என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    ஜவ்வரிசியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உண்டு. இதை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதால், என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன என்று அறிந்து கொள்ளலாம்.
    ஜவ்வரிசியில் முழுக்க முழுக்க கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இது நம்முடைய உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதோடு, எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது. இதை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதால்,என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன தெரியுமா?

    பார்ப்பதற்கு முத்துக்கள் போல் பளபளளவென இருக்கும் ஜவ்வரிசியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உண்டு. மிக எளிதாக ஜீரணமாகக்கூடிய உணவுகளில் ஒன்று. அதனால் ஜவ்வரிசியில் செய்த உணவுகளை தாராளமாக குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். ஜவ்வரிசியை பால் அல்லது தண்ணீரில்  நன்கு வேகவைத்தோ அதோடு சர்க்கரையோ அல்லது மசாலாவோ அவரவர் விருப்பத்துக்கேற்ப சேர்த்து சாப்பிடலாம்.

    அதிக ஆற்றலைத் தரக்கூடியது. காலை சிற்றுண்டிக்கு ஜவ்வரிசி எடுத்துக்கொள்வது நல்லது. அது அன்றைய நாள் முழுக்கவும் தேவையான ஆறு்றலை நமக்கு வழங்கும்.

    ஒரே வாரத்தில் ஒல்லியாக இருக்கும் தேகம், இயற்கையான முறையில் எடையை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதற்கு மிகச்சிறந்த தேர்வாக ஜவ்வரிசி தான்.

    நேரத்துக்கு சாப்பிட  முடியாமல் இருப்பவர்கள் ஜவ்வரிசியை சிறிது சாப்பிட்டால் போதும். நேரத்துக்கு முறையாக பசிக்க ஆரம்பிக்கும். நேரத்துக்கு சரியாக ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டாலே இயற்கையாகவே எடை கூடும்.

    எலும்புகளை ஆரோக்கியமாக்கும். மூட்டுவலியைக் குறைக்கும். பதட்டத்தைக் குறைக்கும். உடற்பயிற்சிக்கு முன், பின் என எப்போதும் இதை உட்கொள்ளலாம்.

    ஜவ்வரிசியில் அதிக அளவிலான புரதம் இருப்பதால், தசைகளை வலுவூட்டவும் செல்களைப் புதுப்பிக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் செய்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.  
    மதியம் எப்போதும் சாம்பார், குழம்பு, ரசம், பொரியல் என்ற செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் இன்று மதியம் தேங்காய் பால் பட்டாணி பிரியாணி செய்து சுவையுங்கள்.
    தேவையான பொருட்கள்:

    பாசுமதி அரிசி - 1 கப்
    பட்டாணி - 1/2 கப்
    வெங்காயம் - 1
    கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
    தண்ணீர் - 1/2 கப்
    உப்பு - தேவையான அளவு

    அரைப்பதற்கு...

    புதினா - 1/2 கப்
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 5
    வரமிளகாய் - 2
    துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி - 1/2 இன்ச்
    பூண்டு - 10 பற்கள்

    தாளிப்பதற்கு...

    நெய் - 1 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    பிரியாணி இலை - 1
    பட்டை - 1/4 இன்ச்
    கிராம்பு - 2 ஏலக்காய் - 1



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும்.

    பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கிளறி விட வேண்டும்.

    பின்பு அதில் பட்டாணி, தேவையான அளவு உப்பு மற்றும் பாசுமதி அரிசி சேர்த்து கிளறி, தேங்காய் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, மீண்டும் கிளறி, தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, குக்கரை மூடி 3 விசில் போட்டு இறக்கவும்.

    விசில் போனதும் குக்கரை திறந்தால், தேங்காய் பால் பட்டாணி பிரியாணி ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சுருள் முடி உள்ளவர்கள் தங்களின் முடிகளை எளிமையாக கையாள முடியாது. சுருள் முடியை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம்.
    சுருள் முடி உள்ளவர்கள் தங்களின் முடிகளை எளிமையாக கையாள முடியாது. ஏனெனில் அவர்களின் முடிகள் அடர்த்தியாக காணப்பட்டாலும், முடிகளின் நுனிகளில் பிளவுகள் அதிகமாக ஏற்பட்டு, வேகமாக வறண்டு, அடிக்கடி சிக்கல் விழும்.

    இதன் காரணமாக எந்த ஹேர் ஸ்டைலும் ஒத்து வராமல் இருக்கும். பார்ட்டிகள் அல்லது விழாவிற்கு செல்லும் போது சுருள் முடியானது நம் கைகளுக்கு அடங்காமல் இருக்கும்.

    சுருள் முடியை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம்.

    சுருள் முடி உள்ளவர்கள் தங்கள் கூந்தலுக்கு பொருத்தமான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். இதனால் கூந்தல் வறட்சியை தடுக்க முடியும்.

    தினமும் தலைக்கு குளிப்பதால், முடிகளில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் சுருள் முடி உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குளித்தால் போதுமானது.

    அடர்த்தியாக இருக்கும் சுருள் முடியானது, தலைக்கு அலங்காரம் செய்யும் போது, கைகளுக்கு பிடிபடாமல் இருக்கும். இதனால் முடிகளுக்கு அலங்காரம் செய்வதற்கு முன் சிலிக்கான் சீரம் தலையில் தடவினால், கூந்தல் அடங்கி நீளமாகவும் தெரியும்.

