என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    அவகேடோ பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். கொலஸ்ட்ரலைக் குறைக்கும். இன்று அவகேடோ சூப் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அவகேடோ (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - 2,
    உதிர்த்த ஸ்வீட் கார்ன் - ஒரு கப்,
    பூண்டு -  3 பல்,
    காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப்,
    கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு,
    மிளகுத்தூள், எண்ணெய், எலுமிச்சைச் சாறு, உப்பு - தேவையான அளவு,



    செய்முறை:

    அவகேடோவை தோல் சீவி, அதில் உள்ள கொட்டையை எடுத்துவிடவும்.

    பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்ஸியில் அவகேடோ, காய்கறி தண்ணீர், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கவும்.

    கடாயில் எண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கி, கார்னை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த அவகேடோ  கலவையை சேர்த்து வதக்கி, தேவைப்பட்டால் காய்கறி வேக வைத்த தண்ணீர் சிறிதளவு சேர்த்து கொதிக்க விடவும்.

    கடைசியாக அதில் மிளகுதூள் சேர்த்து இறக்கி... பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும்.

    சத்தான அவகேடோ கார்ன் சூப்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த முத்திரை செய்வதால் தீய எண்ணங்கள், அவநம்பிக்கை போன்ற எதிர்மறை எண்ணங்கள் அழிந்து, தன்னம்பிக்கையும், மனோ தைரியமும் உண்டாகிறது.
    சிவலிங்க வடிவம் தனக்குள் அனைத்து வடிவங்களையும் அடக்கியுள்ளதோடு, ஆராய்ச்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட மாபெரும் சக்தியையும், பல்வேறு ரகசியங்களையும் பொதிந்து வைத்துள்ளது. இந்த சிவலிங்க வடிவில் காணப்படும் சிவலிங்க முத்திரை அனைத்து நல்ல பலன்களையும் அளிக்கவல்லது.

    எப்படிச் செய்வது?

    ஆசனத்தில் அமர்ந்து, இடது கையை கிண்ணம் போல் லேசாகக் குழித்து, உள்ளங்கை மேல்நோக்கி இருக்குமாறு, தொப்புள் பகுதிக்கு நேரே வைக்கவும். அதன்மேல், மற்றொரு கையை  நான்கு விரல்களையும் மூடிய நிலையிலும் கட்டை விரல் நேராக இருக்கும்படியும் வைக்க வேண்டும் கண்களை மூடி அமர்ந்து கொள்ளவும். ஒருநாளைக்கு இருமுறை என 5 நிமிடங்கள் இதைச் செய்யலாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யலாம்.

    பலன்கள்

    சிவலிங்க முத்திரை செய்யும்போது, நமது உடலில் பஞ்ச பூதங்களும் அதனதன் அளவீடுகளில் நிலைத்து, ஆக்க சக்தியை வெளியிடுகின்றன. உயிரோட்டத்தின் மொத்த வடிவமாக நமது உடல் மாறுவதால் தீய எண்ணங்கள், அவநம்பிக்கை போன்ற எதிர்மறை எண்ணங்கள் அழிந்து, தன்னம்பிக்கையும், மனோ தைரியமும் உண்டாகிறது.

    உடலில் உள்ள உஷ்ணம் நீங்கினால், மரணம். அதாவது, சிவம் உடலிலிருந்து அகன்றுவிட்டால் சவம்! உடலில் உள்ள குளிர்ச்சி என்னும் கபத்தை வெளியேற்றி, உஷ்ணத்தைத் தக்க வைக்க சிவலிங்க முத்திரை உதவும். எந்தவித நோயாக இருந்தாலும், விரைவில் விடுபட வேண்டுமென்றால் சிவலிங்க முத்திரையை உட்கார்ந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ செய்யலாம். குளிர், நடுக்கம், அவநம்பிக்கை, சோர்வு ஆகியவை பறந்தோடும்.
    இன்று பேஸ்புக் பயன்படுத்தும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. பேஸ்புக்கில் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு.
    இன்று பேஸ்புக் பயன்படுத்தும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. பேஸ்புக்கில் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது நமது கைகளில் தான் இருக்கிறது. பேஸ்புக்கை பயன்படுத்தும் பெண்கள் தெரியாமல் செய்யும் செயலால் பல பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. சாலை என்று இருந்தால் அதில் விபத்துக்கள் நடக்க கூடும். விபத்திலிருந்து நம்மை பாதுகாப்பதற்கு சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். அதுபோல் தான் பேஸ்புக்கில் நம்மை பாதுகாப்பதற்கு சில வழிமுறைகளை பின்பற்றினால் பாதுகாப்பாக இருக்கலாம். இல்லை என்றால் பல ஆபத்துகளை சந்திக்கக்கூடும். பேஸ்புக்கில் பெண்கள் செய்யும் சில தவறுகளை பற்றி பார்ப்போம்.

