என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    மாசி கருவாடு உண்பதால் நமது உடலில் சப்த தாதுக்களும் உண்டாகும். திருமணமான ஆண்களுக்கு மாசிக்கருவாடு உணவை தினம் கொடுப்பதற்கு காரணம் மருத்துவ குணம் தான்.
    நமது பாரம்பரிய உணவுகளில் பல்வேறுபட்ட உணவுகள் இருந்தாலும், அந்தந்த இடத்தில் உள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப உணவுகள் உண்டு. பொதுவாக அனைவருக்கும் ஏற்ற உணவுகள் வரையறுக்கப்பட்டதாகும். அவற்றின் அறுசுவையை இலக்கணப்படுத்தி, அதிலே சித்த மருத்துவ முறைப்படி உணவுகள் வகுக்கப்பட்டது. இப்படி வகுக்கப்பட்ட உணவுகள் கீரையில் ஆரம்பித்து மீன்கள் வரை அடங்கும்.நாம் உணவுகளை எப்படி சமைக்க வேண்டும், உண்ண வேண்டும், எவ்வாறு உண்டால், என்னென்ன பலன் தரும் என்பதை நம் முன்னோர்கள் வகுத்து தொகுத்து அதற்கு சமையல் கலை என்கிற பெயர் சூட்டி, அதனை கல்வெட்டுகளிலும், ஓலைச்சுவடிகளிலும், நாய் தோல்களிலும், மரப்பட்டைகளிலும் பொறித்து வைத்தனர்.

    இப்படி வகுக்கப்பட்டதில் அன்றாட உணவில் கூழ், களி, மற்றும் நீராகாரம் என்பது தற்போது மறைந்து விட்டது. இந்த நீராகாரம் என்பது நிசித் தண்ணீர் என்றும் அழைக்கப்பட்டது. நிசி என்றால் பிராணன், தூக்கத்தில் உண்டாகும் பிராணன் ஆகும். இரவு அரிசி சாதத்தை ஆற வைத்து, சுடுதண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அந்த கொதிக்க வைத்த தண்ணீரை ஆற வைத்து வடிகட்டி, ஒரு பாத்திரத்தில் கால் பகுதி சாதமும், கால்பகுதி சுட வைத்து ஆற வைத்த தண்ணீரும் ஊற்றி, அரைப்பகுதி வெற்றிடமாக விட்டு, பாத்திரத்துக்கு மேலே மூடி விடுவார்கள்.

    இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு, அதிகாலையில் அந்த தண்ணீரை வடித்து, அதில் சிறிதளவு உப்பு போட்டு, கலக்கி குடிக்க வேண்டும். இது மனிதனின் 5 குடல்களையும் சரி செய்து, பசியை உண்டாக்கும். அப்படி உண்டாக்கிய பிறகு, நமக்கு தேவையான எந்தவித உணவையும் உண்ணலாம். அப்படி பசி உண்டாக்கும். இந்த தண்ணீர் முழு ஆரோக்கியத்தை தரும். சீரண மண்டலத்தை சீர் செய்யும். நமது உடலில் 7 விதமான தாதுக்கள் உள்ளது. இந்த 7 வித தாதுக்களில் ஒவ்வொரு தாதுவில் ஒவ்வொரு உணவாக சாப்பிடும் வகையில் உருவாக்கப்பட்டது தான் அறுசுவை உணவு.

    இந்த அறுசுவை என்பது உப்பு, புளிப்பு, காரம், இனிப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகியவை. இவற்றை நாம் உணவாக உண்ணும்போது அதை ஒரே மாதிரியாக தயாரித்து உண்ணாமல், பலவிதமாக தயாரித்து உண்ணுகிறோம். கறி வகைகள், மீன் வகைகள், உணவில் சேர்த்து கொள்வது மேலும் உடலில் எலும்பு, நரம்பு. தசை, கொழுப்பு போன்றவைகளை ஈடுகட்ட தான். நமது பாரம்பரியத்தில் அந்தந்த இடத்துக்கு ஏற்ப குளத்தில், ஏரியில், ஆற்றில் உள்ள மீன்களை உண்கிறோம்.

    அதேபோல் இந்த மீன்கள் அதிகமாக கிடைக்கும் பட்சத்தில் அதில் உப்பினை கலந்து கருவாடாக்கி பல காலம் வைத்து உண்கிறோம். அப்படிப்பட்ட உணவில் இந்த மாசி மீன் மிக, மிக முக்கியமான மீன் வகை ஆகும். இதற்கு உப்பினை சேர்க்காமல் காய வைப்பது ஆகும். அதை கருவாடாக ஆக்கி வைத்தால் அது புளியங்கட்டை போல் இருக்கும். இந்த மாசி கருவாடு உண்பதால் நமது உடலில் சப்த தாதுக்களும் உண்டாகும்.

    நமது பாரம்பரியமான இந்த மாசிக்கருவாட்டை எடுத்து இடித்து உலர்த்தி, அதில் லேசாக எண்ணை அல்லது நெய் கொண்டு வறுத்து வைத்து கொள்வார்கள். இதை சட்னி, சாம்பார், வறுவல், பொறியல், கூட்டு போன்றவற்றில் சேர்த்து உண்ணலாம். திருமணமானவுடன் அந்த திருமண தம்பதியருக்கு இந்த மாசி கருவாடு உணவு ஒவ்வொரு வேளையும் கொடுக்க வேண்டும். இதனால் ஆண், பெண் இருபாலருக்கும் உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும் உடல் உறுதியையும் ஏற்படுத்துவதோடு, வாத, பித்த, சிலேத்துமத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வரும்.

    ஆண், பெண் இருபாலருக்கும் திருமணமான காலத்தில் சிறப்பு உணவாக மாசிக்கருவாடை தினம் கொடுப்பர். இதனால் பெண்களுக்கு நீர்ப்பை, சினைப்பை, கருப்பை, மார்பகம், ஆகிய இந்த உறுப்புகளில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும் அல்லது ஒவ்வாமை இந்த உறுப்புகளில் இருந்தாலும் வாத ஓட்டம், பித்த ஓட்டம், ரத்த ஓட்டம் ஆகியவற்றை சீர் செய்து, பெண்களுக்கு கரு நின்று, கருவில் வளரும் குழந்தைக்கு ஆரோக்கியம் தந்து, நோயில்லா குழந்தையாக, நோயை எதிர்க்கும் குழந்தையாக, ஆயுள் உள்ள குழந்தையாக பிறக்கும். திருமணமான பெண்களுக்கு தினம் மாசிக்கருவாடு கொடுப்பது நமது வழக்கில் உள்ளது.

