என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    இந்த புத்தாண்டில் நீங்கள் நிறைய உறுதிமொழிகள், சபதங்களை ஏற்றிருப்பீர்கள். உங்கள் உறுதிமொழிகளையும், சபதங்களையும் இடையில் நிறுத்திவிடாமல் வெற்றிகொள்ள நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில....
    இந்த புத்தாண்டில் நீங்கள் நிறைய உறுதிமொழிகள், சபதங்களை ஏற்றிருப்பீர்கள். நன்றாகப் படிக்க வேண்டும், மருத்துவம், பொறியியல் என நினைத்த படிப்பில் சேர தகுதியான கட்-ஆப் மதிப்பெண் பெற வேண்டும், நினைத்த வேலையை கேம்பஸ் தேர்விலேயே வென்றுவிட வேண்டும், வேண்டாத பழக்கங்களை கைவிட வேண்டும், சொன்னதை செய்து முடித்து பெற்றோரிடம் ஆசைப்பட்டதை கேட்டுப் பெற வேண்டும் என பல்வேறு லட்சியங்களை நீங்கள் சவால்களாக ஏற்றிருக்கலாம். அதை அடைய வாழ்த்துக்கள். ஏறத்தாழ எல்லோருமே இப்படியான சபதங்களை ஏற்பதுண்டு. ஆனால் அதை தொடர்ந்து கடைப்பிடித்து வென்று முடிப்பவர்கள் வெகுசிலரே. உங்கள் உறுதிமொழிகளையும், சபதங்களையும் இடையில் நிறுத்திவிடாமல் வெற்றிகொள்ள நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில..

    சோம்பேறித்தனம்

    பலரது லட்சியங்களை வீழ்த்திய ஒரே அசுரன் சோம்பேறித்தனம். அலட்சிய மனப்போக்கு சோம்பேறித்தனத்தின் புகலிடமாகும். சின்ன விஷயம்தானே பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற அலட்சியத்தால் தள்ளிப்போடப்படும் பல்வேறு விஷயங்கள், அவசியமான நேரத்தில் நமது காலைவாரிவிடும்.

    இப்படி ஒட்டுமொத்தமாக சேர்ந்துவிடும் சின்னச்சின்ன விஷயங்கள், குறித்த நேரத்தில் எைதயும் செய்ய இயலாத சிக்கலை ஏற்படுத்தும். அதனால் பரபரப்பும், தவறுகளும் ஏற்படும். நீங்கள் எழுதி முடிக்காமல் மிச்சம் வைத்த பாடங்கள், கட்டுரைகள், ஓவியங்கள் கடைசி நேரத்தில் பரபரப்பை உருவாக்கியதை கண்டிருக்கிறீர்களா?

    ஒதுக்கி வைத்த பாடங்கள் பரீட்சையில் கேட்கப்பட்டு மதிப்பெண்களை இழந்த அனுபவம் நேர்ந்திருக்கிறதா? கல்விக்கு அவசியமான கத்தரிக்கோல், டேப், பசை, ஸ்டாப்லர் பின், காம்பஸ், புரொடக்டர், பள்ளி அடையாள அட்டை என எத்தனையோ சின்னச் சின்ன பொருட்களை பத்திரப்படுத்தி வைக்காமல், அவசியமான நேரத்தில் கையில் கிடைக்காமல் அவதிப்பட்டிருக்கிறீர்களா? அதை பள்ளி கிளம்பும் நேரத்தில் தேடி, வீட்டுப் பயிற்சிகளை செய்து முடிக்காமல் பள்ளியில் திட்டுவார்களே என சங்கடப்பட்டதுண்டா?

    இதுபோன்ற காரணங்களுக்காக பள்ளிக்கு முழுக்கு போட்டு, வகுப்பு புறக்கணிப்பவர்கள் உண்டு. இந்த விஷயங்களுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது சோம்பேறித்தனம்தான். உங்களுக்கான பொருட்களை பத்திரமாக வைத்திருந்து, கொடுக்கப்பட்ட பயிற்சிகளை கடைசி நேரத்தில் முடிக்க முயலாமல், சுறுசுறுப்பாக செயல்பட்டு முன்கூட்டியே முடித்துவிட்டால் எந்த பரபரப்பும் இன்றி எல்லா செயல்களிலும் வெற்றி பெறலாம். அதற்கு முதலில் சோம்பேறித்தனத்தை களைய வேண்டும். இந்த புத்தாண்டின் லட்சியங்களையும் உங்கள் சோம்பேறித்தனம் களவுகொண்டுவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    நேரமில்லையா?


    “எல்லாம் எனக்கும் தெரிகிறது, ஆனால் எனக்கு நேரம் போதவில்லையே” என ஆதங்கப்படுகிற ரகமா நீங்கள்? எல்லோருக்குமே இதே 24 மணி நேரம்தான் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறோம். இந்த 24 மணி நேரத்தில்தான் உங்களால் முடியாததையெல்லாம் இன்னொருவர் செய்து கொண்டிருக்கிறார். அப்படியிருக்க உங்களால் முடியாமல்போக காரணம் என்ன என்பதை நீங்களே ஆராய்ந்தறிந்து கொள்ள வேண்டும்.

    அதற்கு உங்கள் நேரத்தை நீங்கள் எப்படி செலவிடுகிறீர்கள் என்பதை முதலில் எழுதிப் பாருங்கள். எந்தச் செயலுக்கு அதிகமான நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்பதை கண்டறிந்து அதை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். மிச்சம்பிடித்த நேரத்தை உங்கள் லட்சியத்தை வெற்றிகொள்ளப் பயன்படுத்துங்கள்.

    பயம் வேண்டாம்

    பலரது வெற்றிகளை தட்டிப்பறிப்பதில் பயத்திற்கு முக்கிய இடமுண்டு. தோல்வி பயத்தில் ஒரு காரியத்தை தொடங்காமலே தோற்றவர்கள் நிறைய பேர். பல திறமைகள் நம்மிடம் இருப்பதையே ஒரு ஓரமாக ஒதுங்கியிருக்கும் பயம் மறக்கடிக்கச் செய்துவிடுகிறது.



    கல்விப் பருவத்தில் பயம் கொள்ள அவசியமில்லை. சிறுகச்சிறுகப் படித்துக் கொண்டே வந்தால் நிச்சயம் தோல்விக்கு வாய்ப்பே இல்லை. உண்மையில் முடியாததென்று எதுவுமில்லை. உங்களுடன் படிக்கும் சிலர் முழு மதிப்பெண் பெறும் பாடங்களில் உங்களால் தேர்ச்சிகூட அடையமுடியாதா என்ன?

