என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    குழந்தைகளின் எதிர்காலம் கருதி சேமிக்கும் பழக்கம் பலரிடம் இருந்தாலும், கல்விச் செலவுக்காக சேமிக்கும் பழக்கம் வெகுசில பெற்றோரிடம் மட்டுமே உள்ளது.
    குழந்தைகளின் எதிர்காலத்தில் அக்கறை கொள்ளாத பெற்றோர்களே கிடையாது. குழந்தைகளின் எதிர்காலம் கருதி சேமிக்கும் பழக்கம் பலரிடம் இருந்தாலும், கல்விச் செலவுக்காக சேமிக்கும் பழக்கம் வெகுசில பெற்றோரிடம் மட்டுமே உள்ளது. அதனால்தான் வட்டி, கல்விக்கடன் என வாங்கி சிரமப்படுகிறார்கள். பெற்றோரின் சுமையை குறைக்க மாணவர்களான நீங்களும் சேமிக்கலாம். கல்வி சேமிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய சிறு கண்ணோட்டம்...

    பெற்றோர், குழந்தைகளின் எதிர்கால கல்விக்கான சேமிப்பை அவர்கள் சிறுவயதாக இருக்கும்போதே தொடங்க வேண்டும். அப்படி விழிப்புணர்வற்ற நிலையில் பெற்றோர் இருந்தால் மாணவர்களான நீங்கள் சாதுர்யமாக செயல்பட்டு சேமிக்கத் தொடங்க வேண்டும். இதற்காக நிதி ஆலோசகரின் உதவியை நாட வேண்டும் என்பதில்லை. உங்கள் அன்றாட செலவுக்கு கொடுக்கும் பணத்தில், அவசியமற்றதை வாங்கி பணத்தை வீணடிக்காமல் சேமித்து வைத்தாலே உங்கள் தேவைகள் பலவற்றை சாதிக்க முடியும். சிறுவயதில் இருந்தே நீங்கள் உண்டியல் பழக்கத்தை கொண்டிருந்தால் உங்கள் பள்ளித் தேவையில் சரிபாதிக்குமேல் உங்கள் சேமிப்பிலேயே ஈடுகட்ட முடியும். மாணவர்களான நீங்கள் உங்கள் பெற்றோரின் சுமையறிந்து சேமிககும் பழக்கத்தை உடனே கடைப்பிடிப்பதை வழக்கமாக்குங்கள்.

    பெற்றோரின் வருவாயில் 3 முதல் 5 சதவீதத்தை எதிர்கால கல்விக்காக சேமிக்க வேண்டும். இரண்டு குழந்தைகள் இருந்தால் 6-7 சதவீதம் வரை சேமிப்பதை வாடிக்கையாக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். அவர்கள் பள்ளி செல்ல தொடங்கிவிட்டால், கல்விக்காக செலவிடும் தொகை உங்கள் வருவாயில் 20 முதல் 25 சதவீதம் வரை எட்டிவிடும். படித்த பெற்றோரே இதை அறிந்திருப்பார்களா? என்பது சந்தேகம்தான். எனவே உங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை நீங்கள்தான் முதல் தலைமுறை கல்வியாளர் என்றால், பெற்றோருக்கு சேமிப்பின் அவசியத்தை உணர்த்துங்கள்.

    பெற்றோர் தேர்ந்தெடுக்கும் பள்ளியைப் பொறுத்து படிப்புச் செலவு அதிகரிக்கலாம், குறையலாம். ஆனால் முறையாக இந்தத் தொகை சேமிக்கப்படாவிட்டால் அது வீட்டு பட்ஜெட்டின் வேறு திட்டத்தில் முடக்கம் ஏற்பட காரணமாக அமைந்துவிடும் வாய்ப்பு உண்டு என்பதை பெற்றோருக்கு விளக்குங்கள். அடிப்படைத் தேவையான சொந்த வீடு கனவு, மகிழ்ச்சிக்கான சுற்றுலா செலவு, உறவு பேணுதலுக்கான செலவுகளை, கல்விச் செலவுத் தொகை விழுங்கிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அது கடன் சுமையுடன், மனச்சுமையையும் அதிகரிக்கும்.

    அதற்காக சிறுசிறு செலவுகளில் கவனமாக இருங்கள். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் முன்னுரிமை தந்து செலவு செய்யுங்கள். ஆடம்பர செலவுகளை தவிர்க்க பழகுங்கள். பெற்றோருக்கும் சொல்லிக் கொடுங்கள். மிச்சமாகும் சில்லறைத் தொகையைக்கூட உண்டியலில் போட்டுவைத்து, மாதம் ஒருமுறை சேமிப்பில் செலுத்திவிடலாம்.