    திருமணமான ஆண்களுக்கு மாசிக்கருவாடு உணவை தினம் கொடுப்பதற்கு காரணம் மருத்துவ குணம் தான். ஆண்குறி, விதைப்பை, விந்துப்பை, நீர்ப்பை, இவைகளை சரி செய்து உணர்ச்சி பெருக்கத்தை உண்டாக்கி, விந்து திரவத்தை உண்டாக்கி, விந்துவில் உயிரணு உண்டாக்கி, அந்த விந்துவில் உண்டாகும் கரு முழு ஆரோக்கியத்தோடும், ஆயுளோடும் இருப்பதற்கு காரணமான வாதஓட்டம், பித்த ஓட்டம், , ரத்த ஓட்டம் ஆகியவைகளில் தாழ்வை சீர் செய்து, ஆரோக்கியமான ஆண்களாக இருப்பதற்காக இந்த மாசிக்கருவாடு உணவை தினமும் கொடுப்பது நமது குடும்ப வழக்கமாகும்.

    மாசி கருவாடு இப்போது பெரும்பகுதி உணவில் சேர்த்து கொள்வது இல்லை. இதனால் உடல் நலக்கேடு உண்டாகுவதற்கு இந்த கருவாடு சமையலில் சேர்க்காதது தான். இந்த மாசி கருவாட்டில் மற்ற கருவாடுகளில் உள்ளது போன்று முள் இருக்காது. புளியங்கட்டையை அறுத்து வைத்தது போல் இருக்கும். அந்த மாசி கருவாட்டை வாங்கி அதை அப்படியே வைத்து கொள்ளலாம். எவ்வளவு நாட்கள் ஆனாலும் கெடாது. இந்த மாசிக்கருவாடு வீட்டில் வைத்தால் கருவாடு வாசனை வராது.

    கருவாடு உணவில் பல்வேறுபட்ட கருவாடுகள் உள்ளன. உதாரணமாக பால் சுறா கருவாடு உடம்பில் உள்ள பால் சத்தை அதிகப்படுத்தும். குழந்தை பெற்ற பெண்களுக்கு பாலை அதிகரிக்க இந்த பால் சுறா கருவாடு கொடுப்பது வழக்கம். ஆற்றில் கிடைக்கும் சிறுவகை மீன் குள்ளமாக குண்டாக இருப்பது குள்ளக்கண்டை என்று பெயர். அதேபோல் குள்ளமாகவும் சப்பையாகவும் இருப்பது குள்ளா கச்ச கருவாடு ஆகும். இந்த கருவாடு தான் குழந்தை பெற்ற பெண்கள் 9-ம் தலை குளித்த பிறகு இந்த கருவாடு குழம்பை உணவோடு கொடுப்பார்கள்.

    அப்படி கொடுக்கப்படுவது குழந்தையை பெற்ற தாய்க்கு நோய் வராமலும், நோயை வராமல் தடுக்கவும், நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கி ஆரோக்கிய உடலை தரும். ஒவ்வொரு கருவாடுக்கும் ஒவ்வொரு தன்மை இருக்கும். ஆனால் மாசி கருவாடு மூளை, இருதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுநீரகம், எலும்பு, நரம்பு, தசை, கொழுப்பு பலப்படுத்தும். ஆணுக்கு ஆண் விந்து, அதிகரிக்க செய்வதோடு, குறைந்து இருந்தால் அதை ஈடுகட்டும் மிகச்சிறந்த உணவு ஆகும். தென் மாவட்டங்களில் ஒவ்வொரு வீட்டிலும் இந்த உணவு சிறப்பாக இன்றும் விரும்பி சாப்பிடுகிறார்கள். நமது பாரம்பரிய உணவாக இதை இன்றும் கடைபிடித்து உண்டு வருகிறார்கள்.

    டாக்டர் கே.பி அர்ச்சுனன்,

    தலைவர், தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகாசங்கம்
    முத்துப்பிள்ளை கர்ப்பம் என்றால் அது கர்ப்பப் பையில் மட்டும் தான் இருக்கும். அதுவே புற்றுநோயாக மாறினால் நுரையீரல், கல்லீரல், மூளை என எங்கே வேண்டுமானாலும் பரவி பாதிக்கலாம்.
    எல்லா கர்ப்பத்தையும் உறுதி செய்கிற முதல் அறிகுறியான மாதவிலக்கு தள்ளிப் போவதுதான் முத்துப்பிள்ளை கர்ப்பத்திலும் இருக்கும். அதைத் தொடர்ந்து வாந்தி, மயக்கம் இருக்கும். முத்துப்பிள்ளை கர்ப்பமாக இருந்தால் இந்த வாந்தியும், மயக்கமும் அதிகமாவதுடன், 90 முதல் 95 சதவிகிதப் பெண்களுக்கு ரத்தப் போக்கும் ஏற்படும். அதனால் பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்படுவார்கள்.

    சில பெண்களுக்கு ரத்தப்போக்குடன் திராட்சை மாதிரியான குட்டித் திசுக்களும் வெளியேறும். அரிதாக சில பெண்களுக்கு ரத்த அழுத்தம் அதிமாகும். சிறுநீரில் புரதத்தின் அளவு கூடும். ஹைப்பர் தைராய்டு ஏற்பட்டு, அதன் அறிகுறிகளான அதிக களைப்பு, அதிக வியர்வை போன்றவையும் இருக்கலாம். முத்துப்பிள்ளை கர்ப்பம் உள்ள பெண்களின் கர்ப்பப்பை, சாதாரண கர்ப்பம் தரித்ததை விட அளவில் மிகப் பெரியதாக இருக்கும்.

    அதாவது மாதவிலக்கு தள்ளிப் போனதில் இருந்து கணக்கிட்டால் கர்ப்பப் பை இருக்க வேண்டிய அளவைவிட, அதிகப் பெரிதாக இருப்பதை மருத்துவர் கண்டுபிடிப்பார். ரத்தப் பரிசோதனையின் மூலம் கர்ப்பம் தரித்த பின் வருகிற ஹெச்.சி.ஜி ஹார்மோன் அதிகரித்திருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அடுத்து ஸ்கேன் செய்து அதை உறுதிப்படுத்தலாம். சினைப்பையின் இரண்டு பக்கங்களிலும் கட்டிகள் இருக்கலாம்.

    தீர்வுகள்...

    ஹெச்.சி.ஜி ஹார் மோன் அளவுகளை சரி பார்த்ததும், ரத்தசோகை இருக்கிறதா எனப் பார்க்க சிபிசி (complete blood count test) சோதனையும், நெஞ்சுப் பகுதிக்கு ஒரு எக்ஸ் ரேவும் எடுக்க வேண்டியிருக்கும். முத்துப் பிள்ளை கர்ப்பத் திசுக்கள் அங்கே பரவியிருக்கிறதா என்பதை அறியவே இந்தச் சோதனை. அந்தத் திசுக்கள் நுரையீரல் உள்பட உடலில் எங்கு வேண்டுமானாலும் பரவலாம். அடுத்து வாக்குவம் ஆஸ்பிரேஷன் என்கிற முறையில் அந்தக் கருவை வெளியே எடுப்பதுதான் தீர்வு. இந்த அறுவை சிகிச்சையின் போது ரத்த இழப்பு அதிகமிருக்கும் என்பதால் தேவையான ரத்தத்தைத் தயாராக வைத்துக்கொண்டே செய்யப்படும். கர்ப்பப் பை சுருங்கவும் மருந்துகள் கொடுக்கப்படும்.