    பேஸ்புக்கில் இன்று பெண்கள் செய்யும் மிக பெரிய தவறில் ஒன்று தங்களுடைய புகைப்படங்களை பகிர்வது. அந்த புகைப்படங்கள் எல்லாம் எங்கே செல்கிறது எவ்வாறு பயன்படுத்தபடுகிறது என்று பெண்களுக்கு தெரிவது இல்லை. பெண்கள் சர்வசாதாரணமாக புகைப்படங்களை பகிர்கின்றனர். நீங்கள் பகிரும் புகைப்படங்களை விஷமிகள் எடுத்து மார்பிங் செய்து ஆபாச இணையதளத்திற்கு விற்று விடுகிறார்கள். இப்படி பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கின்றனர். சற்று தெளிவான பெண்கள் பேஸ்புக் டைம் லைனில் புகைபடங்களை பகிர்வதில்லை.

    பேஸ்புக்கில் பெண்கள் அவர்களின் உறவினர்களுடன் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் உரையாடும் போது அவர்களின் புகைப்படங்களை பகிர்வார்கள். நம் உறவினர் மற்றும் நம் நண்பர்களை தவிர வேறு யாராலும் பார்க்க முடியாது அப்படி செய்வது மிகவும் பாதுகாப்பானது என்று பல பெண்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். அது தான் இல்லை. நீங்கள் பேஸ்புக்கை எப்போது தொடங்கினீர்களோ அப்போதிலிருந்து நீங்கள் பேசிய உரையாடல், புகைப்படங்கள் மற்றும் அனைத்து நடவடிக்கையும் பேஸ்புக் சர்வரில் சேமித்து வைத்து இருக்கும்.

    இதில் சுவாரஸ்யமான விஷயம் என்ன வென்றால் நீங்கள் அழித்தவற்றையும் பேஸ்புக் சேமித்து வைத்து இருக்கும். இதனால் எனக்கு என்ன ஆபத்து என்று கேட்கலாம் உங்கள் பேஸ்புக் கணக்குஹேக்கர்ஸ் அல்லது விஷ கிருமியிடம் கிடைத்தால் உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்ள அனைத்து தகவல்களையும் எடுத்து அதை எந்த வழிகளிலும் பயன்படுத்த முடியும். ஆகையால் பெண்கள் பேஸ்புக்கில் உரையாடும் போதும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    பேஸ்புக்கில் நமக்கு அறிமுகம் இல்லாத நபர் யாரும் நட்பு வேண்டுதல் கொடுத்தால் அதை ஏற்காதீர்கள். உங்களுக்கு நன்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மட்டும் நட்பு வைத்து கொள்ளுங்கள். இதனால் பல பிரச்சினைகளை தவிர்க்கலாம். பேஸ்புக்கில் போலி கணக்குகளும் இருக்கின்றன. எனவே யாரையும் எளிதாக நம்பிவிடவேண்டாம்.

    எந்த புரொபைலையும்(சுய விவர குறிப்பு) பார்த்ததும் நட்பு வேண்டுதல் செய்து விடாமல், அந்த கணக்கை பற்றி முழு விவரம் தெரிந்த பின்னர் நட்பு வேண்டுதலை தெரிவியுங்கள். பெண்கள் பேஸ்புக் கணக்கை தொடங்கும் போது தங்களின் தொலைபேசி எண் வைத்து கணக்கை தொடங்குவார்கள். அவ்வாறு செய்வது பெண்களுக்கு பாதுகாப்பானது இல்லை.

    நீங்கள் உங்கள் பேஸ்புக் கணக்கை தொலைபேசி எண்ணை வைத்து உருவாக்கினால் உங்கள் தொலைபேசி எண் பேஸ்புக்கில் உள்ள ரிப்போர்ட் பக்கத்தில் தோன்றும் அதை எல்லாராலும் பார்க்க முடியும். இதனால் அந்த எண்ணுக்கு தேவையில்லாத அழைப்புகள் வரக் கூடும். பேஸ்புக் கணக்கை உருவாக்கும்போது பெண்கள் மின்னஞ்சலை பயன்படுத்தி உருவாக்குங்கள் அது பாதுகாப்பானது. அந்த மின்னஞ்சலை வேறு எதற்கும் பயன்படுத்த வேண்டாம் பேஸ்புக் கணக்கு மட்டும் பயன்படுத்துங்கள்.

