என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    வாழ்க்கை மகிழ்ச்சியாக நீண்டநாட்கள் தொடர வேண்டுமென்றால் சர்க்கரைநோய் பற்றிய விழிப்புணர்வு மிக அவசியம் இந்தநாளில் சர்க்கரை நோயை வென்றிட உறுதி ஏற்போம்.
    இன்று (நவம்பர் 14-ந்தேதி) உலக சர்க்கரை நோய் தினம்.

    சர்க்கரை நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகள் அதிகரித்து வருவதால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உலக நீரழிவு கூட்டமைப்பும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து 1991-ம் ஆண்டு உலக சர்க்கரை நோய் தினத்தை உருவாக்கின. உலக அளவில் 425 மில்லியன் மக்கள் சர்க்கரைநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள். இதனால் உலக சர்க்கரை நோய் நிறுவனமும், உலக சுகாதர நிறுவனமும் இந்த ஆண்டு “குடும்பமும் சர்க்கரை நோயும்” என்ற குறிக்கோளுடன் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வேண்டுமென்று கூறியுள்ளது.

    நம் உடம்பில் பல தொழிற்சாலைகள் இரவு பகல் பாராமல் இயங்குகின்றன. இவை இயங்குவதற்கு தேவையான எரிபொருள் நாம் உண்ணும் உணவில் இருந்தே மாவுப் பொருட்கள் மூலமாக கிடைக்கின்றன இந்த மாவு பொருட்களின் சக்தி நம் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் அனுப்பும் வேலையை சரியாக செய்வது நம் உடம்பில் உள்ள கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலினே. இந்த இன்சுலின் சரியாக சுரக்காவிட்டாலோ, அல்லது நம் உடம்பு அதை சரியாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அல்லது அதற்கு எதிரான, சுரப்புகள் அதிகமாகி விட்டாலோ ஏற்படுவதுதான் சர்க்கரைநோய்.

    சர்க்கரை நோய் என்பது ஒரு வியாதி அல்ல.சாபமும் அல்ல. இது நம் இயக்கத்தின் ஒரு மாறுபாடு நம்மோடுதான் இது இறுதிவரை இருக்கும் ஒரு நண்பனைப் போல நாம் நம் நண்பரிடத்தில் வெளிப்படையாக துரோகம் இழைக்காமல் பழகினால் மட்டும்தான். அவன் நமக்கு ஒத்துழைப்பான் அதுபோல்தான் சர்க்கரை நோயும் நாம் சரியாக கவனமுடன் இருந்தால் 100 ஆண்டுகள் வரை சந்தோஷமாக வாழலாம்.

    சர்க்கரை நோய் இரண்டு வகைப்படும் :முதல் வகை இன்சுலின் சுரக்காமலே அல்லது மிகக் குறைந்த அளவில் சுரந்து இருப்பதினால் வருவது. இரண்டாம் வகை நம் உடம்பு இந்த இன்சுலினுக்கு ஈடு கொடுக்காமலோ, அல்லது குறைவாக சுரந்தாலோ அல்லது இரண்டினாலேயே அல்லது அதற்கு எதிரான சுரப்புகளாலோ வருவது. இதில் நாம் எந்த வகை என்று அறிய வேண்டும். இதற்கு நமது பாரம்பரியமும் மிகமுக்கியமான காரணமாகும்.

    இப்போது அகில உலக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்திற்கு வரக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன, இதற்கு முக்கிய காரணம் நமது உணவுப் பழக்க வழக்கமே. அதுமட்டுமல்ல நாம் இப்போது, கலாசாரம், உணவு முறை கல்விமுறை இவற்றில் மிகவும் குழம்பிப்போய் இருக்கிறோம் உதாரணத்திற்கு முதலாவதாக உணவில் இருக்கும் மாவுப் பொருள் கிடைப்பது நம் பகுதியில் அரிசி, வட இந்தியாவில் கோதுமை, ஆப்பிரிக்காவில் உருளைக்கிழங்கு மேலை நாடுகளில் ஓட்ஸ் என்று சொல்லலாம். ஆனால் நாம் என்ன செய்கிறோம். இந்த நான்கையுமே எடுத்துக்கொள்கிறோம். அப்பொழுது நம் ரத்தத்தில், செல்களுக்கு அனுப்பியது போக அதிக குளுக்கோஸ் ரத்தத்தில் தங்கி விடுகிறது. நம் பகுதியில் கிடைக்கும் அரிசியை அளவோடு எடுத்துக் கொள்வது தான் நமக்கு நல்லது அடுத்ததாக மாவுப்பொருள் எடுத்துக்கொள்ளும் போது மென்று சாப்பிடகூடிய அளவில் உள்ளவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம் அப்போதுதான், நம் வாயில் சுரக்கும் உமிழ்நீரோடு கலந்து அரைப்படும் போது, இன்சுலின் சுரப்பதற்கு ஏதுவாய் இருக்கும்

    மூன்றாவதாக நம் உடல் உறுப்புகள் வேலை செய்தால்தான் செல்களுக்கு குளுக்கோஸ் தேவைப்படுகிறது வேலை செய்யாமல் சோம்பேறியாக இருந்தால் அதிக அளவு குளுக்கோஸ் செல்களுக்கு தேவைப்படாமல் ரத்தத்திலேயே தங்கிவிடுகிறது.

    நான்காவதாக நம் உடம்பில் தொப்பை அதிகமாகிவிட்டால், நம் உடம்பில் சுரக்கும் இன்சுலின் வேலை செய்ய விடாமல் தடுத்து விடுகிறது அதன் மூலமும் குளுக்கோஸ் ரத்தத்திலேயே தங்கிவிடும். ஐந்தாவதாக நாம் டென்ஷனாகவே தொடர்ந்து ஒய்வின்றி கண் விழித்தோ மூளைக்கு வேலை அதிகம் கொடுத்தால் இன்சுலினுக்கு எதிராக சுரப்புகள் அதிகமாகி இன்சுலினை அழித்து விடும் அதன் மூலமும் ரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிக்கும்.