    பொருட்கள் வாங்கச் செல்லும்போது, ஒன்றுக்கு இரண்டாக வாங்குவது, எப்போதாவது தேவைப்படும் என்று இப்போதே வாங்கி வைத்தல் போன்ற அலட்சியமான பழக்கத்தை மாற்றுவது சேமிப்பை அதிகமாக்கும். அதே நேரம் வாங்கும் பொருட்களின் தரம் (உதாரணம் ஸ்கூல் பேக், காலணி, உடை), பணம் விரயமாவதை தடுக்கும். எனவே தரமான பொருளை வாங்கி மீண்டும் மீண்டும் ஒரே பொருளுக்காக செலவிடும் தொகையை மிச்சப்படுத்தி அவசியமான சேமிப்புத் தொகையை அதிகரிக்கலாம்.

    சுவைக்காக வெளியில் சாப்பிட செலவிடும் தொகை, உணவைத் தாண்டிய உபரி செலவுகள், ஆடம்பர பொருட்களா பள்ளி கல்லூரிக்கு செல்ல பைக், கார் கேட்பது, விலை உயர்ந்த செல்போன் கேட்பது, அதற்காக பெற்றோரை கடன் வாங்க வைப்பது , பின்னர் வட்டிக்கு பெரும் தொகையை செலுத்துவது போன்றவற்றை கணக்கிட்டுப் பார்த்தால் அது நீங்கள் சேமிக்கும் தொகையைவிட பல மடங்கு அதிகமாக இருப்பதை தெரிந்து கொள்ள முடியும். இவற்றை கட்டுப்படுத்த நீங்்களும் பெற்றோருக்கு உதவலாம்.

    மொத்தத்தில் செலவு திட்டமிட்டதாக இருந்தால், சேமிப்பு காலியாகாது. சேமிப்பே உங்கள் பெற்றோரின் கனவுகளுக்கும்,உங்களின் கல்விககும், எதிர்காலத்திற்கும் சிறந்தது.

    சிறுகச் சேர்த்து பெருக வாழ் என்பது பெரியோர் வாக்கு. அது என்றும் பொய்ப்பதில்லை. சேமிப்பை நிரந்தர சேமிப்புகள், தற்காலிக சேமிப்புகள் என இருவகையாக பிரித்துக் கொள்ளுங்கள். எதிர்கால கல்விக்கான சேமிப்பை நிரந்தர சேமிப்பாக கருதுங்கள். அந்த தொகையை எந்த சூழ்நிலையிலும் எடுத்து செலவு செய்ய முடியாத வகையில் டெப்பாசிட் செய்ய வேண்டும். வங்கிகளிலும், காப்பீட்டு நிறுவனங்களிலும் எதிர்கால கல்விக்கான சேமிப்புத் திட்டங்கள் இருப்பது பற்றி பெற்றோருக்கு தெரியப்படுத்துங்கள்.

    “என் குழந்தைக்கு கல்வி உதவித் தொகை கிடைக்கும்”, “என் பிள்ளை புத்திசாலி, நிறைய மதிப்பெண்கள் பெற்று முன்னுரிமை பெற்றுவிடுவதால் எனக்கு நிறைய செலவு வராது” அதனால் நான் சேமிக்கத் தேவையில்லை என்று நினைப்பதும், “நான் அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளியில் எனது குழந்தையை சேர்க்க மாட்டேன், எனவே எதிர்கால கல்வியைப் பற்றி பின்னால் பார்த்துக் கொள்ளலாம்” என்பது போன்ற எண்ணங்களை பெற்றோர் கொண்டிருக்கலாம். அவர்களிடம் எதிர்கால கல்விக்காகசேமிப்பதன் அவசியத்தை உணர்த்துவது புத்திசாலி மாணவர்களான உங்களின் பொறுப்பு. சேமிப்பில் உங்கள் கனவும் அடங்கியிருக்கிறது என்பதையும் மறந்துவிடாதீர்கள!
    இதய நோய் ஏற்பட பல்வேறு அபாய காரணிகள் உள்ளன. இதய நோய் வருவதற்கான காரணத்தையும், அதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் பார்க்கலாம்.
    இதய நோய் ஏற்பட பல்வேறு அபாய காரணிகள் உள்ளன. இதய நோய் உருவான பெரும்பாலான மக்களுக்கு புகைப்பிடித்தல், நீரழிவு, உயர் ரத்த அழுத்தம், குடும்ப பரம்பரை, உடல் பருமன், உடல் உழைப்பு இன்மை மற்றும் கொழுப்பு அதிகமாதல் போன்றவையே அபாய காரணிகளாகின்றன. கொழுப்புப் பொருள், கொலஸ்டிரால் மற்றும் பிற பொருட்கள் ரத்தநாளச் சுவற்றில் படிவதே தமனிக் குழாய் ஒடுங்குவதற்கும் மெல்லியதாவதற்கும் காரணமாகிறது.

