என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    ஏ.சியை ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் வெப்பநிலையை ஒரே அளவில்தான் பராமரிக்க வேண்டும். ஏ.சியை அதன் இயல்பு வெப்பநிலையில் தேர்வு செய்தால் 24 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்கவும் முடியும்.
    கோடை காலத்தில் நிறைய வீடுகளில் ஏ.சி மற்றும் ஏர் கூலர்கள் ஓய்வின்றி இயங்கிக்கொண்டிருக்கும். ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழலும், குளிர்சாதன பெட்டிகளின் பயன்பாடு அதிகரிக்க காரணமாக இருக்கிறது. அறைக்குள் நிலவும் வெப்பத்தை விரட்டுவதற்காக நிறைய பேர் குளிர்சாதன பெட்டிகளில் இருந்து அதிக குளிர்ச்சி தன்மையை வரவழைக்கவும் செய்கிறார்கள்.

    அதனால் அறையும், உடலும் குளிர்ச்சி பெற்றாலும் கூடவே ஆபத்தையும் வரவழைத்து விடும். கொரோனா வைரசுக்கு குளிர்ச்சி சூழல் சாதகமான அம்சமாக கருதப்படுகிறது. அதனால் குளிர்சாதன பெட்டிகளின் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுனர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள். குளிர்சாதனங்களின் வெப்பநிலையை இயல்பு நிலையில் பராமரிப்பது மின் கட்டண செலவையும் குறைக்க உதவும். உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கும் வழிவகை செய்யும். குளிர்சாதனங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏ.சி. உற்பத்தியாளர்கள் குளிர்சாதனங்களின் இயல்பு வெப்பநிலையை 24 டிகிரி செல்சியல் அளவில் வைத்திருக்க பரிந்துரை செய்திருக்கிறார்கள். இதற்கு முன்பு இயல்பு வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருந்தது.

    20 டிகிரி வெப்பநிலையில் இருந்து 24 டிகிரி வெப்பநிலையை உயர்த்தும்போது ஒவ்வொரு டிகிரிக்கும் சுமார் 6 சதவீதம் வரை மின்சாரம் சேமிக்கப்படும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    ஏ.சியை ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் வெப்பநிலையை ஒரே அளவில்தான் பராமரிக்க வேண்டும். ஏ.சியை அதன் இயல்பு வெப்பநிலையில் தேர்வு செய்தால் 24 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்கவும் முடியும்.

    டெல்லி, சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் சராசரி வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதனால் ஏ.சி.யை 10 டிகிரி குறைவாக வைப்பது சிறப்பானது. ஏனெனில் உடலின் வெப்பநிலை சராசரியாக 36-37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதற்கும் குறைவான வெப்பநிலை நிலவும் அறைகளில் இயற்கையாகவே குளிர்ச்சி தன்மை நிலவும். ஏ.சியை இயல்பு வெப்பநிலையில் இருந்து குளிர்ச்சிக்காக குறைக்கும் ஒவ்வொரு டிகிரிக்கும் 6 சதவீதம் அதிக மின்சாரம் பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆதலால் ஏ.சியை 18 டிகிரி வெப்பநிலைக்கு குறைப்பதற்கு பதிலாக 23-24 டிகிரி செல்சியஸ் ஆக மாற்றிவிடுவது பலன் தரும். ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் நாளடைவில் இந்த வெப்பநிலை கூட நன்றாக இருப்பதை மனம் ஏற்றுக்கொண்டுவிடும்.

    குளிர்சானங்களை உபயோகிக்கும்போதெல்லாம் அறையின் கதவுகள், ஜன்னல்கள் இறுக்கமாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் குளிர்ந்த காற்று அறையை விட்டு வெளியேறாது. ஜன்னல்களில் திரைச்சீலைகளை பயன்படுத்த வேண்டும். அது சூரிய வெப்பம் அறைக்குள் நுழைவதை தடுத்துநிறுத்திவிடும்.

    பிரிட்ஜ், டி.வி. மற்றும் கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்கள் அதிக வெப்பத்தை உமிழும் தன்மை கொண்டவை. அதனால் குளிர்சாதன பெட்டி, ஏர்கூலரை பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றை அணைத்துவிடுவது நல்லது. அறைக்குள் குளிர்ச்சி நிலவிய பிறகு அவற்றை மீண்டும் ஆன் செய்துவிடலாம்.

    உடல் குளிர்ச்சியில் நடுங்கும் வரை ஏ.சி.யை பயன்படுத்தக்கூடாது. இரண்டு மணி நேரம் உபயோகித்துவிட்டு பிறகு அணைத்துவிடலாம். பின்னர் ஒரு மணி நேர இடைவெளிக்கு பிறகு மீண்டும் உபயோகிக்கலாம். அது அறைக்குள் போதுமான வெப்பநிலை நிலவுவதற்கு வழிவகை செய்யும். மின்சாரத்தையும் சேமிக்க முடியும்.

    ஏ.சி.யை ஆன் செய்ததும் நிறைய பேர் மின் விசிறியை அணைத்துவிடுவார்கள். மின் விசிறி யையும் உபயோகிக்கும்போது குளிர்ந்த காற்று அறையின் மூலைமுடுக்கெல்லாம் சட்டென்று பரவிவிடும். அறையும் விரைவாகவே காற்றோட்டமான சூழலுக்கு மாறிவிடும். குளிர்ச்சி நிலவ தொடங்கியதும் மின்விசிறியை அணைத்துவிடலாம். அறையில் உள்ள சூடான காற்றும் வெளியேறிவிடும்.

    ஏ.சி.யின் துவாரங்கள், உள்பகுதிகளுக்குள் படர்ந்திருக்கும் அழுக்குகளை குறிப்பிட்ட இடைவெளியில் அப்புறப்படுத்த வேண்டும். அது குளிர்ந்த காற்று வெளிப்படுவதற்கும் இடையூறாக அமையும். அவற்றை அகற்றுவதன் மூலம் ஏ.சி.யின் பயன்பாடு 5 முதல் 15 சதவீதம் குறையும்.
    புரதச்சத்து கொண்ட உணவு வகைகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வதன் மூலம் உடலுக்கான ஊட்டச்சத்து தேவையில் பெரும்பங்கை பூர்த்தி செய்யலாம்.
    குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் உட்கொள்ளும் வகையில் காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டிக்கு இந்த உணவு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    முளைவிட்ட கருப்பு கொண்டைக்கடலை - 1 கப்
    முளைவிட்ட பச்சைப்பயிறு - அரை கப்
    துருவிய பன்னீர் - அரை கப்
    வெங்காயம் - 1
    தக்காளி - 2
    வெள்ளரி - 1
    ப.மிளகாய் - 2
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப
    சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
    கொத்தமல்லி -  சிறிதளவு

    செய்முறை


    பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    நறுக்கி வெங்காயம், தக்காளி, வெள்ளரி, ப.மிளகாய் அனைத்தையும் ஒரு பெரிய கிண்ணத்தில் போட்டு கலக்கவும்.

    அதில் முளைவிட்ட கொண்டைக்கடலை, பச்சைப்பயிறு சேர்க்கவும்

    அதன் பின்னர் எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், உப்பு, சாட் மசாலாத்தூள், பன்னீர் சேர்த்து கலக்கவும்.

    இறுதியாக அதன் மேல் கொத்தமல்லி தழையைத்தூவி பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வீட்டில் தனிமையில் இருக்கும் குழந்தைகள் மனதில் பக்கத்தில் இருக்கும் காலி அறையில் யாரோ இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அதை நினைத்து தேவையில்லாமல் பயம் கொள்வார்கள்.
    ‘குழந்தைகள் என்றாலே துறுதுறுவென வலம் வருவார்கள். எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையிலேயே இருப்பார்கள்’ என்பது பெரும்பாலானவர்களின் எண்ண ஓட்டமாக அமைந்திருக்கிறது. பெற்றோர்களும் அத்தகைய மனநிலையிலேயே இருக்கிறார்கள். ஆனால் குழந்தைகள் மனதிலும் குழப்பமான சிந்தனைகள் ஓடிக்கொண்டுதான் இருக்கும். அதைத் தொடர்ந்து ஏற்படும் கவலைகள் அவர்களை சஞ்சலத்தில் ஆழ்த்திவிடும். அதனை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

    தேவையற்ற பயம் மனதை ஆட்கொள்ளும்போது அவர்கள் பலவீனமடைந்து விடுகிறார்கள். அவர்கள் மனதில் எப்படிப்பட்ட பயம் ஆட்கொள்ளும் என்பதை தெரிந்துகொண்டு அதை போக்குவதற்கு பெற்றோர் முயற்சிக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் மனதில் நேர்மறையான எண்ணங்கள் தோன்றும். அவர்களுடைய வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும். இல்லாவிட்டால் பயமும், குழப்பமும் அவர் களின் மனநிலையை சிதைத்துவிடும். எதற்கெடுத்தாலும் பயப்படும் மனநிலைக்கு மாறிப்போய்விடுவார்கள். அப்போது தனிமையை விரும்புவார்கள். தனிமை உணர்வும் அவர்களை வாட்டிவிடும்.