    அடிப்படை பாடங்களான ஆங்கிலமும், கணிதமும், அறிவியலும் சிலருக்கு பயமுறுத்தும் பாடங்களாக அமைந்துவிடுவது உண்டு. நிச்சயம் இவை வாழ்வின் அடிப்படை அறிவை வளர்க்கத் தேவையான பாடங்களாகும். நீங்கள் எவ்வளவு சிரமப்பட்டேனும் இந்தப் பாடங்களில் தேர்ச்சிக்கு முயல வேண்டுமே தவிர பயந்து ஒதுங்கி விடக்கூடாது. பள்ளிக் கல்விக்குப் பிறகு, நீங்கள் விருப்பம்போல உங்கள் பிரியமான பாடப்பிரிவை படித்து வெற்றிபெறலாம். பயத்தை வெற்றிகொள்ள ஒரே ஒரு மந்திரச்சொல்லை மனதில் உச்சரியுங்கள், அது “என்னால் முடியும்” என்பதுதான்!

    புலம்பாதீர்கள்...

    லட்சியங்களை கோட்டைவிட்டுவிட்டு ‘என்னால் முடியவில்லையே’ என்றும், ‘எனக்கு அது கிடைக்கவில்லையே’ என்றும் புலம்பிக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் இயலாமைக்கு பெற்றோரையோ, ஆசிரியரையோ, மற்ற எவரையுமோ குற்றம் சொல்லாதீர்கள்.

    உங்களின் செயல்பாடுகள் முழுமையாகவும், முயற்சிகள் சரியானதாகவும் இருந்தால், இப்போது வெற்றி நழுவிப்போயிருந்தால், அடுத்தமுறை நிச்சயமாக அது சாத்தியமாகும், வெற்றி கைகூடும். அதற்காக அழுது புலம்புவதோ, யார்மீதும் குற்றம் சொல்வதோ தீர்வாகாது. கடந்த முறை உங்கள் லட்சியம் நழுவிப்போனதற்கான காரணத்தை ஆராய்ந்து, இந்த முறை நிச்சயம் அந்த வெற்றியை ருசிப்பது என உறுதியுடன் செயல்படுங்கள்.

    திட்டமும், செயலும்...


    உங்கள் லட்சியத்தை உறுதியாக அடைய நீங்கள் பின்பற்ற வேண்டியது, சரியான திட்டமிடலும், செயல்பாடும்தான். இந்த லட்சியத்தை ஏன் தேர்வு செய்தீர்கள்? அது உங்கள் வாழ்க்கையை எப்படி வளப்படுத்தும்? அதில் ஏன் நீங்கள் தோல்வி அடையக்கூடாது? என்பதை தெளிவாக சிந்தனை செய்யுங்கள்.

    அதை வென்றுமுடிப்பது எப்படி? என திட்டமிடுங்கள். அதற்கு எதையெல்லாம் தடை செய்ய வேண்டும், எதை தியாகம் செய்ய வேண்டும், எந்த விஷயங்களை முன்னுரிமை கொடுத்து செய்ய வேண்டும்? என முடிவெடுங்கள். அதன்படி செயல்படுங்கள்.

    உங்கள் செயல்களை அவ்வப்போது ஆராயுங்கள். வெற்றியை நோக்கி சீராக சென்று கொண்டிருக்கிறீர்களா? என்பதை உறுதிப்படுத்துங்கள். நிச்சயம் நினைத்ததை நிறைவேற்றி முடிக்கலாம்.

    உங்கள் சபதங்களை நிறைவேற்ற தடையாக இருக்கும் இந்த விஷயங்களில் நீங்கள் கவனமாக இருந்தால், உங்கள் புத்தாண்டு கனவுகள் எளிதில் நிறைவேறிவிடும். வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
    தமிழகத்தில் கண் தானம் குறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ஏற்படுத்தி வருகின்றன.
    தமிழகத்தில் சுமார் 7 லட்சம் பேர் பார்வையின்றி தவித்து வருகின்றனர். மக்களிடம் இருக்கும் தவறான நம்பிக்கைகளின் காரணமாக பலரும் கண் தானம் செய்ய தயங்குவதால் ஆண்டுக்கு சராசரியாக 6 ஆயிரம் கண்கள் மட்டுமே தானமாக கிடைக்கின்றன. தமிழகத்தில் சாலை மற்றும் ரெயில் விபத்துகளில் சிக்கியும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டும், தற்கொலை செய்துகொண்டும், தினமும் பலர் இறக்கின்றனர். இவ்வாறு ஆண்டுக்கு 5 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இறக்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சென்னையில் மட்டும் ஆண்டுக்கு 60 ஆயிரம் பேரும் இறக்கின்றனர். இவர்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களின் கண்களே தானமாக கிடைக்கின்றன.

    தமிழகத்தில் கண் தானம் குறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ஏற்படுத்தி வருகின்றன. இருந்தாலும் இறந்தவர்களின் கண்களை தானம் செய்ய பொதுமக்கள் பலர் முன்வருவது இல்லை.

    தமிழகத்தில் தானமாக கிடைக்கும் அத்தனை கண்களையும் பயன்படுத்த முடிவது இல்லை. ஆண்டுக்கு கிட்டத்தட்ட 4 ஆயிரம் கண்களை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. ஒருவர் இறந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்களை அகற்றினால்தான் அவற்றை பயன்படுத்த முடியும்.

    இறந்தவர்கள் பற்றிய தகவல் தாமதமாக கிடைத்தால், அவர்களிடம் இருந்து எடுக்கப்படும் கண்கள் பயன்படாது. அதேபோல, முதியவர்களிடம் இருந்து எடுக்கப்படும் கண்களில், ஒரு சிலரது கண்களில் செல்கள் குறைவாக இருக்கும் என்கிறார்கள். அந்த கண்களையும் பயன்படுத்த முடிவது இல்லை. இதுபோன்ற காரணங்களால், ஆண்டுக்கு கிட்டத்தட்ட 2 ஆயிரம் கண்களை பயன்படுத்த முடிவதில்லை.

    ஒருவர் உயிரிழந்தவுடன் குடும்பத்தினரும், உறவினர்களும் சோகத்தில் இருப்பார்கள். அந்த நேரத்தில், ‘இறந்தவரின் கண்களை உடனடியாக தானம் செய்ய வேண்டும்‘ என்ற எண்ணம் தோன்றுவது இல்லை. ஒருசிலர்தான் அதுபற்றி யோசிக்கிறார்கள்.

