுத்தத்திற்கும் சில வழிகள்...

    எங்கே வைக்கிறோம்?

    உணவு விடுதிக்குச் செல்கிறீர்கள் அல்லது பொது இடங்களில் அமர்கிறீர்கள், அல்லது வேலைக்குச் சென்று சோர்வாக வீடு திரும்பியதும் நீங்கள் செய்யும் முதல் வேலை, அருகில் உள்ள மேஜையில் அல்லது தரையில் உங்கள் கைப்பையை வைப்பீர்கள், அப்படித்தானே? ஆரோக்கியம் விரும்புபவர்கள் இனி அப்படிச் செய்ய வேண்டாம். உலகில் அதிகமான கிருமிகள் தங்குமிடமாக இருப்பது இந்த மேஜை மற்றும் தரைப் பரப்புதான். வெளியே சென்றால் கைப்பையை உங்கள் மடியிலேயே வைத்துக் கொள்ளலாம். அல்லது அதை மேஜையில் தொங்கவிடும் கொக்கி (ஹூக்) சாதனத்தை வாங்கி பயன்படுத்துங்கள். வீட்டிற்கு வந்தால் ஹேங்கரில் தொங்கவிடலாம். அதற்கு முன்பாக, பையின் உள்ளே கனமான பொருட்கள் இருந்தால் எடுத்துவிடுங்கள். அது பையின் ஆயுளை நீட்டிக்கும்.

    சுத்தம் செய்கிறீர்களா?

    நாம் துவைத்துப் பயன்படுத்தாத பொருட்களில் கைப்பையும் ஒன்றாக இருக்கலாம். பலவித கைப்பைகள் துவைத்து பயன் படுத்த முடியாத பொருட்களால் தயாரிக்கப்பட்டிருக்கலாம். முடிந்தவரை துவைத்துப் பயன்படுத்தும் வகையிலான பைகளை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது. எந்தவகை கைப்பையாக இருந்தாலும் பருத்தித் துணி கொண்டு துடைத்துப் பயன்படுத்தலாம். சிலவகை பைகளை எண்ணெய் தொட்டு அல்லது அதற்கான பாலிஷ் கொண்டு துடைத்தால் மினுமினுப்பு பெற்றுவிடும். துவைக்க முடிந்த கைப்பைகளை அவ்வப்போது சுத்தம் செய்து பயன்படுத்துங்கள். கைப்பையின் உள்ளே மேக்கப் சாதன பொருட்களால் கசிவு, கறை, அழுக்குகள் படிந்திருந்தால் நிச்சயம் துவைத்துப் பயன்படுத்துங்கள். குறிப்பாக கைப்பிடியில் சுத்தத்தை பராமரிப்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது.

    எல்லா கைப்பைகளும் ஒன்றல்ல...


    ஒவ்வொரு கைப்பையின் தரமும், தன்மையும் மாறுபடும். தோல்பை, துணிப்பை, ரெக்சின் பை, சணல்பை என ஒவ்வொரு வகை பையும் வேறுபட்ட தன்மையும், தரமும் கொண்டிருக்கும். அவற்றின் தன்மைக்கேற்ப பராமரித்து பயன்படுத்த வேண்டும். அதுதான் அதன் ஆயுளை நீட்டிக்கும். உதாரணமாக தோல் பைகளை சுத்தம் செய்ய தனியே ‘லெதர் கிளீனர்’கள் கிடைக்கின்றன. அதன் மூலம் சுத்தம் செய்தால்தான் அது புதிதுபோல பளிச்சிடும்.

    பாதுகாப்பு உறை அவசியம்...

    கைப்பையில் வைக்கும் அனைத்து பொருளுக்கும் பாதுகாப்பு உறை அவசியம். உதாரணமாக, ரசாயனங்கள், திரவங்கள் போன்ற பொருட்களை கைப்பையில் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதை ஒரு பிளாஸ்டிக் கவர் அல்லது காகித உறை சுற்றி உள்ளே பாதுகாப்பாக வைக்கலாம். மேக்கப் உபகரணங்களைக்கூட இப்படி ஒரு பாதுகாப்பு உறையுடன் கைப்பையில் வைத்தால் அது பையின் ஆயுளை அதிகமாக்கும். கறைகளும், அழுக்குகளும் படியாது. பல்வேறு கைப்பைகள், கறை காக்கும் உறையுடன் வெளிவருவது குறிப்பிடத்தக்கது. ‘டிஸ்யூ பேப்பர்’களை கறைபடியாமல் தடுக்க பயன்படுத்தலாம்.