    குழந்தைகள் அம்மா-அப்பாவிடம் மட்டும்தான் பாதுகாப்பான சூழலை உணருவார்கள். புது இடம், புது மனிதர்களை சந்திக்கும்போது அவர்களிடத்தில் ஒருவித தடுமாற்றம் ஏற்படும். அறிமுகமில்லாத இடத்தில் விட்டுச் செல்வதும் அவர்களை தனிமையில் துவள வைத்துவிடும். ‘அம்மா - அப்பா இன்னும் வரவில்லையே. வரும் வழியில் என்ன ஆனதோ என்று தெரியவில்லையே’ என்றெல்லாம் சிந்திக்க தொடங்கிவிடுவார்கள். வெளியில் சொல்ல முடியாத ஒருவித கலக்கம் அவர்கள் மனதில் ஏற்படும். இத்தகைய திகில் உணர்வு குழந்தை களுக்கு அஜீரண கோளாறுகள் ஏற்படவும் வழிவகுத்துவிடும். சுவாசப் பிரச்சினையும் தோன்றும். இத்தகைய திகில் உணர்வு குழந்தைகள் வீட்டுக்கு வீடு இருக்கிறார்கள்.

    வீட்டில் தனிமையில் இருக்கும் குழந்தைகள் மனதில் பக்கத்தில் இருக்கும் காலி அறையில் யாரோ இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அதை நினைத்து தேவையில்லாமல் பயம் கொள்வார்கள். அவ்வப்போது காலி அறையை சுற்றிக்காட்டி, ‘அங்கு யாரும் இல்லை’ என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்தான் நாளடைவில் பயம் நீங்கும்.

    புதிய இடத்திற்கு குழந்தைகளை அழைத்துச்செல்லும் போது அந்த இடத்தைப் பற்றி விளக்கமாக கூற வேண்டும். அங்கு இருக்கும் அறிமுகமற்றவர்களை பற்றியும் தெரிந்தவர்களை பற்றியும் எடுத்துக்கூற வேண்டும். அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் புரியவைக்க வேண்டும். இல்லையென்றால் தங்களுடைய கற்பனை சக்திக்கேற்ப குழப்பமாக புரிந்து கொள்வார்கள். புதிய மனிதர்களிடம் பேசவும், நெருங்கவும் அஞ்சுவார்கள். இந்த பயம் அவர்களுடைய ஜீரண சக்தியை பாதிக்கும். அதனால் உடல் நலனும் பாதிப்புக்குள்ளாகும். மன நலமும் பாதிக்கப்படும்.

    நாம் பேசுவது நமக்கு நியாயமான விஷயமாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளால் தெளிவாக புரிந்துகொள்ள முடியாது. வீட்டில் எப்போதும் பிரச்சினை, கடுமையான வாதம், விவாதம் நடந்து கொண்டிருந்தால் அது குழந்தைகளின் மனநிலையை பாதிக்கும். விவாதம் முடிந்த பிறகும் அந்த விஷயங்கள் பற்றிய சிந்தனையே குழந்தைகள் மனதில் பல மணி நேரமாக நீடித்துக்கொண்டிருக்கும். அதைத் தொடர்ந்து பயங்கர காட்சிகளும் அவர்களது மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கும். அது தொடர்ந்து நீடிக்கும்போது ஒருவித குழப்பமான மனநிலைக்கு தள்ளப்பட்டுவிடுவார்கள்.

    பள்ளிக்கூடத்தில் உடன் படிக்கும் மாணவர்கள் சிலர் முரட்டு தனமாக நடந்துகொள்ளும்போது மனதில் ஒருவித பாதுகாப்பின்மை தோன்றும். அது ஒருவித பயத்தை ஏற்படுத்தி குழப்பத்தில் ஆழ்த்திவிடும். இந்த நிலை நீடித்தால் படிப்பில் கவனம் குறையும். மந்தநிலை ஏற்படும். பள்ளிச் செல்ல விருப்பம் குறையும். அதனால் பள்ளியில் நடக்கும் விஷயங்கள் பற்றி குழந்தை களிடம் அடிக்கடி கேட்டு விவாதிக்க வேண்டும்.

    அதிகப்படியான கூட்டத்தைப் பார்க்கும்போதும் குழந்தை களுக்கு ஒருவித பயம் ஏற்படும். அந்த கூட்டத்திற்கு மத்தியில், ‘நாம் காணாமல் போய்விடுவோமோ’ என்று கவலைகொள்வார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தரும் விதத்தில் பெற்றோர் பேச வேண்டும். வீட்டு முகவரி, தொலைபேசி எண், அம்மா, அப்பா பெயர் போன்ற முக்கியமானவற்றை அடிக்கடி சொல்ல வைத்து அவர்கள் மனதில் பதிக்க வேண்டும். ‘ஒருவேளை தொலைந்து போய்விட்டால் பயப்படாதே. அதே இடத்தில் நின்று விடு. எங்களைத் தேடி வராதே. நாங்கள் திரும்ப வந்து அழைத்துச் செல்வோம். வெகுநேரமாகிவிட்டால் அங்கு நிற்பவர்களிடம் எங்களது பெயர், செல்போன் எண்ணை கொடுத்து பேசு’ என்று கூறி தைரியப்படுத்த வேண்டும். திரளான கூட்டம், புதுப்புது முகங்கள், குழந்தைகளை பலவாறு சிந்திக்க வைத்து அவர்களை குழப்பிவிடும் என்பதை பெற்றோர் எப்போதும் கவனத்தில் வைத்திருங்கள்.

    சில சமயங்களில் குழந்தைகளால், ‘தாங்கள் இதற்காகத்தான் பயப்படுகிறோம்’ என்பதை விளக்கிச் சொல்ல முடியாமல் போகலாம். அந்த சமயத்தில் அவர்களிடம் பக்குவமாக பேசி, கேள்விகள் கேட்டு, அதற்கான விடையை சொல்ல வைத்து பயத்தை போக்க வேண்டும். வேண்டாத கனவுகள் கூட அவர்களை மிரள வைக்கும். ‘உண்மையில் அப்படியெல்லாம் நிகழ்ந்து விடுமோ’ என்று பயந்துபோவார்கள். சினிமா, தொலைக்காட்சி சம்பவங்களை உண்மை என்றே நினைத்து கலவரமடைவார்கள். அந்த வயதில் எது உண்மை? எது பொய்? என்பதை பிரித்துப் பார்க்கும் பக்குவம் இருக்காது. குறிப்பாக எந்த விஷயம் அவர்களை பயமுறுத்துகிறது என்பதை அவர்களிடம் பேசி தெரிந்துகொள்ள வேண்டும். சில சமயம் சின்ன சின்ன விஷயங்கள் கூட அவர்களை பயமுறுத்தும். பெற்றோர்தான் பக்குவமாக புரியவைத்து பயத்தை போக்கவேண்டும்.

    குழந்தைகளுக்கு சொல்லப்படும் கதைகளில் பெரும்பாலும் உண்மை இருப்பதில்லை. அந்த கதைகளுக்கு சுவாரசியம் சேர்ப்பதற்காக சில பொய்களை சேர்க்க வேண்டி இருக்கும். அதுவே அவர்களை வேறு மாதிரி சிந்திக்க வைத்துவிடும். அதில் வரும் கதாபாத்திரங்களை நிஜம் என்றே நம்பி விடுவார்கள். அவ்வப்போது கட்டுக்கதை, நிஜவாழ்க்கை இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களை குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.கட்டுக்கதைகள் குழந்தைகளை ஏமாற்றுவதற்கு அல்ல. மிகப்பெரிய உண்மைகளை எளிமையாக அவர்களுக்கு புரியவைப்பதற்கு என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஆனால் குழந்தைகளோ, ‘நரி பேசும், காக்கா பாடும்’ என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டிருப்பார்கள். அந்த இடத்தில் நிஜத்தைப் புரியவைக்க வேண்டும்.