    இதுகுறித்து பிரசாந்த், சிறப்பு மருத்துவ மனையின் இதயவியல் சிறப்பு மருத்துவர் கே.சந்திரசேகரன் கூறியதாவது:-

    இதய நோய், பக்க வாதம், இதய செயலிழப்பு போன்றவைக்கு உயர் ரத்த அழுத்தமும் ஒரு முக்கிய அபாய காரணியாகும். நல்ல கொழுப்பை உயர்த்த உதவும் ஈஸ்டரோஜன் பெண்களை இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது.

    ஆனால் மாதவிடாய் நிறுத்தத்திற்கு பிறகு பெண்களும் ஆண்களை போன்றே பாதிக்கப்படுகின்றனர். இருந்தபோதும் நீரிழிவு அல்லது கொலஸ் டிரால், எல்டிஎல் கொலஸ் டிரால் அளவு அதிகமாகும். மேலும் குடும்ப பரம்பரை காரணமாக இதய நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

    புகைப்பிடிப்பது ரத்த நாள உள்சுவரைச் சிதைத்து, தமனிகளில் கொழுப்பு படிவதை அதிகரிக்கச் செய்கிறது. நிகோடின் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து ரத்த அழுத்தத்தை உயர்த்தச் செய்கிறது.

    நெஞ்சுவலி அல்லது அசவுகர்யம் (எரிச்சல், அழுத்தம், இறுக்கம் அல்லது கனம்), தொண்டை, வாய், தோள் அல்லது முதுகு, முழங்கை, மணிக்கட்டில் அசவுகர்யம், சுவாச குறைபாடு, குமட்டல், வியர்த்தல் போன்றவை இதய அடைப்புக்கான முக்கிய அறிகுறிகளாகும்.

    சரிவிகித உணவை உட்கொள்ளுதல், போதிய உடற்பயிற்சி, ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் போன்றவற்றை தொடர்ந்து கண்காணித்து வருதல், நீரிழிவை கட்டுக்குள் வைத்திருத்தல், எடையைசரியாக பராமரித்தல் போன்றவை இதயநோய் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பாலுடன் சில பொருட்களை சேர்த்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். பாலுடன் எந்த பொருட்களை சேர்த்து சாப்பிட கூடாது என்று பார்க்கலாம்.


    மீனை, பாலுடன் ஒன்றாக எடுத்துக்கொள்வது தவறு. மீன் மற்றும் பாலை ஒன்றாக எடுத்துக்கொள்ளும்போது, ரத்தம் கெட்டுப்போய், உடலின் நுண்ணியப் பாதைகள் அடைக்கப்படுகின்றன. சீரான ரத்த ஓட்டம் பாதிப்பு அடையும்.

    அதேபோல், பாலுடன் வாழைப்பழத்தைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இதனால், உடலில் சளி அதிகம் தேங்கும்.

    தர்பூசணி சாப்பிட்ட பிறகு பால் குடித்தால், அது அசெளகரியம் தருவதோடு, வாயுத்தொல்லையையும் ஏற்படுத்தும்.

    பால் மற்றும் முட்டை இரண்டிலும் அதிகப் புரதம் இருப்பதால், இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால், செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும்.

    கீரையும் பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகளில் ஒன்று. கீரைகளில் செல்லுலோஸ் (Cellulose) அதிகம் உள்ளதால், செரிமானம் நடைபெற இயல்பாகவே அதிகம் நேரம் எடுக்கும். கீரையில் உள்ள டானின் (Tanin), பாலை திரளச்செய்வதால், செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்…
    வெங்காயம், முந்திரி, சிக்கனில் பக்கோடா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இறாலை வைத்து அருமையான பக்கோடா செய்வது எப்படி என்று பாக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 200 கிராம்
    தக்காளி - 1
    வெங்காயம் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு
    சோம்பு தூள் - அரை ஸ்பூன்
    கரம்மசாலா தூள் - அரை ஸ்பூன்
    மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
    தனியா தூள் - கால் ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    பஜ்ஜி மாவு - 1 கப்
    அரிசி மாவு - 3 ஸ்பூன்.



    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பஜ்ஜி மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    இறாலை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் இறால், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    இறால் நன்றாக வெந்ததும் அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கி அதை பஜ்ஜி மாவில் போட்டு நன்றாக கலக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலந்து வைத்துள்ள மாவை டீஸ்பூன் எடுத்து சிறிது சிறிதாக ஊற்றவும்.

    வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் இறால் பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தாய்ப்பால் கொடுப்பதற்கும் புட்டிப்பால் கொடுப்பதற்கும் வித்தியாசங்கள் உண்டு. அதனால் புட்டிப்பால் குடிக்கும்பொழுது, குழந்தைகளிடம் சில விஷயங்களில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.
    குழந்தைக்கு எவ்வளவு பால் கொடுக்க வேண்டும் என்பதை பற்றிய கவலை எப்போதுமே நமக்குத் தேவையில்லை. போதுமான அளவு பால் குடித்ததும் குழந்தை தானாகவே குடிப்பதை நிறுத்தி கொள்ளும். தாய்ப்பால் கொடுப்பதற்கும் புட்டிப்பால் கொடுப்பதற்கும் வித்தியாசங்கள் உண்டு. ஆனால் குழந்தை தாய்ப்பால் குடிக்கும்பொழுது சில உடலசைவுகள், சைகைகள் மூலம் அவர்களுக்கு என்ன வேண்டும் என தாய்க்கு உணர்த்திவிடும். ஆனால் புட்டிப்பால் குடிக்கும்பொழுது, குழந்தைகளிடம் சில விஷயங்களில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.

    குழந்தை பால் குடித்து முடித்த பின்னர் குழந்தையை தோள் மீது கிடத்தி அல்லது மடியில் நேராக உட்கார வைத்து மெதுவாக அதன் முதுகில் தட்டி கொடுங்கள். குழந்தை ஏப்பம் விடட்டும்.

    பால் கொடுத்த பிறகு குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க வேண்டுமா? வேண்டாமா? என சில தாய்மார்கள் சந்தேகம் எழுவதுண்டு. பொதுவாக பார்முலா உணவுகளில் உப்பு, புரதம், கார்போஹைட்ரேட்டுக்கள் போன்ற அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருக்கும் என்பதால் பால் மட்டுமே போதுமானது. ஆனால் காய்ச்சலுடனோ அல்லது வெயில் காலமாகவோ இருந்தால் குழந்தைக்கு நாவறட்சி ஏற்படும். இந்த சமயங்களில் அவ்வப்போது தண்ணீர் கொடுப்பது நல்லது.

    பாட்டில் பால் குடிக்கும் குழந்தைக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படும். குறைவாக பால் குடிக்கும் குழந்தைக்கும் மலச்சிக்கல் வரும். இதை தவிர்ப்பதற்கு குழந்தைக்கு சரியான விகிதத்தில் பால் புகட்டுவது, போதுமான தண்ணீர் கொடுப்பது நல்லது.

    குழந்தை குடித்து முடித்த பால் புட்டியை திறந்து, தண்ணீரில் கழுவாமல் அப்படியே சூடாக இருக்கும் வெந்நீரில் போட வேண்டும்.  புட்டியில் இருக்கும் பால் வெந்நீரில் கலந்து அது வெண்மையாகும். பின் அந்த புட்டியை எடுத்து பச்சைத்தண்ணீர் விட்டு நன்கு அலச வேண்டும்.
    வாழைப்பழத் தோலை பயன்படுத்தி முகப்பரு பிரச்சினைக்கு தீர்வு காணலாம். சரும பொலிவையும் மெருகேற்றலாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    வாழைப்பழத் தோலை பயன்படுத்தி முகப்பரு பிரச்சினைக்கு தீர்வு காணலாம். சரும பொலிவையும் மெருகேற்றலாம். அப்படி நல்ல பலன் தரும் செய்முறைகளை இப்போது காணலாம்.

    * பாலை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். ஓரளவு உலர்ந்ததும் காட்டன் துணியால் முகத்தை துடைக்க வேண்டும். அதன் பிறகு வாழைப்பழத்தோலின் உள் பகுதியை எடுத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளிச்சிடும்.

    * இரண்டையும் சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தினமும் ஒருதடவை இப்படி செய்தால், முகப்பருக்களை போக்கலாம். சருமத்தில் ஈரப்பத தன்மையை தக்கவைக்கலாம். சரும வறட்சியை கட்டுப்படுத்தலாம். முகப் பருவால் ஏற்படும் வீக்கத்தை தடுக்கலாம்.

    * இரண்டையும் சேர்த்து பசை போல் குழைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து நீரில் கழுவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்துவந்தால் முகப்பரு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணலாம்.

    * இரண்டையும் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வரலாம். முகப்பரு பிரச்சினையால் ஏற்படும் வீக்கத்தை குறைக்க இது உதவும். இரண்டு நாட் களுக்கு ஒருமுறை மேற்கண்ட கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.