    பெண்கள் மாதவிடாய் காலத்தில் வைட்டமின் சி, இரும்புசத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அவை அதிக ரத்த இழப்பு, திரவ இழப்புகளை ஈடு செய்யும்.
    பெண்கள் மாதவிடாய் காலத்தில் வைட்டமின் சி, இரும்புசத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அவை அதிக ரத்த இழப்பு, திரவ இழப்புகளை ஈடு செய்யும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் துணை புரியும்.

    அதிக வலி, தசைப் பிடிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணமாகவும் அமையும். முளைகட்டிய தானியங்கள், கீரை, வெல்லம், பழங்கள், நட்ஸ்கள், முழு தானியங்கள் போன்றவற்றை சாப்பிடலாம். சமையலில் மஞ்சள் பொடி, இஞ்சி, சீரகம், லவங்கப்பட்டை போன்றவற்றை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    ஒருசில வகை உணவுகளை மாத விடாய் காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டியதும் அவசியம்.

    காபி பிரியர்கள் அதனை தவிர்ப்பது அவசியமானது. அது ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்திவிடும். அதனால் இதயத்துடிப்பும் அதிகரிக்கும். வீண் டென்ஷன், கவலை போன்ற பாதிப்புகள் உருவாக்கும். காபிக்கு பதிலாக கிரீன் டீ, தக்காளி, கேரட் ஜூஸ் அல்லது சூப் பருகலாம்.

    பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், பன்றி இறைச்சி, ஊறுகாய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக காய்கறி சாலட், கஞ்சி போன்றவற்றை சாப்பிடலாம். வெளி உணவுகளை தவிர்ப்பதும் நல்லது.

    கொழுப்பு நிறைந்த உணவுகள், பர்கர்கள், கிரீம் சார்ந்த இனிப்பு பலகாரங்கள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். மாதவிடாய் நாட்களில் தவறான உணவுகளை சாப்பிடுவது நீரிழப்பு, சரும வறட்சி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக கோதுமை ரொட்டி, சால்மன் மீன்கள், பருப்பு குழம்பு வகைகளை சாப்பிடலாம்.

    பால், பாலாடை கட்டி போன்ற பால் பொருட்களை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக மோர் பருகலாம்.

    நொறுக்கு தீனிகள், பிஸ்கட், சிப்ஸ் போன்ற வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அவற்றில் கொழுப்பு அதிகமாக இருக்கும். அவை ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகப்படுத்தி மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்திவிடும். அதற்கு பதிலாக கேரட், வெள்ளரிக்காய்கள் சாப்பிடலாம்.

    ரொட்டி, பீட்சா போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். அவை மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். செரிமான செயல்பாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    பதப்படுத்தப்பட்ட பவுடர்களில் தயாராகும் சூப்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பலகாரங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அவற்றுள் உப்பு அதிகமாக இருக்கும். அதற்கு பதிலாக தயிரை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    வீட்டிலேயே ஜிம் அமைத்து, ஃபிட்டான உடலைப் பெற விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    ஜிம், ஃபிட்னெஸ் பயிற்சி மையங்களுக்குச் சென்றால்தான் ஃபிட்டான உடலைப் பெற முடியுமா என்ன? அப்படியெல்லாம் இல்லை. பலருக்கு ஜிம்முக்குச் செல்ல நேரமே இருப்பது இல்லை. அதனால், உடற்பயிற்சிக் கருவிகளை வாங்கி, வீட்டிலேயே குட்டி ஜிம் அமைத்துவிடுகிறார்கள். வீட்டிலேயே ஜிம் அமைத்து, ஃபிட்டான உடலைப் பெற விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து முக்கியமான விஷயங்கள்...

    படுக்கை அறை, பூஜை அறைபோல முடிந்தவரை ஜிம்முக்கு எனத் தனி அறை ஒதுக்குங்கள். ஜிம் மேட் தரையில் பதிக்க வேண்டியது அவசியம். ஜிம் கருவிகள் மாசுபடுவதைத் தவிர்க்க வேண்டும். எனவே, ஜிம் அமைக்கும் அறையில் ஜன்னல்களை வைக்காதீர்கள். அதே சமயம் வெளிச்சத்துக்கு கண்ணாடித் திரை வைப்பது நல்லது. ஜிம் அறையில் குளிர்சாதன வசதி இருப்பது நல்லது.

    தரையில் செய்யும் பயிற்சிகள் அவசியம்.  எனவே, ஜிம் அமைக்கும் அறையில் தரையில் இரண்டு மூன்று பேராவது ஒரே சமயத்தில்  நின்ற நிலையிலோ, உட்கார்ந்த நிலையிலோ, படுத்த நிலையிலோ உடற்பயிற்சி செய்ய ஏதுவாக இடம் ஒதுக்குவது அவசியம்.

    வீட்டில் எத்தனை பேர் உள்ளனர், யார் யாரெல்லாம் ஜிம் பயன்படுத்துவார்கள், அவர்களுக்கு என்ன மாதிரியான பயிற்சிக் கருவிகள் தேவைப்படும் என்பதைத் திட்டமிட்டு ஜிம் கருவிகளை வாங்க வேண்டும். வயதானவர்கள், பெண்களுக்கு கார்டியோ பயிற்சிக்கான சாதனங்கள் சிறந்தவை. இளைஞர்களுக்கு, கார்டியோ மற்றும் உடலை உறுதிப்படுத்தும் கருவிகளை வாங்கலாம்.