    கவனமாக திறந்து மூடுங்கள்...


    ஜிப்களின் பலமே கைப்பைகளின் ஆயுளை தீர்மானிக்கின்றன. கைப்பைகளை திறக்க வேண்டிய அவசியம் ஏற்படும்போது சமதள பரப்பில் வைத்து நிதானமாக ஜிப்பை திறந்து மூட வேண்டும். சாய்வாக வைத்துக் கொண்டோ, தொங்கவிட்டுக் கொண்டோ திறக்கக்கூடாது. திறப்பின் இரு பக்கங்களும் நேராக இல்லாமல் வைத்துக் கொண்டு மூடுவது எளிதில் ஜிப்கள் பழுதாகிவிட காரணமாகும். உள்ளே அதிக எடையுள்ள பொருட்களை வைத்துக் கொண்டு தொங்கவிடுவதாலும் ஜிப் எளிதில் பழுதாகிவிடும்.

    கசியும் பொருட்களும், அறையும்...

    கசியும் பொருட்களே சீக்கிரம் கைப்பைகளை மாற்றவேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு விதமான பொருட்களை வைப்பதற்கும் தனித்தனி பிரிவுகள், அறைகள் கொண்ட கைப்பைகள் என்றால் இந்தப் பிரச்சினையை குறைக்கலாம். சிந்தும், கசியும் பொருட்களை அதற்குரிய அறையில் வைத்து பராமரிக்கலாம். அறைகள் இல்லாத கைப்பைகளில் பகுதிகளை பிரிப்பதற்காக ‘ேஹண்ட்பேக் லைனர்’ சாதனங்கள் சந்தையில் கிடைக்கும். அதனை வாங்கிப் பயன்படுத்துங்கள்.

    ஆரம்பத்திலேயே சரி செய்வது...

    ரெடிமேடு துணிகளைப்போல, கைப்பைகளையும் வாங்கிய உடன் கூடுதலாக ஒரு தையல் போட்டு பயன்படுத்த முடிந்தால் நீண்ட ஆயுளுடன் உழைக்கும். அதே நேரத்தில் தையலில் விரிசல், ஜிப் சிக்கல், கைப்பிடியின் இணைப்புகளில் விரிசல் ஏற்படுவது போன்ற பழுதுகளை ஆரம்பத்திலேயே சரிசெய்வதும் கைப்பையின் ஆயுளை அதிகரிக்கும்.

    மாற்றிக் கொண்டே இருங்கள்...


    கைப்பையில் வைக்கும் பொருட்களை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள். இடம் மாற்றம் செய்து, எடுத்து வையுங்கள். நீங்கள் அதிகமாக கைப்பையை பயன்படுத்த வேண்டியதிருந்தால் கூடுதல் பைகளை பயன்படுத்துவதுடன், அவ்வப்போது பைகளை மாற்றி பயன்படுத்துங்கள். குறிப்பாக ஷாப்பிங் செல்ல, காய்கறி வாங்க, உறவினர் வீட்டிற்கு, வேலை தொடர்பான ஆவணங்களை சுமக்க என அந்தந்த சூழலுக்கேற்ற தரமான பைகளை பயன்படுத்துவது நல்லது.

    வழக்கமாக செய்யும் தவறுகள்...

    எப்போதும் பைகளை தோளில் சுமப்பது, தரையில் வைப்பது, அதிக எடையை பையில் சுமப்பது, தாழ்வாக தொங்கவிடுதல், கைப்பிடியின் உறுதியை சோதிக்காமல், மெல்லிய கைப்பிடியில் அதிக பாரம் ஏற்றுதல், எல்லாவற்றையும் ஒரே பையில் திணித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவற்றைத் தவிர்த்தால் கைப்பை களின் ஆயுள் கெட்டியாகும். 
    வெஜிடபிள் அவல் உப்புமாவானது மிகவும் சுவையாக இருப்பதுடன், அதில் உள்ள காய்கறிகள் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தையும் தரவல்லது. இன்று அதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    அவல் - 1 கப்
    கேரட் - 2
    பட்டாணி - 1/4 கப்
    வறுத்த வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
    பெரிய வெங்காயம் - 1
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
    மல்லி தூள் - 1/4 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது
    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு...