    இறந்தவரை ஊனத்தோடு புதைத்தால் அடுத்த பிறவியில் அவர் ஊனத்தோடு பிறப்பார் என்ற மூடநம்பிக்கை மக்களிடையே பரவலாக உள்ளது.

    உலக அளவில் இலங்கையில் கண் தானம் அதிகம் உள்ளது. இந்தியாவில் கண் தானம் செய்வதில் குஜராத் மாநிலம் முதல் இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு ஆண்டுக்கு சுமார் 1,000 கண்கள் தானமாக கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
    கண்பார்வை குறைபாடு உள்ளவர்களும், கண்பார்வை வளர்ச்சி குன்றிய குழந்தைகளும், நோயிலிருந்து விடுபட்டு உடல் நலம் தேறி வருபவர்களும், கேரட் ஜூஸ் ஒருநாள் விட்டு ஒரு நாள் தினமும் 10 மில்லி லிட்டர் அருந்த வேண்டும்.

    ஒரு 100 கிராம் கேரட்டில் 86.0 விழுக்காடு நீர்ச்சத்தும், 0.9 விழுக்காடு புரோட்டீன் சத்தும், 0.2 விழுக்காடு கொழுப்புச் சத்தும், 1.1 விழுக்காடு தாதுக்களும், 1.2 விழுக்காடு நார்ச்சத்தும், 10.6 விழுக்காடு கார்போஹைட்ரேட்ஸும் உள்ளது.

    கால்சியம் 80 மில்லி கிராமும் பாஸ்பரஸ் 530 மில்லி கிராமும், இரும்புச்சத்து 2.2 மில்லி கிராமும் வைட்டமின் சி 3 மில்லிகிராமும் மற்றும் சிறிதளவு வைட்டமின் பி யும் உள்ளது.

    கேரட் ஒரு காரத்தன்மை அதிகம் உள்ள கிழங்கு என்பதால் அமில உடல்வாகு உள்ளவர்கள் இதனை அதிகம் உண்ண அமில நிலை சமநிலை அடையும். கேரட்டில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளதால் கண்பார்வை குறைபாடு உள்ளவர்களும், கண்பார்வை வளர்ச்சி குன்றிய குழந்தைகளும், நோயிலிருந்து விடுபட்டு உடல் நலம் தேறி வருபவர்களும், கேரட் ஜூஸ் ஒருநாள் விட்டு ஒரு நாள் தினமும் 10 மில்லி லிட்டர் அருந்த வேண்டும்.

    பொதுவாக கேரட்டை வேகவைப்பதால் அதில் உள்ள சத்துக்கள் அழிய நேரிடுகிறது. எனவே வேகவைத்த கேரட்டைவிட பச்சைக் கேரட் உண்ணுவதே சிறந்தது.



    நாம் தினமும் இரவு உணவிற்குப் பின்னர் ஒரு கேரட்டைக் கடித்து உண்டால் பல் இடுக்குகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுத்துகள்களை வெளியேற்றுவதுடன் ஈறுகள் பலப்பட்டு பற்கள் சொத்தை ஆவதைத் தடுக்க முடியும்.

    கேரட்டைக் கடித்து உண்பதால் உமிழ்நீர் அதிகமாகச் சுரந்து செரிமானத்தை அதிகரிக்கிறது. நாம் தினமும் ஒரு கேரட் உண்டு வர நம் உணவுக் குழாய்களில் தோன்றும் நோய்களாகிய குடல்புண், வயிற்றுவலி, அஜீரணம் ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும்.

    தினமும் வெறும் வயிற்றில், துருவிய கேரட் ஒரு கப் சாப்பிட குடலில் வாழும் நூல் புழுக்கள் வெளியேறி விடும். கேரட்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் மலட்டுத் தன்மை மறையும்.

    கேரட் சூப் வயிற்றோட்டத்திற்கு ஒரு சிறந்த மருந்து. 1/4 கிலோ கேரட்டை சுத்தம் செய்து வேக வைத்து அதிலிருந்து கிடைக்கும் சூப்புடன் சிறிது உப்புச் சேர்த்து 10 நிமிடத்திற்கு ஒருமுறை இரண்டு இரண்டு ஸ்பூனாகக் குடிக்க வேண்டும். வயிற்றோட்டத்தின் மூலம் இழக்கப்பட்ட சோடியம், பொட்டாசியம், கால்சியம், சல்பர், பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகிய சத்துக்களை இந்த கேரட் சூப் ஈடுசெய்யும்.
    காலையில் செய்த இட்லி மீந்து விட்டால் அதை வைத்து சுவையான போண்டா செய்யலாம். இன்று இட்லியை வைத்து போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    இட்லி - 5
    கடலைமாவு - 4 மேஜைக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 3
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - சிறிதளவு
    தண்ணீர் - 2 மேஜைக்கரண்டி
    பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    இட்லிகளை உதிர்த்து கொள்ளவும்.

    வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் உதிர்த்து வைத்துள்ள இட்லி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கடலைமாவு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அதனுடன் இரண்டு மேஜைக்கரண்டி தண்ணீரும் சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு செய்து வைத்த உருண்டைகளை போடவும்.

    ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இருபுறமும் நன்கு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சுவையான இட்லி போண்டா ரெடி.

    குறிப்பு  :

    மீந்து போன இட்லியிலும் இந்த முறையில் போண்டா செய்யலாம். ஐந்து இட்லிக்கு 20 போண்டாக்கள் வரை வரும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும்.
    ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக் கலந்து உறவில் ஈடுபடுவது தான். ஆனால் நம்மில் எத்தனை பேர் இதைச் செய்யத் தயாராக இருக்கிறோம்? வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் படுக்கையில் பாய்ந்து மகிழ்ச்சியில் திளைக்கும் ஜோடிகள் ஆயிரம் இருந்தாலும் இதைத் தவிர்ப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

    காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் உடலுறவு நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். அதில் நீங்கள் தெரிந்து கொள்ளும் விபரங்கள் உங்கள் வாயைப் பிளக்க வைக்கும்.

    தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் உறவு வைத்துக் கொள்வது ஒருவருடைய ஆரோக்கியத்திற்கு நல்லது எனவும், அவரை வலுவுடனும், சுறுசுறுப்போடும் வைத்திருப்பதுடன் உடல் கூறுகளுக்கு நன்றாகச் செயல்பட சக்தியை வழங்கும் எனவும் நம்பப்படுகிறது.