    ஆறாவதாக தொற்று நோய் கிருமிகளாலோ கணையத்தில் தொற்று, கட்டி போன்றவை தோன்றினாலோ இன்சுலின் சுரப்பதற்கு பாதிப்பு ஏற்படும். அதன் மூலமும் ரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிக்கும். மேலே கூறியவற்றில் நாம் எந்த வகையில் பொருந்துகிறோம் என்று மருத்துவர்கள் கணித்து அதற்குண்டான மருத்துவமுறைகளை அளிப்பார்கள் அவற்றை நாம் சரியாக பின்பற்றினால் மகிழ்ச்சியாக வாழலாம். உணவில் கட்டுப்பாடு, உடல் உழைப்பு,முறையான உடற்பயிற்சி மன அமைதி, சரியான உடல் எடை வருடாந்திர உடல் பரிசோதனை அவசியம்.வாழ்க்கை மகிழ்ச்சியாக நீண்டநாட்கள் தொடர வேண்டுமென்றால் சர்க்கரைநோய் பற்றிய விழிப்புணர்வு மிக அவசியம் இந்தநாளில் சர்க்கரை நோயை வென்றிட உறுதி ஏற்போம்.

    டாக்டர் எஸ். வீரபாண்டியன்,சர்க்கரை நோய் நிபுணர், செம்பனார்கோயில்.
    டீ மற்றும் காபியுடன் சாப்பி தட்டை சூப்பராக இருக்கும். இன்று வேர்க்கடலை தட்டையை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வேர்க்கடலை - அரை கப்
    பொட்டுக்கடலை - அரை கப்
    கடலை மாவு - அரை கப்
    அரிசி மாவு - அரை கப்
    மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
    பெருங்காயத் தூள் - சிறிதளவு
    வெண்ணெய் - தேவையான அளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை:

    வாணலியில் வேர்க்கடலையை போட்டு லேசாக வறுத்தெடுத்து தோல் நீக்கி கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    பொட்டுக் கடலையையும் தூளாக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலையை போட்டு அதனுடன் பொடித்த வேர்க்கடலை, அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், வெண்ணெய் ஆகியவற்றை கலந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

    பதத்துக்கு வந்ததும் தட்டைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து ருசிக்கவும்.

    சூப்பரான வேர்க்கடலை தட்டை ரெடி.

    இதனை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் முதல் 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நம்முடைய மூதாதையர்கள் சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருந்தது.
    நம்முடைய மூதாதையர்கள் சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் நாம் அதிலிருந்து விலகி பெரும்பாலான உணவுகள் நம்முடைய ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உள்ளது என்பதே ஏற்றுக்கொள்ள முடியாத கசப்பான உண்மை. ஆனால் இன்றைக்கும் ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும் பெரும்பாலானவை உணவுப்பொருட்கள் தான்.

    நீர் மனிதனுக்கு இன்றியமையாதது. கொதிக்க வைத்து ஆறிய நீர் மிகவும் நல்லது. குழந்தைகள், வாதநோயாளிகள், பத்தியமுள்ளவர்களுக்கு புழுங்கல் அரிசி நல்லது. அவல் பலத்தை அதிகரிக்கும். கோதுமை ஆண்மையை பெருக்கும். வெந்தயம் கசப்பு சுவை உடையது. சீதக்காய்ச் சலுக்கு சிறந்தது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். எள் எலும்புகளுக்கு பலம் தரும். கூந்தலுக்கு வலுவை தரும். இதை சாப்பிட்ட பின் குளிர்ந்த நீரை அருந்த வேண்டும்.

    உளுந்து உணவுப் பொருட்களில் சிறந்தது. ஆண்மையை பெருக்கும். பெண்களுக்கு இடுப்புக்கு வலிமை கொடுக்கும். மாதவிலக்கை சீராக்கும். இதை சாப்பிட்டால் உடல் பருக்கும். அதேபோல் சவ்வரிசியும் சுக்லத்தை அதிகரிக்கும். பயறு வகைகள் உடலுக்கு நல்லது. தானியங்களில் பயறு சிறந்தது. பாசிப்பயறு நோயாளிகளுக்கு நல்லது. வேர்க்கடலையை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் வளரும், ஆண்மை உண்டாகும்.

    பாதாம் பருப்பு உடலுக்கு புஷ்டியை தந்து, ஆண்மையைப் பெருக்கும். பெருஞ்சீரகம் பசியைத் தூண்டி, வயிற்று நோயை அகற்றும். பெருங்காயம் தேக வாயுவை குறைத்து, வயிற்று நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் அமைகிறது. மஞ்சள் ரத்ததை சுத்திகரிக்கும். புண்களை ஆற்றும். மிளகு இருமல், சளியை குறைக்கும். தினமும் இரண்டு மிளகை சாப்பிட்டால் இருதயநோய் வராது.

    சேனைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால் ரத்தமில்லா மூலம் குணமாகும். இஞ்சி வயிற்றை சுத்தம் செய்யும். கத்திரிப் பிஞ்சு வயிற்று வலிக்கு நல்லது. கோவைக்காயை சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் மறையும். அதேபோல் மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் குணமாகும்.

    தேங்காய் குளிர்ச்சித்தன்மை உடையது. தோல் நோய்களைக் குணமாக்கும் சக்தி உண்டு. வெள்ளரிப்பிஞ்சு உடலுக்கு மிகவும் நல்லது. வாழையின் அனைத்துப் பகுதிகளும் நமக்கு பயன்படுகின்றன. வாழைப்பூ ரத்த மூலத்திற்கு சிறந்தது. வாழைப்பிஞ்சு சர்க்கரை நோய்க்கு நல்லது. அனைத்து வகை காய்கறிகளும் நமது உடலுக்கு மிகவும் நல்லது.
     
    ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்களைப் புரிந்து கொள்கிற சிறந்த வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள்.
    ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்களைப் புரிந்து கொள்கிற சிறந்த வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள். அப்படி ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடிப் பிடிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். அப்படியே தேடிப் பிடித்தாலும் திருமணத்துக்கு முன்பு இருந்தது போலவே தான் திருமணத்துக்குப் பின்னும் இருப்பார்களா என்று தெரியாது. இப்படி வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கின்றன.

