என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    கேழ்வரகு, முருங்கைக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து அருமையான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு - 1/4 கிலோ
    முருங்கைக் கீரை - கைப்பிடியளவு
    வெங்காயம் - 2
    பச்சரிசி - கால் கப்
    உளுத்தம்பருப்பு - கைப்பிடியளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேழ்வரகு, பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.

    பிறகு அதனை தனித்தனியாக நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

    அரைத்த மாவை ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கரைத்து ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.

    புளித்த மாவில் முருங்கைக்கீரை, வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான சத்தான கேழ்வரகு தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இருமல், இரைப்பு, இருமினாலும் சளி வெளிவராமை, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளுக்கு சுவாசகோச முத்திரை தீர்வு அளிக்கிறது. இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
    செய்முறை : முதல் நிலை

    பெருவிரலில் உள்ள அடி ரேகை, நடு ரேகை மற்றும் நுனியைக் கவனிக்க வேண்டும். பின்னர் சுண்டுவிரலால் கட்டை விரலின் அடி ரேகையையும் மோதிர விரலால் கட்டை விரலின் இரண்டாவது ரேகையைத் தொட்டும், நடுவிரலின் நுனியால் கட்டை விரலின் நுனியைத் தொட வேண்டும். ஆள்காட்டி விரலை மட்டும் முழுமையாக மேல்நோக்கி நீட்டிவைக்க வேண்டும்.

    இந்த முத்திரையில் கையின் உள்ளங்கைப் பகுதி வெளிநோக்கிப் பார்க்க, ஆள்காட்டி விரலை 90 டிகிரி மேல்நோக்கி வைத்திருக்க வேண்டும். கையை கவிழ்த்துவைத்தோ, கீழ்நோக்கியோ செய்யக் கூடாது.

    விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டோ, நாற்காலியில் அமர்ந்தோ கால்களை தரையில் ஊன்றியோ, அவசர காலத்தில் படுத்த நிலையிலோ இந்த முத்திரையைச் செய்யலாம். ஒரு நாளைக்கு குறைந்தது 5 முதல் 6 முறை செய்யலாம். அல்லது இரைப்பு, இருமல் குறையும் வரை செய்துகொண்டே இருக்கலாம்.

    ஒவ்வொரு முறையும் 5 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். தீவிரமான இரைப்பு இருக்கும் காலங்களில் நேரம் கணக்கிடாமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.

    பலன்கள் :

    குழந்தைகள் முதல் வயோதிகர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்படும் இரைப்பிருமல் கட்டுக்குள் வரும்.

    மழைக்காலங்களில் நெஞ்சில் சளி உருவாவது தடுக்கப்படும். மூச்சுத்திணறல், மூச்சுக்குழல் இறுக்க ஆகியவை குறையும்.

    ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து செய்துவர, 3 மாதங்களில் நோயின் தீவிரம் குறையும். மூச்சுவிடுதல் எளிமையாகும். இன்ஹேலர் பயன்படுத்துவதாக இருப்பின் அதன் அவசியமும் படிப்படியாகக் குறையும்.

    இரைப்பிருமல் வரத்தொடங்கி ஆரம்ப நிலையில் இருக்கும் எல்லா குழந்தைகளும் இந்த முத்திரையை தினமும் செய்ய வேண்டும்.

    இன்ஹேலர் பயன்படுத்தும் நிலை வருவதற்கு முன், இந்த முத்திரையைச் செய்து வர ஆஸ்துமா வராது. ஆஸ்துமா நோய் வராமல், வருமுன் காக்க இந்த முத்திரை உதவும்.

    இன்ஹேலர், மருந்துகள், மருத்துவர் இல்லாத சமயங்களில் இந்த முத்திரை முதலுதவியாக மூச்சுத்திணறல் குறையும் வரை பயன்படுத்தலாம்.

    சளி தொந்தரவுகள், தும்மல், அலர்ஜி ஆகியவை சரியாகும்.



    சுவாசகோச முத்திரை செய்முறை :  இரண்டாம் நிலை

    இடதுகை ஆட்காட்டி விரலை நேராக நீட்டவும். இடதுகை சுண்டு விரலை மடக்கி இடதுகை கட்டை விரலின் அடிப்பாகத்திலும், மோதிரவிரலை கட்டை விரலின் நடுப்பாகத்திலும், நடுவிரலை கட்டை விரலின் நுனியைத் தொட்டமாறும் வைக்கவும். கையை மாற்றி செய்யவும்.

    தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும்

    பலன்கள் :

    ஆஸ்துமா குணமாகும்.