    ஒரு சில நேரம் பெண்கள் சிலரை நல்லவர் என்று நினைத்து அவர்களின் நட்பு வேண்டுதலை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் ஏற்றுகொண்ட பிறகு அவர்களின் தொல்லை அதிகமாக இருக்கும். அவர்களை முதலிலே தவிர்த்து விடுவது நல்லது. பேஸ்புக்கில் அவர்களை எப்படி பிளாக் செய்வது என்று பார்ப்போம். முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்ள செட்டிங்ஸ் என்ற பக்கத்திற்கு செல்லுங்கள். அந்த பக்கத்தில் இடது பக்கம் இருக்கின்ற ப்ளாக்கிங் ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். அதில் இருக்கும் ப்ளாக் யூசர்ஸில் நீங்கள் ப்ளாக் செய்ய விரும்புவோரின் பெயர், மின்னஞ்சல் அல்லது அவரின் புரொபைல் யூ. ஆர். எல் . இதில் ஏதேனும் ஒன்றை அந்த இடத்தில் கொடுத்து ப்ளாக் என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான் இனி அவர் எப்போதும் உங்களை தொடர்பு கொள்ள முடியாது.

    நீங்கள் ஏதாவது ஒரு பக்கத்திற்கு சென்றால் அந்த பக்கத்தில் ஓர் பதிவிற்கு நீங்கள் கருத்துகள் தெரிவிக்கும் போது அந்த கருத்துகள் மற்றும் புரொபைல் அதே பக்கத்தில் இருக்கும். இதனால் வெளியாட்கள் அந்த பக்கத்திற்கு வரும் போது உங்கள் புரொபைலுக்கு நட்பு வேண்டுதல் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது. இது பெண்கள் அறியாமல் செய்யும் மிக பெரிய தவறு இதனால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும்.

    இது பெண்களுக்கு பாதுகாப்பானது இல்லை. இணையதளத்தில் உங்கள் புகைப்படங்களை பதிவேற்றுங்கள் முப்பது வருடங்களுக்கு பிறகு நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று சொல்கிறேன் என்று கேள்வி கேட்டால் அதில் பெண்கள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யாதீர்கள் மற்றும் ஒரு லிங்கை அனுப்பி இந்த லிங்கில் நீங்கள் சென்று லாகின் செய்தால் 15ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள் உங்களுக்கு வெறும் 1200 ரூபாய்க்கு கிடைக்கும் என்று கூறினால் செல்லாதீர்கள்.

    ஏனென்றால் உங்கள் பேஸ்புக் கணக்கை ஹேக் செய்ய நினைப்பார்கள். “பிஷிங்” என்ற முறையில் உங்கள் பேஸ்புக்கை மற்றும் இதர கணக்குகளை ஹேக் செய்து விடுவார்கள். பிஷிங் என்றால் பேஸ்புக் லாகின் பக்கம் மாதிரியே உருவாக்கி அதை உங்களுக்கு அனுப்புவார்கள். அதை நீங்களும் கிளிக் செய்து உங்கள் கணக்கை லாகின் செய்தால் உங்கள் யூசர் நேம், பாஸ்வேர்டு உள்ளிட்டவை திருடப்பட்டுவிடும். மேலே கூறப்பட்டுள்ள வழிகளை பெண்கள் பின்பற்றினால் பேஸ்புக்கில் பாதுகாப்பாக இருக்கலாம்.

    ப.பொன்விக்னேஸ், கல்லூரி மாணவர்
    முறையற்ற உணவுப் பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம், ஹார்மோன்களிலும் ஏற்றத்தாழ்வு ஏற்படும். நம் உணவுப்பழக்கம் சீராக இருந்தாலே எந்த சிரமமும் இல்லாமல் நலமுடன் வாழலாம்.
    கடந்த 10 ஆண்டுகளாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் உடல் பருமனால் அவதிப்படுகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவர்கள் அதிக உடல் எடையுடனும், ரத்த அழுத்தத்துடனும் இருக்கிறார்கள் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். பெண் குழந்தைகள் சீக்கிரமே பருவம் எய்தி விடுகிறார்கள். சிலருக்கு ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் சிக்கல், திருமணத்துக்குப் பிறகும் அவர்களை விடாமல் துரத்துகிறது.