    இதுபோன்ற அநாவசியமான பிரச்னைகளைத் தவிர்க்க சிறந்த வழி நெருங்கிய நண்பரையே வாழ்க்கைத் துணையாகத் தேர்வு செய்வது தான்.

    நெருங்கிய நண்பரை விட சிறந்த வாழ்க்கைத் துணை வேறு எதுவும் இருக்காது. அதனால் நெருங்கிய நண்பரைத் திருமணம் செய்துகொள்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.

    இருவருக்குமே உள்ள கெட்ட பழக்கங்கள், குறைகள் ஆகியவை இருவருக்குமே தெரியுமென்பதால் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்பட முடியும்.

    இருவருக்குமிடையே நல்ல புரிதல் இருப்பதால் அளவுக்கதிகமான நம்பிக்கையும் உண்டாகும்.

    ஒருவரையொருவர் நன்கு புரிந்து வைத்திருப்பார்கள்.

    ஒருவரையொருவர் குறை சொல்லமாட்டார்கள்.

    இருவருக்குமிடையே அதிகபட்ச நேர்மை இருக்கும்.

    ஒருவருக்கொருவர் பழகுவதில் அதிக இணக்கமும் நெருக்கமும் இருக்கும். புதிய ஆளிடம் பழகுகிறோம் என்ற சங்கடம் இருக்காது.

    கடினமான, பிரச்னைக்குரிய சமயங்களில் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்பார்கள்.

    இருவரில் யாருக்கு பிரச்னை என்றாலும் முதல் ஆளாக ஓடிவந்து தன்னுடைய பிரச்னையாக நினைத்து தீர்த்து வைப்பார்கள்.

    அதனால் வெளியில் தேடி அலைவதைக் காட்டிலும் நெருங்கிய நண்பரையே வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.   
    சுரைக்காய், முட்டைகோஸ் போன்றவற்றில் செய்யப்படும் கோப்தாக்களை விட வாழைக்காய் கோப்தா ருசி மிகுந்தது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோப்தாவிற்கு...

    வாழைக்காய் - 3
    உருளைக்கிழங்கு - 2
    இஞ்சி பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    கிரேவிக்கு...

    இஞ்சி பேஸ்ட் - 2 டீஸ்பூன்
    தக்காளி சாறு - 1/4 கப்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    பிரியாணி இலை - 1
    சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
    மல்லி தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கடலை மாவு - 1 டீஸ்பூன்
    வெதுவெதுப்பான நீர் - 1 கப்
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது



    செய்முறை :

    வாழைக்காய், உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து கொள்ளவும்.

    ஒரு பௌலில் கோப்தாவிற்கு கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெயைத் தவிர, அனைத்துப் பொருட்களையும் போட்டு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

    பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டையை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பிரியாணி இலை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி சேர்த்து வதக்கி, அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

    பின் அதில் தக்காளி சாற்றினை ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் வெதுவெதுப்பான நீரில் கடலை மாவை சேர்த்து கிளறி, வாணலியில் ஊற்றி கிளறி, அடுத்து பொரித்து வைத்துள்ள கோப்தாக்களை சேர்த்து 4-5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

    கடைசியாக கொத்தமல்லியைத் தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான வாழைக்காய் கோப்தா கிரேவி ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தை தாய்ப்பால் குடிக்கும் பொழுதே தூங்கி விட்டால், அதன் வயிறு நிறைந்திருக்கிறதா என்று சோதித்து அறியுங்கள்; அப்படி நிறையவில்லை எனில் தூங்கும் குழந்தையை மெதுவாக எழுப்பி விட வேண்டும்.
    அன்னை தாய்ப்பால் கொடுக்கும் பொழுது, குழந்தை தாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை நித்திரை கொள்ள ஆரம்பித்து விடும்; அதுவும் தாயின் மார்பகத்தில் வாய் வைத்து பால் குடிக்க ஆரம்பித்த உடன் சற்று நேரத்திற்கெல்லாம் குழந்தை உறக்கத்தில் மூழ்கி கனவுகளில் மிதக்கத் தொடங்கி விடும். இவ்வாறு அடிக்கடி உறங்குவதால்,

    குழந்தையால் சரியாக பால் அருந்த முடியாது; இதன் விளைவு குழந்தையின் உடல் எடை மற்றும் வளர்ச்சியில் குறைபாடு உண்டாகும். மேலும் தாய்க்கும் குழந்தை முழுமையாக பால் அருந்திய திருப்தி ஏற்படாது.

    எனவே, குழந்தைகள் பால் குடிக்கும் பொழுது ஏன் உறங்குகின்றன, அதற்கு என்ன காரணம் என்று தாய்மார்கள் அறிந்து, அதை நிவர்த்தி செய்ய முயற்சிப்பது அவசியம்.

    குழந்தை தாய்ப்பால் குடிக்கும் பொழுதே தூங்கி விட்டால், அதன் வயிறு நிறைந்திருக்கிறதா என்று சோதித்து அறியுங்கள்; அப்படி நிறையவில்லை எனில் தூங்கும் குழந்தையை மெதுவாக எழுப்பி விட வேண்டும். குழந்தையை எழுப்ப கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றலாம்:

    குழந்தையின் முதுகை மெதுவாக தட்டிக்கொடுத்து எழுப்ப முயலலாம்.

    குழந்தையின் ஆடைகளை நீக்கி விட்டு, வேற்று தேகத்துடன் இருக்க செய்தால், நீங்கள் ஆடைகளை களையும் பொழுதே குழந்தை முழித்து விடும்.

    குழந்தையின் உடல் உறுப்புகளில் மெதுவாக குசு சத்தம் வெளிப்படும் வகையில் ஊதி, குழந்தையை எழுப்பலாம்.

    குழந்தையின் கால் அல்லது கைகளில் உள்ளங்கால் மற்றும் உள்ளங்கையில் மிருதுவாக கிச்சு கிச்சு காட்டி எழுப்பலாம்.