    குழப்பமான மனநிலை குழந்தைகளை பலவீனப்படுத்திவிடும். அவர்களுடைய செயல்பாடுகளும் குறைந்து போகும். சோர்வான மனநிலையில், முகவாட்டத்துடன் காணப்படுவார்கள். அது அவர்களுடைய உடல் நலனையும் பாதிக்கும். அவ்வப்போது அவர்களிடம் பேசி தேவையற்ற குழப்பங்களை போக்க வேண்டும். பாசமாக வளர்க்கப்பட்டு வரும் குழந்தைகளுக்கு புதிதாக சகோதரனோ, சகோதரியோ பிறக்கும்போது அவர்கள் மீதுதான் பெற்றோரின் கவனம் அதிகம் பதியும். அப்போது ‘நம்மீது முன்பு போல் பாசம் காண்பிக்காமல் இருக்கிறார்கள்’ என்ற எண்ணம் ஏற்படும். ‘இனி நாம் இவர்களுக்கு தேவை இல்லையோ’ என்று கூட சில குழந்தைகள் சிந்திக்கும். அதற்கு இடம் கொடுக்காதவாறு அவர்களின் சந்தேகங்களையும், பயங்களையும் போக்க வேண்டும். அவர்களை மனம் விட்டு பேச வைக்க வேண்டும். அப்போது அவர்கள் மனதில் இருக்கும் பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். குழந்தைகள் மனதில் ஒருபோதும் தேவையற்ற பயமோ, குழப்பங்களோ இருக்கக்கூடாது.
    நமது நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள்தான் இருந்தது. சில மாநிலங்களில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், பேரணி போன்ற நிகழ்வுகள்தான் கொரோனா பரவல் இன்று உச்சத்தை தொட காரணமாக அமைந்து விட்டது.
    2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுமத்ரா தீவில் உருவான ஆழிப்பேரலை என்ற சுனாமி உலக நாடுகள் பலவற்றின் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை வாரிச்சுருட்டி சென்றது. இதைப்போல் இனியொரு பேரிடர் ஏற்படப்போவதில்லை என்று உலகம் முழுவதும் மக்கள் எண்ணி இருந்தனர். அவர்களது எண்ணத்தில் மண்ணை அள்ளிப்போடும் வகையில் கொரோனா என்ற பெயரில் மீண்டும் ஒரு பேரிடர் உருவாகி உலக நாடுகளை கதிகலங்க செய்துள்ளது.

    சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு உருவானதாக கூறப்படும் இந்த நோய் தொற்று உலகம் முழுவதும் வலம் வந்து மனித உயிர்களை கொத்து கொத்தாக காவு வாங்கி வருகிறது. இந்த வைரசின் முதல் அலை கடந்த ஆண்டு உலக நாடுகள் முழுவதும் வீசியது. இதில் அதிகம் பாதிப்புக்குள்ளான நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 3-வது இடத்திலும் இருந்தது. நாளுக்கு நாள் நமது நாட்டில் பரவல் வேகம் அதிகரித்ததால் 3-வது இடத்தில் இருந்த நாம் இன்று இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளோம்.

    நமது நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள்தான் இருந்தது. சில மாநிலங்களில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், பேரணி போன்ற நிகழ்வுகள்தான் கொரோனா பரவல் இன்று உச்சத்தை தொட காரணமாக அமைந்து விட்டது. அதாவது, கொரோனா வைரஸ் மீது மக்களுக்கு இருந்த அச்சம் நீங்கியதின் விளைவாக முககவசம் அணிவதை தவிர்த்தது, சமூக இடைவெளியை மறந்தது. இதன் காரணமாக உறங்கிக்கிடந்த கொரோனா மக்களை பதம்பார்க்க மீண்டும் வீறு கொண்டு எழுந்துள்ளது. அது கடந்த சில நாட்களாக 2-வது அலையாக வெகுவேகமாக பரவி வருகிறது.

    டெல்லி, மராட்டியம் போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரிகளில் இடம் இல்லாமல் பிளாட்பாரங்களில் கிடத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் போதிய அளவு கிடைக்காமல் கொத்து, கொத்தாக உயிர்ப்பலி ஆவோரின் எண்ணிக்கையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால் சுடுகாடுகளில், மின் மயானங்களில் கொரோனாவால் இறந்த உடல்களை எரியூட்ட முடியவில்லை. சில மாநிலங்களில் பிணங்கள் குவியல், குவியலாக எரியூட்டப்படுகின்றன.

    ஆனால் அப்படி ஒரு நிலைமை தமிழகத்தில் இல்லை. ஆனாலும் நமக்கும் மற்ற மாநிலங்களின் நிலை வந்து விடக்கூடாது என்பதே மருத்துவர்களின் வேண்டுதலாக உள்ளது.

    கொரோனா வைரஸ்

    அந்த மருத்துவர்கள் கூறுகையைில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அதிலும் நாள்தோறும் பாதிப்பு உள்ள மாவட்டங்களில் குமரி மாவட்டமும் ஒன்றாக இருக்கிறது. தற்போது 2-வது அலையாக வீசும் இந்த கொரோனா அதிக வீரியம் மிக்கதாகவும், பரவல் வேகம் அதிகம் உள்ளதாகவும், இளம் வயதினரை அதிகம் பாதிக்கக்கூடியதாகவும் உள்ளது. நோய் தொற்று ஏற்பட்டவுடன் நுரையீரலை வேகமாக பாதிப்பதுடன் இறப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக இருக்கிறது என்கிறார்கள்.

    மேலும் அவர்கள் கூறுகையில், முதல் அலையில் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரசுக்கும்,. 2-வது அலையில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசுக்கும் வேறுபாடு உள்ளன. முதல் அலையில் சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டு அதன்பிறகுதான் வைரஸ் நுரையீரலை பாதிக்கும். அதனால் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சினை உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்கள் அதிக பாதிப்புக்கு ஆளாகி இறக்க நேரிட்டது. ஆனால் புதிய வகை வைரஸ் எவ்வித அறிகுறியும் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய திறன் கொண்டவை. நோய் தொற்று ஏற்பட்ட ஒன்றிரண்டு நாட்களுக்குள்ளே, நோயாளிகளின் நுரையீரலில் குறிப்பிட்ட சதவீத பாதிப்பை இந்த வைரஸ் ஏற்படுத்தி விடுகின்றன. எனவே லேசான பாதிப்பு ஏற்பட்ட உடன் தொற்று கண்டறியப்பட்டால் அவரை இந்த நோயில் இருந்து எளிதாக காப்பாற்றி விட முடியும். பாதிப்பு அதிகம் ஆனபிறகு இளம் வயதினராக இருந்தாலும் அவர்களை காப்பாற்றுவது கடினமானது என்கின்றனர்.

    இதற்கு உதாரணமாக சிலவற்றை இங்கே குறிப்பிடலாம். ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 32 வயது வாலிபர், 44 வயது ஆண் போன்றவர்கள் வேறு நோய் பாதிப்பு எதுவும் இல்லாத நிலையில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அதற்கு காரணம், நோய் நுரையீரலை அதிக அளவு பாதித்த பிறகு அவர்கள் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்துள்ளனர். அதனால் அவர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    அதேபோல் கர்ப்பிணிகளும். சிறுவர்களும் 2-வது பரவலில் சிக்கி வருவது நமக்கு அதிர்ச்சி அளிக்க கூடிய ஒன்றுதான். கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தபிறகு இறந்துபோனார். மற்றொரு கர்ப்பிணி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவர்கள் ஏராளமானோரும் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இவ்வாறு சிகிச்சைக்கு அனுமதிப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 200-ஐ தாண்டுகிறது. குமரி மாவட்டத்தில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டி விட்டது. இறந்தவர்களின் எண்ணிக்கையோ 400-ஐ நெருங்குகிறது. பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அரசு ஆஸ்பத்திரி மட்டும் அல்லாமல் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு பரவி வரும் கொரோனா வைரஸ் வருகிற மே மாதம் 2-வது வாரத்தில் உச்சத்தை தொடும். கொரோனா விதிகளை பின்பற்றி உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர் டாக்டர்கள்.