    கர்ப்பம் அசாதாரணமாக வளர்ந்துவிட்டது.... கர்ப்பிணியின் வயதும் அதிகம் என்கிற நிலையில், எதிர்காலத்தில் கருத்தரிக்கிற எண்ணம் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு, கர்ப்பப் பையையும் சேர்த்தே அகற்ற வேண்டி வரும் முத்துப்பிள்ளை கர்ப்பத்தை அறுவையின் மூலம் அகற்றி விடுவதோடு முடிந்து போகிற பிரச்னை அல்ல இது. அதன் பிறகான தொடர் கண்காணிப்பு மிக முக்கியம். முத்துப்பிள்ளை கர்ப்பம் என்றால் அது கர்ப்பப் பையில் மட்டும் தான் இருக்கும். அதுவே புற்றுநோயாக மாறினால் நுரையீரல், கல்லீரல், மூளை என எங்கே வேண்டுமானாலும் பரவி பாதிக்கலாம்.

    ஆனால் அதைப் பற்றியும் பயப்படத் தேவையில்லை. கீமோதெரபி சிகிச்சையின் மூலம் இந்தப் புற்றுநோயை 100 சதவிகிதம் குணப்படுத்திவிட முடியும். முத்துப்பிள்ளை கர்ப்பக் கட்டியானது புற்று நோயாக மாறுமா என்பதை தொடர் கண்காணிப்பு மூலம் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். புற்றுநோயாக மாறுகிற வாய்ப்பானது முழுமையான முத்துப்பிள்ளை 15 முதல் 20 சதவிகிதமும், பகுதி முத்துப்பிள்ளைக் கர்ப்பத்தில் 5 சதவிகிதமும் இருக்கிறது. அறுவைசிகிச்சை முடிந்தாலும் 2 வாரங்கள் கழித்து மறுபடி ஹெச்.சி.ஜி சோதனை செய்து அதன் அளவைப் பார்க்க வேண்டும். பிறகு வாராவாரம் அதை சரி பார்க்க வேண்டும். ஹெச்.சி.ஜி அளவானது 100க்கும் கீழே வரும்.

    அதையடுத்து 2 வாரங்களுக்கு ஒருமுறை அந்தச் சோதனையை அது 5க்கும் கீழே வரும் வரை செய்ய வேண்டும். 5க்கும் கீழே வந்துவிட்டால் பிறகு மாதம் ஒரு முறை சோதனை செய்தால் போதுமானது. 8 முதல் 10 வாரங்களில் ஹெச்.சி.ஜி அளவானது சகஜ நிலைக்கு வந்து விடும். 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை இந்தத் தொடர் கண்காணிப்பு அவசியம்.

    ஹெச்.சி.ஜியின் அளவானது குறையாமல் அப்படியே இருந்தாலோ அல்லது திடீரென அதிகரித்தாலோ எச்சரிக்கையாக வேண்டும். அந்தக் குறிப்பிட்ட அளவை எட்டும்வரை சம்பந்தப்பட்ட பெண் கருத்தரிக்கக் கூடாது. அப்படிக் கருத்தரித்தால் ஹெச்.சி.ஜி அளவானது அதிகரித்து, அனாவசியக் குழப்பத்தைத் தரும். எல்லாம் குணமாகி, ஹெச்.சி.ஜி மற்றும் ஸ்கேன் மூலம் மருத்துவர் அதை உறுதி செய்த பிறகே கர்ப்பம் தரிக்கலாம். 
    குழந்தைகளுக்கு மேகி என்றால் மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு முட்டை சேர்த்து சூப்பரான மேகி முட்டை மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தக்காளி - 2
    வெங்காயம் - 1
    மேகி பாக்கெட் - 1
    ப.மிளகாய் - 2
    முட்டை - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    தனியா தூள் - 1 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
    சிக்கன் மசாலா - அரை தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கு
    எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ப.மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சிக்கன் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து பச்சை வாசனை போனவுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

    முட்டை நன்றாக உதிரியாக வந்தவுடன் அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் மேகி மசாலா சேர்க்கவும்.

    அடுத்து அதில் மேகி நூடுல்ஸை சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.

    மேகி நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்

    சூப்பரான மேகி முட்டை மசாலா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கைரேகை மட்டுமல்ல, மனிதர்களின் ஒவ்வொரு தோற்றமும் அவர்களது குணத்தை சொல்லும். இதோ உங்கள் கூந்தல் அலங்காரத்தையும், உங்கள் குணத்தையும் ஒப்பிட்டுப் பாருங்களேன்...
    கைரேகை மட்டுமல்ல, மனிதர்களின் ஒவ்வொரு தோற்றமும் அவர்களது குணத்தை சொல்லும். உங்கள் கூந்தல் அலங்காரம்கூட நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை காட்டிக் கொடுக்கும். இதோ உங்கள் கூந்தல் அலங்காரத்தையும், உங்கள் குணத்தையும் ஒப்பிட்டுப் பாருங்களேன்...

    கூந்தல் தோள்பட்டையை தொட முயற்சிக்கும் ‘பாப் கட்டிங்’, பெண்ணாக நீங்கள் இருந்தால், பாசி்ட்டிவ்வான எண்ணம் கொண்டவர். எதிலும் இருக்கும் நிறைகளை அலசுவீர்கள். குறைகளை சொல்லமாட்டீர்கள். பண்பாளராக திகழ்வீர்கள். உண்மை பேசுபவராகவும், மற்றவர்களைவிட தனித்துவம் பெற்றவராகவும் இருப்பீர்கள். எந்த சூழ்நிலையிலும் நிலைகுலைந்து போகாமல் நிதானமும், பொறுமையும் மிக்கவராக வாழ்க்கையை நடத்திச்செல்வீர்கள். மற்றவர்களைப் போல வழக்கமான வாழ்க்கையை வாழ விரும்பாதவராக, புதுமை படைப்பவராக வித்தியாசமான எண்ணங்களுடன் வலம் வருவீர்கள். காதலில்கூட உங்கள் எண்ணம் புதுமையானதாக இருக்கும். ஜொள்ளுப் பார்ட்டிகள் உங்களிடம் வழிந்து காதலைச் சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். அதே நேரத்தில் பண்பான ஒருவரைப் பார்த்தால் நீங்களாக காதலைச் சொல்லவும் தயங்கமாட்டீர்கள்.