    சில ஜோடிகள் படுக்கையில் தங்களுடைய செயல்திறனை உணர்ந்து தங்கள் வாழ்க்கையின் போக்கையே பெருமளவில் மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த வித்தியாசமான விஷயங்களை நன்கு கவனித்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். காதல் உறவு நமக்குச் சொல்லித் தரும் இந்த விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

    * உங்களுடைய முரட்டுத்தனத்தை அடையாளம் காட்டும் ஒருவரை நீங்கள் சந்திக்கும் வரை பெரும்பாலும் உங்களுக்குத் அது தெரிவதில்லை. காதல் உறவில் ஈடுபடும் போது தான் ஒருவர் அதை உணர்வார்.

    * உடல் ரீதியான தொடுதல் இல்லையென்றால், உறவில் உள்ள அன்பும், காதலும் சிறிது காலத்திற்குப் பிறகு இறந்துவிடும். உடல் ரீதியான உறவு நமக்குச் சொல்லித் தருவது என்னவென்றால், உங்கள் துணைவரை அணுகி ஒரு முத்தம் அல்லது அணைப்பின் மூலம் மகிழ்ச்சியாக உணரச் செய்யுங்கள்.



    * உடலில் அல்லது மனதில் உள்ள அழுத்தத்தை அல்லது நெருக்கடியைக் குறைக்க உறவு கொள்ளுதல் ஒரு சிறந்த வழி என்பது நம்மில் பல பேருக்குத் தெரியாது. ஆனால் இது உண்மையாகவே மன மற்றும் உடல் ரீதியான நெருக்கடிகளைக் குறைக்கக் கூடியது.

    * நீண்ட ஆயுளுடன் வாழ பல்வேறு மருந்துகளையும், கசப்பான உணவுகளையும் சாப்பிட்டு முயற்சி செய்பவரா நீங்கள்? அப்ப உறவில் ஈடுபட்டு முயன்றிருக்கிறீர்களா? அது உங்கள் ஆயுளைக் கூட்டும் என்பது நாம் அறிந்திராத சற்று வித்தியாசமான விஷயம் தான்.

    * உடலுறவு குறிப்பாக பெண்களில், காதல் கொள்ளவும் உறவிற்காக ஏங்கவும் செய்யும். இது ஆண்களுக்கு முட்டாள்தனமாகத் தோன்றலாம். ஆனால் உண்மையென்றால் இதனால் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றனர்.

    * உங்கள் உடல் எடையைக் குறைக்க நீங்கள் போராடிக் கொண்டிருந்தால், உறவில் ஈடுபட்டுப் பாருங்கள். உடல் உறவில் ஈடுபடுவது உடலில் உள்ள கலோரிகளை குறைத்து ஒரு ஓட்டப்பயிற்சியை விட விரைவாக எடையைக் குறைக்க வல்லது.

    * ஆணுறையில்லாமல் உறவில் ஈடுபடுவதனால் ஏற்படும் ஹெச்ஐவி மற்றும் பால்வினை நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதனால், ஆணுறை எவ்வளவு முக்கியம் என்பதை உடலுறவு நமக்குச் சொல்லித் தருகிறது.
    குழந்தைகளுக்கு போடும் தடுப்பூசிகள் என்னென்ன? தடுப்பூசிகள் போடுவதற்கான காரணங்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் தான் அவர்களின் மன ஆரோக்கியத்துக்கு அடிப்படை. குழந்தை பிறந்தவுடன் நோய்க்கிருமிகளும் அவர்களைத் தாக்க ஆரம்பித்து விடுகின்றன.

    அவற்றில் இருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி? நோய்த் தொற்றில் இருந்து குழந்தைகளைக் காக்க இந்திய அரசாங்கத்தின் சுகாதாரத் துறையும், இந்திய குழந்தைகள் நல மருத்துவக் கூட்டமைப்பும் பரிந்துரைக்கும் தடுப்பூசிகள் என்னென்ன? அவற்றை எந்தெந்தக் கால கட்டங்களில் மருத்துவர்களின் ஆலோசனைகளோடு பயன்படுத்த வேண்டும்? நோய்த் தொற்றல் ஏற்படும் பாதிப்புகள், அவற்றைத் தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து அறிந்து கொள்ளலாம்.

    நோய்த் தடுப்பு என்பது, தினசரி நம்முடைய உடலில் நடந்து கொண்டிருக்கும் ஒரு செயல்பாடு. நோய்க் கிருமிகள் அல்லது உடலைச் சாராத ஏதேனும் பொருள் உடலுக்குள் நுழையும் போது அதை அழிக்கிற வேலையைப் பார்ப்பவை இயற்கையாகவே நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள் தான்.

    சில செல்கள் தன்னால் அழிக்கப்பட்ட கிருமியை நினைவில் வைத்துக் கொண்டு, மீண்டும் அது போன்று ஏதேனும் உடலுக்குள் நுழைந்தால் அவற்றின் தாக்குதலில் இருந்து என்று விழிப்புடன் நம்மைப் பாதுகாக்கிறது.

    சில நோய்த் தாக்குதலைச் சமாளிக்க செயற்கையான நோய்த் தடுப்பு மருந்துகளும் உடலுக்குள் செலுத்தப்படுகின்றன. அவைதான் தடுப்பூசிகள்! இப்படி உடலுக்குள் செலுத்தப்படும் நோய்த் தடுப்பானது நோய்க் கிருமி தொற்றில் இருந்து நம்மைக் காக்கிறது.

    முதன் முதலில் பெரியம்மைக்குத் தான் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. அது முதல் தொடர்ந்து பல்வேறு நோய்களுக்கு தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகள் வந்து கொண்டே இருக்கின்றன.

    தடுப்பூசி நம் குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்கிறது! தவிர, நோய்த் தொற்றுக்கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் கால தலைமுறையைப் பாதுகாக்கிறது. நம் குடும்பத்தின் நேரம், பணத்தை மிச்சப்படுத்துகிறது. ஒரு காலத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த போலியோ, அம்மை போன்ற நோய்கள் தடுப்பூசிகளால் பெருமளவு ஒழிக்கப்பட்டன!

    குழந்தைகளைத் தாக்கும் நோய்த் தொற்றில் இருந்து காப்பதோடு மட்டுமல்ல, குழந்தைகள் ஊனமாகி உயிர் இழப்பதில் இருந்தும் தடுப்பூசிகள் தான் தற்காக்கின்றன.
     