    வீட்டிலேயே பயிற்சி செய்வதற்கு முன்னர், உடற்பயிற்சியாளர், பிசியோதெரப்பி நிபுணரிடம் ஆலோசனைகளைக் கேட்டு, ஜிம் அறையை அமைக்கலாம். ஜிம்முக்குச் சென்று ஒவ்வொரு ஜிம் கருவியையும் எப்போது, எப்படி, எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்பதை நன்றாகக் கற்றுக்கொண்ட பின்னரே கருவிகளை வாங்கிப் பொருத்தி, பயன்படுத்த வேண்டும்.

    டிரெட்மில் போன்றவை பேட்டரியில் இயங்கக்கூடியவை. சுமார் 1.5 கிலோ வாட் திறனில் இயங்கக்கூடிய டிரெட்மில் பயன்படுத்துவது நல்லது. விலை குறைந்தது என்பதற்காக மட்டும் ஜிம் கருவிகளை வாங்கிவிடக் கூடாது, வாரன்டி இருக்கிறதா, டிரெட்மில்லில் ஏதேனும் பிரச்னை என்றால், வீட்டுக்கு வந்து சரிசெய்து கொடுப்பார்களா என்பதை எல்லாம் நன்கு விசாரித்த பிறகே வாங்க வேண்டும்.
    கொண்டைக்கடலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று முளைகட்டிய கருப்பு கொண்டைக்கடலையில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முளைகட்டிய கொண்டைக்கடலை (கருப்பு) - ஒரு கப்
    வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    சின்ன வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொண்டைக்கடலையை நன்றாக கழுவி 4 மணி நேரம் ஊறவைத்து நன்றாக ஊறியதும் வேகவைத்து கொள்ளவும்.

    வேக வைத்த கொண்டைக்கடலையில் சிறிதளவு தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

    மீதமுள்ள கடலையை வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும்.

    அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய்விட்டு உருக்கியதும் சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அதனுடன் அரைத்த கொண்டைக்கடலை விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

    மேலே மிளகுத்தூள், தனியாக எடுத்துவைத்த கொண்டைக்கடலை, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து பருகவும்.

    குறிப்பு: இந்த சூப், வளரும் குழந்தைகளுக்கு நல்லது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இயற்கைக்கு முரணான குற்றங்கள் யாராவது ஒருவர் பாலியல் இன்பத்துக்காக தானாக முன்வந்து இயற்கை நெறிக்கு மாறாக ஆணையோ பெண்ணையோ புணர்ந்தால், தண்டனை விதிக்கப்படலாம்.
    இயற்கைக்கு முரணான குற்றங்கள் யாராவது ஒருவர் பாலியல் இன்பத்துக்காக தானாக முன்வந்து இயற்கை நெறிக்கு மாறாக ஆணையோ பெண்ணையோ அல்லது விலங்கையோ புணர்ந்தால், பத்தாண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம். அபராதம் தனி என்று இந்திய தண்டனை சட்டம் 377-வது பிரிவு கூறுகிறது..

    இது தான்அந்தச் சட்டம். இதைத் தான் கடந்த செப்டம்பர் 6-ந்தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ‘செல்லாது செல்லாது’ என தீர்ப்பு சொல்லி, ரத்து செய்துவிட்டது. இது ஏதோ, இன்று உச்ச நீதிமன்றம் உருவாக்கிவிட்ட புரட்சி அல்ல. 2009-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் இதே உத்தரவை பிறப்பித்துவிட்டது.

    அன்று வெகுண்டு எழுந்த உச்ச நீதிமன்றம் இதே உச்ச நீதிமன்றம் தான் ஓரினச்சேர்க்கையை ஒழித்துக்கட்டியது. அதை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுவையும் 2013-ல் தூக்கி எறிந்தது. நாடாளுமன்றமே முடிவெடுத்துக் கொள்ளட்டும் என்று சொன்னது. அங்கு சசி தரூர், ஓரின சேர்க்கைக்கு ஆதரவாக ஒரு நபர் மசோதா கொண்டுவந்தார். அவருக்கு பின்னால் யாரும் நிற்கவில்லை. எனவே, அதை மக்களவை நிராகரித்தது.

    இப்படியே போய்க்கொண்டு இருந்த கதை 2017-ல் ஒரு திருப்பத்தை சந்தித்தது. அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமை என வேறொரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு சொல்லி வைத்தது. இதற்காகவே காத்திருந்த ஓரினச் சேர்க்கையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எல்லாரும் சேர்ந்து தங்களுடைய அந்தரங்கத்துக்காக அதாவது அடிப்படை உரிமைக்காக குரல் கொடுக்க, வந்துவிட்டது

    இறுதியோ இறுதித் தீர்ப்பு. இதில் விசேஷம், ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த குரலில் தீர்ப்பு அளித்திருப்பது. யாருக்குமே மாற்றுக் கருத்து இல்லை. இனி ஆண்கள் ஆண்களோடு இருக்கலாம்; பெண்கள் பெண்களோடு இருக்கலாம். சட்டம், காலத்துக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என கூறியிருக்கின்றனர், இன்னும் வெள்ளைக்காரர்கள் காலத்து கருப்புக்கோட்டை கூட மாற்றாத நீதிபதிகள். ஓர் ஆணும் ஆணும் தனி அறையில் உல்லாசமாக இருப்பது, பிற பெண்களுக்கோ குழந்தைகளுக்கோ எந்தத் தீங்கையும் இழைக்காது என்பதால், அந்த ஆண்களின் தனிப்பட்ட விருப்புரிமை மதிக்கப்பட வேண்டும் என்பது தீர்ப்பின் சாராம்சம்.