    ‘பிக்சி கட்’ எனப்படும் இந்த குட்டையான கூந்தல் தோற்றம் உங்கள் உருவத்திற்கு கச்சிதமாகப் பொருந்துவதாக நினைக்கிறீர்களா? நீங்கள் தன்னம்பிக்கை நிறைந்தவர் என்பதை காட்டுகிறது இந்த தோற்றம். உங்களுக்கு சமூக அக்கறையும் அதிகம். கொஞ்சம் ஜாலிப் பேர்வழியும்கூட. காதல் உணர்வு அதிகமாக இருக்கும். ஆனால் காதலுக்கு மேல் எல்லைமீற மாட்டீர்கள் என்று சொல்லலாம்.

    உங்களுக்கு நிறைய நண்பர்களும், பிரியமானவர்களும் இருப்பார்கள். அந்த அளவுக்கு எளிமையாக, பண்பாக பழகும் ஆற்றல் கொண்டவர். வேலையிலும் இன்பம் காண்பவர். சுய உள்ளுணர்வால் தூண்டப்பட்டு எதையும் புதுமையாகச் செய்யும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பீர்கள். அதே நேரத்தில் சுய கட்டுப்பாடு மிகுந்தவராகவும் விளங்குவீர்கள். எவரும் உங்களைப் பாராட்டவும் பழகவும் விரும்புவார்கள். உங்களுடன் இணைந்து செயல்படவும் ஆசைப்படுவார்கள்.

    கூந்தல் உங்கள் தோள்பட்டையை தொட்டுக் கொண்டிருக்கும் இது ‘லோப் கட்டிங்’ எனப்படுகிறது. நீங்கள் பெண்ணிய கருத்துக்கள் கொண்டவராக இருப்பீர்கள். உங்கள் இயற்கை அழகு உங்களை கடந்து செல்லும் ஒவ்வொருவரையும் ஈர்க்கும். பழகிப் பார்ப்பவர்களுக்கு உங்கள் பண்பாடும், கலாசாரமும் பிடித்துப் போகும். சவால்களை ஏற்றுச் செய்வதில் உங்களுக்கு விருப்பம் அதிகம். நண்பர்களை அதிகமாக உருவாக்கிக் கொள்வீர்கள். நண்பர்களுக்கு உதவுவதில் முன்னணியில் இருப்பீர்கள். நீங்கள் ஆண்களிடம் கனிவாகப் பேசுவீர்கள். ஆனால் அவ்வளவு எளிதாக காதல்வலையில் விழுந்துவிடமாட்டீர்கள். மற்றவர்கள் உங்களை அதிகமாக பேசுபவராக கருதுவார்கள். நிஜத்தில் நீங்கள் பேச்சைவிட செயலிலே அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

    பின்னே புஜத்திற்கு கீழே, முன்னே மார்பகத்தை மறைக்கும் அளவுக்கு தொங்கும் இது ‘லாங் ஹேர் கட்’ எனப்படுகிறது. அதிகமாக வளரும் கூந்தலை நுனியில் மட்டும் கத்தரித்து அழகு செய்துகொள்ளும் நீங்கள் எதிலும் கவனமாக இருப்பவர். பொறுமை மிக்கவர். உங்களுக்கு மிகப்பெரிய கனவுகள் இருக்கும். நீங்கள் எதற்கும் கலங்குவதில்லை. அதை மற்றவர்களும் அறிவார்கள். உறவை பேணுவதிலும் வல்லவர். கடினமான மனிதர்களிடம்கூட நட்பு பாராட்டி உறவை பேண உங்களால் முடியும். ஆனால் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வதில் மட்டும் கறாராக இருப்பீர்கள். ஏனோதானோ என்று செயல்பட மாட்டீர்கள். உங்கள் கனவுகள் நிறைவேற போராடுவீர்கள், பாடுபடுவீர்கள். இலக்கை அடையாமல் ஓயமாட்டீர்கள்.
    இன்றைய தேதியில் ‘மீ டூ’ பற்றி திரும்பிய இடமெல்லாம் பேசப்படும் விஷயமாக, சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருக்கும் விஷயமாக, இன்னும் குறிப்பாக திரைத்துறையை மெல்ல விழுங்கும் விஷ(ய)மாக மாறியிருக்கிறது.
    இன்றைய தேதியில் ‘மீ டூ’ பற்றி திரும்பிய இடமெல்லாம் பேசப்படும் விஷயமாக, சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருக்கும் விஷயமாக, இன்னும் குறிப்பாக திரைத்துறையை மெல்ல விழுங்கும் விஷ(ய)மாக மாறியிருக்கிறது.

    ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்து ஆரம்பித்த ஆண் பெண் ஈர்ப்பு, இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது; இனியும் தொடரும். பருவம் அடைந்த பையனும் பெண்ணும், எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை யொன்று ஈர்க்கும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஒருவரை ஒருவர் காதலோடு பார்க்கவே செய்வார்கள். எதிர்பாலின ஈர்ப்பு என்பது பெண்கள் மீதான ஆண்களின் ஈர்ப்பு மட்டுமல்ல; ஆண்கள் மீதான பெண்களின் ஈர்ப்பையும் உள்ளடக்கியது தான்.

    ஆண், பெண் பாலின ஈர்ப்பு என்பது இயல்பாக நடப்பது. இதை நான்கு வகையாகப் பிரிக்கலாம். 1 மொழிவழி தொடர்பு. 2 உடல்வழி சீண்டல். 3 வற்புறுத்தல். 4 வன்புணர்ச்சி. இதில் எந்த வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், குழந்தைகள் மீதான அத்துமீறல் கொடுமையானது; ஜீரணிக்கவே முடியாதது. அதை விவாதிக்கவே வேண்டாம். அதேபோல் தான், நான்காவது வகையான பாலியல் வன்புணர்ச்சியும். எந்த சூழ்நிலையிலும், எந்த வயதுக்கும், எந்த காரணத்தை முன்னிட்டும் ஏற்கவே முடியாது. அதையும் விட்டுவிடுவோம்.

    மேற்சொன்ன நான்கில், ஆசை வார்த்தை கூறுதல், காதல் கடிதம் எழுதுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய மொழிவழி தொடர்புக்கு ஆளாகாத பெண்களே இல்லை எனலாம். இந்த முதல் வகையை முயற்சிக்காத ஆண்களே இல்லை என்றும் சொல்லிவிடலாம். முதல் வகையான மொழிவழி தொடர்பை, குற்றம் என்றே தனிப்பட்ட முறையில் கருதவில்லை.

    மூன்றாம் வகையான வற்புறுத்தல், மேலதிகாரிகளுக்கும் அவர்களிடம் பணிபுரிபவர்களுக்கும்; உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பரிச்சயமானவர்கள் இடையே நடக்கக்கூடிய பிரச்சினை. இங்கு தான், மீ டூ அத்துமீறல் ஆரம்பமாகிறது. இது, எதிர்பாலினத்தின் சம்மதம் இல்லாமல் நடக்குமேயானால், சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டதே. வற்புறுத்தல் எந்த அளவில் நிற்கிறது என்பதைப் பொறுத்து, சட்ட நடவடிக்கையையும் அந்த அளவில் நிறுத்தலாம்.