    குழந்தைகளின் டையப்பரை மாற்றி விடுவது போல், அதை சற்று தொந்தரவு செய்து, குழந்தையின் தூக்கத்தை துரத்தலாம்.

    குழந்தை பால் குடிக்கும் போது தூங்கி விட்டால், அதனை ஒரு மார்பகத்திலிருந்து மற்ற மார்பகத்திற்கு மாற்றி, அந்த முலைக்காம்பை பற்றிக்கொள்ள செய்ய முயற்சிக்கலாம்; இந்த முயற்சியின் பொழுது கண்டிப்பாக குழந்தையின் தூக்கம் கலைந்துவிடும்.

    குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த பதிப்பில் படித்த அனைத்து விஷயங்களையும் நினைவில் கொண்டு, குழந்தையின் செய்கைகளை கூர்ந்து கவனித்து, அவர்களின் ஆரோக்கியம் காக்க பாடுபட வேண்டும். 
    சிலருக்கு முகத்தில் பருக்கள் வந்த தடம், கரும்புள்ளியாக மாறியிருக்கும். இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே தினமும் அரை மணி நேரம் செலவு செய்தால் போதுமானது.
    வெயிலின் தாக்கம் காரணமாகச் முகச்சருமம் அதிகளவு பாதிக்கப்படும் இதனால், எப்போதும் களைப்பான தோற்றமாக இருக்கும். இதற்கு காரணம் சருமத்தில் உள்ள மெலனின் அளவு அதிகரிப்பால் தான். இதைத் தவிர்க்க, பியூட்டி பார்லருக்குத்தான் செல்ல வேண்டும் என்றில்லை. வீட்டிலேயே தினமும் அரை மணி நேரம் செலவு செய்தால் போதும். எப்போதும் பிரெஷ்ஷாக இருக்கலாம்.

    சிலருக்கு முகத்தில் பருக்கள் வந்த தடம், கரும்புள்ளியாக மாறியிருக்கும். இந்தக் கரும்புள்ளிகளை நீக்குவதில் தேன் மிகச்சிறந்த பணியாற்றுகிறது. மேலும், சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும் தேன் பயன்படுகிறது. எனவே, தினமும் ஒருமுறை சுத்தமான தேனை முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊறவிட்டு, குளிர்ந்த நீரால் கழுவினால், கரும்புள்ளிகள் குறையும்.

    ஜாதிகாய்த்தூளுடன் சந்தனத்தூளைச் சம அளவில் எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிது கஸ்தூரி மஞ்சள்தூள் கலந்து முகத்தில் பேஸ் பேக் போட்டு, 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவவும். இப்படித் தொடர்ந்து செய்தாலும் கரும்புள்ளி காணாமல்போகும்.

    சில பெண்களுக்கு முகம் பளிச்சிட்டாலும் கண்கள் சோர்வடைந்து காணப்படும். இது அவர்களின் முக அழகைக் கெடுக்கும். எனவே, கண்களைப் புத்துணர்வுடன் வைத்திருக்க, ஒரு வெண்தாமரையின் இதழ்களை 10 மில்லி விளக்கெண்ணெய்யுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். இதை, காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதைக் கண்கள் மீது தடவி, அரை மணி நேரம் கழித்துக் குளிர்ந்த தண்ணீரில் கழுவினால், புத்துணர்ச்சியும் குளிர்ச்சியும் கிடைக்கும்.

    மேலும், விளக்கெண்ணெய்யைப் பயன்படுத்தி, வலதுபுறத்திலிருந்து இடதுபுறம், இடதுபுறத்திலிருந்து வலதுபுறம் என கண்களைச் சுற்றி மெதுவாக மசாஜ் செய்தாலும், கண்கள் கோலிக்குண்டாக மிளிர்ந்து கூடுதல் அழகைத் தரும். 
    தினமும் சாலட் சாப்பிடுவது ஒரு நல்ல உணவு பழக்கவழக்கமாக கருதப்படுகின்றது. எனவே இன்று முளைக்கட்டிய பயறு சேர்த்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முளைகட்டிய பாசிப்பயறு - 5 தேக்கரண்டி
    முளைகட்டிய வேர்க்கடலை - 4 தேக்கரண்டி
    துருவிய கேரட் - 3 தேக்கரண்டி
    உப்பு - 1 சிட்டிகை,
    எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
    மிளகு சீரகப் பொடி - விருப்பத்திற்கு ஏற்ப



    செய்முறை :

    பாசிப்பயறு, மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை முதல் நாள் காலையில் ஊறவைத்து, இரவு, வலை போல் இருக்கும் துணியில் கட்டி வைத்தால் அவை மறுநாள் காலையில் முளைத்து விடும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு அதனுடன் முளைக்கட்டிய பாசிப்பருப்பு, வேர்க்கடலை, துருவிய கேரட், உப்பு, எலுமிச்சை சாறு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.

    சுவையான முளைகட்டிய பாசிப்பயறு - வேர்க்கடலை சாலட் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டீன் ஏஜ் பெண்கள் `12 முதல் 20 வயது வரை உடலையும் எண்ணங்களையும் சரியாகக் கவனித்தால்தான் அவர்களது வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும்’ எனப் பெரியவர்கள் சொல்வதுண்டு.
    பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை, குழந்தைப் பருவம் கடந்து  ‘டீன் ஏஜ்’ பருவத்தை அடையும்போது உடல் உறுப்புகளின் வளர்ச்சி, குரலில் மாற்றம், மாதவிடாய்க் கால தொடக்கம், உணர்ச்சிகள், எண்ணங்களில் மாற்றம் என இயல்பில் பல மாறுதல்கள் நிகழும்.