    அரசு கட்டுப்பாடுகளை விதித்த போதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்‌சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பிரதானமாக புழக்கத்தில் இருக்கின்றன. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் மருத்துவ நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அவைகளின் செயல்திறன் பற்றி பார்ப்போம்!
    கொரோனா வைரஸ் தொற்றுவில் இருந்து பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை மக்கள் பெருமளவு செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்‌சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பிரதானமாக புழக்கத்தில் இருக்கின்றன. இதுவரை சுமார் 12 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன. தற்போது ரஷிய தடுப்பூசியான ஸ்புட்னிக் வி-ஐ பயன்படுத்துவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் மருத்துவ நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அவைகளின் செயல்திறன் பற்றி பார்ப்போம்!

    கோவிஷீல்டு: இந்த தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கி உள்ளது. இது 70 முதல் 90 சதவீதம் செயல்திறன் கொண்டது. நான்கு வாரம் முதல் 6 வார கால இடைவெளியில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட வேண்டும் என்று ஆரம்பத்தில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது நான்கு முதல் 8 வார இடைவெளியில் போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதாவது 60 முதல் 90 நாள் இடைவெளிக்குள் இரண்டாவது தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம். அதேவேளையில் அதற்கு பிறகும் காலதாமதம் செய்தால் பாதிப்பு ஏற்படக்கூடும். சிம்பன்ஸிகளிடமிருந்து எடுக்கப்பட்ட அடினோவைரசின் (பொதுவான குளிர்ச்சியை ஏற்படுத்தும் வைரஸ்) வீரியத்தை குறைத்து மனித உடலுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இது வைரசுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. உடல்வாகுவை பொறுத்து குமட்டல், லேசான காய்ச்சல், தலைவலி, குளிர், ஒவ்வாமை போன்றவை சிலருக்கு ஏற்படக்கூடும்.

    கோவாக்சின்: இந்தியாவை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசி 81 சதவீதம் செயல்திறன் கொண்டது. முதல் தடுப்பூசி போட்ட பிறகு 28 நாட்கள் கழித்து இரண்டாவது தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசி செயலிழக்கப்பட்ட, இறந்த கொரோனா வைரஸை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியும் கோவிஷீல்டு போன்றே பக்கவிளைவுகளை கொண்டிருக்கும்.

    ஸ்புட்னிக் வி: இந்த தடுப்பூசியை ரஷியாவை சேர்ந்த கமலேயே இன்ஸ்டிடியூட் கண்டுபிடித்துள்ளது. இது 91.6 சதவீதம் செயல்திறன் கொண்டது. முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு அடுத்த 21-வது நாளில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட வேண்டும். சார்ஸ்-கொரோனா-2 (கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ்) வைரசுடன் அடினோவைரஸ்கள் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க தொடங்கும். பக்கவிளைவுகளை பற்றிய தகவல்கள் இல்லை.
    பெண்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கும்-உடல்நிலையில் ஏற்படும் பின்னடைவுகளுக்கும் அவர்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் சீரற்ற தன்மை காரணமாக இருக்கிறது.
    பெண்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கும்-உடல்நிலையில் ஏற்படும் பின்னடைவுகளுக்கும் அவர்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் சீரற்ற தன்மை காரணமாக இருக்கிறது. பசியின்மை, வளர்சிதை மாற்றம், தூக்கமின்மை, இனப்பெருக்க சுழற்சி, பாலியல் செயல்பாடு, உடல் வெப்பநிலை போன்ற பல உடல் செயல்முறைகள் ஒழுங்காக நடைபெறுவதற்கு ஹார்மோன்கள் சீராக சுரக்கவேண்டியது அவசியம்.

    ஹார்மோன் சுரப்பு சீரற்ற நிலையில் இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

    மனநிலை ஊசலாட்டம்: செரோடோனின் உள்ளிட்ட ஹார்மோன்கள் மகிழ்ச்சியான உணர்வை அனுபவிப்பதற்கு காரணமாக இருக்கின்றன. ஆனால் ஈஸ்ட்ரோஜன் அளவில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்போது மன நிலையில் பாதிப்பு உண்டாகும். குறிப்பாக மாதவிடாய் சமயங்களிலும், மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய காலகட்டங்களிலும் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானது. வாழ்வியல் முறையிலும், உணவு பழக்கவழக்கங்களிலும் சில மாற்றங்களை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த பிரச் சினையை எளிதாக சரிப்படுத்திவிடலாம்.

    தேவையற்ற முடி வளர்ச்சி: ஹார்மோன் சமநிலையின்மை செரிமான அமைப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் சீரற்றதன்மை காரணமாக வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் உண்டாகலாம். புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் அளவுகளில் சீரற்றதன்மை நிலவும்போது குரலில் கரகரப்பு, தேவையற்ற பகுதிகளில் முடி வளர்வது போன்ற ஆண்களின் பண்புகளை வெளிப்படுத்த நேரிடும்.

    கருவுறுதலில் கவலை: ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சினை நீண்டகாலமாக தொடர்ந்தால் கருவுறுதலில் பிரச்சினை ஏற்படக்கூடும். பி.சி.ஓ.எஸ் போன்ற சினைப்பை மற்றும் கருப்பை சார்ந்த சில உடல்நலப் பிரச்சினைகளும் தாய்மையை தடுக்கும். இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

    இரவு வியர்வை: மாதவிடாய் நெருங்கும் சமயத்தில் சில பெண்களுக்கு இரவு நேரங்களில் வியர்வை பிரச்சினை உண்டாகும். ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். மாத விடாய் சுழற்சியின்போது இயற்கையாகவே ஹார்மோன் செயல்பாடு களில் ஏற்ற இறக்கம் காணப்படும். இதற்கு மனஅமைதியும், மருத்துவ ஆலோசனையும் அவசியம்.

    தூக்கம்: மாதவிடாய் நாட்களில் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்த சமயத்தில் தூக்கமின்மையையும் அனுபவிக்கக்கூடும். கர்ப்ப காலத்திலும் தூக்கமின்மையால் அவதிப்பட நேரிடும். இதற்கு ஹார்மோனில் ஏற்படும் சீரற்றதன்மை காரணமாக இருக்கலாம். இது தூக்க சுழற்சியை தொந்தரவு செய்வதால் மன அழுத்தத்திற்கும் வழிவகுக்கும். அப்போது மனதை அமைதிப்படுத்தும் செயல்பாடுகளில் கவனம் செலுத்தலாம். டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையும் உட்கொள்ளலாம்.

    தலைவலி: மாதவிடாய் சுழற்சி, கர்ப்பம், மனோபாஸ் காலகட்டத்தில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக நிறைய பெண்கள் தலைவலியால் அவதிப்படுகிறார்கள். பெண் களின் உடல்வாகுவை பொறுத்து வலியின் தன்மை மாறுபடும். உணவை பல நேரமாக பங்கிட்டு சாப்பிடுவது, நன்றாக தூங்குவது போன்றவை தலைவலியை போக்க உதவும். பெண் உறுப்பில் ஏற்படும் உலர்வுத்தன்மையும் ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறியாக இருக்கலாம்.

    எடை அதிகரிப்பு: உடல் எடை அதிகரிப்பு என்பது ஹார்மோன் சமநிலையின்மையின் பொதுவான அறிகுறியாகும். இந்த பிரச்சினை பெண்களுக்கு ஏற்படுவது பொதுவானது. தைராய்டு சுரப்பிகளின் குறைவான செயல்பாட்டின் காரணமாகவும் இந்த பிரச்சினை ஏற்படலாம். அதாவது உடலில் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்கு படுத்தும் தைராய்டு ஹார்மோன் குறைவாக உற்பத்தி செய்யப்படும். அதனால் பி.சி.ஓ.எஸ் (பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம்) போன்ற கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகள் உருவாகக்கூடும். அதன் காரணமாக சினைப்பைகளில் நீர்க்கட்டிகள் ஏற்படும். மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலகட்டத்தை முன்கூட்டியே அனுபவிக்கக்கூடும். உடல் எடை அதிகரிப்புக்கும் வழிவகுக்கும். முக்கியமாக அடிவயிற்றின் அருகே கொழுப்பு உருவாகும்.