    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    கடுகு - 3/4 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை



    செய்முறை :

    கேரட், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கேரட் மற்றும் பட்டாணியை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    பின்னர் அவலை நீரில் போட்டு, அவல் நீரில் மூழ்கும் வரை ஊற வைக்க வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் அதில் வெங்காயம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் வேக வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து, மசாலாப் பொருட்கள் காய்கறியுடன் சேருமாறு நன்கு கிளறி விட வேண்டும்.

    பின் ஊற வைத்துள்ள அவலை பிழிந்து, நீரை முற்றிலும் வெளியேற்றிவிட்டு, வாணலியில் சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி, கொத்தமல்லி மற்றும் வேர்க்கடலையைத் தூவி ஒருமுறை பிரட்டி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான வெஜிடபிள் அவல் உப்புமா ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பொது இடங்களில் இருக்கும் வை-பைகள் பாதுகாப்பானவை அல்ல என்பது நாம் அறிந்ததே. அதனால் தான் பொது இடங்களிலுள்ள வை-பையைப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கைகள் தொடர்ந்து விடுக்கப்படுகின்றன.
    வை-பை இல்லாத வாழ்க்கையை இப்போது நினைத்துப் பார்க்க முடிவதில்லை. ‘எங்கெங்கு காணினும் வை-பையடா’ என்னும் அளவுக்கு விமான நிலையங்கள், ரெயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ஓட்டல்கள், உணவு விடுதிகள் என எல்லா இடங்களிலும் வை-பை வசதிகள் இருக்கின்றன. பொது இடங்களில் இருக்கும் வை-பைகள் பாதுகாப்பானவை அல்ல என்பது நாம் அறிந்ததே. அதனால் தான் பொது இடங்களிலுள்ள வை-பையைப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கைகள் தொடர்ந்து விடுக்கப்படுகின்றன. அப்படியே பயன்படுத்தினாலும், அதைக்கொண்டு முக்கியமான வங்கிப் பரிவர்த்தனைகள் போன்றவற்றை நடத்தக் கூடாது.

    பொது இடங்களிலுள்ள வை-பையை எக்காரணம் கொண்டும் ‘ஆட்டோ கனெக்ட்’ மோடில் சேமிக்கக் கூடாது. அதுபோல பொது இட வை-பைகளைப் பயன்படுத்திய பின்னர் நமது பிரவுசர்களில் இருக்கின்ற குக்கிகளையும், ஹிஸ்டரியையும் முழுதாக அழித்து விடவேண்டும்.

    பொது இடங்களில் இருக்கின்ற வை-பைகளைப் பயன்படுத்துவது ஆபத்தானது எனும் புரிதல் இப்போது பெரும்பாலானவர்களுக்கு உண்டாகி இருக்கிறது. எனவே அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர்கள் எடுத்து விடுகின்றனர். ஆனால் வீட்டில் வந்து வை-பையை இணைக்கும் போது, ‘ஆஹா இது நமக்கே நமக்கான வை-பை. இதில் யாரும் நுழைய முடியாது’ எனும் இறுமாப்புடன் வேலையைத் தொடங்குவோம். அதற்கு அச்சாரமிடும் வகையில் வீட்டுக்குள் நாம் நுழையும் முன் நம்முடைய போன்கள் ஆட்டோமேட்டிக்காக வை-பையுடன் இணைந்து விடுகின்றன‌. லேப்டாப், டேப்லெட் என எல்லாமே எப்போதும் வை-பையுடன் இணைந்து தான் இருக்கின்றன.

    ‘இதுவும் பாதுகாப்பு இல்லையப்பா’ என நம்முடைய நம்பிக்கையின் உச்சந்தலையில் சுத்தியல் கொண்டு அடித்துச் சொல்கிற விஷயம் தான் இந்த வை-ஜாக்கிங். அதாவது நாம் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கின்ற நமது வை-பை கூட மிக எளிதான தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்பதே வை-ஜாக்கிங் சொல்கிற செய்தி. நமது வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கின்ற நபர்கள் நினைத்தால் நமது வீட்டிலுள்ள வை-பைக்குள் நுழைய முடியும். நமது வீட்டு வை-பையை அவர்கள் விருப்பம் போல பயன்படுத்த முடியும் என்பது தான் ஆரம்ப அதிர்ச்சி.