    இதே இந்திய தண்டனைச் சட்டத்தின் 494-வது பிரிவு, பலதார மணத்தை தடை செய்கிறது. ஏன் தடை செய்ய வேண்டும்? நான்கு பெண்கள் சம்மதித்தால், நான்பாட்டுக்கு குடித்தனம் நடத்திவிட்டு போகிறேன். இந்தச் சட்டத்துக்கு என்ன வந்தது? அப்புறம் ஏன், கணவனோ மனைவியோ உயிரோடு இருக்கும்போது, இன்னொரு திருமணம் செய்து கொண்டால் ஏழாண்டு சிறைத் தண்டனை என மிரட்டுகிறது? காலத்துக்கேற்ப மா(ற்)றிக்கொள்ள வேண்டியது தானே அந்தச் சட்டமும் நீக்கப்படுமா? தனி மனித சுதந்திரத்தைப் பொறுத்தவரை, சமூகம் என்ன நினைக்கிறது என்றெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை என்பதும் சுப்ரீம் கோர்ட்டின் சீரிய கருத்தே.



    சமூக ஒழுக்கம் என்பது, ஒற்றை மனிதனின் உரிமையில் கூட தலையிட முடியாது என்பது தலைமை நீதிபதி மிஸ்ரா மற்றும் நீதிபதி கன்வில்கரின் வரிகள். சிறப்பு! அப்புறம் ஏன் குஜராத், பீகார் போன்ற மாநிலங்கள் மது குடிப்பதை சட்ட விரோதம் என அறிவித்துள்ளன? தமிழ்நாட்டில் ஆளாளுக்கு மதுவிலக்கு கொண்டு வருவோம் என அச்சுறுத்துகிறார்களே; முதல் கையெழுத்து போடுவோம் என மிரட்டுகிறார்களே; நீதிமன்றங்கள் இதை தட்டிக்கேட்க கூடாதா? நான் குடித்துவிட்டு குப்புறக் கிடப்பது, எந்த தனி மனிதனின் உரிமையில் தலையிடுவதாகும்?

    கணவன்,மனைவி இருக்கும்போது இன்னொரு திருமணம் குற்றம் என்று சட்டம் சொல்கிறது. சரி, கணவன்,மனைவி இருக்கும் ஒருவர், பக்கத்து வீட்டுக்காரருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் அது குற்றமா? இல்லையா? இந்த இடத்தில் யாருடைய தனி மனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுப்பது?

    விபசாரம், தனி மனித உரிமை பட்டியலில் இல்லையா? ஏன் இத்தனை வழக்குகள்? எத்தனை நடிகைகளின் வாழ்க்கை போனது, இத்தகைய வழக்குகளால்! யார் பொறுப்பு? கொஞ்சம் கூட கூச்சமில்லாமல், கையைக் காட்டி அழைத்தார் என்றெல்லாம் எழுதினார்களே, இதை விட அந்தரங்க உரிமை மீறல் வேறென்ன இருக்க முடியும்? உலகத்தின் எந்த மூலையிலும் மது இல்லாமல் இல்லை;

    ஆனால், தமிழகத்தில் அதற்கான தடையை நீக்கிவிட்டு, கடையைத் திறந்துவிட்டதன் பலனை, யாராவது மனசாட்சி உள்ளவர்கள் மறுக்க முடியுமா? அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த கள்ளச்சாராயத்தை ஒழிக்கிறேன் பேர்வழி என்று, தெருவெங்கும் நல்ல சாராயத்தை ஓட விட்டது தான் தீர்வா? முன்பெல்லாம் விஷச்சாராயம் குடித்து, ஆண்டுக்கு பத்து பதினைந்து பேர் தான் இறந்து கொண்டிருந்தார்கள். இன்று, நாட்டிலேயே அதிகம் சாலை விபத்து நடக்கும் மாநிலம் தமிழகம்.

    அதற்கு காரணம் தெரிந்தது தான்; அதனால் தானே போராடினார்கள்.அப்படியே கண்டும் காணாமல் விட வேண்டியது தானே. சட்டமாக்கி, அதைச் சாதகமாக்கி ஏன் அவிழ்த்துவிட வேண்டும்? இந்திய தண்டனைச் சட்டம் 377-ன் கீழ் எத்தனை லட்சம் பேர் சிறையில் வாடினார்கள்? யார் இதுவரைக்கும் தண்டிக்கப்பட்டது? ஒருவரும் இல்லையே.. அப்புறமென்ன? எனவே இது போன்ற பின் விளைவுகளை எல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    அழகிய சிங்கன்

    உங்களின் கவனத்திறன் எப்படி? உங்களிடம் கவனச்சிதறல் இருக்கிறதா? அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த பரிசோதனை மூலம் பார்க்கலாம்...
    சிறந்த மாணவர்களின் பண்புகளில் ஒன்று கவனத்திறன். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போதும், நாமாக பாடம் படிக்கும்போதும் கவனம் சிதறாமல் இருந்தால் நமக்கு எளிதில் பாடங்கள் விளங்கிவிடும். நன்றாகப் படித்தும் பாடங்கள் நினைவில் நிற்காமல் போவதற்கு கவனச்சிதறல் காரணமாக இருக்கலாம். உங்களின் கவனத்திறன் எப்படி? உங்களிடம் கவனச்சிதறல் இருக்கிறதா? அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த பரிசோதனை மூலம் பார்க்கலாம்...

    கேள்விகளுக்கு செல்லலாமா?

    1. ஒரு பாடம் அல்லது பயிற்சி சிரமமாக இருந்தால் அதை உடனே நிராகரிப்பீர்களா?