    இரண்டாவது வகையான உடல் வழி சீண்டல், ஆண் பெண் இருவரும் இணைந்து பணிபுரியும் அலுவலகங்களில் அதிகம் நடக்கிற விஷயம். காவல்துறை, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், திரைப்படம், ஊடகங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டிடப் பணிகள் என்று இஸ்ரோ முதல் இணைய தளம் வரை எங்கெங்கெல்லாம் ஆண்களும் பெண்களும் இணைந்து பணிபுரிகிறார்களோ அங்கெல்லாம், இரண்டாம் வகை சீண்டல்கள் நடக்கவே செய்கின்றன.

    இந்த இரண்டாவது வகையையும் கூட, ஒட்டுமொத்தமாக கிரிமினல் குற்றமாக கருதி விட வேண்டியது இல்லை; கொஞ்சம் கவனமாக கையாளப்பட வேண்டிய விஷயம்.

    பெண்கள் இப்போதுதான் முதல் முறையாக, தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறோம் என்பதை வெளிப்படையாக வெளியே சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். நிச்சயமாக இது ஒரு யுகப் புரட்சி. முள் மேல் சேலை பட்டாலும், சேலை மேல் முள் பட்டாலும் பாதிக்கப்படுவது என்னவோ சேலை தான் என்று தத்துவம் சொல்லிச் சொல்லி, எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் பெண்கள் வெளியே பேசக்கூடாது என்று வளர்த்த ஆணாதிக்க சமூகம் இது. இந்த இடத்தில், ஆண்களின் ஆதிக்கத்தைத் தாண்டி, அழுத்தங்களை மீறி, பெண்கள் இதை பேச தொடங்கியிருப்பதே பெரும் வரவேற்புக்குரிய விஷயம்.

    அதேசமயம், பெண்கள் சொல்லிவிட்டாலே உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சொல்லிவிட்டது போல கருத வேண்டியது இல்லை. உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புகளே மறுபரிசீலனைக்கு உட்பட்டவை எனும்போது, பெண்களின் குற்றச்சாட்டுகளை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. இத்தகைய உடல்வழி சீண்டல்கள், அனுமதிக்கப்பட்டு நடந்தவையா? அனுமதிக்கப்பட்டதை விட அதிகம் நடந்தவையா? எதிர்பாராத விதமாக நடந்தவையா? தவறாக புரிந்து கொள்ளப்பட்டதன் அடிப்படையில் நடந்தவையா? தவறாக புரிந்துகொண்டாலும் பரவாயில்லை என்ற துணிவின் அடிப்படையில் நடந்தவையா? என பாகுபடுத்திப் பார்க்க வேண்டும்.

    பெரும்பாலான பெண்களுக்கு, உடல்வழி சீண்டல்களை, குறிப்பாக மேல் அதிகாரிகளிடம் இருந்து வரக்கூடிய சீண்டல்களை எப்படி எதிர்கொள்வது என தெரிவதில்லை என்பது உண்மை. பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் அவர்களை துரத்துகின்றன. அதையே சாக்காக பயன்படுத்தி அதிகாரிகளும் துணிச்சலாக கை வைக்கிறார்கள். விசாகா கமிட்டி உள்பட ஆயிரம் ஆயிரம் தடைகள் வந்தாலும், அப்படி கமிட்டிகள் நடத்தி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறையிலேயே இது போன்ற புகார்கள் கிளம்பி வருவது கவனிக்கப்பட வேண்டியது.

    சுருக்கமாகச் சொல்வது என்றால், பாலியல் வன்புணர்ச்சி ஒருபோதும் ஏற்கக் கூடாதது; பாலியல் வற்புறுத்தலைத் தடுக்க வேண்டும்; உடல்வழி சீண்டல்களை தனித்தனியாக ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்; ஆண்பெண் உறவுகள் நல்ல நட்பாகும்; சில சமயம் காதலாகும்; பல சமயம் தவறான புரிதலாகும்; அரிதான சமயங்களில் வன்புணர்ச்சி ஆகவும் மாறிவிடுகிறது.

    பெண்களின் மேன்மையை, மென்மையை புரிந்து, புரியவைத்து, காதல் மொழி பேசி வளரும் உறவுகளை கொச்சைப்படுத்துவது ஆகாது. அப்படி வரும் உறவுகள், பிற காரணங்களுக்காக உடையுமானால், அந்தத் தருணத்தில் அவர்களை ஆபாசமாக சித்தரிப்பது நியாயமாகாது.

    -அழகிய சிங்கன் 
    சர்க்கரை நோயாளிகள் தினமும் கோதுமையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று தக்காளி சேர்த்து கோதுமை தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தக்காளி - 2,
    கோதுமை மாவு - 1 கப்,
    பெரிய வெங்காயம் - 1,
    இட்லி மாவு - அரை கிராம்,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    காய்ந்தமிளகாய் - 2,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
    சீரகம் - 1 டீஸ்பூன்.



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை கோதுமை மாவுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து, அதனுடன் காய்ந்தமிளகாய், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.

    இட்லி மாவுடன் அரைத்த தக்காளி மாவு கலவை, உப்பு சேர்த்து நன்கு கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து மாவை கரைத்துக் கொள்ளவும்.

    பின்பு நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான தக்காளி கோதுமை தோசை ரெடி.

    தேங்காய் சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மகளை சாதனையாளராக உருவாக்க தாய்மார்கள் தங்கள் குழந்தைகளிடம் இருக்கும் தனித்திறன்களை எப்படி கண்டுபிடித்து மேம்படுத்த வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    மகளை சாதனையாளராக உருவாக்க தாய்மார்கள் தங்கள் குழந்தைகளிடம் இருக்கும் தனித்திறன்களை எப்படி கண்டுபிடித்து மேம்படுத்த வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

    கணவன், மனைவி இருவரும் வெளியே வேலைக்கு செல்வது தவிர்க்க முடியாததாக இருந்தாலும், அவர்கள் குழந்தைகளுக்கும் போதுமான நேரத்தை ஒதுக்கவேண்டும். அவர்களுடன் நேரத்தை பயனுள்ளமுறையில் செலவிட்டால்தான், அவர்களிடம் மறைந்திருக்கும் தனித்திறன்களை கண்டறியமுடியும்.