    இருமல், இரைப்பு, இருமினாலும் சளி வெளிவராமை, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளுக்கு சுவாசகோச முத்திரை தீர்வு அளிக்கிறது. 
    ரோடியம் பிளேட்டிங் என்பது நகை வடிவமைப்பில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது நகைகளில் ரோடியம் டிப் செய்வது (அ) ரோடியம் பிளஷிங் செய்வது என்பதன் மூலம் நகையின் உறுதி தன்மை அதிகரிக்கிறது.
    ரோடியம் பிளேட்டிங் என்பது நகை வடிவமைப்பில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது நகைகளில் ரோடியம் டிப் செய்வது (அ) ரோடியம் பிளஷிங் செய்வது என்பதன் மூலம் நகையின் உறுதி தன்மை அதிகரிக்கிறது. தேய்மானம் ஏற்படாது என்பதுடன் ஒளிபாய்ச்சும் தன்மையும் நகைகளில் ஏற்பட உதவி புரிகிறது. ஏனெனில் ரோடியம் ஒளி வீசும் உலோகம் என்பதால் இந்த ரோடியம் பிளேட்டட் செய்யப்பட்ட நகைகள் கீறல் பாதுகாப்பு திறன் கொண்ட நகையாக உள்ளன.

    ரோடியம் பிளேட்டிங் என்பது வெள்ளி நிறமுடைய நகைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதாவது வெள்ளி நகைகள், வெள்ளை தங்கம், பிளாட்டினம் மற்றும் பல்லடியம் போன்றவைகளில் பயன்படுத்தப்படுகிறது. ரோடியம் பிளேட்டிங் என்பதின் தடிமன் 0.75 முதல் 1.0 மைக்ரோன் அளவுகளில் தான் இருக்கும்.

    ரோடியம் என்பது உறுதியானது

    ரோடியம் என்பது மிகக்குறைவான அளவில் கிடைக்கக்கூடிய மிக மதிப்பு மிக்க உலோகம். அதாவது தங்கத்தைவிட 10 முதல் 25 மடங்கு விலை மதிப்புமிக்கது. ரோடியம் என்பது பிளாட்டினம் வகை உலோகத்துடன் சார்ந்த வகையில் இணைக்கப்பட்டுள்ளது. வெள்ளி நிறத்தில், அதிகபட்ச ஒளிரும் தன்மையுடன் உள்ளது. ரோடியம் என்பது சுலபமாக ஒரு வடிவத்திற்கு கொண்டு வரமுடியாத உலோகம். அதனால் இதனை கொண்டு நகைகள் செய்வதில்லை. அதன் காரணமாகவே பிற நகைகள் மீது ரோடியம் பிளேட்டிங் செய்யப்பட்டு அதனை மேம்படுத்த உதவுகிறது.

    ரோடியம் பிளேட்டிங் மிக பாதுகாப்பானது


    ரோடியம் பிளேட்டிங் என்பது மிக பாதுகாப்பானது. இதன் மேம்பட்ட ஒவ்வாமை தன்மை என்பதன் மூலம் அணிபவரின் தோல் பகுதியில் ஏதும் பாதிப்பு ஏற்படுத்தாது. ரோடியம் என்பது நிக்கல் போன்று எந்த ஒவ்வாமையும் ஏற்படுத்தாத தன்மை கொண்டது. பிற நகைகளால் ஏதும் ஒவ்வாமை ஏற்பட்டு இருப்பினும் ரோடியம் பிளேட்டிங் செய்யப்பட்ட நகைகள் அணிந்தால் எந்த பிரச்சினையும் இருக்காது.

    ரோடியம் பிளேட்டிங் செய்யும் முறை

    ரோடியம் பிளேட்டிங் செய்யும் முறை என்பது எலக்ட்ரோ பிளேட்டிங் முறையில் செய்யப்படுகிறது. இதற்கு முன் ரோடியத்தில் உள்ள கசடுகளை நீக்கிட வேண்டும். டிஸ்லிட் வாட்டர், நீராவி முறை மற்றும் எலக்ட்ரோ கிளினிங் முறையில் ரோடியம் சுத்தம் செய்யப்படுகிறது. எலக்டிரிகல் சார்ஜ் மூலம் குறைவான வெப்ப அளவில் மட்டுமே பிளேட்டிங் செய்ய வேண்டும். அதிக படியான வெப்ப அளவில் பிளேட்டிங் செய்தால் ரோடியம் கருப்பு நிறமாக மாறிவிடும்.

    ரத்தின கற்கள் வைத்த நகையில் ரோடியம் பிளேட்டிங் செய்வது கூடாது. அதாவது முத்து, தோப்பிஸ், பவளம், ஓபல், மாணிக்க மரகத கற்கள் பதித்த நகைகளில் ரோடியம் பிளேட்டிங் செய்யும் போது அதிலுள்ள சல்பரிக் ஆசிட் என்பது கற்களை பாதிப்படைய செய்யும். எனவே ரத்தின கற்கள் பதியப்பட்ட நகைகளின் மீது ரோடியம் பிளேட்டிங் செய்வது கூடாது.