    இத்தகைய சூழலில், அவர்களது உணவு விஷயத்தில் அதிக அக்கறைசெலுத்த வேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டு. `12 முதல் 20 வயது வரை உடலையும் எண்ணங்களையும் சரியாகக் கவனித்தால்தான் அவர்களது வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும்’ எனப் பெரியவர்கள் சொல்வதுண்டு. இது உண்மையும்கூட. `டீன் ஏஜ்’ பருவத்தில் உட்கொள்ளும்  உணவுகளைப் பொறுத்தே அவர்களது உடல் உறுப்புகள் வலிமையும் ஆரோக்கியமும் பெறும்.

    “டீன் ஏஜ் பருவத்தினர் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளவேண்டிய இரண்டு முக்கியக் கேள்விகள் இருக்கின்றன. `சரியான உணவைச் சாப்பிடுகிறோமா, அதைச் சரியான நேரத்தில் சாப்பிடுகிறோமா?’ என்பதே அந்தக் கேள்விகள். `டீன் ஏஜ்’ பருவம் என்பது உணர்ச்சிகளால் நிறைந்தது. அதனால், அவர்கள் எதையும் மிக எளிதாக எடுத்துக்கொள்வார்கள். அதே உணர்வுடன் உணவில் கட்டுப்பாடின்றி இருப்பது தவறு” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம் வினோத்.

    “பெண் குழந்தைகளில் பலர், 12 வயதைத் தொடங்கும்போதே பருவம் எய்திவிடுகின்றனர். அதனாலேயே, ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகளுக்கு உணவின் மீதான கவனிப்பு அதிகம் தேவைப்படுகிறது. `டீன் ஏஜ்’ பெண்களுக்கு என்னென்ன உணவுகள் தேவைப்படும் என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

    * கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் நிறைந்த உணவுகள் மற்றும் தானியங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். இவை, உடலின் ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்கும் என்பதால் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும்.

    *  உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது நல்லது. குறைந்தபட்சம் தினம் ஒரு பழமாவது சாப்பிட வேண்டும்.

    *  உடலின் இரும்புச் சத்து தேவைக்கு கேழ்வரகு, கீரை, எள், மீன், முட்டைச் சாப்பிடலாம். இது `டீன் ஏஜ்’ பெண்களுக்கு, மாதவிடாய்க்கால சிக்கல்களைத் தீர்க்க உதவும். இல்லையென்றால், ரத்தச் சோகை, உயரம் அதிகரித்தல், உடல் எடை அதிகரிப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். சைவப் பிரியர்கள், உடலின் இரும்புச் சத்து தேவைக்கு பருப்பு வகைகள், நட்ஸ், விதைகளை உட்கொள்ளலாம்.

    *  `டீன் ஏஜ்’ பருவத்தினர் பலரும் பால் சார்ந்த பொருள்களை ஒதுக்கிவிடுகின்றனர். பால், சீஸ், தயிர் போன்றவற்றை அவசியம் உட்கொள்ள வேண்டும். இதன்மூலம் கிடைக்கும் சத்துகள் இதயத்தைப் பாதுகாக்கும்; தசைகளை வலிமையாக்கும்.

    *  எண்ணெய் நிறைந்த உணவுப் பொருள்களை உட்கொள்வது, பருமனை ஏற்படுத்தும். டீன் ஏஜ் பருவத்தில் பெண்களுக்கு ஏற்படும் பருமனே நீர்க்கட்டி, கர்ப்பப்பை தொடர்பான பல பிரச்னைகளுக்கு அடித்தளமாக அமையலாம். முடிந்தவரை எண்ணெய், நெய் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

    *  தண்ணீர் அதிக அளவில் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு, குறைந்தபட்சம் இரண்டு லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.



    நேரத்துக்கு உணவு…

    *  காலை உணவைத் தவிர்க்கவோ, நேரம் தவறிச் சாப்பிடவோ கூடாது. இத்தகைய பழக்கங்கள் ஆற்றல் உற்பத்தியைக் குறைக்கும் என்பதால், படிப்பில் கவனச் சிதறல் ஏற்படக்கூடும். அத்துடன் ஹார்மோன் பிரச்னைகளும் ஏற்படலாம்.  உடலில் கெட்ட கொழுப்பை அதிகரித்து,  எடையை அதிகரிக்கவும் செய்யலாம்.

    *  மதிய உணவைப் பொறுத்தவரை, பள்ளிக் குழந்தைகளிடையே நேர ஒழுக்கம் சரியாக இருக்கும். ஆனால், கல்லூரி மாணவர்கள் நேரம் தவறிச் சாப்பிடுகிறார்கள் அல்லது மிகவும் குறைந்த அளவே உணவு எடுத்துக்கொள்கிறார்கள். பெரும்பாலானவர்கள், காலை உணவை 11 மணிக்கும் மதிய உணவை 4 மணிக்கும் சாப்பிடுகிறார்கள். இத்தகைய பழக்கங்கள், உடல் உறுப்புகளின் வளர்ச்சியைப் பாதிக்கும். வளர்சிதை மாற்றங்களையும், அது தொடர்பான வேறு சில பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.

    *  ஒரு நாளைக்கான உணவை சிறிது சிறிதாக ஆறு முறை சாப்பிடுவது, சீரான அளவு மூன்று வேளை சாப்பிடுவது என இரண்டுமே சரியான உணவுப்பழக்கம்தான். ‘மூன்று வேளை உணவு’ என்ற கணக்கு, ஆறு என அதிகரிக்கலாமே தவிர குறையக் கூடாது. ஒருவேளை சாப்பிடவில்லை என்றாலும் வைட்டமின், கார்போஹைட்ரேட், தாதுச்சத்துகள் போன்ற உடலுக்குத் தேவைப்படும் ஆற்றல் கிடைக்காமல் போகக்கூடும்.

    * ஸ்நாக்ஸ் பிரியர்கள் சிப்ஸ், பஜ்ஜி, வடை போன்ற எண்ணெய்ப் பலகாரங்களைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக நட்ஸ், பழங்கள், உலர் பழங்கள், சிறுதானிய லட்டு போன்றவற்றை உட்கொள்ளலாம்.