    இன்று பாவாடை-தாவணியில் பட்டாம் பூச்சிகளாய் பறக்கும் இளம் பெண்களை பார்க்க முடியவில்லை. நேர்த்தியாக கரை போட்ட வேட்டி கட்டிக் கொண்டு, அரும்பு மீசையை முறுக்கிவிட்டபடி செல்லும் கட்டிளங் காளையர்களை காண முடியவில்லை.
    பாரம்பரியம் காப்போம் என்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக துள்ளி எழுந்து மெரினாவில் திரண்ட கூட்டமும், எழுப்பிய கோஷமும் வரலாற்றுப் பதிவாகிப்போனது.
    சபாஷ். தமிழன் தன் அடையாளத்தை காக்க எழுந்துவிட்டான் என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்கள். ஆனால் உண்மையிலேயே பாரம்பரிய அடையாளங்கள் காக்கப்படுகிறதா? கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறதா? என்பதை பாரம்பரியம் பற்றி பெருமை பேசும் ஒவ்வொருவரும் தனக்குத்தானே கேள்வி கேட்க வேண்டிய நேரம் இது.

    இன்னும் பத்துநாளில் தைமகள் பிறக்கப்போகிறாள். தை திருநாள் பாரம்பரிய கலாச்சார திருவிழா.

    இந்த பாரம்பரிய விழாவுக்கு தனி மகத்துவம் இருக்கிறது. பரம்பரை பரம்பரையாக பாரம்பரியத்தை காத்து கொண்டாடுவதில் அர்த்தமும் உண்டு. நிலத்தில் பாடுபட வைத்து பலனையும் கொடுப்பவள் நிலமகள். அந்த இனிய மகளுக்கு - இயற்கைக்கு நன்றி செலுத்தும் இனிய விழாவே தை திருநாள். இந்த இனிய நாளில் உண்பது, உடுத்துவது, கொண்டாடுவது எல்லாமும் தமிழர்களின் பாரம்பரிய அடையாளத்தோடு தொடர்புடையது. அதில் ஒன்று தான் ஜல்லிக்கட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பைக் ரேஸ், கார் ரேஸ் என்று எத்தனை போட்டிகள் வந்தாலும் ஜல்லிக்கட்டை மட்டும் மனதார நேசிப்பது ஏன்? அது தமிழர் அடையாளம். அதேபோல் தான் பொங்கல் சம்பந்தப்பட்ட ஒவ்வொன்றையும் நேசிப்பதும், காப்பதும் தான் நமது அடையாளத்தை அழியாமல் பாதுகாக்கும். நாகரீக மோகத்தில் சிக்கி நமது பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, பாவாடை-தாவணி, புடவை இவைகளை மறந்து போனோம் என்பதை மறைப்பதற்கில்லை.

    இன்று பாவாடை - தாவணியில் பட்டாம் பூச்சிகளாய் பறக்கும் இளம் பெண்களை பார்க்க முடியவில்லை. நேர்த்தியாக கரை போட்ட வேட்டி கட்டிக் கொண்டு, அரும்பு மீசையை முறுக்கிவிட்டபடி செல்லும் கட்டிளங் காளையர்களை காண முடியவில்லை. இந்த அடையாளம் தானே தமிழர் பாரம்பரியத்தின் அடிப்படை அஸ்திவாரம் எல்லாமும். இதன் மீது தானே மற்றவை எல்லாம் கட்டமைக்கப்பட்டது.

    ஆனால் இந்த அடிப்படை அடையாளத்தை தொலைத்துவிட்டு மற்ற எதைப்பற்றியும் பேசிப் பயனில்லை.



    வேட்டி... ....


    அவ்வளவு சாதாரணமான உடையா?

    கர்ணனுக்கு உடன் பிறந்த கவச குண்டலம் போல் தமிழனின் உடலை முதல் முதலில் ஒட்டியிருந்தது இந்த வேட்டி அல்லவா? இலைகளையும், தளைகளையும் சுற்றி உடலை மறைத்து வாழ்ந்த ஆதிகால தமிழன் நாகரீகத்தின் முதல் அடையாளமாக உருவாக்கிய உடை தான் வேட்டி. பருத்தியில் இருந்து பஞ்சை எடுத்து, பஞ்சை நூலாக்கி நெசவாளர்கள் எண்ணத்துக்கு வடிவமாக்கி உருவாக்கியது தான் வேட்டி, சேலை வகையறாக்கள்... !

    இது வெறும் உடை அல்ல. உடைமொழி. தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தமிழர்களைப்பற்றிய புரிதல் எல்லாமே இந்த பாரம்பரிய ஆடைக்குள் அல்லவா அடங்கி இருக்கிறது. என்ன விலை கொடுத்து உயர்ந்த நாகரீகத்தின் அடையாளம் என்ற எண்ணத்தில் விதவிதமான ஆடையை வாங்கி அணிந்தாலும் முக்கிய விசேஷ நாட்களில் வேட்டி-சட்டையும், பட்டுப்புடவையும் கட்டிவரும் அழகே தனி அழகாக அல்லவா தெரிகிறது! கவித்துவம் இல்லாத இதயங்கள் கூட என்ன விலை அழகே? என்று வர்ணித்து ரசிக்கிறதே! இந்தமாதிரி வேட்டி-சட்டை அணிந்து வருபவருக்கு தனி கம்பீரம் வந்துவிடுகிறது.

    இப்படிப்பட்ட பாரம்பரிய அடையாளத்தோடு நின்று, பொங்கல் வைத்து கொண்டாடினால் எப்படி இருக்கும்...? துள்ளாத மனமும துள்ளும்! பாடாத மனமும் பாடும்! ஆடாத மனமும் ஆடும், பாடும் கொண்டாடுமே...?!

    ஆனால் இன்று தமிழர்களின் உடலோடு ஒட்டியிருந்த வேட்டி உருவிப் போனதால் தானே ஒட்டிக்கோ... கட்டிக்கோ... என்று கவர்ச்சி வசனம் பேச வேண்டி இருக்கிறது.



    வேட்டி கட்டினால் கவுரவ குறைச்சல் என்று கருதும் காலம்! பக்கத்து மாநிலமான கேரளாவில் வேட்டி கட்டுவதை பெருமையாக கருதுகிறார்கள். ஆகால் வேட்டி கட்டக்கூட தெரியாத நிலையில் தமிழ் இளைஞர்கள் இருப்பது வேதனையானது. அதனால் தானே ஒட்டிக்கோ... கட்டிக்கோ... என்றெல்லாம் சொல்ல வேண்டி இருக்கிறது.

    எது எப்படியாயினும் நாம் பாரம்பரிய திருவிழா காலங்களிலாவது நமது பாரம்பரிய உடையோடு இருந்தால் போதும். பாரம்பரியத்தை காக்கிறோம் என்று பெருமையோடு மார்தட்டிக் கொள்ள முடியும். அதைவிட்டு விட்டு பத்துநாள் துவைக்காத ஜீன்ஸ், அரை மற்றும் முக்கால் டவுசருடன் நின்று கொண்டு பாரம்பரியம் காப்போம் என்று முழங்குவது வேடிக்கையாகத்தான் பார்க்கப்படும்.