    தங்க நகைகளில் ரோடியம் பிளேட்டிங்

    தங்க நகைகளின் மீது ரோடியம் பிளேட்டிங் செய்வது நடைமுறையில் உள்ளது. அதாவது மஞ்சள் நிறமான தங்க நகையின் மீது வெள்ளை நிறத்தை ஏற்படுத்தும் வகையில் ரோடியம் பிளேட்டிங் செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்க நகை கூடுதல் அழகு மற்றும் இரட்டை வண்ண சாயல் கொண்ட வகையிலான நகை அமைப்பை தருகின்றது.

    ரோடியம் பிளேட்டிங் என்பது அதிக நாட்கள் நீடிக்கிறது. அதாவது குறைந்த பட்சம் சில வருடங்கள் மட்டுமே அதன் மேற்பூச்சு நிலைத்து இருக்கும். அதிகமான பயன்படுகின்ற நகைகளில் குறைந்த பட்சம் 6 மாதங்கள் மட்டுமே ரோடியம் பிளேட்டிங் நிலைத்து இருக்கும்.

    விலை அதிகமான ரோடியம் பிளேட்டிங்


    ரோடியம் பிளேட்டிங் என்பது மிக அதிகமான விலை மதிப்பில் நிகழ்த்தப்படுகிறது. அதாவது விலைமதிப்புமிக்க ரோடியத்தை கொண்டு இப்பணி செய்யப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதாவது ரோடியம் பிளேட்டிங் செய்யப்படும் நகை அளவு, அதற்கென பயன்படுத்தப்பட்ட உலோக எடை போன்றவற்றை கணக்கிட்டே அதற்கு விலை நிர்ணயம் அமைகிறது. எனவே எந்த அளவு ரோடியம் பூச்சு செய்யப்பட்டது என்பதை அறிய அந்த நகையுடன் அதன் அளவு குறிப்பிட்ட அட்டை நகையோடு இணைந்தும் கிடைக்கின்றது. பளபளப்பான ரோடியம் பிளேட்டிங் சற்று விலை அதிகமானது என்றாலும் அது பூசப்பட்ட நகைகள் வரவும் அதிகரித்துள்ளது.
    நாம் வீடுகளில் ப்ளாஸ்டிக் பாத்திரங்கள், டப்பாக்கள் பயன்படுத்துகிறோம். ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு இது நல்லதல்ல. இதற்கு மாற்றாக கண்ணாடிப் பொருட்களை உபயோகிப்பதால் என்ன நன்மைகள் என்று பார்ப்போம்.
    சமைத்த உணவு மட்டுமின்றி, உணவு தயாரிக்கத் தேவையான மளிகை பொருட்களையும் முறையாகவும் சுத்தமாகவும் பாதுகாத்து வைப்பது மிகவும் அவசியம். பெரும்பாலும் இன்றைய வீடுகளில் நாம் இதற்கு ப்ளாஸ்டிக் பாத்திரங்கள், டப்பாக்கள் மற்றும் குடுவைகளைத்தான் பயன்படுத்துகிறோம். ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு இது நல்லதல்ல. மாற்றாக நாம் இதற்கு கண்ணாடிப் பொருட்களை உபயோகிப்பதால் என்ன நன்மைகள் என்று பார்ப்போம்.

    கண்ணாடி ப்ளாஸ்டிக்கை விட பாதுகாப்பானது

    ப்ளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் உணவுப் பொருட்களில் கலக்கும் வாய்ப்பு ஏற்படலாம். அதிக குளிர்ச்சி மற்றும் அதிக சூடான பொருட்களை ப்ளாஸ்டிக்கில் வைக்கும்போது, அதாவது ஃப்ரிட்ஜ் மற்றும் மைக்ரோவேவ் ஓவனில் வைக்கும்போது இந்த ரசாயன கலப்பு நடக்கும். ஆனால் கண்ணாடிப் பாத்திரங்கள் தான் மாற்றம் அடைவதில்லை. மேலும், அதன் தன்மை மற்ற பேரணுக்களை தன்னுள் அனுமதிக்காத மிகவும் கெட்டியான தன்மை கொண்டதாகும்.

    கண்ணாடி சூட்டை தாங்கக்கூடியது

    உணவை சமைத்த உடனேயே கண்ணாடி பாத்திரத்தில் மாற்றி விடலாம், பாத்திரத்தை மூடியும் வைத்துக் கொள்ளலாம். மீதம் உள்ள உணவை அப்படியே பிரிட்ஜில் சேமிக்கவும் இது பாதுகாப்பானது. நீண்ட நாட்களுக்கு மளிகை பொருட்களை சேமிக்கவும், அதன் நிறம் மற்றும் மணம் மாறாமல் இருக்கவும் கண்ணாடிக் குடுவைகள் சிறந்ததாக இருக்கும். பாத்திரத்தின் ரசாயனம் எதுவும் சூடான பொருளில் கலப்பதில்லை என்பதாலும் கண்ணாடிப் பாத்திரங்கள் நல்லது.