    * பெரும்பாலான கல்லூரி மாணவிகள், பஃப்ஸ் மற்றும் டீ, காபி வகைகளைப் பசி எடுக்கும்போது உட்கொள்வதுண்டு. இதில் டீ, காபிக்கு அடிமையாகவும் வாய்ப்புள்ளது. ஒருநாளில் இரண்டுமுறைக்கு மேல் டீ, காபி குடித்தால் ரத்த அழுத்தம் ஏற்படலாம் என்பதால், அதைத் தவிர்க்க வேண்டும்.

    * பசி எடுத்தால், அலட்சியப் படுத்தாமல் கண்டிப்பாகச் சாப்பிட்டுவிட வேண்டும். சரியான நேரத்தில் பசி எடுக்கவில்லை என்பதற்காக சாப்பிடாமல் இருக்கக் கூடாது. பசியின்மைக்கான காரணத்தை அறிந்து தீர்வு காண வேண்டும்.

    * உணவைப் போலவே உடற்பயிற்சியும் அவசியம். உடற்பயிற்சி செய்வதால் ரத்தம் சுத்திகரிப்படுவதுடன் ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவும்; மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும்  உதவும். குறிப்பாக காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது.

    * எடை அதிகரிக்கும்போது, பி.எம்.ஐ அளவுபடி உயரமும் எடையும் சீராக இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொள்வது நல்லது.
     
    பெயருக்கு ஏற்றதுபோல உடலுக்கு சக்தி தரும் முத்திரை இது. ஆரோக்கியமான உணவுகளை உண்டு, சக்தி முத்திரையையும் செய்துவந்தால், நல வாழ்வு நம் வசம்!
    பெயருக்கு ஏற்றதுபோல உடலுக்கு சக்தி தரும் முத்திரை இது. ஆரோக்கியமான உணவுகளை உண்டு, சக்தி முத்திரையையும் செய்துவந்தால், நல வாழ்வு நம் வசம்!

    செய்முறை :

    கட்டை விரலை மடக்கி, நடுவிரலின் அடியில் வைத்து, நடுவிரல் மற்றும் ஆள்காட்டி விரலால் கட்டை விரலைச் சுற்றிப் பிடிக்க வேண்டும். மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் நீட்டி இருக்க வேண்டும். பின்னர், இரண்டு கைகளும் ஒன்றோடு ஒன்று ஒட்டுமாறு வைக்க வேண்டும். சப்பளங்கால் இட்டு அமர்ந்தோ, கால் தரையில் ஊன்றி இருப்பது போன்ற நிலையிலோ நெஞ்சுக்கு நேராகக் கைகளை வைத்து, நீட்டியிருக்கும் விரல்கள் மேல்நோக்கி இருக்குமாறு செய்ய வேண்டும். 10 முதல் 20 நிமிடங்கள் வரை இந்த முத்திரையைச் செய்யலாம்.

    பலன்கள் :

    மனம், உடல்சோர்வை நீக்கி, உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது. உடலில் ஏற்படும் இறுக்கம், உடல்வலி நீங்கும். உடல் வெப்பத்தால் அடிவயிறு இழுத்துப்பிடிப்பது போன்ற வலி, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்குச் சிறந்த தீர்வாக அமைகிறது.

    அடிவயிறு, அடிஇடுப்புப் பகுதியில் உள்ள வலி, இறுக்கம் குறைகிறது. ஆண்களுக்கு, ப்ராஸ்டேட் வீக்கம் காரணமாக ஏற்படும் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சொட்டுச் சொட்டாக சிறுநீர் கசிதல் போன்ற பிரச்னைகளுக்குத் தினமும் 10 நிமிடங்கள் சக்தி முத்திரை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

    வாயில் அளவுக்கு அதிகமாக உமிழ்நீர் ஊறுதலுக்கு சக்தி முத்திரை தீர்வாக அமையும். தூக்கமின்மை பிரச்சனை சரியாக, சக்தி முத்திரையைத் தினமும் செய்துவரலாம். சுவாசிக்கும் மூச்சு ஆழமாவதால், நுரையீரல் பலம் பெறும். சளி, சுவாசத் தொந்தரவுகள் சரியாகும். ஆஸ்துமா கட்டுப்படும்.

    உணவு வெறும் சுவை உணர்வுக்கு மட்டுமில்லை. அதனைப் போல் உறக்கம் என்பதும் பொழுதை விரட்டும் வீண் செயலுமில்லை. ஊணும் உறக்கமும் உடலை உறுதி செய்து ஆயுளை விருத்தி செய்யும் அருமருந்துகள்.
    உண்பதிலும் உறங்குவதிலும் ஒரு சுகம் கிடைக்கிறது. அதனால் உணவும் உறக்கமும் எல்லோருக்கும் பிடித்தமானவையாக இருக்கின்றன. உணவு வெறும் சுவை உணர்வுக்கு மட்டுமில்லை. அதனைப் போல் உறக்கம் என்பதும் பொழுதை விரட்டும் வீண் செயலுமில்லை. ஊணும் உறக்கமும் உடலை உறுதி செய்து ஆயுளை விருத்தி செய்யும் அருமருந்துகள். அளவான உணவும் ஆழ்ந்த உறக்கமும் மனிதனுக்கு வேண்டிய ஆற்றலை அள்ளித்தரும் வரங்கள். அதனால் இவையிரண்டும் மனிதனுக்கு மிகவும் அவசியமானவை. இதையுணர்ந்த முன்னோர் இவற்றிற்கு உரிய முக்கியத்துவம் கொடுத்தனர். அதன் விளைவாக உணவு உட்கொள்ளும் முறையையும் உறங்குகின்ற வழிமுறையையும் கண்டறிந்து அவற்றைத் தவமாகவே போற்றினர்.

    உணவு என்பது பண்பாட்டுடன் பிணைந்தது. பிறந்த இடம், வளரும் சூழலுக்கேற்பவே மனிதனுக்கு உணவுப் பழக்கம் அமைகிறது. தட்ப வெட்ப நிலைகளுக்கு ஏற்பவே தானியங்கள் விளைகின்றன. அந்தத் தட்பவெட்ப நிலைக்குத் தகுந்தவாறே அங்கு வாழும் மக்களின் உணவுப் பழக்கமும் அமைகிறது. இதனால் சொந்த பூமியில் விளைபவை சுவையானதாகவும் வயிற்றுக்கேற்ற உணவாகவும் கருதப்பட்டன. அதைத்தான் இன்று இயற்கை உணவு என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறோம். இக்காலம் எங்கோ விளையும் பல்வகை உணவு வகைகளைப் பரிமாறும் காலமாக மாறிவிட்டது.

