search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "green chilli"

    • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 100 டன் அளவுக்கு பச்சை மிளகாய் விற்பனைக்கு வருவது வழக்கம்.
    • இஞ்சியின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

    போரூர்:

    கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து பச்சை மிளகாய் விற்பனைக்கு வருகிறது.

    தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் சீசன் முடிந்துவிட்டது. கர்நாடக மாநிலம் ஹாசனில் மட்டுமே தற்போது பச்சை மிளகாய் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பச்சை மிளகாய் வரத்து குறைந்து உள்ளது.

    இதன்காரணமாக கடந்த சில நாட்களாக பச்சை மிளகாய் விலை அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் தொடக்கத்தில் ஒரு கிலோ ரூ.30-க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் தற்போது 3 மடங்கு வரை விலை அதிகரித்து உள்ளது. இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.100-க்கு விற்கப்படுகிறது.

    மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனை ஆகிறது.

    வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.150வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பச்சை மிளகாய் மொத்த வியாபாரி ராம்மோகன் கூறியதாவது:-

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 100டன் அளவுக்கு பச்சை மிளகாய் விற்பனைக்கு வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக அதன் வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளது. இன்று 80 டன் பச்சை மிளகாய் விற்பனைக்கு வந்துள்ளது.

    கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தியாகும் பச்சை மிளகாய் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கும் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டு பச்சை மிளகாய் விலை அதிகரித்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் இஞ்சியின் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இன்று அதன் விலை மேலும் எகிறி உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ இஞ்சி ரூ.220-க்கும் மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ இஞ்சி ரூ.250- வரையும் விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் இஞ்சி ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரத்து குறைவால் பச்சை பட்டாணி விலையும் அதிகரித்து உள்ளது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ பச்சை பட்டாணி ரூ.200-க்கும், வெளி மார்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ பச்சை பட்டாணி ரூ.250 வரையும் விற்கப்படுகிறது.

    கோயம்பேடு சந்தைக்கு ஊட்டி, கொடைக்கானல், டெல்லி மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து பச்சை பட்டாணி விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது டெல்லியில் இருந்து குறைந்த அளவில் மட்டுமே பச்சை பட்டாணி விற்பனைக்கு வருவதால் அதன் விலை அதிகரித்து இருப்பதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பச்சை மிளகாய் இல்லத்தரசிகளின் கண்களை கசக்கும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.
    • காந்தி மார்க்கெட்டில் இன்று பெங்களூரு பச்சை மிளகாய் கிலோ ரூ.120 க்கு விற்கப்பட்டது.

    திருச்சி:

    நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சில்லறை கடைகளில் கிலோ ரூ. 120 வரை விற்கப்படுகிறது. தற்போது இந்த ட்ரெண்டிங் செய்தி மீம்ஸ்களாக சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்து வருகின்றன. இல்லத்தரசிகளும் கிலோ கணக்கில் வாங்கிய தக்காளியின் அளவை பெரிதும் குறைத்துக் கொண்டுள்ளனர்.

    திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று தக்காளியின் விலை ரூ.100 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. கத்தரிக்காய் கிலோவுக்கு ரூ. 60, பீன்ஸ் ரூ. 100, கேரட் ரூ.70 மல்லி கட்டு ரூ. 50, புதினா ரூ. 50 விலைக்கு விற்கப்பட்டது. இதற்கிடையே சத்தம் இல்லாமல் பச்சை மிளகாய் இல்லத்தரசிகளின் கண்களை கசக்கும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. காந்தி மார்க்கெட்டில் இன்று பெங்களூரு பச்சை மிளகாய் கிலோ ரூ.120 க்கு விற்கப்பட்டது.