    பல் உபயோகம் கொண்டது கண்ணாடி

    ஒரே பாத்திரத்தில் மூடி போட்டு சேமித்தும் வைக்கலாம். சமைத்த உணவுப் பொருளை சூடாக போட்டும் வைக்கலாம் அல்லது சமைக்கவும் பயன்படுத்தலாம். அதே பாத்திரத்தை பிரிட்ஜ் அல்லது ஃப்ரீசரில் மிக குளிர்ச்சியாகவும் பாதுகாக்கலாம். கண்ணாடியில் உள்ள உணவுப் பொருளை அப்பாத்திரத்தில் வைத்தே பரிமாறலாம். இப்படி பல உபயோகங்களுக்கு கண்ணாடி பயன்படுகிறது.

    சுத்தம் மற்றும் வெளிப்படை தன்மை

    மளிகை மற்றும் உணவுப் பொருட்களை கண்ணாடிப் பாத்திரங்களில் சேமிக்கும்போது அதனை சுத்தப்படுத்துவது சுலபம். வாசனையோ, அழுக்கோ, கறையோ அதில் படிவதில்லை. மேலும் அதன் உள்ளே என்ன பொருள் இருக்கிறது என்பதை நாம் சுலபமாக தெரிந்துக் கொள்ளலாம். பொருட்கள் கெடத் துவங்கும்போதே அதை கண்டுபிடித்து அப்புறப்படுத்துவதும் சுலபம்.

    கண்ணாடிக் குடுவைகள் எவ்வளவு காலமானாலும் உடையாத வரையில் உபயோகப்படுத்தலாம். உணவுப் பொருட்களின் வாசனையையும், அது பெற்றுக் கொள்வதில்லை. பல வருடங்கள் தொடர்ந்து உபயோகப்படுத்தவும் ஏற்றது.
    குழந்தைகளுக்கு கபாப் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று காளான் கபாபை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நறுக்கிய காளான் - அரை கப்
    கடலைப் பருப்பு - அரை கப்
    ரொட்டித்தூள் - சிறிதளவு
    காய்ந்த மிளகாய் - 3
    ஸ்வீட் கார்ன் - கால் கப்
    சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
    மிளகுத்தூள் - தேவைக்கு
    கசகசா, சீரகம் - தேவைக்கு
    ஏலக்காய், கிராம்பு - 4
    பெ.வெங்காயம் - 3
    எலுமிச்சை சாறு - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    கொத்தமல்லி தழை - சிறிதளவு



    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இட்லி தட்டில் ஸ்வீட் கார்னை வேக வைத்துக்கொள்ளவும்.

    கடலை பருப்பையும் குக்கரில் வேகவைத்துக்கொள்ளுங்கள்.

    வாணலியை மிதமான சூட்டில் வைத்து சீரகம், கசகசாவை கொட்டி பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் ஏலக்காய், கிராம்பு, மிளகாய் ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.

    அதுபோல் கடலை பருப்பு, காளான், சுவீட் கார்ன் போன்றவற்றையும் மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் காளானை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அரைத்த மசாலா கலவை, சோளமாவு, கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

    பின்னர் இந்த கலவைகளை உருண்டைகளாக உருட்டி ரொட்டித்தூளில் புரட்டி வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்தவற்றை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    ருசியான காளான் கபாப் ரெடி.

    அதன் மீது வெங்காயம், எலுமிச்சை சாறு, மிளகுத்தூள் தூவி பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மன அழுத்தம் மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. ஒருசில உடல் இயக்க செயல்பாடுகள் மூலம் மன அழுத்தத்திற்கான அறிகுறியை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்.
    மன அழுத்தம் மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. ஒருசில உடல் இயக்க செயல்பாடுகள் மூலம் மன அழுத்தத்திற்கான அறிகுறியை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்.

    மன அழுத்தத்திற்கும், தலைவலிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தொடர்ந்து தலைவலி பிரச்சினையால் அவதிப்பட்டாலோ, நெற்றி பகுதியில் உள்ள தசையில் அழுத்தம் ஏற்பட்டாலோ மன அழுத்தம் ஏற்படக்கூடும்.

    திடீரென்று முகப்பரு பிரச்சினை உண்டாவதும் மன அழுத்தத்திற்கான அறிகுறியாகும். சிலருக்கு கைகளில் திட்டு போன்ற சிறிய தடிப்புகளும் தோன்றும்.

