search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான ஸ்நாக்ஸ் இட்லி போண்டா
    X

    சூப்பரான ஸ்நாக்ஸ் இட்லி போண்டா

    காலையில் செய்த இட்லி மீந்து விட்டால் அதை வைத்து சுவையான போண்டா செய்யலாம். இன்று இட்லியை வைத்து போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    இட்லி - 5
    கடலைமாவு - 4 மேஜைக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 3
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - சிறிதளவு
    தண்ணீர் - 2 மேஜைக்கரண்டி
    பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    இட்லிகளை உதிர்த்து கொள்ளவும்.

    வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் உதிர்த்து வைத்துள்ள இட்லி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கடலைமாவு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அதனுடன் இரண்டு மேஜைக்கரண்டி தண்ணீரும் சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு செய்து வைத்த உருண்டைகளை போடவும்.

    ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இருபுறமும் நன்கு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சுவையான இட்லி போண்டா ரெடி.

    குறிப்பு  :

    மீந்து போன இட்லியிலும் இந்த முறையில் போண்டா செய்யலாம். ஐந்து இட்லிக்கு 20 போண்டாக்கள் வரை வரும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×