    அ. ஆமாம், அதுதான் எனக்கு தெரியவில்லையே.
    ஆ. முயற்சித்துப் பார்க்கிறேன், ஆனாலும் விளங்கவில்லை.
    இ. இல்லை. அதை நிச்சயம் தெரிந்து கொள்ள முயற்சிப்பேன். ஆசிரியரிடம் விளக்கம் கேட்பேன்.

    2. பேனா, பென்சில் போன்றவற்றை அடிக்கடி மறந்துவிடுகிறீர்களா? இவற்றை இரவல் வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம் உங்களுக்கு உண்டா?

    அ. மறதி இயல்புதானே, நண்பர்களிடம் இரவல் கேட்பதில் தவறில்லையே.
    ஆ. மறந்துவிட்டால் இரவல் வாங்கித்தானே ஆக வேண்டும்.
    இ. மறக்கமாட்டேன், என்னிடம் அவசர தேவைக்கான கூடுதல் பேனா, பென்சில்கூட இருக்கும்.

    3. ஆசிரியர் பாடம் நடத்தும்போது எழும் சிறு சத்தம் அல்லது வெளிப்புற நிகழ்வு உங்களை ஈர்க்கிறதா?

    அ. அது என்ன? என்று ஜன்னலில் பார்ப்பேன். நண்பனிடம் பேசுவேன்.
    ஆ. ஆசிரியரை கவனிப்பேன். எல்லோரும் வேடிக்கை பார்த்தால் நானும் பார்ப்பேன்.
    இ. மற்றவற்றை கவனிக்க மாட்டேன், திடீர்நிகழ்வுகளை மற்றவர் சொன்னால் கேட்டுக் கொள்வேன்.

    4. நீங்கள் படிக்கும் இடத்தில் டி.வி. ஓடுகிறதா?

    அ. வீட்டில் எல்லாம் இருக்கத்தானே செய்யும். டி.வி. பார்த்துக் கொண்டே படிப்பேன்.
    ஆ. டி.வி. ஓடும், சத்தத்தை குறைக்க சொல்லிவிட்டு படிப்பேன்.
    இ. படிப்பதற்கு தனி இடம் செல்வேன். படிக்கத் தொடங்கினால் டி.வி. போடமாட்டார்கள்.

    5. பாடம் நடத்தும்போது எடுத்த கிறுக்கல் குறிப்புகளை, பின்னர் உங்களால் விளங்கிக் கொள்ள முடிகிறதா?

    அ. குறிப்பு எடுக்க சொன்னதற்காக எழுதுவேன். பிறகு புரிவதில்லை.
    ஆ. விவரமாக குறிப்பெடுக்க நினைப்பேன் முடிவதில்லை.
    இ. ஆம், என் கிறுக்கல்கள், எனக்கு விஷயங்களை விளக்கிவிடும்.

    6. யாராவது பேசும்போது குறுக்கீடு செய்து பேசுகிறீர்களா?

    அ. ஆமாம். நான் என் கருத்தை சொல்ல வேண்டாமா?
    ஆ. பேச தயக்கமாக இருக்கும்.
    இ. இடையில் பேச மாட்டேன். வாய்ப்பு கிடைக்கும்போது என் கருத்துகளை சொல்வேன்.

    7. வகுப்பறை சலித்துவிட்டதா?

    அ. ஆம். ஓய்வே இல்லையே.
    ஆ. வேறு வழியில்லையே.
    இ. படிக்கத்தானே வந்திருக்கிறோம். படிப்பதில்தான் விருப்பம் அதிகம்.

    8. ஒரு கேள்வி கேட்கும் போதே பதிலை உளறிக் கொட்டுவது உண்டா?

    அ. பதில் தெரிஞ்சா சொல்ல வேண்டியதுதானே.
    ஆ. பதில் தெரிந்தாலும் சொல்வதற்கு கூச்சப்படுவேன்.
    இ. என்னை பதில் சொல்ல அழைத்தால் பதில் சொல்வேன். அல்லது அனுமதி பெற்று பதிலளிப்பேன்.

    9. குறிப்புகளை படிக்காமல் விடையளித்திருக்கிறீர்களா?

    அ. தேர்வே பிடிக்காது. விடை எழுத சிரமப்படுவேன்.
    ஆ. குறிப்புகளை மறந்து நிறைய வினாக்களுக்கு விடை எழுதியிருக்கிறேன்.
    இ. இல்லை. குறிப்புகளை படித்த பின்புதான் விடையளிக்க ஆரம்பிப்பேன்.

    10. வீட்டுப்பாடத்தை எப்போது எழுதுவீர்கள்?

    அ. பள்ளி கிளம்பும் முன்பு.
    ஆ. இரவில் தூங்கும் முன்பு
    இ. வீட்டுப்பாடம் முடித்துவிட்டுத்தான் வேறுவேலை.

    11. ஒரு புதிய பயிற்சி வழங்கினால் அதை சரியாக, சீராக செய்து முடிப்பதில் சிரமம் இருக்கிறதா?

    அ. ஆம், அதிக பயிற்சியால் அவதிப்படுகிறேன்
    ஆ. சிரமமாக இருந்தாலும் செய்து முடிப்பேன்.
    இ. இல்லை, புதிய புதிய பயிற்சிகள் உற்சாகம் தருகின்றன

    12. இணையதளத்தில் ஒரு வேலை கொடுத்தால், நீங்களாகவே முயன்று முடித்துவிடுவீர்களா?