    தலையின் பின்பகுதியையொட்டிய கழுத்து பகுதியில் வலி ஏற்படுவதும் மன அழுத்த அறிகுறியாக இருக்கலாம். மன அழுத்தம் தசைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தசைகள் இறுக்கமாக தொடங்கி விடும். கழுத்துவலி ஏற்பட்டால் தலையை அங்கும், இங்கும் மெதுவாக அசைத்தும், தோள் பட்டைக்கு மசாஜ் செய்து வரலாம்.

    ஆழ்ந்த சுவாச பயிற்சி மேற்கொள்வது மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.

    அதிகமாக நகம் கடிக்கும் பழக்கமும் மன அழுத்தத்தை பிரதிபலிக்கும். அடிக்கடி நகம் கடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் கசப்பு தன்மை கொண்ட நகப்பூச்சுகளை பயன்படுத்தினால் நகம் கடிப்பதை கட்டுப்படுத்தலாம்.

    திடீர் வயிற்றுவலி, வயிற்று கலக்கம் போன்ற பிரச்சினைகளும் மன அழுத்தத்தின் அறிகுறியாக வெளிப்படும். அந்த சமயங்களில் சமையலில் இஞ்சி சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

    திடீரென்று மன சோர்வு ஏற்படும். இரவில் வழக்கமான நேரத்திற்கு மாறாக உடனே தூங்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.

    மூளையின் செயல்பாடுகளை சீராக இயங்க வைப்பதன் மூலம் மன அழுத்தத்தை விரட்டி அடிக்கலாம். மன அழுத்தத்திற்கான அறிகுறிகள் தென்பட்டால் நடை பயிற்சி, ஓட்ட பயிற்சி மேற்கொள்ளலாம். நடனம் ஆடலாம். இத்தகைய பயிற்சிகள் தசைகளை இலகுவாக்கி மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும். மனதிற்கு பிடித்தமான பாடல்களையும் கேட்கலாம்.
    சில குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும். குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    சில குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும். அதனால், பல தாய்மார்கள், அந்தக் குழந்தைகளை கீழாடை அணியாமல் `ப்ரீ’யாக விட்டுவிடுவார்கள்.

    அவ்வாறு செய்பவர்கள், ஏன் தங்கள் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்கள் என்று யோசித்திருக்க மாட்டார்கள்.

    உங்கள் குழந்தையும் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறதா? அதற்கு காரணம், இதுதான்…

    பொதுவாக பாலில் தண்ணீர் அதிகமாகக் கலந்து தருவதால் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்கள். அதனால், குழந்தைகளுக்கு தரும் பசும்பால் அல்லது ஆவின் பாலில் தண்ணீர் சேர்ப்பதை தவிர்த்திடுங்கள்.

    டின் பவுடர் பாலாக இருந்தால் ஒரு கரண்டி பவுடருக்கு ஒரு அவுன்ஸ் தண்ணீர் சேர்த்தால் போதும். பொதுவாக, 4 கிலோ எடையுள்ள குழந்தையாக இருந்தால் ஒரு வேளைக்கு 4 அவுன்ஸ் பால் கொடுத்தாலே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கபாப் வகைகளை வீட்டிலேயே தயார் செய்து ருசிக்கலாம். பன்னீர் கபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பன்னீர் துருவல் - அரை கப்
    வாழைக்காய் - 1
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி - 1 துண்டு (நறுக்கவும்)
    பொட்டுக்கடலை மாவு - கால் கப்
    உப்பு - தேவைக்கு
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை:

    வாழைக்காயை நன்றாக வேகவைத்து மசித்துக்கொள்ளவும்.

    இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மசித்த வாழைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பன்னீர், மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி தழை, பொட்டுக்கடலை மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த கலவையை விரும்பிய வடிவங்களில் பிடித்து கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    ருசியான பன்னீர் கபாப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எலுமிச்சை பழத்தில் ஒளிந்திருக்கும் பல அதிசயங்களையும், அது அழகை மேம்படுத்த உடம்பிற்கும் சருமத்திற்கும் எப்படி பயன்படுகிறது என்பதையும் இப்போது பார்க்கலாம்.
    இளமையுடன் இருக்க… உடம்பில் முதுமை தெரியும் பகுதிகளை எலுமிச்சையை வைத்து நீக்கலாம். எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால், அது சருமத்தில் உள்ள சுருக்கங்களை எதிர்த்து போராடும்.