    ஒருவேளை உண்பவன் யோகி (தவஞானி), இரண்டு வேளை உண்பவன் போகி (இன்பம்விரும்பி), மூன்று வேளை உண்பவன் ரோகி (நோயாளி) என்று உணவு உண்ணும் வேளையை ஞானியர் கட்டுப்படுத்தினர். ஆனாலும் மூன்று வேளை உணவு என்பதே எல்லோருக்கும் ஏற்புடையதாகிவிட்டது. அதுவே ஆரோக்கியமான வாழ்வுக்கு அவசியமாகிப் போனது. எந்தச் சூழலானாலும் எந்த உணவு ஆனாலும் நம் முன்னோர் சொன்ன முறைகளைப் போற்றி உண்பது ஆரோக்கியத்தின் திறவு கோலாகும். மூன்றுவேளை உணவு நமக்குப் பழகிவிட்டது. அவசியமும் ஆகிப் போனது. எவை அந்த மூன்று வேளை?

    காலை, மதியம், இரவு. இந்த மூன்று வேளையும் உணவு உண்ண வேண்டும். இது சரிதான். காலை எத்தனை மணிக்குச் சாப்பிட வேண்டும்? மதிய உணவு எப்போது? இரவு உணவு ஏழு மணிக்கா? எட்டு மணிக்கா? இந்த மணிக்கணக்கைத்தான் நம்முன்னோர் ‘பசித்துப் புசி’ என்று சொல்லி வைத்தனர். பசித்துப் புசி என்பது வெற்று மொழியன்று.

    அனுபவத்தில் கண்டெடுத்த ஞானமொழி. பசி என்பது சாப்பாட்டு நேரத்தைக் காட்ட வயிறு அடிக்கும் அறிவிப்பு மணி. உணவுக்கு விடுக்கும் அழைப்பு மணி. நாம் உண்ணும் உணவைச் செரிக்க வைப்பதற்கு நம் வயிற்றில் அமிலம் சுரக்கிறது. நாம் வழக்கமாகச் சாப்பிடும் நேரத்திற்கேற்ப அமிலமும் சுரக்கப் பழகிக் கொள்கிறது. நாம் சாப்பிடப் பிந்தினாலும் அமிலச் சுரப்பு தன்வேலையை உரிய நேரத்தில் தொடங்கி விடுகிறது. இதுதான் பசியின் அறிகுறி. இந்த நேரத்தில் தேவையான உணவை உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது.

    உண்ட உணவு செரித்தபின் நமக்கு உகந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்பது நம் முன்னோர் சொல்லிவைத்த உண்மை. சாப்பிட வேண்டிய அளவு என்ன? ஒருவர் எவ்வளவு சாப்பிட வேண்டும்? அதற்கும் அளவு சொல்கிறார் வள்ளுவர். நம் வயிற்றில் உள்ள அக்கினிதான் நாம் உண்ட உணவைச் செரிக்க வைக்கிறது. அதனால் நம் வயிற்றுத் தீயின்(உஷ்ணம்) அளவுக்கேற்பவே உண்ண வேண்டும் என்பது வள்ளுவர் வாக்கு. இதை உணர்ந்துதான், வயிறுமுட்டச் சாப்பிடாதே என்கின்றனர்.

    ‘ருசித்துப் புசி’ என்பது நம் முன்னோர் சொல்லி வைத்த இன்னொரு அனுபவ மொழி. அதாவது உணவை விருப்புடன் ரசித்துச் சாப்பிட என்று சலிப்புக் கொள்ளக் கூடாது. இப்படி மனத்தில் உண்டாகும் சலிப்பு வயிற்றையும் பாதிக்கிறது. மனம் சொல்வதைத்தான் வயிறு ஏற்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எந்தச் சாப்பாடு ஆனாலும் மன மகிழ்வோடு விரும்பியுண்டால் வயிறும் அதனைச் சந்தோஷமாக எற்றுக் கொள்ளும்.



    உப்பில்லாக் கூழ் கூட அமிழ்தமாகிவிடும். வேறு நினைவில் சிந்தனையைச் செலுத்தாமல் உண்ணும் உணவில் மட்டும் கவனம் செலுத்தி, நன்கு மென்று உண்ணவேண்டும். இரைப்பைக்குப் பற்கள் கிடையாது. வாயினால் உணவை நன்கு மென்று விழுங்கினால் உண்ட உணவு எளிதில் செரிமானமாகிவிடும். நன்றாக மெல்லும்போதுதான் நாக்கு உணவின் ருசியை அறிய முடியும். இதனால்தான் நம் முன்னோர் ருசித்துப் புசி என்றனர்.

    கைகால் கழுவி வாயைச் சுத்தமாக்கிய பின்னே உணவு உண்ண வேண்டும். கால்களில் ஈரம் உலரு முன்பே உண்ணுதல் உயர்ந்த பழக்கம். உண்டு முடித்தபின் நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படிச் சொல்லும் நம்முன்னோர் எந்தத்திசை நோக்கியிருந்து உணவு உண்ண வேண்டும் என்பதையும் அதற்கான பலனையும் குறிப்பிடுகின்றனர்.

    கிழக்கு, தெற்கு, மேற்கு என்னும் மூன்று திசைகளைப் பார்த்து இருந்து உண்பது நல்லது. வடக்குப் பார்த்து உண்ணக்கூடாது. அது நல்லது இல்லை. இந்திரனுக்குரிய கிழக்குத் திசை நோக்கியிருந்து உண்டால் கல்வியும் ஆயுளும் பெருகும். எமதர்மனுக்குரிய தெற்கு நோக்கி உண்டால் புகழ் வளரும். மகாலட்சுமிக்குரிய மேற்குத்திசை நோக்கியிருந்து உண்டால் செல்வம் பெருகும். மற்றவர் வீடுகளுக்குச் செல்லும்போது மேற்கு நோக்கி இருந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டும் நடந்து கொண்டும் படுத்துக் கொண்டும் வெட்ட வெளியிலும் உணவு உண்பது நம் முன்னோருக்கு ஏற்புடையது அல்ல.