    முகப்பரு: ஹார்மோன் சமநிலையின்மையின் பொதுவான அறிகுறிகளில் முகப்பருவும் முக்கியமானது. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் அளவுகள் குறைவாகவும், ஆண்ட்ரோஜன் ஹார்மோன்கள் அதிகமாகவும் இருப்பது நாள்பட்ட முகப்பரு பிரச் சினைக்கு காரணமாக இருக்கலாம். அதுபோலவே கர்ப்பம், மாதவிடாய் காலங்களில் ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக சருமத்தில் அரிப்பு, வறட்சி போன்ற பிரச் சினைகள் ஏற்படும். தைராய்டு பாதிப்பு கூட சரும பிரச் சினைகளை உண்டாக்கும். ஹார்மோன் சமநிலையின்மையால் நீண்டகால சரும பிரச்சினைகளை எதிர்கொண்டால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

    எலும்பு பலவீனம்: 35 வயதிற்கு பிறகு பெண்களின் முதுகெலும்பில் இருக்கும் கால்சியத்தின் அளவு குறைய தொடங்கும். தாய்ப்பால் கொடுக்கும்போதும் உடலில் இருந்து கால்சியத்தின் அளவு குறையும். தாய்க்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காததே அதற்கு காரணம். ஈட்ஸ்ரோஜன் அளவுகளில் சமநிலையின்மை ஏற்படுவதும் எலும்புகளை பலவீனமாக்கும். இத்தகைய இழப்புகளை ஈடு செய்வதற்கு போதுமான அளவு கால்சிய சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். டாக்டரின் ஆலோசனைபடி மாத்திரைகளும் எடுத்துக்கொள்ளலாம்.
    கணவர் தொடர்ந்து பொய் பேசினால் அவர்மீது கவனம் செலுத்துங்கள். சொல்வது சிறிய பொய்யாக இருந்தாலும், அதை சொல்ல என்ன காரணம் என்று கேட்டு மனம்விட்டுப் பேசுங்கள்.
    சுஜாதாவுக்கு திருமணமாகிவிட்டது. கணவரும், அவளும் ஒரே வீட்டில்தான் வசிக்கிறார்கள். இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். அவர்கள் முகம்பார்த்து பேசி பல வாரங்கள் ஆகிவிட்டன. `அவர் என்னை வாய்க்கு வந்தபடி திட்டினால்கூட நான் வருத்தப்படமாட்டேன். அப்படி திட்டும்போதாவது நானும், அவரும் சில விஷயங்களை பகிர்ந்துகொள்ளலாம் அல்லவா. ஒரு பெண்ணால் எதை வேண்டுமானாலும் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால், கணவர் பேசாமலே புறக்கணிப்பதை தாங்கிக்கொள்ளவே இயலாது' என்று கண்ணீர் விடுகிறார், அவர்.

    இப்படி ஒருசில சுஜாதாக்கள் அல்ல, பல்லாயிரம் சுஜாதாக்கள் நம்மோடு இருக்கிறார்கள். அவர்கள் கணவரால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு பெயரளவுக்கு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். கணவர் உண்டு.. ஆனால் (வாழ்க்கை) இல்லை.. என்ற நிஜமே அவர்களுக்குள் நிலவிக்கொண்டிருக்கிறது.

    சமீபத்தில் மனநல நிபுணரிடம் ஆலோசனை பெற்று வந்திருக்கும் சென்னையை சேர்ந்த சீமா, ‘‘எனது கணவர் இன்டர்நெட்டுக்கு அடிமையாகி விட்டார். எத்தனையோ விதங்களில் அதை எடுத்துச்சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. கணவருடன் ஒரே வீட்டிற்குள் வசித்தாலும், (இன்டர்நெட்டால்) நான் விதவையை போன்று வாழ்ந்துகொண்டிருக்கிறேன்’’ என்கிறார். இவரை போன்று குமுறும் பெண்கள் ஏராளம்!

    ‘‘நானும், என் கணவரும் வெவ்வேறு அலுவலகங்களில் வேலைசெய்கிறோம். வேலையின் பரபரப்பு இருவரிடமுமே உண்டு. காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்திற்கு கிளம்பினால் இரவுதான் திரும்புவோம். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வரை, அவரது அலுவலகத்தில் இருந்து திரும்பும்போது என் அலுவலகத்திற்கு வந்து காத்திருந்து என்னையும் வீட்டிற்கு அழைத்துவருவார். பின்பு அதற்கு நேரமில்லை என்று அவர் சொன்னதால் நான் வேறு வாகனம் வாங்கி தனியாக அலுவலகத்திற்கு சென்று வருகிறேன்.

    வீட்டிற்கு வந்தால் இரண்டொரு வார்த்தைகள் பேசுகிறார். பின்பு இன்டர்நெட்டில் மூழ்கிவிடுகிறார். பேஸ்புக்கிலோ, சாட் ரூமிலோ பொழுதை கழிக்கிறார். ஆன்லைனில் அடிக்கடி ஷாப்பிங்கும் செய்கிறார். பேஸ்புக்கில் அவரது புரோபைலுக்கு நானும் ரெக்வெஸ்ட் அனுப்பினேன். அப்படியாவது கணவரோடு பேச்சுத் தொடர்பில் இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அவரை கண்காணிக்க நான் ரெக்வெஸ்ட் அனுப்புவதாக கூறி நிராகரித்துவிட்டார்.

    ஒரே வீட்டில் ஒன்றாக வசித்தாலும், அவர் என்னுடன் அத்தியாவசிய தேவைக்குகூட பேசாமல் இருப்பதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. எனது தோழிகள் எல்லாம் அலுவலக டென்ஷனை வீட்டில் கணவரிடம் பகிர்ந்து தீர்த்துக்கொள்கிறார்கள். ஆனால் எனக்கு டென்ஷனே வீட்டில்தான் உருவாகிறது. என் கணவர் நெட்டில் வெகுநேரத்தை செலவழித்துவிட்டு ரொம்ப தாமதமாக தூங்குகிறார். அதையே காரணங்காட்டி மறுநாள் தாமதமாக விழிக்கிறார். பெயரளவுக்கு வாழும் இந்த வாழ்க்கை எனக்கு தேவையில்லை. கணவர் உயிருடன் இருக்கும்போதே என்னால் விதவை போன்று வாழ முடியாது. ஆன்லைன் நண்பர்களோடு அவர் விருப்பம்போல் வாழட்டும்’’ என்று, பெங்களூருவை சேர்ந்த ஸ்டெல்லா சீறுகிறார்.

    கணவரின் இன்டர்நெட் மோகத்தால் பாதிக்கப்படும் இத்தகைய பெண்கள் `சைபர் விதவைகள்' என்று அழைக்கப்படுகிறார்கள். கணவரிடம் இருந்து இவர்களுக்கு மனோரீதியான பங்களிப்போ, உடல்ரீதியான பங்களிப்போ கிடைப்பதில்லை. கிடைத்தாலும், அது பெயரளவுக்கே கிடைக்கிறது. அதில் அவர்களுக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை.

    இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் என்னவென்றால் இன்டர்நெட்டில் மூழ்கி, தனிப்பட்ட வாழ்க்கையை தொலைக்கும் திருமணமான ஆண்களை பற்றிய முழுமையான புரிதல் அவர்களது குடும்பத்தினருக்கோ, சமூகத்திற்கோ இல்லை. தனது கணவர் குடிப்பழக்கம் கொண்டவர் என்று ஒரு பெண் சொன்னால், அதனால் ஏற்படும் பாதிப்பு என்ன என்பதை சமூகம் புரிந்திருக்கிறது. குடும்பத்தில் உள்ள பெரியவர்களும் உணர்ந்திருக்கிறார்கள். தன் கணவர் இன்டர்நெட்டில் மூழ்கிக்கிடக்கிறார் என்று அவள் தனது மாமனார்- மாமியாரிடம் சொன்னால் `அவன் வீட்டில்தானே இருக்கிறான். வெளியே எங்கேயாவது சென்றால்தானே எங்களால் தட்டிக்கேட்க முடியும். இதை எல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாதே' என்று கூறிவிடுகிறார்கள். பிரச்சினையின் ஆழத்தை புரியாமல் பெரியவர்களே மேம்போக்காக நடந்துகொள்வது பெண்களுக்கு கூடுதல் கவலையளிக்கிறது.

    கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த விவாகரத்துகளை கணக்கிட்டால், அவற்றில் 30 சதவீதத்திற்கு இன்டர்நெட்டில் மூழ்கிக்கிடப்பது காரணமாக சொல்லப்பட்டிருக்கிறது. இது வழக்குதொடுத்த பெண்களின் எண்ணிக்கை மட்டுமே. சகித்துக்கொண்டு கணவரின் வீட்டிலேயே தனிமரமாக வசிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இரண்டையும் சேர்த்தால் சதவீத கணக்கு மளமளவென உயர்ந்துவிடும்.

    அம்மா, அப்பா, மனைவி, பிள்ளைகளிடம் சில நிமிடங்கள்கூட பேச தயங்கும் இன்றைய ஆண்களில் பலர் மணிக்கணக்கில் இன்டர்நெட்டில் மூழ்கிக்கிடக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விஷயமாகும். பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யவே பரபரத்துக் கொண்டிருக்கும் அவர்களது எதிர்காலம் என்னவாகும் என்பது கேள்விக்குறியாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது.