    சரும சுருக்கங்களை நீக்க நல்லதொரு பேஸ் பேக் வேண்டுமா? அப்படியெனில் கொஞ்சம் எலுமிச்சை சாற்றை எடுத்து, இனிக்கும் பாதாம் எண்ணெயில் கலந்து, முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை ஊற விடுங்கள். இல்லையெனில் எலுமிச்சை சாறு மற்றும் ஆப்பிள் சிடர் வினீகரை சமமான அளவில் கலந்து, இளமை தொலையும் இடங்களில் தடவுங்கள்.

    எண்ணெய் பசையுள்ள சருமத்தை பராமரிக்க…

    எண்ணெய் வழியும் சருமத்தில் முகப்பரு, கரும்புள்ளி என பல சரும பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே எண்ணெய் பசையான சருமத்திற்கு நிவாரணியாக எலுமிச்சை விளங்குகிறது. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமத்தின் எண்ணெய் மூலக்கூறுகளை உடைத்தெறியும். அதனால் சருமம் மென்மையாக விளங்கும். அதற்கு எலுமிச்சை சாற்றினை தண்ணீருடன் கலந்து, அந்த கலவையை பஞ்சுருண்டையை பயன்படுத்தி முகத்தில் தடவுங்கள். அதிலும் எண்ணெய் பசை சருமத்தை கொண்டவர்கள், இதனை தினசரி செய்ய வேண்டும்.

    சருமம் புத்துணர்வும், மென்மையும் அடைய…

    எலுமிச்சை சாறு, சருமத்தை மென்மையாக வைக்க உதவும். அதிலும் முகத்தில், முட்டியில், முழங்கையில் எலுமிச்சை சாற்றை தடவினால், அவைகள் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். குறிப்பாக எலுமிச்சையின் தோலை முகத்தில் தேய்த்தால் அது இயற்கை தெம்பூட்டியாகவும், இறந்த செல்களை அகற்றவும் செய்யும்.

    மேலும் பொலிவிழந்த வறண்ட சருமத்திற்கு எலுமிச்சை கலந்த எண்ணெயை உபயோகப்படுத்தலாம். அழகிய இதழ்கள் எலுமிச்சை பானம் இதழ்களுக்கும் பயனுள்ளதாக விளங்குகிறது. வறட்சி, வெடிப்பு மற்றும் வெம்புண் போன்றவைகளால் உதடு பாதிக்கப்பட்டிருந்தால், உதட்டில் எலுமிச்சை சாற்றினை தடவுங்கள். எலுமிச்சை சாற்றை பாலின் நுரை மற்றும் தேனுடன் கலந்து உதட்டின் மீது தடவலாம்.

    அக்குள்களைப் பராமரிக்க…

    நண்பர்களை சந்திக்க அல்லது பார்ட்டிக்கு செல்ல வெளியே கிளம்புகிறீர்களா? அப்போது அக்குள் அசிங்கமாகவும், துர்நாற்றம் வீசுவதையும் பின்னர் தான் உணர்ந்தீர்களா? வியர்வை, வெப்பம் மற்றும் தூய்மை கேடு இவை அனைத்தும் அக்குளை கருமையடையச் செய்து துர்நாற்றத்தை கொடுக்கும். எனவே எலுமிச்சை சாற்றில் சிறிய பஞ்சுருண்டையை முக்கி, அக்குளுக்குள் தடவுங்கள். வேண்டுமெனில் எலுமிச்சையை அப்படியே தடவலாம். இனி என்ன, நீங்கள் பயமில்லாமல் ஸ்லீவ்லெஸ் சட்டையை அணியலாம். 
    கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏன் வருகிறது? அதன் அறிகுறிகள் என்ன?சிகிச்சைகள்? இவை எல்லாவற்றையும் பற்றி விளக்கமாக அறிந்து கொள்ளலாம்.
    பெண்களை பயமுறுத்தும் ஆட்கொல்லி நோய்களில் சமீபகாலமாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கே முதலிடம். வயதான பெண்களை அதிகம் பாதித்த இந்த நோய், இப்போது, இளம் பெண்களையும் விட்டு வைப்பதில்லை. கர்ப்பப்பை புற்றுநோயையும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயையும் பல பெண்கள் ஒன்றென நினைத்துக் குழப்பிக் கொள்கிறார்கள். இரண்டும் வேறு வேறு. கர்ப்பப்பை புற்றுநோய் என்பது மாதவிடாய் நின்று போன பெண்களையே அதிகம் தாக்குவது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் எல்லா வயதுப் பெண்களையும் தாக்கும். இது இந்தியாவில் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது.

    எப்படி வருகிறது?