    நின்றும் நடந்தும் வெட்டவெளிப் பரப்பிலும் உணவு உண்ணும் பழக்கம் இப்போது நம்மிடையே மலிந்து வருகிறது. வித, விதமான உணவு வகைகளை மேஜையில் பரிமாறி, சூழ இருந்து கரண்டி, முள்கரண்டிகளால் எடுத்துண்ணும் வெளிநாட்டுக் கலாசாரம் இங்கு பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. எதை முதலில் சாப்பிடுவது? எதை எப்படிச் சாப்பிடுவது? என்ற குழப்பத்தில் பலர் தவிக்கின்றனர். இதனால் உணவு விடுதிகளிலும் விருந்து நிகழ்வுகளிலும் ஒருவர் சாப்பிடும் முறையே அவரை அடையாளப்படுத்தும் நிலைமை இப்போது உருவாகிவிட்டது. என்ன இருந்தாலும் வலது கையால் (சோற்றாங்கை) பிசைந்து அள்ளி உண்ணும் ருசிக்கு ஈடாகாது. இனிப்பை முதலிலும் கைப்பைக் கடைசியிலும் மற்ற சுவைகளை இடையிலும் உண்ண வேண்டும் என்பது முன்னோர் மொழிந்தது.

    உணவைப் பற்றிச் சொன்ன நம் முன்னோர் உறக்கத்தைப் பற்றியும் சொல்லிச் சென்றுள்ளனர். உள்ளத்துக்கு ஓய்வு தந்து உடலுக்குத் தெம்பு தருவது உறக்கம். தூக்கம் நோயைத் துரத்தும் என்பது அறிவுபூர்வமான உண்மை. தூக்கத்திற்கு உகந்த நேரம் இரவு என்பதும் முன்னிரவில் துயின்று வைகறையில் துயில் எழ வேண்டும் என்பதும்? முன்னோர் வகுத்த நெறி. இரவில் தூங்காமல் இருந்தால், பயம், படபடப்பு, மந்தம், புத்திமயக்கம் போன்றவை உண்டாகும். கோபம், கவலை, வேண்டாத சிந்தனை போன்றவற்றைத் தூக்கித் தூர எறிந்துவிட்டு இறைவனை எண்ணித் துயிலச் சென்றால் நிம்மதியான தூக்கம் உடனே நம்மைத் தழுவும்.

    நல்ல தூக்கத்திற்கும் ஆரோக்கியமான வாழ்விற்கும். எந்தத் திசையில் தலைவைத்துப் படுக்க வேண்டும் என்பதையும் நம் முன்னோர் அறிவு பூர்வமாக வரையறுத்துள்ளனர். வடக்குத் திசையில் தலைவைத்துப் படுக்கக் கூடாது என்பது நம் மூதாதையர் கருத்து. உடம்பின் தலைப்பகுதியில் நேர் மின்னோட்டம் உள்ளது. பூமியின் வடக்கில் நேர்மின்னோட்டம் உள்ளது. இரண்டு நேர்மின்னோட்டம் ஒன்றையொன்று துரத்தும். இது மூளைக்கு நல்லது அல்ல. பூமியின் வடதிசையில் உள்ள காந்த ஈர்ப்பு சக்தி மூளையைப் பாதிக்கும்.

    இது அறிவியல் உண்மை. இதை அறிந்தே நம் முன்னோர் கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய திசைகள் தலைவைத்துப் படுப்பதற்கு உகந்தவை. இதனை, “உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு” என்பதால் அறியலாம். உடம்பில் உள்ள ஈரம் உலர்ந்த பின்னே படுக்கைக்குச் செல்ல வேண்டும். அளவுக்கு அதிகமாக உண்பவனைச் சாப்பாட்டு ராமன் என்றும் மிதமிஞ்சித் தூங்குபவனை கும்பகர்ணன் என்றும் இகழ்வதுண்டு. அப்படியின்றி, அளவோடு உண்டு, அயர்ந்து தூங்குபவர்களுக்கு ஊணும் உறக்கமும் உடம்பையும் உயிரையும் வளர்க்கும் உயர்ந்த தவமேயாகும்.

    பேராசிரியர் மா.ராமச்சந்திரன், உடன்குடி
    இடியாப்பத்தை வைத்து வெரைட்டியான ரெசிபிகளை செய்யலாம். இன்று இடியாத்துடன் சிக்கன் சேர்த்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 300 கிராம்
    இடியாப்பம் - 3 கப்
    பட்டை - இரண்டு
    லவங்கம் - இரண்டு
    ஏலக்காய் - இரண்டு
    பிரிஞ்சி இலை - ஒன்று
    வெங்காயம் - இரண்டு
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - இரண்டு
    தக்காளி - ஒன்று
    மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    தண்ணீர் - அரை டம்ளர்
    உப்பு - தேவைகேற்ப
    கொத்தமல்லி - சிறிதளவு
    புதினா - சிறிதளவு
    நெய் - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லிபை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெறும் கடாயில் சேமியாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.

    அதே கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், சிவப்பு மிளகாய் தூள், உப்பு அனைத்தையும் கலந்த பின்னர் சிக்கன், தண்ணீர் அரை கப் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.

    தண்ணீர் வற்றி சிக்கன் நன்றாக வெந்ததும் வறுத்த சேமியாவை அதில் சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்து சமைக்கவும்.

    கடைசியாக அடுப்பை அணைத்துவிட்டு, 5 நிமிடங்கள் தம்மில் வைக்கவும் பிறகு பரிமாறவும்.

    சூப்பரான இடியாப்பம் சிக்கன் பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×