    அ. ம்ஹூம், இன்டர்நெட் என்னை குழப்பிவிடும், நண்பர்களின் உதவியுடன்தான் கேட்டு செய்வேன்.
    ஆ. செய்ய முயற்சிப்பேன், சந்தேகம் வந்தால் நண்பர்களிடம் கேட்பேன்.
    இ. என்னால் அது முடியும். தேவையான விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறேன்.

    13. நீண்ட நேரம் கருத்தரங்கம், பயிற்சி வகுப்பில் இருக்க நேர்ந்தால் எப்படியிருக்கும்?

    அ. வெறுப்பாக இருக்கும், அரட்டையடித்து பொழுதுபோக்கி மகிழ்வேன்.
    ஆ. சலிப்பாக இருக்கும். வேறுவழியில்லையே.
    இ. பயனுள்ள கருத்துகளை கவனித்துக் கொண்டே இருப்பேன். அதற்காகத்தானே வந்திருக்கிறோம்.

    14. கொடுத்த பயிற்சி உங்களுக்கு தெரியாதது, விருப்பமில்லாதது என்பது தெரியவரும்போது என்ன செய்வீர்கள்?

    அ. ‘என்னம்மா இப்டி பண்றாங்களேம்மா’ன்னு நினைப்பேன். இடையில் நிறுத்திவிடுவேன்.
    ஆ. தெரிந்ததை செய்வோம் என நினைப்பேன்.
    இ. எப்படியாவது செய்து முடிக்க வேண்டும். அதை தெரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பேன்.

    15. உரையாடும்போது நீங்கள் எப்படி பேசுவதாக மற்றவர்கள் கூறுகிறார்கள்?

    அ. என்னை யாரும், எதுவும் சொல்ல முடியாது.
    ஆ. நினைத்ததை சொல்லிமுடித்துவிடுவேன், மற்றவர்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை.
    இ. நன்றாக பேசியதாக கூறுவார்கள். நிறைய விஷயங்கள் பேசியதாக பாராட்டுவார்கள்.

    16. கவனக்குறைவால் தவறுகள் ஏற்பட்டதை யாராவது சுட்டிக் காட்டினால் என்ன செய்வீர்கள்?

    அ. அவர்களுக்கு வேறு வேலையில்லை என நினைப்பேன்.
    ஆ. தவறுகளை குறைக்க நினைப்பேன், ஆனாலும் முடியவில்லை.
    இ. தவறுகள் வராது. வந்தால் அடுத்தமுறை கண்டிப்பாக சரிசெய்துவிடுவேன்.

    17. பள்ளியில் உங்கள் நடவடிக்கைகள் நாள்தோறும் மாறுகிறதா?

    அ. நான் அப்படித்தான். ‘நமக்குன்னு ஒரு ‘கெத்து’ வேண்டாமா?’
    ஆ. அமைதியாக இருப்பேன், கூச்சம் அதிகம்.
    இ. என் நடவடிக்கைகளை யாரும் விமர்சனம் செய்ததில்லை. நல்ல பெயர் எடுத்திருப்பதாகவே கருதுகிறேன்.

    18. விருப்பமானதை விட்டுக் கொடுக்கவும், அவசியமானதை கடைப்பிடிக்கவும் முடிகிறதா?


    அ. நான் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.
    ஆ. மாற்றங்களை கடைப்பிடிக்க முயற்சிக்கிறேன்.
    இ. தேவையற்றதை விட்டுவிடவும், அவசியமானதை கடைப்பிடிக்கவும் என்னால் முடியும்.

    இப்போது மதிப்பீட்டிற்கு வருவோம். ஒவ்வொரு கேள்வியின் முதலாவது (அ) பதிலுக்கு 2 மதிப்பெண்கள் வழங்கிக் கொள்ளுங்கள். இரண்டாவது (ஆ) பதிலுக்கு 5 மதிப்பெண்கள் வழங்குங்கள், மூன்றாவது (இ) பதிலுக்கு 10 மதிப்பெண்கள் வழங்குங்கள். இப்போது உங்கள் பதில்களுக்கான மொத்த மதிப்பெண்களை கூட்டுங்கள். மதிப்பெண்களுக்கு ஏற்ப கவனத்திறனை மதிப்பிட்டு மாற்றம் செய்து கொள்ளலாம்...

    உங்கள் மதிப்பெண்கள் 60-க்குள் இருந்தால்

    நீங்கள் எதையும் இயல்பாக அணுகும் பண்புள்ளவர். உங்களால் வாழ்வில் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க முடியும். ஆனால் அசட்டையான வேடிக்கை பண்புகளால் கவனத்திறனில் சற்று பின்தங்கியிருக்கிறீர்கள். இருந்தாலும் உங்களுக்கு ஒரு உத்வேகம் வரும்போது துடிப்புடன் செயல்படக்கூடியவர்கள். அப்போது உங்கள் கவனம் சிதறுவதில்லை. எதையும் அலட்சியம் இன்றி அணுகும்போது உங்களை யாரும் வெற்றி கொள்ள முடியாது. விருப்பமுள்ள விஷயங்களில் நீங்கள் காட்டும் அக்கறையை மாணவப் பருவத்தில் படிப்பதற்கும் கவனம் செலுத்தினால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பச்சை காய்கறிகள், கீரைகள், தயிர், முட்டை, மீன் போன்றவை நினைவுத்திறனை அதிகரித்து, கவனச்சிதறலை குறைக்கும்.

    உங்கள் மதிப்பெண்கள் 120-க்குள் இருந்தால்...