    ஹியூமன் பாப்பிலோமா (சுருக்கமாக ஹெச்.பி.வி.) என்கிற வைரஸின் தாக்குதலே நோய்க்கான காரணம். இந்த வைரஸால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வர, 100 சதவிகிதமும், வல்வர் எனப்படுகிற பிறப்புறுப்பின் வெளியிலுள்ள பகுதியில் புற்றுநோய் வர 40 சதவிகிதமும், பிறப்புறுப்பில் புற்றுநோய் தாக்க 60 முதல் 90 சதவிகிதமும், ஆசனவாய் புற்றுநோய் வர 80 சதவிகிதமும், அந்தரங்க உறுப்பில் மரு தோன்ற 100 சதவிகிதமும், தலை மற்றும் கழுத்தில் புற்றுநோய் வர 12 முதல் 70 சதவிகிதமும் அபாய வாய்ப்புகள் உள்ளன.

    எப்படிப் பார்த்தாலும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கே முதலிடம். உடலின் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால், இந்த வைரஸ் தாக்கும்போது, அது அழிக்கப்பட்டு விடும். எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு, வைரஸ், செல்களை தாக்கி, அதன் விளைவாக புற்றுநோய் உருவெடுக்கிறது.

    யாருக்கு அபாயம் அதிகம்?

    திருமணத்துக்கு முன்பே உடலுறவில் ஈடுபடுவோருக்கு. ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் செக்ஸ் உறவு கொள்வோருக்கு. பல பெண்களுடனும் உறவு வைத்திருக்கும் கணவர்களால், மனைவிகளுக்கு.

    அறிகுறிகள்?


    அசாதாரணமான நாற்றத்துடன் வெள்ளைப்படுதல். அது பச்சை நிறம் கலந்தும், அரிப்புடனும் வெளிப்படுதல். அப்படி இருந்தால் அந்தத் தொற்றுக்கு உடனடியாக மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். அலட்சியப்படுத்தினால், அது பெரிதாகி, நாளடைவில் செல்களை பாதித்து, புற்றுநோய்க்குக் காரணமாகலாம். உறவின் போது ரத்தப்போக்கு உண்டாவது. இரண்டு மாதவிடாய்க்கு இடையில் திடீரென ரத்தப்போக்கு தென்படுதல். அசாதாரணமான வயிற்று வலி.



    என்ன சோதனை?

    திருமணமான எல்லா பெண்களும் கர்ப்பப்பைவாய் புற்றுநோயின் பாதிப்பைக் கண்டறிய ‘பாப் ஸ்மியர்’ சோதனையைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். மாதவிலக்கு முடிந்து 3 நாள்கள் கழித்து இந்தச் சோதனையை மேற்கொள்ளலாம். தட்டையான சிறிய கருவியின் மூலம், கர்ப்பப்பை வாயில் உள்ள செல்களைச் சுரண்டி எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பி, மைக்ரோஸ்கோப் கருவி மூலம் பார்த்து, புற்றுநோய்க்கான அறிகுறிகள் உள்ளனவா எனக் கண்டுபிடிக்கிற சோதனை இது. வலியில்லா சோதனை. 300 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை கட்டணம்.

    கர்ப்பப்பையின் உடல் பகுதிக்கும், அதன் வாய்க்கும் இடையில் உள்ள பகுதியில்தான் புற்றுநோய்க்குக் காரணமான செல்களில் மாற்றங்கள் தெரியும். அதை ‘லிக்யுட் பேஸ்ட் சைட்டாலஜி’ என்கிற அட்வான்ஸ்டு சோதனையின் மூலம் பாப் ஸ்மியரைவிட துல்லியமாகக் கண்டறியலாம். இதுவும் வலியில்லாதது. இதற்கான செலவு 1,000 முதல் 1,200 ரூபாய் வரை. இந்த இரு சோதனைகளுமே மருத்துவமனையில் தங்க வேண்டிய தேவையின்றி, உடனே வீட்டுக்குத் திரும்பும் அளவுக்கு எளிமையானவை. வருடம் தவறாமல் செய்ய வேண்டியது அவசியம்.

    மெனோபாஸை நெருங்கும் பெண்களுக்கு இந்த நோய்க்கான அபாயம் அதிகம் என்பதால், அவர்கள் வருடாந்திர உடல் பரிசோதனையின் போது இதையும் தவறாமல் செய்ய வேண்டும். தடுக்க முடியுமா? கர்ப்பப்பை வாய் புற்றுநோயை வராமலே காக்கக்கூடிய தடுப்பூசி இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி, 10 வயது சிறுமிகளுக்கே இந்த ஊசியை போடலாம். அந்தச் சிறுமி பூப்பெய்தியிருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

    திருமணமாகாத பெண்களுக்கு, அதாவது, உடலுறவில் ஈடுபடாத பெண்களுக்கு இந்த ஊசியைப் போட்டால், கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் தாக்கத்திலிருந்து 100 சதவிகித பாதுகாப்பு கிடைக்கும். ஒருவேளை அந்த வயதில் போடவில்லை என்றாலும் பிரச்னையில்லை. திருமணமாகி, உறவில் ஈடுபட்ட பெண்களுக்கும், 45 வயது வரை இந்த ஊசியைப் போடலாம். ஆனால், அது 100 சதவிகித பாதுகாப்பைத் தரும் எனச் சொல்வதற்கில்லை. 
    சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கம்பு, கேரட் சேர்த்து ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு மாவு - 1 கப்
    இட்லிமாவு - 1/4 கப்
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    கேரட் - 2
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, இட்லிமாவு, சிறிது உப்பு போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதம் கரைத்துக்கொள்ளவும்..