    * இக்கூழை தடவி 15 நிமிடம் ஊரவிட்டு பின் கழுவினால் சருமத்திற்கு பொலிவு சேர்க்கலாம்.  
    சிவப்பு அரிசி உடலுக்கு வலிமை தரும். நார்ச்சத்து, பி.காம்ப்ளக்ஸ் இந்த உணவில் அதிகளவு இருக்கிறது. இன்று இந்த அரிசியில் ஆப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிவப்பு அரிசி - அரை கிலோ
    தேங்காய் - 1
    தேங்காய் துருவல் - 2 கப்
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    வெல்லம் - சிறிய துண்டு
    தண்ணீர், உப்பு - சிறிதளவு



    செய்முறை :

    சிவப்பு அரிசியை நன்றாக கழுவி 4 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் தேங்காய் துருவல், வெல்லம், வெந்தயம் சேர்த்து கிரைண்டரில் நைசாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவை சிறிது உப்பு சேர்த்து கலந்து புளிக்க விடவும்.

    தேங்காயை துருவி பால் எடுத்து கொள்ளவும்.

    ஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து மாவை ஊற்றி சட்டியை கையால் பிடித்து மாவை சுற்றி பரவ விட்டு மூடி வைக்கவும். ஒரு நிமிடம் கழித்து திறந்தால் சுவையான ஆப்பம் ரெடி.

    சுவையான சத்தான இந்த ஆப்பத்தை தேங்காய் பாலுடன் பரிமாறவும்.

    தேங்காய் பால் பிடிக்காதவர்கள், குருமா, பாயா வைத்து சுவைக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோயில்களுக்கு செல்வது, பூஜை செய்வது என்று கூறி பெண்கள் மாதவிடாயை தள்ளி போடுவதற்கு மாத்திரை வாங்கி உபயோகிக்கின்றனர். இதனால் ஏற்படும் பாதிப்புகள் ஏற்படும்.
    கோயில்களுக்கு செல்வது, பூஜை செய்வது என்று கூறி இயற்கையாக நேரும் மாதவிடாயை பெண்கள் பலர் தள்ளி போடுகின்றனர். கோயிலுக்கு செல்ல வேண்டும், வீட்டில் விஷேச நாட்களில் பூஜை செய்ய வேண்டும் என்று பல பெண்கள் ஒவ்வொரு மாதமும் இயற்கையாக ஏற்படும் மாதவிடாய்யை மூடநம்பிக்கையின் காரணமாக தள்ளி போடுகின்றனர்.

    பெரும்பாலும் பலரது வீட்டில் மாதவிடாய் காலத்தில் பெண்களை தனியே ஒரு அறையில் தங்க வைப்பர். அவர்களுகென்று தனி தட்டு, படுக்கை அனைத்தும் தனியாக தீண்டதகாதது போல் உணர்ந்து வெளியில் இருக்க வைப்பர்.

    இதனால் பூஜை செய்ய முடியாத நிலை ஏற்படும். அதனால் பலரும் இதனை தள்ளி போடுவதற்கு மருந்தகத்தில் மாத்திரை வாங்கி உபயோகிக்கின்றனர். இதனால் விளைவுகள் ஏற்படும் என்பது தெரிந்தும் அதனை தொடர்ந்து செய்கின்றனர். தற்போது உள்ள பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கிறதா என்றே பலரும் யோசனை செய்கிறார்கள்.

    முன்னோர்கள் மாதவிடாய் காலத்தில் பெண்களை தனியாக அறையில் இருக்க வைத்தனர் என்றால் அந்நேரத்தில் ஓய்வு தேவை அதன் காரணத்தாலே அவர்களுக்கென்று தனியாக ஒரு இடம் கொடுத்தார்கள். ஆனால் நாளடைவில் அது தீட்டாக மாறி பலரும் தீண்டதாகத பெண்கள் என்றே சித்தரித்தனர்.

    மாதவிடாய் நேரத்தில் எந்த ஒரு தெய்வமும் கோயிலுக்கு வரக்கூடாது, பூஜை செய்யக் கூடாது என்று எந்த இதிகாசத்திலும் குறிப்பிடவில்லை. இப்போது உள்ளவர்கள் சாமி மீது அதீத மூடநம்பிக்கையில் இருக்கின்றனர். ஆனால் அதில் ஒரு பங்கு கூட உடல்நலம், ஆரோக்கியம் என்பதில் கவனம் செலுத்தவில்லை.