    குழந்தைகளுக்கு சிறு வயது முதலே அவர்கள் விரும்பியதை எல்லாம் வாங்கிக் கொடுப்பது, அவர்கள் பருமனான பிறகு அவற்றை ஒரேயடியாக தவிர்த்து விடச் செய்வது... இதுதான் பல குடும்பங்களில் நடந்து வருகிறது. அதுவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் நிறமூட்டிகளும் சுவையூட்டிகளும் நாக்குக்கு இனிமையே தவிர, உடலுக்கு நல்லதல்ல.

    குழந்தைகள் கேட்கிறார்களே என்று ஆரம்பத்தில் அளவுக்கு அதிகமாக கொடுப்பதும் தவறு, பிறகு அவற்றை ஒரேயடியாக தவிர்ப்பதும் தவறு. குழந்தைப் பருவத்தில் இருந்தே சரியான உணவுப்பழக்கத்தை நாம் தான் அறிமுகப்படுத்த வேண்டும். வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்களாவது வேக வைத்த காய்கறிகளையும், உணவுகளையும் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பெரியவர்களும் இப்படித்தான் சாப்பிட வேண்டும். குழந்தை பருவம் முதலே காய்கறி, கீரை வகை சாப்பிடுவதை பழக்கி விட்டால், வளர்ந்த பிறகும் அவற்றை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

    இப்போதெல்லாம் தெருவில் இறங்கி விளையாடுகிற குழந்தைகளை பார்க்கவே முடிவதில்லை. செல்போன், கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் என உட்கார்ந்த நிலையிலேயே விளையாட பழகிவிட்டார்கள். அதை தவிர்த்துவிட்டு குழந்தைகளை குறைந்தது முக்கால் மணி நேரமாவது, அவர்களது நண்பர்களுடன் சேர்ந்து ஓடியாடி விளையாடப் பழக்க வேண்டும். இதனால் உடல் தசைகள் வலுப்பெறுவதுடன், உடலில் தேவையில்லாமல் கொழுப்பு சேர்வதும் குறையும்.

    கல்லூரி மாணவிகளோ உடல் மெலிவுக்கு ஆசைப்பட்டு பட்டினி கிடக்கிறார்கள். இல்லையென்றால் சொட்டுச்சொட்டாகத் தண்ணீர் குடித்து, பருக்கை பருக்கையாக எண்ணிச் சாப்பிடுகிறார்கள். விளைவு, அனோரெக்சியா எனப்படும் உடல் மெலிவு பிரச்சினைக்கு ஆளாகிறார்கள். சிலர் தங்களுக்குப் பிடித்த உணவுகளை அளவில்லாமல் சாப்பிட்டுவிட்டு, திடீரென எடையைக் குறைக்கிறேன் என்று அவர்களாகவே பட்டினி கிடக்க ஆரம்பித்து விடுவார்கள். இது உடல் சோர்வுடன் பக்க விளைவுகளையும் உண்டாக்கும்.

    வேலைக்குச் செல்கிறவர்கள் உணவில் காட்டும் அலட்சியம்தான் பல கோளாறுகளுக்கும் காரணம். முறையற்ற உணவுப் பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம், ஹார்மோன்களிலும் ஏற்றத்தாழ்வு ஏற்படும். நம் உணவுப்பழக்கம் சீராக இருந்தாலே எந்த சிரமமும் இல்லாமல் நலமுடன் வாழலாம்.
    காலை, மாலை நேரத்தில் சாப்பிட சேமியா வெஜிடபிள் கிச்சடி சூப்பராக இருக்கும். இன்று இந்த கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேமியா - 1 கப்,
    பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவை (கேரட், பீன்ஸ், பட்டாணி) - 1 கப்,
    பெரிய வெங்காயம் - 2,
    தக்காளி - 2,
    பச்சை மிளகாய் - 5,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    எண்ணெய் - 1 டீஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    நெய் - 2 டீஸ்பூன்,
    உப்பு - ருசிக்கு.

    தாளிக்க:

    கடுகு - 1 டீஸ்பூன்,
    உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிது.



    செய்முறை:

    சேமியாவை 1 டீஸ்பூன் நெய்யில் வறுத்து கொள்ளவும்.  

    காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாய பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீதமுள்ள நெய், எண்ணெயை ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் காய்கறிகள், தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து காய்கறி வேகும் வரை வதக்குங்கள்.

    காய்கறிகள் சற்று வதங்கியதும் 3 கப் தண்ணீர் சேர்த்து, கொதித்ததும் சேமியாவை சேர்த்து, பெரிய தீயில் 2 நிமிடம் வைத்து தீயைக் குறைத்து மூடி போட்டு 5 நிமிடம் வேக விட்டு வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சேமியா வெஜிடபிள் கிச்சடி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெற்றோர், தங்களை அறியாமல் குழந்தைவளர்ப்பில் செய்யும் தவறுகளை என்ன என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தைகளை ஸ்மார்ட்டாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை எல்லா பெற்றோருக்கும் உள்ளது.  குழந்தையை ஜீனியசாக வளர்ப்பதற்காக பெற்றோர் படும்பாடு வார்த்தைகளுக்குள் அடங்காது. பெற்றோரின் எண்ணங்களை விட இன்றைய குழந்தைகளின் வேகம் அதிகம். நவீன போன்கள், ஆன்லைன் தேடல் எல்லாவற்றிலும் பெற்றோரை விட அதிகம் புரிந்து கொண்டு பயன்படுத்துகின்றனர். பெற்றோர், தங்களை அறியாமல் குழந்தைவளர்ப்பில் செய்யும் தவறுகளை என்ன என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    வீட்டில் ஏற்படும் தண்ணீர்ப் பிரச்னையில் ஆரம்பித்து அலுவலகத்தின் தலைமை அதிகாரி வரை நிறைய சிக்கல்கள் பெற்றோருக்கு இருக்கலாம். “அவன் இருக்கான் பாரு..சரியான தொல்லை புடிச்சவன்”, என்று உங்கள் குழந்தை முன் பேசினால், வார்த்தைகளின் அர்த்தம் அவர்களுக்கு விளங்காவிட்டாலும், அவர்கள் மனதில் பதியும். இதன்மூலம் தவறான உலகத்தை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் அறிமுகப்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். முடித்தவரை, குழந்தைகள் முன் மற்றவர்களையோ அல்லது குடும்ப உறுப்பினர்களைப் பற்றி கடுமையான சொற்களால் விமர்சிக்க வேண்டாம்.

    பெற்றோர் பெரும்பாலும் செய்யும் தவறு இது! “என் பையன் கேட்குறதுக்கு முன்னாடியே எல்லாம் வாங்கிக்கொடுத்துடுவேன்”, “என் மகள் அடம்பிடித்ததே இல்லை”, என்று  கூறும் பெற்றோர்களா நீங்கள்? ஏனெனில், உங்கள்  பிள்ளைகளுக்கு மற்றவர்களிடம் கேட்டு வாங்கும் திறமையை குறைத்துவிடுகிறீர்கள். அவர்கள் கேட்பதற்குமுன் தேவையில்லாததை வாங்கிக்கொடுப்பதற்கு முன், அவர்களுக்கு என்ன தேவை என்பதை அவர்களிடம் கேட்டு, அதை எப்படி நாகரீகமாக கேட்டு வாங்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்கள்.

    இன்றைய பொருளாதாரச் சுழலில், பெற்றோர் இருவரும்   வேலைக்கு செல்லவேண்டியுள்ளது. அதனால், வேலை நாட்களில் குழந்தைகளுடன் போதுமான நேரத்தைச் செலவழிக்க முடியாமல் இருக்கலாம். அதைப் போக்க வாரநாட்களை எடுத்துக்கொள்ளுங்கள். வார நாட்களில் குழந்தைகளுக்காக தனியாக நேரத்தை செலவிடுங்கள். அந்த நேரத்தில் போன், லேப்டாப், டிவி போன்றவற்றின் பக்கம் தலை சாய்க்காமல் இருங்கள். அவர்களைப் பேசவிட்டு நீங்கள் ரசித்தாலே ஆனந்தமாவார்கள் குழந்தைகள். 
    அனைவருக்கும் வெண் பொங்கல் மிகவும் பிடிக்கும். இன்று சேமியாவை வைத்து வெண் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேமியா - 2 கப்,
    பாசிப்பருப்பு - அரை கப்,
    பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
    உப்பு - ருசிக்கு,
    கறிவேப்பிலை - சிறிது,
    நெய் - 2 டேபிள்ஸ்பூன்.