    வருகிற பொங்கல் திருநாளை அதற்கான சபதமேற்பு நாளாக கடைப்பிடிப்போம். பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைப்போம். எந்த பக்கம் திரும்பினாலும் சேலை கட்டிய எம் இன பெண்கள்-பாவாடை - தாவணியில் என் சகோதரிகள் - வேட்டி, சட்டையில் இளசுகள் முதல், பெரியவர்கள் வரை தெரிய வேண்டும். மாற்று உடையில் ஒருவரை பார்த்தால் அவர் வேற்று மாநிலத்தவராக இருக்க வேண்டும்.

    வருகிற தமிழர் திருநாளையாவது தமிழரின் அடையாளத்தோடு கொண்டாடுவோம். அதுவே தமிழர்களையும், தமிழர்களின் பண்பாட்டையும் வளர்க்கும். வாழ வைக்கும்.

    கறிவேப்பிலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கறிவேப்பிலையை வைத்து எளிய முறையில் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    கறிவேப்பிலை - 3 கைப்பிடி அளவு
    மிளகாய் வத்தல் - 5
    தேங்காய் துருவல் - 5 மேஜைக்கரண்டி
    புளி - பாக்கு அளவு
    பூண்டு பற்கள் - 6
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - சிறிதளவு.



    செய்முறை :

    அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தலை போட்டு வறுத்து கொள்ளவும்.

    பிறகு அதோடு தேங்காய் துருவல், புளி, பூண்டு சேர்த்து வறுத்து தனியே வைக்கவும்.

    அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கறிவேப்பிலையை போட்டு வறுத்து கொள்ளவும்.

    வறுத்த கறிவேப்பிலையை தேங்காய் துருவலுடன் சேர்த்து சிறிது நேரம் ஆற விடவும்.

    ஆறிய பிறகு அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்து கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும்.

    சுவையான கறிவேப்பிலை சட்னி ரெடி.

    இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உலகில் எண்ணிலடங்கா ஆசானங்கள் உள்ளன இருந்தாலும் சில குறிப்பிட்ட ஆசனங்களை செய்தாலே நம் வாழ்நாள் முழுவதும் நோய்நொடியின்றி புத்துணர்ச்சியோடு இருக்கலாம்.
    இன்றைய கணினி உலகில் அனிவரும் உடற்பயிற்சி என்பதே மறந்து விட்டானாம் “பல் போன பிறகு தான் முறுக்கு சாப்பிட ஆசை வரும்” என்பது போல் நமக்கு நோய் என்று வந்து மருத்துவரிடம் செல்லும் போது தான் நமக்கு புரியும்.

    மருத்துவரிடம் சென்று அவர் தரும் வேதிப்பொருளை (மாத்திரைகளை) வாங்கி சாப்பிடுவதை விட இந்த யோகாசனகளை செய்தால் நம் உடலோடு சேர்த்து நம் உள்ளமும் புத்துணர்ச்சியோடு காணப்படும்.

    ஒவ்வொரு நோய்க்கும் தீர்வாக ஒவ்வொரு ஆசானங்கள் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.

    ஆசானங்கள் செய்வதால் வெளி உறுப்புகள் மட்டுமின்றி உடலின் உள்ள அனைத்து நாடி நரம்புகளுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும் சக்தி படைத்தது இந்த யோகாசனங்கள்.

    நாம் அன்றாட வாய்வில் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் ஓவ்வொரு ஆசான்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    ஒவ்வொரு நாளும் பல் தேப்பது குளிப்பது சாப்பிடுவது எப்ப எந்தளவுக்கு முக்கியமோ உடற்பயிற்சி செய்வதும் அந்த அளவுக்கு முக்கியம்.

    உலகில் எண்ணிலடங்கா ஆசானங்கள் உள்ளன இருந்தாலும் சில குறிப்பிட்ட ஆசனங்களை செய்தாலே நம் வாழ்நாள் முழுவதும் நோய்நொடியின்றி புத்துணர்ச்சியோடு இருக்கலாம்.

    பல்வேறுபட்ட விதங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்வது உங்களது வருமானத்தை அதிவேகமாக அதிகரிக்கும் ஒரு நிச்சயமான வழி ஆகும். என்ன புத்திசாலித்தனமான முதலீடு, அதன் அம்சங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்...
    நம் அனைவருக்கும் பொருளாதாரம் சார்ந்த கனவுகள், இலக்குகள் உண்டு. அது, வீடு வாங்குவதாக இருக்கலாம், நிலம் வாங்குவதாக இருக்கலாம், கார் வாங்குவதாக இருக்கலாம், வங்கி இருப்பு குறிப்பிட்ட தொகையை எட்ட வேண்டும் என்பதாக இருக்கலாம்.

    திட்டமிட்டுச் செயல்பட்டால் இத்தகைய கனவுகளை ஒருநாள் நனவாக்க முடியும். உதாரணமாக, முதலீட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    பல்வேறுபட்ட விதங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்வது உங்களது வருமானத்தை அதிவேகமாக அதிகரிக்கும் ஒரு நிச்சயமான வழி ஆகும். ஆனால் உங்கள் பணத்தை அதிவேகமாக வளர்ப்பதற்கு புத்திசாலித்தனமான முதலீடு முக்கியம்.

    அது என்ன புத்திசாலித்தனமான முதலீடு, அதன் அம்சங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்...

    * முதலீடு செய்வதற்கு முன்னர், உங்கள் முதலீட்டில் இருந்து நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றித் தெளிவாக இருக்க வேண்டும்.

    * ஒருவர் முதலீட்டு செயல்முறையைத் தொடங்குவதற்கு முன்பே நிகரச் சொத்துகள் மற்றும் கடன் களைக் கணக்கிடுவது முக்கியம். தற்போதைய முதலீடுகளைப் பற்றி நீங்கள் அறிந்திருந்தால், உங்கள் பணத்தை அறிவுப்பூர்வமாக முதலீடு செய்வது எளிதாக இருக்கும்.

    * முதலீடு குறித்த முறையான ஆராய்ச்சி முக்கியம். நீங்கள் முதலீடு செய்யும் துறையைப் பற்றிய தெளிவான அறிவு பெறும்வரை முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

    * முதலீட்டில் சோதனை முயற்சி வேண்டாம். எளிமையாகச் சொல்லவேண்டும் என்றால், பங்குச் சந்தை எங்கு செல்லும் என்பதை ஊகிக்க முயற்சிக்க வேண்டாம். இன்றே முதலீடு செய்து உங்கள் முதலீட்டுத் தொகையை விரிவாக்கவும்.