    ‘எனக்கு தான் ஆயிரம் ஜி.பி. லிமிட் இருக்கே, அடுத்த வீட்டுக்காரர் கொஞ்சம் எடுத்துட்டு போகட்டும்’ என சும்மா இருந்து விட முடியாது. வீட்டுக்குள் நுழையும் திருடன் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து விட்டு போவதில்லை. கையில் கிடைப்பதையெல்லாம் சுருட்டி எடுத்துக் கொண்டு தான் போவான். அதே போல, நமது நெட்வொர்க்குக்குள் ஒருவர் நுழைந்து விட்டால் நமது கணினி, மொபைல் என நம்மை சுற்றி இருக்கும் கருவிகளில் இருக்கின்ற அத்தனை தகவல்களையும் திருடி செல்லும் வாய்ப்புகள் உண்டு.

    இப்போதெல்லாம் நம்முடைய பரம ரகசிய விஷயங்கள் கூட மொபைலிலோ, கணினியிலோ தான் ஓய்வெடுக்கும். நமது நெட்வொர்க்கிற்குள் நுழைகின்ற நபரிடம் நமது வங்கிக் கணக்கின் விவரங்கள், பாஸ்வேர்ட் போன்றவை கிடைத்தால் நமது வங்கியை துடைத்து சுத்தம் செய்து விடுவார்கள். அதே போல தனிப்பட்ட விஷயங்களைத் திருடிக் கொண்டால் அதன் மூலம் நமக்கு தேவையற்ற மன உளைச்சலோ, பெரும் நஷ்டமோ உருவாக்கலாம்.

    இது எப்படி நடக்கிறது ? நாம் வீடுகளில் பயன்படுத்துகின்ற பிரவுசர்களில் ‘பாஸ்வேர்ட்’ ஆட்டோ சேவ் ஆக இருக்கும். அதாவது ஒருமுறை கடவு சொல் கொடுத்து திறந்தால் போதும், அடுத்த நொடியே நம்முடைய கடவு சொல்லை சேமித்து வைத்துக்கொள்ளட்டுமா..? என்ற சலுகை திரையில் தோன்றும். நாமும் நம்முடைய சவுகரியத்திற்காக, அத்தகைய ஆட்டோ சேவ் சலுகையை பயன்படுத்தியிருந்தால்.... அதில் நம்முடைய கணக்கு விவரங்களும், கடவுசொல் விவரங்களும் பிரவுசரில் சேமிக்கப்பட்டிருக்கும்.

    இதற்கும் நமது வீடுகளில் இருக்கும் மோடத்திற்கும் இடையேயான தகவல் பரிமாற்றம் ‘அன்.என்கிரிப்டர் ஹைச்.டி.டி.பி’ அதாவது ‘குறியீடுகளாய் மாற்றப்படாத நேரடியான தகவல் பரிமாற்றமாய்’ இருக்கும். நமது மோடத்தையும், நமது மொபைல் மற்றும் கணினியையும் ஆட்டோமேட்டிக்காக இணைக்கும் ‘இன்டர்நெட் பாஸ்வேர்ட்’ தகவல்களும் இப்படி பாதுகாப்பில்லாமல்தான் இருக்கின்றன.

    இந்த பிரவுசர் ‘ஆட்டோசேவ்’ மற்றும் ‘அன்.என்கிரிப்டட்’ தகவல் பரிமாற்றம் இரண்டும் சேர்ந்து தான் நமது வை-பை இணைப்பை வலுவிழக்க வைக்கின்றன. இதைப் பயன்படுத்தி வெளியிலிருக்கும் ஒருவர் நமது கணினியில் ஒரு பிரவுசரை லோடு செய்யவும், அதன்மூலம் நமது இணைய பாஸ்வேர்ட் தகவல்களை பிறருக்கு அனுப்பி வைக்கவும் முடியும். மிக எளிய வகையில் இந்த ஹேக்கிங் நடக்கும். அது மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும்.