    அத்துடன் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கேரட் துருவல் போட்டு நன்கு கலந்து அரைமணிநேரம் அப்படியே வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் ஒருகரண்டி மாவு ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

    சுவையான கம்பு - கேரட் ஊத்தப்பம் ரெடி..

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த முத்திரை செய்து வந்தால் மன அமைதி கிடைக்கும். உடல் அழகுடன் விளங்கும். தியானத்தின் போது இந்த முத்திரை பயிற்சி செய்தால் உலக பந்தங்களிலிருந்து மனம் விடுபடும்.
    செய்முறை :

    விரிப்பில் சப்பணம் இட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்துகொள்ள வேண்டும். பிறகு, நெஞ்சுக் குழிக்கு நேராக (அனாகத சக்கரத்துக்கு நேராக), கைவிரல்கள் உடலில் ஒட்டாத வண்ணம், ஒரு தாமரை மலர்ந்திருப்பதுபோன்று… அதாவது, இரண்டு கரங்களின் கட்டைவிரல்களும், சுண்டு விரல்களும் முழுமையாக ஒட்டியிருக்க, மற்ற விரல்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மலர்ச்சியாக விரித்துவைத்துக் கொள்ள வேண்டும் (படத்தைப் பார்க்கவும்).

    இனி, கண்களை மூடி 30 நிமிடங்கள் வரையிலும் மெளனமாக அமர்ந்திருக்கலாம். மன இறுக்கம் உள்ளவர்கள், தாமரை மொட்டு மெள்ள இதழ் விரிப்பது போன்று, முதலில் கைகளைக் குவித்து வைத்து, பின்னர் மெது மெதுவாக விரல்களை விரிக்கவும். இவ்வாறு விரிக்க குறைந்தது 3 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம்.இப்படி, பதினான்கு தடவைகள் செய்யவும்.

    தினமும் அதிகாலை வேளையில் செய்து பயனடையலாம்.

    இந்த முத்திரை பயிற்சி குளிர் காலங்களில் செய்வதை தவிர்க்கவேண்டும். செய்தால் நெஞ்சில் சளி கட்டும்.

    முத்திரைப் பயிற்சிகள் குறைந்தது 15 நிமிடங்களும் அதிகபட்சம் 45 நிமிடங்கள் வரை செய்யலாம், இங்கு 45 நிமிடங்கள் செய்தால் நோயிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

    பலன்கள் :

    பங்கஜ முத்திரையும் நம் மனதை மலரச் செய்யும். நாம் உலக போகங்களில் உழன்றாலும் ஒட்டியும் ஒட்டாமல் வாழும் வல்லமையைத் தரும். இதுவே ஞானத்தின் முதல் நிலை.

    மனச் சலனம், வீண் கோபம், பதற்றம் ஆகியன நீங்கும். முகப் பொலிவும் தேகத்தில் தேஜஸும் ஏற்படும்.

    தாமரையானது வெளியே குளிர்ச்சியையும் உள்ளே சிறு வெப்பத்தையும் தக்க வைத்திருக்கும் ஒர் அற்புத மலர். அதுபோல உடலைக் குளிர்ச்சியாக்கி, மனதில் தேவையான வெம்மையை தக்கவைத்து, ஆரோக்கியத்தைச் செம்மையாக்கும்.

    மனம் தெளிவடைவதால் சிந்தனையும் வளமாகும், செயல்கள் சிறப்படையும். பிள்ளைகளுக்கு ஞாபக சக்தி வளரும், கல்வியில் மேன்மை பெறுவார்கள்.

    இந்த முத்திரை பயிற்சி முதுகு தண்டுவடத்திற்கு அதிக சக்தி கொடுக்கும். வயிற்றில் உள்ள அல்சர் மற்றும் கட்டிகள் உருவாவதை தடுக்கும்.

    நரம்பு மண்டலம் பலப்பட்டு நரம்புகள் அதிக சக்தி பெரும். இரத்த சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

    மன அமைதி கிடைக்கும். உடல் அழகுடன் விளங்கும். தியானத்தின் போது இந்த முத்திரை பயிற்சி செய்தால் உலக பந்தங்களிலிருந்து மனம் விடுபடும்.
    ×