    இம்மாத்திரை உட்கொள்வதினால் மூளை செயலிழப்பு, பக்கவாதம், வலிப்பு நோய் போன்றவற்றை வரக்கூடும். அதேபோல் இதனை ரத்த அழுத்தம், தலைவலி, ஒற்றை தலைவலி, உடல் பருமன் ஆகியோர் கண்டிப்பாக உட்கொள்ள கூடாது. பெண்கள் இதனை சாப்பிடுவதால் பெரும் பிரச்சனைகளை பின்நாளில் சந்திக்க நேரும்.

    தவறான புரிதலுக்காக, சாமி என்பதற்காகவும் மூடநம்பிக்கையின் உச்சத்திற்கு சென்று இது போல் அநாவசியமான செயல்கள் செய்வதை பெண்கள் தவிர்க்க வேண்டும்.

    மாதவிடாய் தள்ளி போடுவதற்கு மாத்திரை உட்கொள்வது தவறு! உடல்நலத்திற்கு தீங்கு!
    நாடிஷோதன பிராணாயாமம் இதயத்துடிப்பை சீராக்குகிறது. மேலும் இரத்தம் மற்றும் நுரையீரலில் படிந்துள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்துகிறது.
    நாடி சுத்தி என்பது சுவாசத்தை சுத்தம் செய்யும் ஆசனம் ஆகும். முதலில், விரிப்பில் ரிலாக்ஸாக உட்கார்ந்து சாதாரணமாக மூச்சை இழுத்து விடவேண்டும். பின்னர் வலதுபக்க மூக்கை வலக்கையின் பெருவிரலால் அழுத்திக் கொள்ளவும்.

    இடது மூக்கின் வழியாக மூச்சை உள்ளிழுக்கவும். இப்போது இடது மூக்கை மோதிரவிரல், சுண்டுவிரல் இரண்டாலும் அழுத்திக் கொள்ளவும். வலது மூக்கை திறந்து, இழுத்த மூச்சை வலது மூக்கால் மெதுவாக வெளியேற்றவும்.

    அடுத்து வலது மூக்கை திறந்து, இடது மூக்கை மூடிக் கொள்ள வேண்டும். இப்போது வலது மூக்கால் மூச்சை இழுத்து இடது மூக்கால் மெதுவாக வெளியேற்றவும். இப்போதுதான் ஒரு சுற்று முழுமை அடைகிறது. இதுபோல் 5 முறை முழுமையாகச் செய்ய வேண்டும்.

    பலன்கள்

    இந்த நாடிஷோதன பிராணாயாமம் இதயத்துடிப்பை சீராக்குகிறது. மனப்பதற்றத்தைக் குறைக்கிறது. மூளையின் இரு அரைக்கோளங்களையும் ஒத்திசைவாக செயல்பட வைக்கிறது. இதனால் மூளை அமைதியடைகிறது.

    இரத்தம் மற்றும் நுரையீரலில் படிந்துள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்துகிறது. நரம்பு மண்டலங்களின் செயல்பாட்டைத் தூண்டுகிறது. ஆழ்ந்து மூச்சுவிடுவதால் ரத்தத்துக்கு ஆக்சிஜன் நிறைய கிடைக்கிறது. கவனச்சிதறல்கள் விலகி மூளை ஆற்றல் பெறுகிறது.

    இன்று காலமாற்றத்தால் இயற்கையை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறோம். சத்தான உணவுகளை சாப்பிட்டால் நோயற்ற வாழ்வு வாழ முடியும்.
    நாம் உணவு குறித்து நிறைய ஆய்வுகள் நடத்தி இருக்கிறோம். ஆதி மனிதனின் உணவு குறித்தும், நவீன மனிதனின் உணவு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.

    ஐந்து, ஆறு வகையான தானியங்களை மட்டுமே இன்று மனிதர்கள் உண்கிறார்கள். கிழங்குகளை நாம் முற்றிலும் கைவிட்டுவிட்டோம். கிழங்காக இன்று உருளைக் கிழங்கு மட்டுமே பாக்கியிருக்கிறது. தவிர்க்க முடியாமல் வீடுகளில் ஒரு துண்டு சேப்பங்கிழங்கோ, சேனைக் கிழங்கோ சாப்பிடலாம்.

    அதே நேரத்தில் பாப்வா நியூகினியாவில் ஆதிவாசிகள் ஏறத்தாழ 160 வகையான தாவரங்களை வளர்த்து உணவாகப் பயன்படுத்துகிறார்கள். இதில் என்ன வித்தியாசம் என்று கேட்டால், நம் முன்னோர்கள் ஒரு ஆகாரத்தை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழவில்லை.