    இது வரலாறு காணாத விலை உயர்வு என காந்தி மார்க்கெட் காய்கறி சந்தையின் வியாபாரி கமலக்கண்ணன் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது, முந்தைய காலகட்டங்களில் அதிகப்பட்சமாக ரூ. 60- 70 வரை மட்டுமே பச்சை மிளகாய் விலை உயர்ந்தது. ஆனால் இப்போது ரூ.120 தொட்டுள்ளது. பொதுவாக சமையலில் பச்சை மிளகாயின் பங்களிப்பு சிறிய அளவிலே இருக்கும். பொதுமக்களும் 100 கிராம், 200 கிராம் மட்டுமே வாங்குவார்கள். ஹோட்டல்களுக்கு மட்டுமே அரை கிலோ, ஒரு கிலோ என வாங்குவார்கள். பச்சை மிளகாய் போன்று இஞ்சி விலையும் உச்சம் தொட்டுள்ளது. காந்தி மார்க்கெட்டில் இன்று இஞ்சி ரூ.200க்கு விற்கப்பட்டது. உள்ளூர் பச்சை மிளகாய் வரத்து குறைந்துள்ளதால் கடுமையான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 6 மாதத்திற்கு முன்பு பச்சை மிளகாய் ரூ.10-க்கு விற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மணப்பாறை, துவரங்குறிச்சி பகுதிகளில் மிளகாய் பயிரிட்டவர்கள் அதனை பழுக்க விட்டு காய வைத்து வரமிளகாயாக மாற்றி விற்பனை செய்தனர். இது அவர்களுக்கு அதிக லாபத்தை தருவதாக இருந்தது. காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ள காரணத்தால் விற்பனையும் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

    • பச்சைமிளகாயில் காரம் அதிகம் ஆனால் விலையோ குறைவு என பல்லட வட்டார விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
    • ஒரு வாரத்திற்கு சுமார் ரூ. 3 ஆயிரம் செலவு செய்து மருந்து அடிக்கப்படுகிறது.

    வீரபாண்டி :

    பச்சைமிளகாயில் காரம் அதிகம் ஆனால் விலையோ குறைவு என பல்லட வட்டார விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

    பல்லடம் வட்டம், கரைப்புதூர் ஊராட்சி அக்கணம்பாளையத்தை சேர்ந்த அரசன் தோட்டம் பகுதியை சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி வயது (55) மிளகாய் சாகுபடி செய்து வருகிறார். அவர் இது குறித்து கூறுகையில்; மிளகாய்க்கு போதிய விலை கிடைப்பதில்லை பச்சை மிளகாய் நாற்று நட்டு 60 நாட்களுக்கு மேல் ஆகிறது காய் பிடிப்பதற்கு. பச்சை மிளகாய் செடியில் வெள்ளை விழுவதால் இலைகள் சுருங்கி பூக்கள் பாதிப்பை ஏற்பட்டு காய்கள் சரியாக பிடிப்பதில்லை. ஒரு வாரத்திற்கு சுமார் ரூ. 3 ஆயிரம் செலவு செய்து மருந்து அடிக்கப்படுகிறது. 20-25 நாட்களுக்கு ஒரு முறை பறிக்கலாம். வியாபாரிகள் தோட்டத்திற்கே வந்து விற்பனைக்கு எடுத்து செல்கிறார்கள். ஒரு மாதத்திற்கு 1500கிலோ வரை கிடைக்கும். ஆட்கள் கூலி உயர்வு உயர்ந்துள்ளது.

    பராமரிப்புக்கும் அதிக செலவாகிறது. ஒரு கிலோ குறைந்த பட்சமாக 35 முதல் 40வரை விலை விற்றால் மட்டுமே ஓரளவு லாபம் கிடைக்கும்.ஆனால் ஒரு கிலோ 20 முதல் 25வரை மட்டுமே விலை போகிறது. இதனால் தொடர்ந்து மிளகாய் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கவலையுடன் தெரிவித்தார்.

    சளி, இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் பச்சை மிளகாயை சமையலில் பயன்படுத்திக்கொள்ளலாம். அது சளியின் வீரியத்தை குறைக்க உதவும்.
    காரவகை உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள் சமையலில் பச்சை மிளகாயை அதிகமாக சேர்த்துக்கொள்கிறார்கள். பச்சை மிளகாயில் உடல் நலத்தை மேம்படுத்தும் விஷயங்கள் உள்ளன.



    அதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடண்ட்ஸ் ஆகியவை நோய்களுக்கு எதிராகவும், விரைவாக நோயை குணப்படுத்தவும் துணைபுரியும். சளி, இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் பச்சை மிளகாயை சமையலில் பயன்படுத்திக்கொள்ளலாம். அது சளியின் வீரியத்தை குறைக்க உதவும்.

    வெட்டுக்காயத்தால் அவதிப்படுபவர்களும் உணவில் பச்சை மிளகாயை சேர்த்துக்கொள்ளலாம். காயங்களை விரைவாக குணப்படுத்துவதற்கான சக்தியை அது வழங்கும்.

    மன நிலையை மேம்படுத்தும் ஆற்றலும் பச்சைமிளகாய்க்கு இருக்கிறது. வலியை கட்டுப்படுத்தவும் துணைபுரியும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கவும் உதவும். நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. 
    ×