    இன்றைய நடுத்தர வயதுக்காரர்களின் இரவு உலகம் வித்தியாசமானதாக இருக்கிறது. பழைய பள்ளி, கல்லூரித் தோழமையோ- பஸ், ரெயிலில் கிடைக்கும் தோழமையோ சமூகவலைத்தளங்கள் வழியாக பலரது இரவு நேரத்தை அபகரித்துக்கொள்கிறது. அதில் சிக்கிக்கொள்ளும் ஆண்கள் அருகில் இருக்கும் தனது மனைவியின் தனிமையையோ, ஏக்கத்தையோ, எதிர்பார்ப்புகளையோ நினைத்துப்பார்ப்பதே இல்லை. அடுத்தவர்களோடு ஆன்லைன் இரவு உலகத்தில் வலம் வருகிறவர்களால் திருமணத்திற்கு பிந்தைய முரண்பாடான உறவுகள் தோன்றிவிடுகின்றன.

    போட்டோ வழியாக ஒரு லைக்கிலும், கமெண்ட்டிலும் உருவாகும் பந்தங்கள் மெல்ல மெல்ல போன் தொடர்புகளுக்கும், போன் செக்ஸூக்கும் துணைபுரிகின்றன. தடம்மாறிச்செல்லும் இத்தகைய ஆண்களை சகித்துக்கொண்டு பிள்ளைகளுக்காகவும், சமூகத்திற்காகவும் பல பெண்கள் பொருந்திப்போய்க் கொண்டிருக்கிறார்கள். வீட்டில் நான்கு சுவர்களுக்குள் கண்ணீரோடு தனித்தீவில் இருப்பதுபோல் ஏராளமான சைபர் விதவைகள் வாழ்ந்து வருகிறார்கள்.

    சைபர் விதவையாக வாழ்ந்துவரும் மும்பையை சேர்ந்த ஒரு பெண் தனது சோக கதையை சொல்கிறார்:

    ‘‘எங்களுக்கு திருமணம் நடந்து 15 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. எங்கள் இரண்டு பிள்ளைகளும் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். என் கணவர் சுயதொழில் செய்துவருகிறார். அவர் தொழிலில் பரபரப்பாக இருந்தாலும் வீட்டிற்கு வந்த பின்பு போன் அழைப்புகளை கண்டுகொள்ளமாட்டார். பிள்ளைகளோடும், என்னோடும் பேசிக்கொண்டிருப்பார். நாங்கள் அனைவரும் ஒன்றாக இரவு உணவு சாப்பிடுவோம்.

    அவரது அலுவலகத்திலும், வீட்டிலும் கம்ப்யூட்டரும் நெட் கனெக்‌ஷனும் உண்டு. வீட்டில் உள்ள கம்ப்யூட்டரை அவரும், பிள்ளைகளும் பயன்படுத்துவார்கள். எனக்கு அதில் ஆர்வம் கிடையாது. குழந்தைகளுக்கும் பயன்படும் என்று கூறிக்கொண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு லேப்டாப் ஒன்றை வாங்கினார். ஆனால் அதன் அருகில்கூட குழந்தைகளை விடுவதில்லை. எப்போதும் அதை அவரது அறைக்குள் வைத்துக்கொள்வார்.

    அன்று இரவு அவர் லேப்டாப்புடன் இருந்த அறைக்குள் நான் திடீரென்று சென்றுவிட்டேன். அங்கு நான் பார்த்த காட்சி என்னை அதிரவைத்துவிட்டது. அவர் ஹெட்செட் மாட்டியிருந்தார். மைக்ரோபோனில் மிக மெல்லிய குரலில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். வீடியோ சாட்டிங்கில் இருக்கிறார் என்பது தெரிந்தது. ஸ்கிரீனில் ஒரு பெண் நிர்வாணமாக நின்றிருந்தாள். அவர்கள் இருவரும் பரஸ்பரம் பார்த்துக்கொண்டு ஏதேதோ செய்துகொண்டிருந்தார்கள்.

    நான் பின்னால் நிற்பதை பார்த்ததும் அவர் திடுக்கிட்டு, லேப்டாப்பை மூடிவைத்துவிட்டு உடலை துணியால் போர்த்திக்கொண்டு குதித்து எழுந்தார். நடந்ததை எல்லாம் நினைத்துப்பார்த்தபோது இந்த உலகமே நொறுங்கி என் தலையில் விழுவதுபோல் இருந்தது. அப்படியே அந்த லேப்டாப்பை தூக்கிப்போட்டு உடைத்துவிடலாம் என்று நினைத்து அதை தூக்கினேன். ஆனாலும் சத்தம்கேட்டு குழந்தைகள் வந்துவிடுவார்கள் என பயந்து, அதனை படுக்கையிலே போட்டுவிட்டு தலையில் அடித்துக்கொண்டு அழுதேன்.

    நான் பார்த்த காட்சி அனைத்தையும் என் குடும்பத்தாரிடமும், மாமனார்- மாமியாரிடமும் விளக்கிசொன்னேன். ஆனால் அவரோ என்னை குறைகூறி, பிரச்சினையை திசைதிருப்புகிறார். அதாவது நான் சந்தேக புத்திகொண்டவள் என்றும், அவர் பார்த்துக்கொண்டிருந்தது ஒரு நடிகையின் போட்டோ என்றும் கூறி எல் லோரையும் நம்பவைத்துக்கொண்டிருக்கிறார்’’ என்று அழுகிறாள், அந்த பெண்.

    குடும்பத்தைலைவிகள் சைபர் விதவைகளாக உருவாகுவதை தவிர்க்கவேண்டும் என்றால், அவர்களது கணவர்கள் சைபர் அடிமையாகிவிடாத அளவுக்கு கவனித்துக்கொள்ள வேண்டும். சைபர் அடிமைகளை கண்டறிவது எப்படி தெரியுமா?

    அலுவல் காரணம் எதுவும் இன்றி சமூக வலைத்தளங்களிலோ, சாட் ரூமிலோ ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நேரத்தை செலவிட்டால் அவரை கண்காணியுங்கள். அதிக நேரத்தை அதில் செலவிட்டால் அது தாம்பத்ய வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். சாட்டிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் இரவில் வெகுநேரம் நெட்டை பயன்படுத்துவார்கள். அவர்கள் பயன்படுத்தும் லேப்டாப், கம்ப்யூட்டர் போன்றவைகளை தனி இடத்தில்வைத்து தான் மட்டுமே பயன்படுத்துவேன் என்று அடம்பிடிப்பார்கள். தான் செய்வது தவறு என்பது அவருக்கே புரியும் என்பதால் எப்போதும் ஒருவித பயம், பதற்றத்துடன் காணப்படுவார்கள்.

    `நான் மற்றவர்கள் சுதந்திரத்தில் தலையிடுவதில்லை. பிறருடைய செல்போனையோ, கம்ப்யூட்டரையோ நான் திறந்து பார்ப்பதில்லை. அதுபோல் நீங்களும் என் விஷயத்தில் தலையிடக்கூடாது. என்னை சுதந்திரமாக விடவேண்டும்' என்று அவ்வப்போது மறைமுகமாகவோ, நேரடியாகவோ உணர்த்திக்கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களிடம் ஒரு டிடெக்டிவ் போன்று நடந்துகொள்ளாமல், `நாம் இருவரும் கணவன்- மனைவி. நமக்குள் பெரிய அளவில் ரகசியங்கள் இருக்கக்கூடாது' என்று கூறி பக்குவமாக அணுகி, அவர்கள் மனதில் இருப்பதை எல்லாம் மனைவி அறிந்துகொள்ளவேண்டும்.

    கணவர் தொடர்ந்து பொய் பேசினால் அவர்மீது கவனம் செலுத்துங்கள். சொல்வது சிறிய பொய்யாக இருந்தாலும், அதை சொல்ல என்ன காரணம் என்று கேட்டு மனம்விட்டுப் பேசுங்கள். சைபர் அடிமைகளால் தாம்பத்ய தொடர்பில் உற்சாகம் காட்டமுடியாது. அலுவலக வேலை, உடல்நிலை சரியில்லை என்றுகூறி மனைவியுடன் தாம்பத்ய தொடர்பை தவிர்க்க முயற்சிப்பார்கள். அவர்கள் தூங்கும் நேரம் மாறும். இரவில் வெகுநேரம் விழித்திருந்துவிட்டு, மிக தாமதமாக எழுவார்கள். வேலை மற்றும் அவர்கள் செய்யும் தொழிலிலும் கவனம் குறையும். இதனால் அவர்களது திறமை மங்கும்.