    ஸ்யூயர் கிளவுட் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான எலியட் தாம்சன் என்பவர் இந்த அச்சுறுத்தலை முதன் முதலாய் கண்டுபிடித்துச் சொன்னது கடந்த மார்ச் மாதம்தான். பல மாதங்களுக்குப் பிறகு இப்போது அந்த வை-ஜாக்கிங்கின் வீரியம் நிறுவனங்களுக்கும், மக்களுக்கும் புரிய ஆரம்பித்திருக்கிறது. சில நிறுவனங்கள் தங்களுடைய பிரவுசர்களிலுள்ள ஆட்டோ சேவ் ஆப்ஷனை விலக்க முடிவு செய்திருக்கின்றன.

    இந்த வை-ஜாக்கிங் நடக்க வேண்டுமெனில் சில விஷயங்கள் நடந்திருக்க வேண்டும். அவற்றை அறிந்து கொள்வது நாம் பாதுகாப்பாக இருக்க உதவும்.

    முதலில் நமது வை-பை ஆன் நிலையில் இருக்கும் போது தான் இந்த தாக்குதல் நடக்கும். இரண்டாவது, நாம் முன்பு எப்போதாவது வேறு ஒரு பொது வை-பையில் இணைந்திருக்க வேண்டும். அது ‘ஆட்டோ ரிகனக்ட் ஆப்ஷனில்’ இருக்க வேண்டும். மூன்றாவது குரோம், ஓப்பேரா போன்ற பிரவுசர்களைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். நான்காவது, நமது போனில் வை-பை தானாக இணையும் விதத்தில் இருக்க வேண்டும். இவை எல்லாமே சர்வ சாதாரணமாய் இருக்கக் கூடிய விஷயங்கள். எனவே தான் இந்த அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு நமக்கு அவசியமாகிறது.

    சரி, இதிலிருந்து தப்பிப்பது எப்படி?

    1. ‘இன்காக்னிடோ மோடு’ தெரியுமா ? பிரவுசரில் உள்ள ஒரு ஆப்ஷன் இது. இதில் நுழைந்தால் நமது பாஸ்வேர்ட் போன்ற தகவல்கள் சேமிக்கப்படாது. அதைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது. இதை பிரைவேட் பிரவுசிங் என்றும் சொல்வார்கள்.

    2. பழைய வெர்ஷன் பிரவுசர்களையெல்லாம் மாற்றி புதியவற்றை இன்ஸ்டால் செய்யுங்கள். அல்லது பிரவுசரின் புது வெர்ஷனை இன்ஸ்டால் செய்யுங்கள்.

    3. உங்களுடைய எல்லா பிரவுசர்களில் இருந்தும் ஹிஸ்டரி (தேடல் வரலாறு), குக்கீஸ் போன்றவற்றை அழியுங்கள்.

    4. நெட்வொர்க் ஆட்டோகனெக்ட் ஆப்ஷனை அழித்து விடுங்கள்.

    5. பொது இட வை-பைகளைத் தவிருங்கள்.

    6. ‘பர்சனல் பயர் வால்’ எனப்படும் பாதுகாப்பு வளையத்தை உங்களுடைய வீட்டு நெட்வொர்க்கிலும் இணையுங்கள்.

    7. வை-பை மோடத்தை சுவர் அருகிலோ, ஜன்னல் அருகிலோ வைக்காமல் வீட்டிற்கு உள்ளே வையுங்கள். வெளியிட இணைப்பு அச்சுறுத்தலை அது கொஞ்சம் குறைக்கும்.

    8. ரொம்ப பாதுகாப்பு அவசியமெனில் வி.பி.என். பயன்படுத்தலாம். நெட்வொர்க்கை அது அதிக பாதுகாப்பு உடையதாக்கும்.

    9. உங்கள் வை-பை ரவுட்டரை பரிசோதியுங்கள். செக்யூர்ட், என்கிரிப்டட் நிலையில் அது இல்லையேல் மாற்றுங்கள்.

    10. இவ்வளவும் செய்தபின் உங்களுடைய நெட்வொர்க் பாஸ்வேர்டை உடனடியாக மாற்றுங்கள். ஏற்கனவே உங்கள் வை-பையை யாரேனும் கவர்ந்திருந்தால் பாஸ்வேர்டு மாற்றுவது ஒன்றே வழி.

    கட்டுரையாளர்: சேவியர்
    ×