    * நீங்கள் முதலீடு செய்வதற்குப் புதியவராக இருந்தால், நீங்கள் அறிந்திருக்கும் துறைகளில் முதலீடு செய்வது எப்போதும் பாதுகாப்பானது. இது நல்ல முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவும்.

    * பல்வேறு பிரிவுகளில் முதலீடு செய்யுங்கள். இதனால் ஒன்றில் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும், மற்றொன்றில் இருந்து கிடைக்கும் லாபத்தால் அந்த நஷ்டம் ஈடு செய்யப்படும்.

    * உங்கள் முதலீடுகளின் செயல் திறனைச் சரிபார்க்க வழக்கமான இடைவெளியில் எப்போதும் உங்கள் ‘போர்ட்போலியோ’ செயல்திறனைக் கண்காணிக்கவும். மேலும், திருமணம் போன்ற சிறப்புச் சந்தர்ப்பங்களில் ஒரு பகுப்பாய்வு தேவைப்படலாம்.

    * சில முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டில் பணவீக்கத்தின் தாக்கத்தைப் புரிந்து கொள்கிறார்கள். உங்கள் வருமானம் மற்றும் முதலீடுகளின் உண்மையான மதிப்பை அறிய பணவீக்கத்தின் காரணியை அறிந்துகொள்ளுங்கள்.

    * ஒரு சில முதலீடுகள் உடனடியாகப் பணம் எடுக்கக்கூடியதாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். எந்த ஓர் அவசர சூழ்நிலையிலும் அத்தகைய முதலீடு உங்களுக்குக் கைகொடுக்கும். உங்கள் எல்லா நிதியையும் நீண்டகால முதலீடாக வைத்துக்கொள்ள வேண்டாம்.

    * முதலீடு பற்றிய முடிவுகளை எடுக்கும்போது உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். முதலீடு தொடர்பான இத்தகைய முடிவுகளை யதார்த்தமாகவும், அறிவார்ந்த விதத்திலும் எடுங்கள். எப்போதும் உங்கள் எதிர்பார்ப்புகள் யதார்த்தமாக இருக்க வேண்டும். ஒருபோதும் வானத்தில் கோட்டை கட்ட நினைக்க வேண்டாம். யதார்த்தமில்லாத எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்ட நிதி இலக்குகளை எட்ட முடியாது என்பதை உணருங்கள்.
    ஆலமரமானது காற்றில் நஞ்சுப் பொருள் கலந்திருந்தாலோ, அல்லது சுற்றுப்புறச் சூழல் மாசுபட்டிருந்தாலோ, கழிவுநீர்களில் நஞ்சு காற்றில் கலந்திருந்தாலோ நஞ்சுத்தன்மையின் நஞ்சு நீக்கி உயிர் காற்றை வெளியாக்க வல்லது.
    ஆலமரமானது காற்றில் நஞ்சுப் பொருள் கலந்திருந்தாலோ, அல்லது சுற்றுப்புறச் சூழல் மாசுபட்டிருந்தாலோ, கழிவுநீர்களில் நஞ்சு காற்றில் கலந்திருந்தாலோ நஞ்சுத்தன்மையின் நஞ்சு நீக்கி உயிர் காற்றை வெளியாக்க வல்லது. இந்த ஆலமரமானது சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை படர்ந்து இருக்கும். இதன் விழுதுகள் தாய் மரமானது சில காலத்தில் அழிந்து விட்டாலும் கூட விழுதுகள் வேரூன்றி படர்ந்து வளரும். ஒரு மரம் சாலையின் அருகில் வைத்து விட்டால் படர்ந்து வளர்வது இம்மரம் என்பதாலும் இந்த ஆலமரத்தில் நஞ்சு நீக்கும் தன்மை அதிகமாக உள்ளதால் இந்த மரம் சாலை ஓரங்களிலும், கிராம எல்லைகளிலும், நகர எல்லைகளிலும் வைக்கப்படுகிறது.

    இம்மரத்தின் ஆயுள் 5ஆயிரம் ஆண்டுகள் ஆகும். இம்மரம் நிழலுக்காக மட்டும் என்பதில்லை. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வாகனங்கள் இல்லாதபோது சாலை ஓரங்களில் ஆல மரக்கன்றுகளை ஏன் வளர்த்து வந்தார்கள் என்று கேள்வி எழலாம். அந்த காலத்தில் சாலையில் செல்லக் கூடிய ஆடு, மாடு, குதிரை, பன்றி, யானை, கழுதை ஆகியவற்றின் சாணம், கோமியம் சாலையில் கிடக்கும். சாணி சூரியசக்தியை இழுத்து கிருமிகளை அழிக்கும். அப்போது அந்த நஞ்சுக்காற்றை உறிஞ்சி உயிர்காற்றை கொடுப்பது ஆலமரம்.

    சுமைதாங்கி கல்லும், அதன் அருகில் படுக்கை கல்லும், தண்ணீர் தொட்டியும், நடைபாதை கிணறும் ஆல மரத்தின் அடியிலேயே இருக்கும். நடைபாதை கிணறு என்பது கீழே இருக்கும் தண்ணீர் வரை நடந்தே சென்று ஆடு, மாடு, குதிரை, யானை ஆகியவை கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் குடித்துவிட்டு வரும் அளவிற்கு கட்டப்பட்டுள்ள கிணறு நடைபாதை கிணறு என்று பெயர். இது நாளடைவில் வழக்கு பெயராக நடப்பாகிணறு என்று பெயர் மருவியது. இந்த கிணற்றில் போர் முனைக்குச் செல்லும் காலாட்படை, குதிரைப்படை ஆகியவை தண்ணீர் குடித்துவிட்டு ஓய்வு எடுக்கும் இடம் இந்த ஆலமரத்தின் கீழ் ஆகும்.

    சுமைதாங்கி கல்லை அதன் அருகில் படுக்க போட்டிருப்பது ஆலமரத்தின் அடியில் மட்டுமே. ஏனென்றால் வழிப்போக்கர்கள் சுமைதாங்கி கல் மீது பாரத்தை வைத்து விட்டு சிறிது நேரம் அங்கே அமரும்போது உடலில் உள்ள வலியை போக்க உயிர் காற்றை தரும். இதனால் ஏற்கனவே நடந்து வந்த தூரத்தில் இருமடங்கு தூரத்தை மீண்டும் கடக்க உடல் வலிமையையும் ஆரோக்கியத்தையும் தருகிறது.