    இதுபோன்ற செயல்பாடுகளும், மனோரீதியான தடுமாற்றங்களும் உங்கள் கணவரிடம் இருந்தால், உடனே அவரை சைபர் அடிமை என்று முத்திரைகுத்திவிட வேண்டாம். அவரது செயல்பாடுகளை ஆராயுங்கள். அவரிடம் மனம்விட்டுப்பேசுங்கள். அன்பாலும், நடத்தையாலும் அவரை உங்கள் பக்கம் ஈர்த்திடுங்கள். இதற்கு மனநல நிபுணர்களின் ஆலோசனையும் கைகொடுக்கும்.
    காலை மற்றும் மாலையில் சத்தான ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பினால் ஜவ்வரிசி பருப்பு சுண்டல் செய்து சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஜவ்வரிசி - 1 கப்
    சிறுபருப்பு - கால் கப்
    வறுத்த வேர்க்கடலை - ½ கப்
    தேங்காய் துருவியது - சிறிதளவு
    கடுகு, உளுந்து, கறிவேப்பிலை - தாளிக்க
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - தேவையான அளவு
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    ஜவ்வரிசியை முதல் நாள் இரவு அல்லது 5 மணிநேரம் ஊறவைக்கவும். அதிகம் தண்ணீர் ஊற்றக்கூடாது. அப்படி ஊற்றினால் குழைவாக வரும். உதிரியாக இருக்காது. சிறிது தண்ணீர் தெளித்து ஊற வைக்கவும்.

    சிறுபருப்பை நன்றாக கழுவி மஞ்சள் தூள் சேர்த்து உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் ஊறவைத்த ஜவ்வரிசி, வேக வைத்த பருப்பு, வறுத்த வேர்க்கடலை, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறு தீயில் வைத்து நன்கு வதக்கவும்.

    கடைசியில் துருவிய தேங்காயைச் சேர்த்து இறக்கலாம்.

    சூப்பரான ஜவ்வரிசி பருப்பு சுண்டல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோடை வெயிலின் உக்கிரத்தில் இருந்து சருமத்தை காப்பதற்கு சன் ஸ்கிரீனை நிறைய பேர் பயன்படுத்துகிறார்கள். அதில் ரசாயன கலப்பு இருக்கிறது. அதை விரும்பாதவர்களுக்கு இயற்கை சன்ஸ்கிரீனாக அமைந்திருக்கிறது, திராட்சை.
    கோடை வெயிலின் உக்கிரத்தில் இருந்து சருமத்தை காப்பதற்கு சன் ஸ்கிரீனை நிறைய பேர் பயன்படுத்துகிறார்கள். அதில் ரசாயன கலப்பு இருக்கிறது. அதை விரும்பாதவர்களுக்கு இயற்கை சன்ஸ்கிரீனாக அமைந்திருக்கிறது, திராட்சை. சமீபத்திய ஆய்வில், புற ஊதாக்கதிர் வீச்சுகளில் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு திராட்சை உதவும் என்பது தெரியவந்துள்ளது.

    பெரும்பாலும் திராட்சை ஒயின் தயாரிப்புக்குத்தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. திராட்சையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கனிமங்கள், வைட்டமின்கள் நிறைய இருக்கின்றன.

    தற்போது திராட்சையில் உள்ள வைட்டமின்கள், ‘ஆற்றல்மிக்க சன்ஸ்கிரீன் போன்று செயல்படுவதாக' கண்டறியப்பட்டுள்ளது. புற ஊதாக்கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாப்பதோடு சருமத்தில் இளமைத் தோற்றத்தை தக்கவைக்கவும் பயன்படுவதாக ஆய்வு கூறுகிறது.

    இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள், திராட்சையில் இயற்கையான பாலிபினால்கள் அதிகம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். அது சூரிய கதிர்களால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் எதிர்ப்பு பண்புகளை கொண்டது என்கிறது அந்த ஆய்வு.

    இந்த ஆய்வு, பர்மிங்ஹாமில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டிருக்கிறது. திராட்சையில் உள்ள பொருட்கள் புற ஊதா கதிர்கள் உமிழும் ஒளி சேதத்திற்கு எதிராக பாதுகாப்பு வழங்குமா? என்பதை மையப்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இறுதியில் திராட்சை பழத்தை உட்கொள்வதன் மூலம் புற ஊதா கதிர்கள் மூலம் ஏற்படும் வெளிப்புற சரும சேதத்தை குறைக்க முடியும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கிறார்கள்.

    இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் மூத்த அதிகாரி கிரேய்க் எல்மெட்ஸ் கூறுகையில் ‘‘திராட்சையில் ஒரு குறிப்பிடத்தக்க ஒளிச்சேர்க்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். மேலும் அதில் சருமத்திற்கு நன்மை சேர்க்கும் பலவிதமான மூலக்கூறுகள் இருப்பதையும் அடையாளம் கண்டிருக்கிறோம். திராட்சை நம்மால் உண்ணக்கூடிய சன்ஸ்கிரீனாக செயல்படும். எனவே சூரிய கதிர்களால் ஏற்படும் சரும சேதம் உள்ளிட்ட பல உடலியல் பிரச்சினைகளுக்கு திராட்சை பயனுள்ளதாக அமையும். அதனால் ஆரோக்கியத்தை விரும்புகிறவர்கள் திராட்சையை உண்ணலாம்’’ என்கிறார்.
    குடியிருப்பு பகுதிகளில் குழந்தைகளுக்காக செய்யப்படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி கட்டுனர்கள் உள்ளிட்ட பலரும் குறிப்பிட்ட வழிமுறைகளை இங்கே காணலாம்.
    இன்றைய நகர வாழ்க்கையில் தனிக்குடித்தனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. அனைத்து அபார்ட்மெண்டுகளிலும் குட்டிக் குழந்தைகளை கவனித்துக்கொள்ள வயதான பெரியவர்கள் இருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. அந்த நிலையில் குடியிருப்பு பகுதிகளில் குழந்தைகளுக்காக செய்யப்படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி கட்டுனர்கள் உள்ளிட்ட பலரும் குறிப்பிட்ட வழிமுறைகளை இங்கே காணலாம்.

    * தவழும் குழந்தைகள் உள்ள வீடுகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். சில சமயம் அவர்கள் தரையில் வாய் வைத்து விடுவார்கள் அல்லது தரையில் இருக்கும் பொருட்களை வாயில் போட்டு கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

    * வீட்டை குழந்தைகளுக்கு ஏற்ற அமைப்பில் மாற்றி அமைத்துக்கொள்வது அவசியம். அவர்களது குறும்பை முன்கூட்டியே யூகித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னதாகவே அமைத்துக்கொள்வது நல்லது.

    * வீட்டில் குழந்தைகளுக்கு எட்டும் உயரத்தில் அலமாரிகள் இருந்தால் அவற்றை அவர்கள் திறக்க முடியாதபடி ‘லாக்’ பயன்படுத்தலாம். ‘பிரிட்ஜ்’ எப்போதுமே பூட்டப்பட்டு இருப்பதும், கழிவறைகளை தாளிட்டு மூடப்பட்டு இருப்பதும் முக்கியம்.

    * தண்ணீர், எண்ணெய் போன்றவை தரையில் சிந்தினால் உடனே துடைத்துவிட வேண்டும். வழுக்கக்கூடிய தரைத்தளப்பகுதிகளை தேர்ந்தெடுத்து வழுக்கும் தக்க ‘மேட்’ போடவேண்டும்.

    * மேசைகளில் உள்ள ‘டிராயர்களை’ திறந்து விடாமல் ‘சைல்டு லாக்’ போட்டு வைப்பது நல்லது.

    * சமையலறையில் உள்ள கத்தி போன்ற பொருட்களை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கவேண்டும்.

    * சோபா, கட்டில் ஆகியவற்றின் மேல் குழந்தைகள் ஏறி விழுந்தால், அடிபடாத வகையில் கெட்டியான ‘ரக்ஸ்’ வகைகளை விரித்து வைக்கலாம்.

    * மாடிப் படிக்கட்டுகளில் ஏறாமல் இருப்பதற்கும், மேலே உள்ளபோது கீழே இறங்கி விடாமல் இருப்பதற்கும் ‘பேபி கேட்’ தடுப்பை பொருத்திக்கொள்வது பாதுகாப்பானது.