    ஒரு குரங்கு என்னவெல்லாம் உண்கிறது என்று பார்க்கும்போது அவை பழங்களை மட்டும் உண்ணவில்லை, ஒரு பழத்தை மட்டும் தின்னவில்லை. மொட்டுகளைத் தின்பதுண்டு. பூக்களைத் தின்கிறது. எறும்பைப் பிடித்து தின்கிறது. பல விதமான உணவுகளை செரிப்பதற்கானதுதான் அவற்றின் உணவுக் குழாய். இதில் இருந்து நாம் ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும். சத்தான உணவுகளை சாப்பிட்டால் நோயற்ற வாழ்வு வாழ முடியும்.

    சமீப காலம் வரை நாம் உணவு குறித்த வி‌ஷயத்தில் வளர்ந்திருந்தோம். கேரளத்து மக்கள் பிரத்தியேகமாகச் சத்தான உணவு உண்கிறார்கள். குறிப்பாக இயற்கையான உணவுகளை உண்ண ஆர்வம் காட்டுகிறார்கள்.

    நாமும் மூன்று வேளையும் அரிசி உணவு உண்டவர்கள் அல்ல. காலையில் நாம் கிழங்குகள் சாப்பிட்டோம். மதியம் சாப்பாடு, நிறையக் காய்கறிகள். மாலை நேரத்தில் கஞ்சியும் பயறும். பு‌ஷ்டியான உணவு அது.

    இன்று காலமாற்றத்தால் இயற்கையை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறோம். இறைச்சிகளை அதிகம் வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாக்கிறோம். அதனையே சமைத்து சாப்பிடுகிறோம். இது எவ்வளவு தூரம் ஆரோக்கியத்திற்கு கெடுதல் செய்கிறது என்று நாம் நினைத்துப் பார்ப்பதில்லை.

    நமக்குப் பல்வகை உணவுகள் தேவைப்படுகின்றன. அதை நாமே மறுக்கும் நிலையில் சத்து குறைவு ஏற்பட்டு நோய்கள் உண்டாகின்றன என்பதே உண்மை.
    தனிநபர் கடனையும் தங்க நகை கடனையும் ஒப்பிட்டால் எதைப் பெறுவது எளிதானது, அதிக அனுகூலம் மிக்கது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
    நிதி நெருக்கடியின்போது, திடீர் பொருளாதார நெருக்கடியின்போது நமக்கு உடனே நினைவில் வருபவை, கடன்கள். அதிலும் தனிநபர் கடன், தங்க நகை கடன் போன்றவை உடனடியாகக் கைகொடுப்பவை.

    தனிநபர் கடனையும் தங்க நகை கடனையும் ஒப்பிட்டால் எதைப் பெறுவது எளிதானது, அதிக அனுகூலம் மிக்கது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்...

    தனிநபர் கடன், தங்க நகை கடன் இரண்டுக்கும் ஏறக்குறைய ஒரே அளவிலான வட்டி விகிதம்தான். தங்க கடன் பொதுவாக 9.6 முதல் 24 சதவீதம் இடையிலான வட்டி விகிதத்தில் அளிக்கப்படுகிறது. தனிநபர் கடன் 10.99 முதல் அதிகபட்சம் 18 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.

    தங்க கடன் அதிகபட்சம் 1.5 கோடி ரூபாய் வரை அளிக்கப்படும் நிலையில், தனிநபர் கடன் 40 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே அளிக்கப்படுகிறது. உடனடியாகப் பணம் தேவைப்படும்போது தங்க கடனே எளிமையாகக் கிடைக்கும். தங்க கடனை 1000 ரூபாய் முதல் பெற முடியும். ஆனால் தனிநபர் கடன் வேண்டும் என்றால் குறைந்தது 5000 ரூபாயை கடனாகப் பெற வேண்டும்.

    தங்க கடன் வாங்கும்போது அடமானம் வைக்கும் தங்க நகையே உத்தரவாதம் என்பதால் கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்டவை பெரியதாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. ஆனால் இதுவும் குறிப்பிட்ட அளவிலான தொகை வரை கடன் பெறும்போது மட்டுமே ஆகும். அதிக மதிப்புடைய கடன் பெறும்போது கண்டிப்பாக கிரெடிட் ஸ்கோர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

    மறுபக்கம், தனிநபர் கடனுக்குக் கண்டிப்பாக கிரெடிட் ஸ்கோர் தேவைப்படும். கிரெடிட் ஸ்கோரை அடிப்படையாகக் கொண்டு வட்டி விகிதம் மற்றும் கடனைச் செலுத்தும் கால அளவு மாறும். கடன் பெற முயலும்போது குறைந்த கிரெடிட் ஸ்கோர் இருந்தால் கடன் விண்ணப்பம் ரத்தாக வாய்ப்பு உண்டு. இல்லாவிட்டால், வட்டி விகிதம் உயரும். குறைந்த கிரெடிட் ஸ்கோர் உள்ளபோது வங்கிகளிடம் வட்டி விகிதம் போன்றவை தொடர்பாக எந்தப் பேரமும் செய்ய முடியாது.