    அவர்கள் கொண்டுவரும் சுமை காயாகவோ, ஈர விறகாகவோ இருந்தால் அதில் உள்ள நச்சுக்காற்றை பிரித்து உயிர்காற்றை தருவதால் மீண்டும் சுமையை எடுத்துச்செல்லும்போது அதன் பளு குறைவாக இருக்கும். சுமைதாங்கி கல்லும், படுக்கைக் கல்லும் கருங்கல்லாகத்தான் வைப்பார்கள், காரணம் ஆலமரம் வெளியிடும் உயிர் காற்றை இழுத்து வைக்கும் குணம் கருங்கல்லுக்கு மட்டுமே உண்டு. இதைத்தான் “காலைக்கல்லும் மாலைப்புல்லும் ஆளை வெல்லும்” என்று சொல்லப்பட்டது இதுவே ஆகும்.

    மாடு கன்று போடும் போது வெளியாகும் பனிக்குடம், நச்சுக்கொடி, பிள்ளைக்கொடி ஆகியவை கன்று போட்டு மூன்று மணி நேரம் கழித்து வெளியாகும் அவைகளை கோணிப்பையில் (சாக்குப்பை) போட்டு ஆலமரத்தில் கட்டியிருப்பதை நாம் நாடு முழுவதிலும் பார்த்து இருக்கிறோம். இதை உடுப்பு என்பார்கள். எத்தனையோ மரங்கள் இருக்கும் போது, ஆலமரத்தில் மட்டும் கட்டுவதற்கு காரணம் காற்றில் நிலவும் நச்சுக் காற்றையும் அதன் துர்வாடையும் வெளியே போகாமல் அந்த நச்சுக்காற்றை சுத்தம் செய்வது ஆலமரமே என்பதால் இம்மரத்தில் கட்டப்படுகிறது. மேலும் இந்த நச்சு காற்றினால் மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கிறது. இதையே மற்ற மரங்களில் கட்டினால் அன்றே நாற்றம் வீசி நச்சுக் காற்று பரவி நோயை உருவாக்கும். அது மனிதன் முதல் விலங்குகள் வரை பரவும்.

    ஆலமரத்தில் கட்டும் உடுப்பு எக்காலத்திலும் நாற்றம் வீசுவது இல்லை. இதை மண்ணில் புதைத்தால் அந்த மண் கெட்டுப்போவதுடன் நோய்கிருமிகளை உருவாக்கி உயிர்காற்றை அழித்து நச்சுக்குரிய நோயை(ஒவ்வாமை என்கிற அலர்ஜி) உருவாக்கும். இந்த ஆலமரத்தின் பொது குணம் துவர்ப்பும், கார்ப்பும் அதிகம் பொருந்திய மரம். துவர்ப்பு சத்து மலம், நீர், கரு, கர்ப்பப்பை மாசு ஆகியவற்றை வெளியேற்றும் தன்மை உடையது.

    கார்ப்பு சத்து சுவாசப்பை (நுரையீரல்) ரத்தத்தில் உள்ள நச்சுப்பொருளை நீக்கி ரத்தத்திற்கு போஷாக்கை கொடுக்கும். இதன் விதை ஆண்களுக்கான கல்ப லேகியங்கள் அனைத்திலும் ஆலம் விதை இடம்பெறும். ஆலமரத்தில் நீண்டு தொங்கும் விழுதுகள் அதன் நுனிப்பகுதியில் ஒரு அடி அளவு வெட்டி எடுத்து வெயிலில் காயவைத்து இடித்து பொடி செய்து இரவில் நூறு மில்லி தண்ணீரில் அரை தேக்கரண்டி தூளை கலக்கி வைத்துவிட்டு காலையில் வடிகட்டி வெறும் வயிற்றில் ஒரு அவுன்ஸ் குடிக்கவேண்டும்.

    இப்படி 21 நாள் அல்லது 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் கர்ப்பப் பையில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் சமப்பட்டு உடல் ஆரோக்கியத்தை உண்டு செய்யும். இது உடல் பெருக்கும் தன்மையும் உள்ளது. வயிற்றில் வரும் எட்டு விதமான புண்களுக்கு தயாரிக்கப்படும் மருந்துகளில் இதனுடைய பட்டை பயன்படுகிறது. ஆலம்பாலை வெள்ளை துணியில் நனைத்து காயவைத்து கொளுத்தி சாம்பலாக்கி அந்த சாம்பலை பலநாட்கள் ஆறாத ரணங்களுக்கு தேங்காய் எண்ணெயில் அல்லது வெண்ணெயில் குழைத்து போட்டால் ஆறிவிடும்.

    மரத்தை கல்லால் குத்தி அதில் வரும் பாலை வாய்ப்புண், அச்சரம் போன்றவற்றிற்கு தடவினால் குணமாகும். ஆலம் இலை, கொழுந்து ஆகியவை லேகியங்களுக்கு பயன்படும். ஆலமரத்தின் விழுதில் பல்துலக்க பல் கெட்டிப்படும். இதைத்தான் “ஆலும் வேலும் பல்லுக்குறுதி” என்பார்கள். பல் மட்டுமல்ல உடலிலுள்ள அனைத்து அவயங்களுக்கும் இந்த ஆலமரம் உதவுகிறது.

    பாஸ்கரன், சித்த மருத்துவர், வேலூர்.
    அவல் வைத்து கிச்சடி, உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவலில் சூப்பரான ஸ்நாக்ஸ் மிக்சர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கெட்டியான அவல் - 500 கிராம்,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    இரண்டாக உடைத்த முந்திரி - 2 டீஸ்பூன்,
    காய்ந்த திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிது, உப்பு,
    எண்ணெய் - தேவைக்கு,
    வறுத்த வேர்க்கடலை - 50 கிராம்



    செய்முறை :

    கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் மிதமான சூட்டில் வைத்து சுத்தம் செய்த அவலை பொரித்தெடுத்து தனியே வைக்கவும்.

    அதே போல் கறிவேப்பிலை, முந்திரி, காய்ந்த திராட்சையை தனித்தனியே எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து தனியே வைக்கவும்.

    பொரித்த அவலுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு நன்கு கலந்து, அதனுடன் தோல் நீக்கி வறுத்த வேர்க்கடலையைச் சேர்க்கவும்.

    பொரித்த முந்திரி, காய்ந்த திராட்சை, கறிவேப்பிலை அனைத்தையும் நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் அவல் மிக்சர் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×