search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இதய நோயை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
    X

    இதய நோயை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

    இதய நோய் ஏற்பட பல்வேறு அபாய காரணிகள் உள்ளன. இதய நோய் வருவதற்கான காரணத்தையும், அதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் பார்க்கலாம்.
    இதய நோய் ஏற்பட பல்வேறு அபாய காரணிகள் உள்ளன. இதய நோய் உருவான பெரும்பாலான மக்களுக்கு புகைப்பிடித்தல், நீரழிவு, உயர் ரத்த அழுத்தம், குடும்ப பரம்பரை, உடல் பருமன், உடல் உழைப்பு இன்மை மற்றும் கொழுப்பு அதிகமாதல் போன்றவையே அபாய காரணிகளாகின்றன. கொழுப்புப் பொருள், கொலஸ்டிரால் மற்றும் பிற பொருட்கள் ரத்தநாளச் சுவற்றில் படிவதே தமனிக் குழாய் ஒடுங்குவதற்கும் மெல்லியதாவதற்கும் காரணமாகிறது.

    இதுகுறித்து பிரசாந்த், சிறப்பு மருத்துவ மனையின் இதயவியல் சிறப்பு மருத்துவர் கே.சந்திரசேகரன் கூறியதாவது:-

    இதய நோய், பக்க வாதம், இதய செயலிழப்பு போன்றவைக்கு உயர் ரத்த அழுத்தமும் ஒரு முக்கிய அபாய காரணியாகும். நல்ல கொழுப்பை உயர்த்த உதவும் ஈஸ்டரோஜன் பெண்களை இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது.

    ஆனால் மாதவிடாய் நிறுத்தத்திற்கு பிறகு பெண்களும் ஆண்களை போன்றே பாதிக்கப்படுகின்றனர். இருந்தபோதும் நீரிழிவு அல்லது கொலஸ் டிரால், எல்டிஎல் கொலஸ் டிரால் அளவு அதிகமாகும். மேலும் குடும்ப பரம்பரை காரணமாக இதய நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

    புகைப்பிடிப்பது ரத்த நாள உள்சுவரைச் சிதைத்து, தமனிகளில் கொழுப்பு படிவதை அதிகரிக்கச் செய்கிறது. நிகோடின் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து ரத்த அழுத்தத்தை உயர்த்தச் செய்கிறது.

    நெஞ்சுவலி அல்லது அசவுகர்யம் (எரிச்சல், அழுத்தம், இறுக்கம் அல்லது கனம்), தொண்டை, வாய், தோள் அல்லது முதுகு, முழங்கை, மணிக்கட்டில் அசவுகர்யம், சுவாச குறைபாடு, குமட்டல், வியர்த்தல் போன்றவை இதய அடைப்புக்கான முக்கிய அறிகுறிகளாகும்.

    சரிவிகித உணவை உட்கொள்ளுதல், போதிய உடற்பயிற்சி, ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் போன்றவற்றை தொடர்ந்து கண்காணித்து வருதல், நீரிழிவை கட்டுக்குள் வைத்திருத்தல், எடையைசரியாக பராமரித்தல் போன்றவை இதயநோய் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×