    தங்க நகை கடனுக்கு அடையாளம் மற்றும் முகவரிச் சான்றை சமர்ப்பித்தால் போதும். உடனே கடன் கிடைக்கும். இதுவே தனிநபர் கடன் என்றால் முகவரி மற்றும் அடையாளச் சான்று, வருமான சான்றிதழ், வங்கி அறிக்கை போன்றவைச் சமர்ப்பிக்க வேண்டும். தங்க நகை கடன் வழங்குபவர்கள் அதை திருப்பிச் செலுத்த பல்வேறு வகையில் வளைந்து இடம் கொடுப்பார்கள். வட்டி விகிதம், மாதம் போன்றவற்றில் சலுகைகள் கிடைக்கும். இது போன்றவை தனிநபர் கடன் வாங்கும் போது கிடைக்காது.

    தங்க நகை கடனை ஓராண்டு காலத்துக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். இதுவே தனிநபர் கடனை 5 வருடங்களுக்குச் செலுத்த வேண்டும். அதற்கு ஏற்றாற்போல வட்டி விகிதம் உயரும். தங்களது வருவாய் மற்றும் மாத தவணை செலுத்துக்கூடிய திறனைப் பொறுத்து கடனைப் பெறலாம்.

    தங்க நகை அடமான கடன் பெறும்போது தங்கத்தை நேரடியாக வங்கியில் அல்லது நிதி நிறுவனத்தில் சமர்ப்பித்து அதன் சுத்தம் மற்றும் மதிப்பைக் கணக்கிட்ட பிறகே கடன் பெற முடியும். எனவே, நீங்கள் விரும்பும் வங்கி நிறுவனத்தின் கிளை உங்கள் அருகில் இல்லை என்றால் சிரமம் ஏற்படும்.

    ஆனால் இன்றைக்கு, வீட்டில் அமர்ந்தபடியே ஆன்லைன் மூலம் தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்து வங்கி அலுவலர்களை வீட்டுக்கு வரவைத்து கடனைப் பெற முடியும்.

    இவையெல்லாம், தனிநபர் கடன், தங்க நகை கடன் குறித்த ஒப்பீட்டு விவரங்கள். இந்த இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்று முடிவு செய்ய வேண்டியவர்கள் கடனைப் பெற விரும்பு பவர்கள்தான்.

    கிரெடிட் ஸ்கோர் குறைவாக உள்ள, தங்கம் வைத்துள்ளவர்கள் சில மணி நேரங்களில் கடன் வேண்டும் என்றால் தங்க நகை கடனை தேர்வு செய்யலாம். அதுவே கிரெடிட் ஸ்கோர் அதிகமாக வைத்திருப்பதுடன், கடனைச் செலுத்துவதற்கான கால அளவு 3 வருடத்துக்கும் அதிகமாக வேண்டும் என்பவர்கள் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
    இந்த முட்டை அடையை சைடிஷ்ஷகாவும் சாப்பிடலாம். மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம். இன்று இந்த முட்டை அடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை -  4
    பச்சை மிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
    புதினா - 1 /2 ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    புதினா - சிறிதளவு
    சோம்பு - 1 /4 ஸ்பூன்
    பொட்டுக் கடலை - 2 ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    மிக்சியில் தேங்காய், பச்சை மிளகாய், பொட்டுக் கடலை, சோம்பு, கறிவேப்பிலை, புதினா இவற்றை நைசாக அரைத்த பின்னர், வெங்காயத்தை வைத்து ஒரு சுற்று சுற்றி (கொரகொரப்பாக) எடுத்துக்கொள்ளவும்.

    அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உப்பு போட்டு நன்றாக கலக்கவும்

    அடுப்பில் தோசைகல்லை வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி முட்டை கலவையை ஒரு கரண்டியை அதில் ஊற்றவும். தீயை மிதமாக வைத்து, கருகவிடாமல் வெந்ததும் திருப்பி போடவும். பின்புமறு பக்கமும் வெந்ததும் எடுத்து விடலாம்.. எல்லா முட்டைக் கலவையையும் இப்படியே ஊற்றி எடுக்கவும்.

    சூப்பரான முட்டை அடை ரெடி.

    இதனை எந்த சாதத்துக்கும் தொட்டு சாப்பிடலாம். சூடாக சாப்பிட்டால், சுவை சூப்பரோ..சூப்பர். மாலைநேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×