    தாளிக்க :

    மிளகு - 1 டீஸ்பூன்,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்,
    முந்திரி (நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    நெய் - 1 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    1 டீஸ்பூன் நெய்யில் சேமியாவை சிறிது வறுத்து கொள்ளவும்.

    பருப்பை தண்ணீர் சேர்த்து குழைய வேகவையுங்கள்.

    வெந்தவுடன் அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கும்போது வறுத்த சேமியா, உப்பு, 1 டீஸ்பூன் நெய் ஆகியவை சேர்த்து 2 நிமிடம் வேகவிட்டு, தீயை குறைத்து சேர்த்து நன்கு வேக விடுங்கள்.

    அதில் பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்குங்கள்.

    எண்ணெய், நெய்யைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி பொங்கலில் சேர்த்து கலந்து சூடாக பரிமாறுங்கள்.

    சூப்பரான சேமியா வெண் பொங்கல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தைராய்டு அதிகம் சுரப்பது தைராய்டு குறைவாக சுரப்பது போன்ற இரு நோய்களிலிருந்தும் இந்த முத்திரை நிவாரணம் தருகிறது. இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
    இந்த முத்திரை உதான சக்தியை அதிகம் கொடுக்கிறது. அதாவது யோக சாஸ்திரத்தில் 5 வகையான சக்தி உள்ளது. அவைகள் பிராண சக்தி, அபான சக்தி, உதான சக்தி, சமான சக்தி, வியான சக்தி என்று 5 சக்திகள் உள்ளன. இதில் உதான சக்தி தலைக்கும் தொண்டைக்கும் இடையே உள்ள நடுப்பகுதியில் உள்ளது. இது தொண்டைப்பகுதியை பாதுகாக்கிறது.

    செய்முறை:

    நமது கை விரல்களை குவித்து அதாவது பெருவிரல், நடுவிரல், ஆள்காட்டி விரல், மோதிரவிரல் ஆகிய 4 விரல்களின் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு சிறு விரலை நேராக நீட்டிக்கொள்ளவேண்டும். இதுதான் உதான் முத்திரை

    நன்மைகள்

    இந்த முத்திரை பயிற்சியால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கிறது. தோல் சம்பந்தமான வியாதிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

    இந்த முத்திரை பயிற்சியால் நெஞ்சு பகுதியிலிருந்து வயிற்றுப்பகுதி வரை சக்தியுடன் பாதுக்காக்கிறது. இருமல் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

    தைராய்டு அதிகம் சுரப்பது தைராய்டு குறைவாக சுரப்பது போன்ற இரு நோய்களிலிருந்தும் நிவாரணம் கிடைக்கிறது. இந்த முத்திரை பயிற்சியால் திக்கி திக்கி பேசுவதிலிருந்தும், பேச்சு சரிவராமல் இருப்பதிலிருந்தும் நிவாரணம் கிடைத்து நன்றாக பேசும் சக்தியும் குரல் வளமும் நன்றாக செயல்படுகிறது.

    சிறுநீரகத்தில் ஏற்படும் குறைபாடுகள் நீங்குகிறது. சுவாச மண்டலத்தின் சக்தி அதிகரித்து சுவாச கோளாறுகள் நீங்குகிறது. கை கால்களுக்கு அதிக வலு கிடைக்கிறது.

    இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரத்திலும் செய்யலாம். எத்தனை தடவை வேண்டுமானாலும் செய்யலாம். எவ்வளவு அதிக நேரம் செய்கிறோமோ அந்த அளவுக்கு அதற்குரிய நோயிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கிறது.
    கர்பப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து.
    செம்பருத்தி செடியின் பூக்கள் தலை முடி அழகுக்காக பல வழிகளில் பயன்படுகிறது. செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.
     
    கர்பப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.
     
    மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும். செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலையிடி, மயக்கம் போன்றவை குறையும்.
     
    இருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.
     
    அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றின் உட்புறச் சுவர்களைத் தாக்குகின்றன. இதனால் வாயிலும் புண்கள் உருவாகின்றன. இப்படி வயிற்றுப்புண், வாய்ப்புண்ணால் பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.
    உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட், கேரட்டை அதிகளவு உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இன்று இது இரண்டையும் வைத்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பீட்ரூட் - 3
    கேரட் - 3
    இஞ்சி - சிறிய துண்டு
    எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்
    தேன் - சுவைக்கு



    செய்முறை :

    கேரட், பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக அறிந்து கொள்ளவும்.