    நீங்கள் போட்டி மனப்பான்மை கொண்டவர். கோபம் அதிகமாக வரும். எதையும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் பாடத்தை சீக்கிரமே கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் உண்டு. ஆனாலும் தயக்கம் அதற்கு தடையாய் இருக்கும். நீங்கள் நிதானத்தை கடைப்பிடித்தால் நிறைய சாதிக்கலாம். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். உணவுக்கும் குணாதிசயங்களுக்கும் சம்பந்தம் இருப்பதால் உலர்ந்த பழங்கள், பச்சைக்காய்கறிகள் எடுத்துக்கொள்வது உங்கள் மூளையை சுறுசுறுப்பாக்கி கவனத்திறனை வளர்க்கும்.

    உங்கள் மதிப்பெண்கள் 120-க்கு மேல் இருந்தால்

    நீங்கள் சிறந்த மாணவராக எல்லோர் முன்னிலையிலும் பேசப்படுகிறீர்கள். ஆசிரியர்களின் செல்லப்பிள்ளையாக இருப்பீர்கள். அவர்கள் வாக்கை அப்படியே ஏற்று செய்யும் மனப்பாங்கு கொண்ட நீங்கள் பேச்சுப் போட்டி, எழுத்துப்போட்டி, தேர்வு எல்லாவற்றிலும் சாதிப்பீர்கள். விளையாட்டு போட்டிகளிலும் கவனம் செலுத்தினால் உங்களது திறமை விரிவடையும். ஓட்ஸ் கஞ்சி, பருப்புகள், கொட்டை வகைகள், தானியங்கள், மீன் வகைகளும் எடுத்துக் கொள்வது சிறந்த கவனத்திறனுக்கு துணை செய்யும்.
    மாதம் மூன்று சாக்லேட்டுகளை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் பாதிப்பின் அளவு 13 சதவீதம் குறைவாக இருக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
    கருப்பு சாக்லேட் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாதம் மூன்று சாக்லேட்டுகளை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் பாதிப்பின் அளவு 13 சதவீதம் குறைவாக இருக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    ‘‘அதிலுள்ள கோகோவில் உள்ளடங்கி இருக்கும் இயற்கை மூலப்பொருட்கள் ரத்த குழாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது’’ என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். "சாக்லேட்டில் உள்ள பிளவோனாய்டுகள் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும், ரத்த குழாய்களின் வீக்கத்தை கட்டுப் படுத்தவும் உதவுகிறது’’ என்கிறார், பிரபல ஆராய்ச்சியாளர் சயாகிரிட் கிரிட்டினவாங்க்.

    ‘‘கருப்பு நிற சாக்லேட் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. அதிலிருக்கும் கோகோ உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை விளைவிக்கிறது. அதில் சர்க்கரையின் அளவும் சீராக இருக்கிறது. சாப்பிடும் சாக்லேட்டில் குறைந்தபட்சம் 75 சதவீதம் கோகோ உள்ளடங்கி இருக்க வேண்டும். அத்தகைய சாக்லேட்டுகளை சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது’’ என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

    ரத்த ஓட்டம் சீராக நடை பெறுவதற்கும், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கும் கருப்பு சாக்லேட் சாப்பிடலாம். 100 கிராம் கருப்பு சாக்லேட்டில் 75 முதல் 85 சதவீதம் வரை மெக்னீசியம், தாமிரம், இரும்பு, மாங்கனீஷ், பாஸ்பரஸ், பொட்டாசியம், சீலியம், தாதுக்கள் உள்ளிட்ட கோகோ மூலப்பொருட்கள் இருக்கின்றன. அதேவேளையில் இதய நோய், சர்க்கரை நோய், சிறுநீரக நோய் பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் டாக்டர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு சாப்பிட வேண்டும்.
    60 வயதை கடந்தால் அல்சைமர் நோய் வரக்கூடும் என்பார்கள், ஆனால் தற்போது இளம்வயதிலேயே பலருக்கும் வருகிறது. அதனை வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

    பிற வியாதிகளை போல அல்சைமர் நோயும் உயிர் கொல்லி தான். உலகில் அதிக அளவில் கொல்லும் நோய்களின் பட்டியலில் அல்சைமரும் அடங்கும். மனிதனின் நினைவகளை போக்கி, நியாபகம் இல்லாமல் மூளையை செயல் இழக்க செய்வது அல்சைமர் நோய் ஆகும்.

    பெரும்பாலும் வயது முதிர்வின் காரணத்தால் அல்சைமர் வருவது வழக்கம். ஆனால் தற்போது இளம் வயதினரிடையே வருகிறது. இதனை சிகிச்சை மூலம் குணப்படுத்த இயலாது. ஆரம்பத்திலேயே நோயின் தன்மை அறிந்து குணப்படுத்தலாம். ஆனால் நோய் உச்சக்கட்டத்தை அடைந்தால் தீர்க்க எவ்வித வழியும் இல்லை.

    இந்த நோய் இளம் வயதினருக்கு வருவதற்கான காரணம் முன்னோர்களின் மரபணுக்கள் வாயிலாக வரக்கூடும், விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டால் நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    வயதானவர்களை நாம் குழந்தை போல் கவனித்து கொள்ள வேண்டும். ஒரு வேளை அவர்களுக்கு சிலவற்றை மறக்க ஆரம்பித்தால், அவர்களை தினமும் ஏதோ வேலையில் பிசியாகவே வைத்திருக்க வேண்டும். நம் உடலுக்கு தேவைப்படும் போது ஓய்வு கொடுத்துவிட்டு மற்ற நேரங்களில் எதுவும் செய்யாமல் இருக்க வேண்டாம்.