    குழந்தைகள் பெரும்பகுதி நேரத்தை தங்கள் பள்ளி ஆசிரியர்களுடன் செலவிடுகிறார்கள். அதனால் அவர்களது திறமைகளை ஆசிரியர்கள் அறிந்திருப்பார்கள். பெற்றோருக்கும்- குழந்தைகளின் ஆசிரியர்களுக்கும் இடையே மனந்திறந்த உரையாடல் இருந்தால் இருவரும் இணைந்து, குழந்தைகளிடம் இருக்கும் திறமைகளை எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

    படி.. படி.. என்று கூறி, கல்வியை மட்டும் குழந்தைகளிடம் திணித்தால் அவர்களிடம் இருக்கும் தனித்திறமைகளை அடையாளங்காண முடியாது. படிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டச் செய்யாமல் குழந்தைகளை சுதந்திரமாக அவர்களுக்கு பிடித்த துறைகளில் கவனம் செலுத்தச் சொல்லுங்கள். அதில் எதில் அவர்களுக்கு ஈடுபாடும், செயல் ஊக்கமும் இருக்கிறதோ அதை இனங்கண்டுமேம்படுத்துங்கள். படிப்பைவிட, விளையாட்டுத் துறையில் ஈடுபடும் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

    ‘உனக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதை செய்’ என்று முடிவெடுக்கும் வாய்ப்பை குழந்தைகளுக்கு கொடுங்கள். ஒருசில நாட்கள் பயிற்சிக்கு சென்றுவிட்டு அதை தொடர விருப்பம் இல்லை என்றால், கட்டாயப்படுத்தாமல் அதில் இருந்து விலகவும், புதிதாக பிடித்தில் ஈடுபடவும் அனுமதிகொடுங்கள்.

    ஈடுபட்ட உடன் எந்த துறையிலும் வெற்றியும், பதக்கமும் கிடைக்காது. கலந்துகொள்வதற்கான சான்றிதழ் மட்டுமே கிடைத்தாலும், குழந்தைகளை குறைசொல்லாமல், அவர்கள் தொடர்ந்து கலந்துகொள்ள ஊக்கம் கொடுங்கள்.

    வெற்றி பெற்றால் பதக்கமும், பாராட்டும்தான் கிடைக்கும். தோல்வியடைந்தால் சிறந்த அனுபவமும், முழுமையாக தங்களை தயார்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். அதனால் தோல்வியையும் நேசிக்க குழந்தைகளை பக்குவப்படுத்துங்கள். தோல்வியடைந்தவர்களால்தான் சிறந்த வெற்றியாளர்களாக முடியும்.

    சாதனையாளர்களை உருவாக்க விரும்பும் பெற்றோர்களுக்கு தியாகமும், பொறுமையும் தேவை. குழந்தையை கொண்டு போய் அப்படியே பயிற்சிமையத்தில் சேர்த்துவிட்டு அவர்கள் தங்கள் வேலையை பார்க்க சென்றுவிடக்கூடாது. குழந்தை பயிற்சி பெறும்போது, அவர்களும் உடனிருக்கவேண்டும். கூர்ந்து கவனித்து, அவர்களும் ஓரளவாவது அதை புரிந்துகொண்டு குழந்தைக்கு வழிகாட்டவேண்டும். ஈடுபாடு கொண்ட பெற்றோர்களால்தான் சாதனைக் குழந்தைகளை உருவாக்கமுடியும்.
    நாம் ஒழுங்காக முறையோடு யோகா பயிற்சியை மேற்கொள்ளும்போது நம்முடைய உடல் சக்தி மற்றும் மனோ சக்தியை சிறிதும் இழக்காமல் முதுமையிலும் வாழமுடியும்.
    நல்ல உடல்நலத்தையும், மனநலத்தையும் பெற்றுக்கொள்ள பயன்படும் கலையே யோகா ஆகும். நாம் வயது முதிரும்போது நம் உடலின் உறுப்புகளின் இயக்கங்கள் யாவும் சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வந்து இறுதியில் சீர்கேடு அடைகின்றன. வயது முதிர்வதை நம்மால் ஒருபோதும் தவிர்க்க முடியாது. ஆனால் யோகா பயிற்சியை மேற்கொள்ளுவதால் முதுமையில் ஏற்படக்கூடிய உடல் தளர்ச்சியை தடுக்க முடியும்.

    நாம் ஒழுங்காக முறையோடு யோகா பயிற்சியை மேற்கொள்ளும்போது நம்முடைய உடல் சக்தி மற்றும் மனோ சக்தியை சிறிதும் இழக்காமல் முதுமையிலும் வாழமுடியும்.

    யோகாவினால் ஏற்படும் விளைவுகள் ஏனைய விளையாட்டுகளின் மூலமாகவும், உடல்தேக பயிற்சியின் மூலமாகவும் ஏற்படும் விளைவுகளில் முற்றிலும் மாறுபட்டது. ஏனைய பிற விளையாட்டுகள் நம் உடல் தசைகள் வலிமை பெறுவதற்கு மட்டுமே பயன்பெறுகின்றன. ஆனால் யோகா சமயத்திற்கேற்ப வளைந்து கொடுக்கக்கூடிய ஆரோக்கியமுள்ள உடலை உருவாக்குகிறது. யோகா பயிற்சி உடல் சக்தியை சேமிக்கிறது.

    யோகாவில் பயிலும் அனேக ஆசனங்கள் நமது உள்ளுறுப்புகள் செவ்வனே செயல்புரிவதற்கு பயன்படுகின்றன. அவை தசைகள் வலுப்பெறவும், எலும்புகள் உறுதியாக இருக்கவும் உதவுகின்றன. இதயம் வலுவடையவும், உடலினுள் பாயும் ரத்த ஒட்டத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படவும் உதவுகிறது. வயிற்றின் தொப்பையை குறைக்கிறது. உடலில் உள்ள சுரப்பிகள் தூண்டப்படுகின்றன. மூளைக்கு அதிக அளவில் ஆக்சிஜன் செல்வதற்கு பயன்படுகிறது. இதன் மூலம் மனம் விழிப்புணர்வு பெறுகிறது. உணர்ச்சிகள் சமநிலைப்படுத்தப்படு கிறது. உடலில் எல்லா பகுதிகளுக்கும் போதுமான ஆக்சிஜன் செலுத்தப்படுகின்றது.

    யோகா பயிற்சி செய்வதற்கு சில விதிமுறைகள்:-

    யோகா பயிற்சி செய்வதற்கு முன்பாக இளம் சூடான நீரில் குளிக்க வேண்டும். அதிக சூடான நீரில் குளிக்கக் கூடாது. சுத்தமான தளர்வான ஆடைகளையே அணிய வேண்டும். பயிற்சி செய்வதற்கு ஏற்ற நேரம் அதிகாலை. அப்போது வயிறு காலியாக இருக்க வேண்டும். உடலின் கழிவுகளை அகற்றிய பிறகே பயிற்சி செய்ய வேண்டும். வயிறு புடைக்க உண்ட பிறகு இந்த பயிற்சிகளை செய்யக் கூடாது.