    கேரட், பீட்ரூட், இஞ்சி, தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

    பின்பு அரைத்ததை வடிகட்டி தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பருகவும்.

    சத்தான பீட்ரூட் - கேரட் ஜூஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இன்றைய காலகட்ட பெருநகர அடுக்குமாடி குடியிருப்புகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பது சகலவித தொழில்நுட்ப அடிப்படைகளையும் கொண்டதாக இருப்பது அவசியம் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி இருக்கின்றனர்.
    இன்றைய காலகட்ட பெருநகர அடுக்குமாடி குடியிருப்புகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பது சகலவித தொழில்நுட்ப அடிப்படைகளையும் கொண்டதாக இருப்பது அவசியம் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி இருக்கின்றனர். அதன் அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி தெரிவித்த கட்டுமான வல்லுனர்கள் அவற்றை கீழ்க்கண்ட மூன்று விதங்களாக பிரித்து செயல்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

    மூன்று அம்சங்கள்

    1) பாதுகாப்பு உபகரணங்கள்

    2)பாதுகாப்பு நடவடிக்கைகள்

    3) பாதுகாப்பு ஊழியர் கள்

    ஆகிய நிலைகளில் செயல்படும் அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகம் மூலம் குடியிருப்பவர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

    பாதுகாப்பு உபகரணங்கள்

    மேல்மாடிகள், குழந்தைகள் விளையாடும் பகுதிகள், உடற்பயிற்சி கூடங்கள், பொது கழிவறைகளுக்கு வெளிப்புறம், ஸ்டோர் ரூம்கள் உள்ளிட்ட பல இடங்களில் ‘சி.சி.டி.வி’ கேமரா, மெயின் கேட்டுக்கு அருகில் அனைத்து கோணங்களிலும் படம் பிடிக்கும் கேமரா ஆகியவற்றை பொருத்தி அவற்றை கண்காணிப்பது அவசியம்.

    தினமும் முப்பதுக்கும் மேற்பட்ட நபர்கள் வந்து செல்லக்கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளில் பயோமெட்ரிக் முறையில் பணியாளர்களின் வருகையை பதிவு செய்யக்கூடிய சாதனங்களை அமைக்கவேண்டும். அதாவது, வீட்டு பணியாளர்கள், செக்யூரிட்டிகள், தோட்ட பணியாளர்கள், மேனேஜர்கள், சமையல் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து நபர்களது வருகையும் மேற்கண்ட முறையில் பதிவு செய்யப்பட வேண்டும்.

    மெயின் கேட் பகுதியில் வருகையாளர் பதிவேடுகளுக்கு மாற்றாக கணினி முறையில் வருகைப்பதிவு செய்யப்படுவதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களது அடையாளத்தை செக்யூரிட்டி பணியாளர்கள் எளிதாக கண்டறிய முடியும்.

    இரவு பகல் ஆகிய நேரங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் ரோந்து வரக்கூடிய செக்யூரிட்டி பணியாளர்களுக்கு என்று தனிப்பட்ட முறையில் செல்போன் அளிக்கப்பட வேண்டும். அதன் மூலம் சுற்றுப்புற பகுதிகளில் தென்படும் சந்தேகத்துக்குரிய நபர்கள் அல்லது பொருட்கள் ஆகியவை பற்றிய தகவல்களை உடனடியாக இதர செக்யூரிட்டி பணியாளர்களுக்கு அல்லது அடுக்குமாடி நிர்வாகத்துக்கு தெரிவிக்க இயலும்.

    பாதுகாப்பு நடவடிக்கைகள்

    கட்டுமான பணிகளின்போதே கச்சிதமான இடங்களை தேர்வு செய்து சி.சி.டி.வி அமைப்புகள் பொருத்தப்படுவது நல்லது. குறிப்பாக ‘கேட்டடு கம்யூனிட்டி’ குடியிருப்புகளின் கட்டுமான பணிகளின்போது வரக்கூடிய வெவ்வேறு வகையான பணியாளர்களை சிசிடிவி கேமரா மூலம் கவனிப்பது முக்கியமானது. அதன் பதிவுகளை குறிப்பிட்ட இடைவெளிகளில் ஆய்வு செய்வதும் பாதுகாப்புக்கு ஏற்றது. மேலும், அனைத்து கேமரா பதிவுகளும் தக்க விதத்தில் செய்யப்படுவதை அவ்வப்போது கவனித்து உறுதி செய்து கொள்வது முக்கியம்.