    உதாரணத்திற்கு எப்போதும் செல்லும் வழியில் போகாமல், புதிய வழியில் வீட்டிற்கு செல்ல முயற்சிக்கலாம். மேலும், புதிதாக ஏதாவது கற்று கொள்ளவும் முயற்சி செய்யலாம்.

    நாம் புதிய வேலையில் நம்மை ஈடுபடுத்தி கொண்டால் உடம்பில் என்டோர்பின்ஸ் என்கிற ஹார்மோன் சுரக்கும். இதனால் மூளையை சுறுசுறுப்பாக வைத்து கொள்ள முடிகிறது.

    எப்போதும் போல் இல்லாமல் புதுமையான முயற்சிகள் செய்யலாம். உதாரணத்திற்கு வழக்கம்போல் பல துலக்காமல், மாற்று கையில் துலக்க முயற்சியுங்கள்.

    நம்மை நாம் வேலையோடு ஒன்றாக இணைத்து கொண்டு மூளைக்கு வேலை கொடுத்து கொண்டே இருந்தால் அது தானாக வேலை பார்க்கும். அதற்கு எவ்வித வேலையும் கொடுக்க மறந்தால் அது சற்று குழப்பம் அடைய செய்யும். அதன் விளைவு உயிரை பறித்துவிடும்.
    சாதத்திற்கு இந்த தயிர் உருண்டை குழப்பு சூப்பரான சைடிஷ். இன்று இந்த தயிர் உருண்டை குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடைந்த தயிர் - 250 மி.லி.

    உருண்டை செய்ய...

    கடலைப்பருப்பு - 100 கிராம்,
    துவரம்பருப்பு - 50 கிராம்,
    காய்ந்தமிளகாய் - 10,
    தனியா - 2 டீஸ்பூன்,
    உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் - தேவைக்கு,
    எண்ணெய் - 4 டீஸ்பூன்.

    அரைக்க...


    தனியா - 2 டீஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 6,
    இஞ்சி - 1 துண்டு,
    தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    மிளகு - 1/2 டீஸ்பூன்,
    அரிசி - 1 டீஸ்பூன்.

    தாளிக்க...

    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    கடுகு - 1 டீஸ்பூன்,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - 1 கொத்து.



    செய்முறை :

    கடலைப்பருப்பு, துவரம் பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும்.

    கடலைப்பருப்பு, துவரம் பருப்பு நன்றாக ஊறியவுடன் தனியா, உப்பு, காய்ந்தமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்த மாவில் 1 டீஸ்பூன் எண்ணெய், மஞ்சள் தூள், சிறிது உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வேகவைத்து கொள்ளவும்.

    அரைக்க கொடுத்தவற்றை ஊறவைத்து மிக்சியில் போட்டு அரைத்து, 2 டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து அடிபிடிக்காமல் கொதிக்க விடவும்.

    நன்றாக கொதித்து வரும் போது அதில் வேக வைத்த உருண்டை, கடைந்த தயிரை ஊற்றி நுரைத்து வரும் பொழுது இறக்கவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து தயிர் கலவையில் கொட்டி பரிமாறவும்.

    சூப்பரான தயிர் உருண்டை குழம்பு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    திருமணம் ஆன புதிதில் குழந்தை பிறப்பை தள்ளிப்போட பல்வேறு வழிகள் இருந்தாலும் எந்த முறையை பயன்படுத்தினால் பிரச்சனை வராது என்பதை பற்றி பார்க்கலாம்.
    திருமணம் ஆன புதிதில் கணவன் மனைவி இருவருக்கும் மனக்கட்டுப்பாடெல்லாம் சரிப்பட்டு வராது. திருமணமான புதிதில் பெண்கள் கர்ப்பத்தடை மாத்திரைகளையும் ஆண்கள் ஆணுறையையும் பயன்படுத்தலாம். கர்ப்பத்தடை மாத்திரைகளை உங்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே உபயோகிக்கலாம். இதைச் சரியாக உபயோகித்தால் கருவுறாமல் இருக்கலாம். ஆனால், இந்த மாத்திரைகளை ஒன்றிரண்டு வருடத்துக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.

    இந்த மாத்திரைகள் சிலருக்கு சில அசௌகரியங்களை உண்டுபண்ணலாம். அப்படியிருந்தால் ஆண் ஆணுறையையும், பெண், விந்து நாசினி கிரீமையும் சேர்த்து உபயோகிக்கலாம்.



    இப்போது இந்தியாவில் பெண்களுக்கான “பெண்ணுறை“ விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றையும் பெண்கள் உபயோகிக்கலாம். திருமணமாகி, குழந்தைகளும் பிறந்து விட்டிருந்தால் அப்போது பயன்படுத்த வேறுபல கருத்தடை முறைகள் உள்ளன. இரண்டு குழந்தைகளுக்கு நடுவே இடைவெளி விட நினைப்பவர்கள் காப்பர்-டி மாதிரியான சாதனத்தை மருத்துவரின் ஆலோசனைப்படி பொருத்திக் கொள்ளலாம்.

    குழந்தை பெற்றது போதும், இனி “நோ பேபீஸ்“ என்பவர்கள் கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம்.

    இப்போதெல்லாம் லாப்ரோஸ்கோபி முறைப்படி மிகத்துரிதமாக இந்தக் கர்ப்பத்தடை அறுவை சிகிச்சைகைளை செய்துகொள்ள முடிகிறது. அதிலும் ஆண்களுக்கான வாசக்டமி எனும் அறுவை சிகிச்சை ரொம்பச் சுலபம் என்பதால் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். 
    ×