    யோகா பயிற்சிகளை வெறும் தரையில் தான் செய்ய வேண்டும். கட்டில் மீது செய்யக்கூடாது. பயிற்சி செய்யும் இடம் காற்றோட்ட வசதி உள்ளதாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும். பெண்கள் தலைமூடி நீளமாக இருந்தால் மடித்து கட்டிக்கொள்ள வேண்டும். யோகா பயிற்சி ஒவ்வொரு நாளும் முறையாக செய்ய வேண்டும். இந்த ஒழுங்குமுறை இல்லாவிட்டால் நாம் ஒருபோதும் வெற்றி பெற முடியாது.
    நிமோனியா ஜுரம், வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற கிருமிகளால் நுரையீரலில் ஏற்படும் தொற்று ஆகும். நிமோனியாவால் குழந்தைகள் மட்டுமா பாதிக்கப்படுகின்றனர்? வயதில் மூத்தவர் மற்றும் ஏனையோர் பாதிக்கப்படுகின்றனர்.
    இன்று (நவம்பர் 12-ந் தேதி) உலக நுரையீரல் அழற்சி தினம்.

    மனிதனின் வாழ்க்கையில் சுவாசமானது முக்கிய பங்கு வகிக்கிறது. மூச்சு நின்றுவிட்டால் ஒரு மனிதனின் வாழ்க்கை முடியப்போகிறது என்று அர்த்தம். எனவே மூச்சு வாங்குதல் அல்லது திணறல் ஏற்படுவது ஒருவருக்கு அபாய எச்சரிக்கையாகும். நாம் காற்றை சுவாசிப்பதன் மூலம் நம் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் நுரையீரல் மூலமாக உள்ளே செல்கிறது. இதற்கு நுரையீரலில் இரண்டு பாகங்கள் உள்ளன. இவை காற்றை நுரையீரலுக்குள் எடுத்துச்செல்லும் மூச்சுக்குழாய் மற்றும் காற்றில் இருந்து ஆக்ஸிஜன் உடலுக்குள் அனுப்பும் பலூன் போன்ற மெல்லிய பாகம் ஆகும். மூச்சுக்குழாய் பாதிப்பு ஏற்படும் நோய்கள் ஆஸ்துமா தொடர் மூச்சிறைப்பு நோய் போன்றவையாகும்.

    இந்த பிரச்சினைகள் இருமல் மூச்சிறைப்பு மற்றும் விசில் சத்தத்துடன் சுவாசம் போன்ற அறிகுறிகளை உண்டாக்கும். சுவாசக்குழாய் பிரச்சினைகள் பெரும்பாலும் தூசி, புகை, பலூன் போன்ற மெல்லிய பாகம் பெரும்பாலும் கிருமிகள் அல்லது நுரையீரல் அழற்சி நுரையீரலில் நீர் கோர்த்துக் கொள்ளுதல் போன்றவற்றால் பாதிக்கப்படும். இவை நிம்மோனியா அல்லது நுரையீரல் அழற்சி நுரையீரல் வீக்கம் போன்றவை ஆகும். நுரையீரல் அழற்சி பாதிப்பு உள்ளவர்கள் சளியுடன் கூடிய இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சிரைப்பு போன்ற அறிகுறிகளோடு மருத்துவரிடம் வருவார்கள்.

    நுரையீரல் வீக்கம் உள்ளவர்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுவார்கள். ஆக மொத்தத்தில் சுவாசப்பிரச்சினைகள் நுரையீரலை மையமாக வைத்தே வருகின்றன. பொதுவாக நுரையீரல் பிரச்சினைகள் குளிர்காலத்தில் அதிகமாக இருக்கும். இதில் மிக முக்கியமான ஒன்று நுரையீரல் அழற்சியாகும் (நிமோனியா ஜுரம்). பெரும்பாலும் நிமோனியாவால் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். நிமோனியா ஜுரம், வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற கிருமிகளால் நுரையீரலில் ஏற்படும் தொற்று ஆகும்.

    உலக சுகாதார அமைப்பின் அறிவிப்புகள், குழந்தைகள் இறப்பு விகிதம், குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் அதிகமாக காணப்படுவதை பறைசாற்றுகிறது. இதை மக்களுக்கு உணர்த்துவதற்காக ஆண்டுதோறும் நவம்பர் 12-ந் தேதி ‘உலக நுரையீரல் அழற்சி தினம்’ ஆக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. நுரையீரல் அழற்சி குழந்தைகளை பாதிக்காமல் இருக்க இந்த அமைப்பு சில நிபந்தனைகளை பரிந்துரை செய்துள்ளது. அவை, 1) தாய்ப்பால் மற்றும் சுகாதாரமான உணவுகளை குழந்தைகளுக்கு அளிப்பது. 2) நிமோனியா தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதுடன், கைகள் மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். எய்ட்ஸ் நோயாளிகள் பாதுகாப்பு அவசியம். 3) இது தவிர நிமோனியா பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளுக்கு விரைவாக ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கிடைக்க செய்வது.

    நிமோனியாவால் குழந்தைகள் மட்டுமா பாதிக்கப்படுகின்றனர்? வயதில் மூத்தவர் மற்றும் ஏனையோர் பாதிக்கப்படுகின்றனர். இதில் நமக்கு வில்லனாக அமைவது பன்றி காய்ச்சல் ஏற்படுத்தும் நுரையீரல் தொற்று ஆகும். இந்த வருடம் இந்த காய்ச்சல் ஏற்படுத்திய பாதிப்பு சொல்லில் அடங்காது. இதைப்பற்றி கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.

    பன்றி காய்ச்சல் 2009-ல் மனிதனை முதன் முதலாக தாக்கியது. இது எச்1 என்1 என்ற வைரஸ் கிருமியால் வரும் ஒரு வகையான புளூ ஜுரமாகும். பாதிக்கப்பட்டவர்கள் ஜுரம், உடல் வலி, மூக்கில் நீர் வருதல், தொண்டை வலி, இருமல் மற்றும் மூச்சிரைப்பு போன்றவற்றால் அவதிப்படுவர். இது இருமல் மற்றும் தும்மல் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது.

    மற்றும் பாதிக்கப்பட்டவர் கைகளில் உள்ள வைரஸ்கள் கைப்பிடி மற்றும் கதவுகளில் தொற்றிக்கொள்கிறது. மற்றவர்கள் இந்த இடத்தை தொட்டு விட்டு தங்கள் மூக்கு அல்லது கண்களைத் தொடும் போதும் அவர்களை இந்த வைரஸ் தாக்குகிறது. பன்றி காய்ச்சல் எல்லோரையும் சமமாக தாக்குகிறதா? இல்லை. ஆஸ்துமா மற்றும் தொடர் மூச்சிரைப்பு நோய் போன்ற நுரையீரல் நோய் உள்ளவர்கள் மற்றும் சிறு நீரகம், கல்லீரல், இருதய நோயாளிகள், இதனால் தீவிரமாக பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் வென்டிலேட்டர் வரை சமயங்களில் செல்வதுடன், இறக்கவும் நேரிடுகிறது.