    குறிப்பாக செக்யூரிட்டி பணியாளர்களை அனுப்பும் நிறுவனத்தின் நம்பகத்தன்மை பற்றி அடுக்குமாடி நிர்வாகம் கவனம் கொள்ள வேண்டும். வீடுகளுக்கு அவ்வப்போது வரக்கூடிய பணியாளர்களும் நிர்வாகத்தின் அனுமதி பெற்றே அனுமதிக்கப்படுவது நல்லது. குறிப்பாக பொருட்களை ‘டெலிவரி’ அளிப்பதற்கு வந்தவர்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக குடியிருப்பில் தங்கியுள்ள நிலையில் அவர்களை கண்காணிப்பது முக்கியம்.

    பாதுகாப்பு ஊழியர்கள்

    செக்யூரிட்டி பணியாளர்களை தொடர்ச்சியாக இரண்டு ‘ஷிப்டுகள்’ பணி புரியும்படி விடக்கூடாது. அவர்களுக்கான சீருடைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை தக்க விதத்தில் அவர்கள் பராமரித்து வருவதையும் நிர்வாகத்தினர் பார்த்துக்கொள்ளவேண்டும்.

    குடியிருப்பு வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தக்க விதத்தில் செயல்படுவதை கண்காணிக்க பெண்கள் உள்ளிட்ட ஒரு துணை நிர்வாகக் குழுவை அமைத்துக்கொள்ளலாம். குடியிருப்போர்களுக்கான மாதாந்திர கூட்டத்தில் தெரிவிக்கப்படும் ஆலோசனை அல்லது புகார்களை அந்த குழு கவனித்து நிர்வாகத்திடம் தக்க முறையில் சேர்ப்பித்து அதன் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

    பெண் குழந்தைகளுக்கான தற்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஆகிய பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன், குடியிருப்போர் தங்களது உரிமை மற்றும் வரையறை ஆகியவற்றை தக்க விதத்தில் கடைப்பிடிப்பதும் அவசியமான விஷயங்களாகும். 
    முகத்தில் இளமையான, உடனடி பொலிவு வேண்டுமா? அழகு குறிப்புகளுக்கு காபியின் பயன்பாடுகள் என்ன அதை எப்படி பயன்படுத்துவது என்று அறிந்து கொள்ளலாம்.
    முகத்தில் இளமையான, உடனடி பொலிவு வேண்டுமா? காபியை இப்படி யூஸ் பண்ணுங்க! காபியில் இருக்கும் வேதிப்பொருட்கள் சருமத்தில் உள்ள கொலோஜன் என்று கூறப்படும் சருமத்தை இருக்கி பிடிக்கும் தசையை மேன்படுத்த உதவும். இதனால் தளர்ந்த சருமம் இறுகி புதுத்தோற்றம் பெற காபி உதவும். மேலும், சருமத்தில் மேல் படிந்திருக்கும் இறந்த செல்களை உறித்து நீக்கும்.

    * இரண்டு ஸ்பூன் காபி பவுடர், ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் அப்லை செய்து 10 நிமிடம் காயவிட்டு பின் கழுவினால் சருமமானது பொலிவோடும், மென்மையாகவும் தோன்றும்.

    * பளிச்சென்று முகம் தோன்ற, கடலை மாவுடன் காபி பவுடரை சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் ஆக்கி, முகத்தில் அப்லை செய்து காய்ந்தவுடன் கழுவி விடவும்.

    * காபி பவுடர்,  சர்க்கரை இரண்டையும் சமமாக கலந்து சிறிது தண்ணீர் இட்டு, முகத்தில் ஸ்கிரப் போன்று பயன்படுத்தலாம். இதனால் சருமத்தின் இறந்த செல்ஸ் நீங்கி முகம் இன்ஸ்டன்ட் பொலிவுபெறும்.

    * காபி பவுடரை எலுமிச்சை சாற்றோடு கலந்து முகத்தில் பேக் போன்று பயன்படுத்தினால் ஃபேசியல் செய்தது போல் முகம் மின்னும். சென்சிடிவ் ஸ்கின் இருப்பவர்கள் எலும்மிச்சைக்கு பதிலாக ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம்.

    * கால், கையில் டேன், கருமையை போக்க கடல் உப்புடன் காபி பவுடர் சேர்த்து  ஏதேனும் எண்ணெயில் கலந்து சருமத்தில் 15 நிமிடம் தேய்த்து மசாஜ் செய்து பின் கழுவவும்.
    ×