    இந்த எமனிடம் இருந்து நம்மை காத்து கொள்வது எப்படிமேற் கூறியவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த துறைகளில் உள்ளவர்கள் இதற்கான தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். நோய் உள்ளவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் வாயை மூடி கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி கழுவுவது, கண், மூக்கு பகுதிகளை கைகளால் தொடாமல் இருப்பது அவசியம். பொது இடங்களை தவிர்ப்பது நல்லது.

    பாதிக்கப்பட்டவர்கள் அருகாமையில் இருக்கும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

    டாக்டர் ஆ.சுரேஷ், நுரையீரல் சிறப்பு மருத்துவர்

    சளி, இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் பச்சை மிளகாயை சமையலில் பயன்படுத்திக்கொள்ளலாம். அது சளியின் வீரியத்தை குறைக்க உதவும்.
    காரவகை உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள் சமையலில் பச்சை மிளகாயை அதிகமாக சேர்த்துக்கொள்கிறார்கள். பச்சை மிளகாயில் உடல் நலத்தை மேம்படுத்தும் விஷயங்கள் உள்ளன.



    அதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடண்ட்ஸ் ஆகியவை நோய்களுக்கு எதிராகவும், விரைவாக நோயை குணப்படுத்தவும் துணைபுரியும். சளி, இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் பச்சை மிளகாயை சமையலில் பயன்படுத்திக்கொள்ளலாம். அது சளியின் வீரியத்தை குறைக்க உதவும்.

    வெட்டுக்காயத்தால் அவதிப்படுபவர்களும் உணவில் பச்சை மிளகாயை சேர்த்துக்கொள்ளலாம். காயங்களை விரைவாக குணப்படுத்துவதற்கான சக்தியை அது வழங்கும்.

    மன நிலையை மேம்படுத்தும் ஆற்றலும் பச்சைமிளகாய்க்கு இருக்கிறது. வலியை கட்டுப்படுத்தவும் துணைபுரியும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கவும் உதவும். நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. 
    சிக்கனை தயிர் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஊறவைத்து தயார் செய்யப்படுகிறது கால்மி கபாப். இந்த கால்மி கபாப்பை வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
    தயிர் - 1/4 கப்
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    எலுமிச்சை சாறு - 1/2 மேஜைக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    முந்திரி பொடி - 4 தேக்கரண்டி
    ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
    மிளகு - 1/4 தேக்கரண்டி
    ஃப்ரஷ் கிரீம் - 1/4 கப்
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :


    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் தயிர் போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் மற்றும் முந்திரி பொடியை சேர்த்து நன்கு கலக்கவும்.

    அத்துடன் ஏலக்காய் பொடி, மிளகு தூள், சீரகம், கிரீம் ஆகியவற்றை சேர்த்து கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.

    எலும்பு நீக்கப்பட்ட சிக்கனை இந்த மசாலா கலவையில் போட்டு நன்றாக கலந்து 24 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

    அடுப்பில் கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும். மசாலா தடவி வைத்த சிக்கனை எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான கால்மி கபாப் ரெடி.

    புதினா சட்னி, வெங்காயம் ஆகியவற்றை தொட்டு சூடாக சாப்பிட ருசியாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாதவிடாய் என்பதே ஒரு பெண் தன் வாழ்க்கையில் உடல் ரீதியாக சந்திக்கும் மிகப்பெரிய மாற்றமாகும். மாதவிலக்குக்கு முன் ஏற்படும் சில அறிகுறிகளை பற்றி இப்போது பார்க்கலாம்.
    மாதவிடாய் என்பதே ஒரு பெண் தன் வாழ்க்கையில் உடல் ரீதியாக சந்திக்கும் மிகப்பெரிய மாற்றமாகும். மாதவிடாய், உங்கள் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். இக்காலத்தில் பெண்களுக்கு முகத்தில் பருக்கள் வருவது இயல்பு தான். மாதவிடாயின் போது பெண்களுக்கு ஏற்பாடு மாற்றங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த பருக்கள் ஒரு வார காலம் அல்லது அதற்கு குறைவான காலத்திலேயே மறைந்து விடும். ஆனால் அனைத்து பெண்களுக்கும் இது ஏற்படுவதில்லை.

    மாதவிலக்குக்கு முன் ஏற்படும் அறிகுறிகள் (PMS – ப்ரீ மென்ஸ்சுரல் சிம்ப்டம்ஸ்) என்பது அநேகமாக அனைத்து பெண்களுக்கும் அனுபவிக்கும் ஒன்றாகும். மாதவிலக்கு என்பது ஹார்மோன் சம்பந்தமாக ஏற்படும் மாற்றங்கள். அதனால் மாதவிலக்கின் போது ஏற்படும் மாற்றங்களும் அதிகம்.

    மாதவிலக்குக்கு முன் ஏற்படும் சில அறிகுறிகளை பற்றி இப்போது பார்க்கலாம்:

    * மார்பகங்கள் மென்மையாகுதல் அல்லது மார்பகங்களில் வலி
    * எரிச்சல் அல்லது காரணமில்லாத கோபம்
    * ஒரு வித சோகம்
    * மன அழுத்தம் / பதற்றம்
    * உணவுகளின் மீது தீவிர நாட்டம்

    மேற்கூறிய மாறுதல்களை நீங்கள் அனுபவிக்க கூடும். சில பெண்களுக்கு மாதந்திர மாதவிடாயின் போது குமட்டல் மற்றும் வாந்தியும் கூட ஏற்படும். இத்தகைய மாற்றங்கள் பல நேரம் சந்தோஷங்களை அளிக்காது. இக்காலம் பெண்களுக்கு கடுமையானதாக இருக்கும்.

    நீங்கள் வீட்டையும் வேலையையும் சேர்ந்து கவனிக்க வேண்டுமென்றால், உங்கள் நிலைமை இன்னும் கஷ்டம் தான். ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் போதுமான விழிப்புணர்வு இருந்தால், மாதவிடாயின் போது ஏற்பாடு மாற்றங்களை சுலபமாக சமாளிக்கலாம்.

    இக்காலத்தில், பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். பச்சை காய்கறிகள் மற்றும் கால்சியம், புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ள உணவுகளை உட்கொண்டால், பல பிரச்சனைகள் தீரும்.

    வைட்டமின் ஈ மாத்திரைகளை உட்கொண்டால், மாதவிலக்குக்கு முன் ஏற்படும் அறிகுறிகளின் தாக்கங்கள் குறையும். மாதவிடாயின் போது ஏற்படும் மாற்றங்களை சந்திக்க முன் கூட்டியே தயாராக இருங்கள்.
    ×