    * டேபிள்களின் முனைகளில் குழந்தைகள் அடிபடுவதை தவிர்க்கும் வகையில் ‘ Co-r-n-er Pr-ot-e-ct-or ’ என்ற சிறிய அமைப்பை பொருத்தி வைக்கலாம்.

    * பல குழந்தைகள் ஆர்வம் காரணமாக ‘எலக்ட்ரிகல் சாக்கெட்டுக்குள்’ விரல்களை விட முயற்சிப்பார்கள். அதை தவிர்க்க தக்க ‘கவர்களை’ உபயோகிக்கலாம். அவர்களது கவனத்தை தவிர்க்கும் வகையில் கண்கவரும் டிசைன்கள் இல்லாதவற்றை பயன்படுத்தலாம்.

    * ஒரு வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள வீட்டின் சமையலறையில் உள்ள கியாஸ் ஸ்டவ்வுக்கு ‘பர்னர் நாப் கவர்’ போட்டு வைப்பதன் மூலம், அவற்றை திருகி விடுவதை தவிர்க்க இயலும்.

    * கதவுகளை அவர்களாகவே திறப்பதை தவிர்க்க ‘டோர் நாப் கவர்’ மற்றும் கதவுகள் மூடிக்கொள்ளாமல் இருக்க ‘டோர் ஸ்டாப்பர்’ ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
    கீரைகள் ஆரோக்கியத்தின் மையமாக விளங்கிவரும் போதிலும், இந்த கீரை வகைகளை அதிகம் எடுத்துக்கொள்வதினால், ஏற்படும் பாதிப்புகள் குறித்து இன்று தெரிந்து கொள்ளுங்கள்.​
    கீரை வகைகளில் அதிகளவில் ஆக்சாலிக் அமிலம்(Oxalic acid) உள்ளது. கீரை வகைகளை நாம் அதிகம் உட்கொண்டால், அதில் உள்ள ஆக்சாலிக் அமிலம், நமது உடலில் உள்ள கால்சியத்துடன் இணைந்து , அது நமது குடல் பகுதிகளில், ஆக்சலேட்களாக மாறி விடுகின்றன. இத்தகைய உப்புகள், கால்சியம் உறிஞ்சுதலை கட்டுப்படுத்தி விடுவதால், நமது உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்காத நிலையை ஏற்படுத்தி விடுகிறது.​

    கீரை உள்ளிட்ட பச்சை காய்கறிகளில் அதிகளவில் ஆக்சாலிக் அமிலம் உள்ளது. இத்தகைய உணவு வகைகளை நாம் அதிகம் எடுத்துக் கொண்டால், அது நமது உடலில் கால்சியம் ஆக்சலேட்டாக படிகிறது. இது சிறுநீரக கற்கள் தோன்றுவதின் ஆரம்ப நிலை என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்சலேட் படிந்துள்ளதன் காரணமாக, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். இந்த நிலைக்கு, ஹைபர்ஆக்ஸலூரியா என்று பெயர்.

    கீரை வகைகளில், அதிகளவில் வைட்டமின் கே உள்ளது. ரத்தம் உறைதல் தொடர்பான மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்த கீரை வகைகள் தீமை பயப்பவையாக உள்ளன. அதேபோல், குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் உடன், கீரையில் உள்ள வைட்டமின் கே இணைந்து, ரத்த அழுத்தத்தை மிகவும் குறைந்த அளவு கொண்டதாக மாற்றி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் அபாயம் உள்ளது.​

    நமது உணவில், அதிகளவில் கீரை வகைகளை சேர்த்துக் கொண்டால், அது நமது உடலில் வாய்வு பிரச்சினைகளை உருவாக்கி விடுகிறது. கீரை வகைகளை, நமது உடல் செரிமானம் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. இதன்காரணமாக, வளர்சிதை மாற்றம் தடைபடுகிறது. கீரை வகைகளில் அதிகளவில் நார்ச்சத்து இருப்பதால், அது செரிமானம் ஆக நீண்ட நேரம் பிடிக்கிறது. இது செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆவதால், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு அல்லது பேதி மற்றும் காய்ச்சல் ஏற்பட காரணமாக அமைகிறது.  

    நீங்கள் கீரை வகைகளை, அன்றைய நாளின் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

    கீரை வகைகளை, உங்களது காலை உணவின் ஒருபகுதி ஆகவோ அல்லது சாண்டவிச்சில் சேர்த்தோ உண்டு மகிழலாம். இது உங்களை நீண்ட நேரம் புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது.

    மதிய உணவில் கீரை வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டால், மாலைநேரத்தில், நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்நாக்ஸ் போன்ற சிற்றுண்டி வகைகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

    இரவு உணவில், கீரை வகைகளை எடுத்துக் கொண்டால், இரவு நேர உறக்கம் சிறப்பானதாக இருக்கும். 
    சிலர் பகுதி நேர தொழிலையே, எதிர்கால தொழிலாகவும் மாற்றியிருக்கிறார்கள். அந்தவகையில் பெண்களுக்கு கைகொடுக்கும் பகுதிநேர தொழில்கள் சிலவற்றை பார்ப்போம்.
    மிகவும் இயல்பான விஷயங்களைகூட, பகுதி நேர தொழிலாக முன்னெடுக்கும் ஆர்வம் இக்கால கல்லூரி மாணவர்களுக்கு அதிகரித்திருக்கிறது. அதாவது பகலில் கல்லூரி படிப்பு, இரவில் தங்களால் முயன்ற பகுதி நேர தொழில் என பிசியாக இயங்குகிறார்கள். சிலர் பகுதி நேர தொழிலையே, எதிர்கால தொழிலாகவும் மாற்றியிருக்கிறார்கள். அந்தவகையில் கல்லூரி மாணவர்களுக்கு கைகொடுக்கும் பகுதிநேர தொழில்கள் சிலவற்றை பார்ப்போம்.

    * கிராபிக்ஸ் டிசைனிங்

    வர்த்தக வாய்ப்புகள் அதிகம் கொண்ட ஒரு தொழில் பிரிவு இதுவாகும். ஹோம் மேட் பிசினஸ், பார்ட் டைம் பிசினஸ் என்ற வகையில் இளம் தொழில் முனைவோர்கள் கவனம் செலுத்த வேண்டிய பிரிவும் இதுவாகும். காரணம் அனைத்து விதமான வர்த்தக நிறுவனங்களுக்கும் விளம்பரம் அவசியம் என்ற நிலையில் அவற்றிற்கான விஷுவல் வடிவமைப்பை தொழில்நுட்ப ரீதியாக செய்துவருபவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தேடி வருகின்றன. இந்த தொழில் பிரிவில் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவர்கள் தங்களுடைய அனுபவத்தை வளர்த்துக்கொண்டு ஏராளமான வர்த்தக வாய்ப்புகளை பெற முடியும். குறிப்பாக காண்ட்ராக்ட் அடிப்படையில் செய்து கொடுக்கலாம்.

    * கம்ப்யூட்டர் ரிப்பேர் மையம்

    இப்போது பள்ளிக்கூட மாணவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை அனைவரும் கம்ப்யூட்டரைப் பயன் படுத்துகிறார்கள். சாதாரணமாக ஒரு நகரத்தின் ஒரு ஏரியாவில் உள்ளவர்களை கணக்கு எடுத்துக்கொண்டால் சுமார் 65 முதல் 75 சதவிகிதம் வரை கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் கம்ப்யூட்டர் சம்பந்தமான ரிப்பேர் மற்றும் சர்வீஸ் செய்வதற்கு பெரிய நிறுவனங்களை அணுகுவதில்லை. நம்பிக்கைக்கு உரிய தனிநபர்களை அல்லது அவர்களது சிறிய நிறுவனங்களை அணுகுகிறார்கள். அந்த அடிப் படையில் தொழில்நுட்பத்தை அறிந்த கல்லூரி மாணவர்கள் சுலபமாக இந்த தொழில் பிரிவை வீட்டின் ஒரு பகுதியில் செய்யலாம்.

    * பேக்கிங் மற்றும் ரீ பேக்கிங்

    சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் தொழில்துறை பகுதிகள் ஆகியவற்றிற்கு அருகாமையில் குடியிருப்பவர்களுக்கு பொருத்தமான தொழில் வாய்ப்பை பேக்கிங் மற்றும் ரீ பேக்கிங் ஆகிய பிரிவு வழங்குகிறது. அதாவது, அந்தப் பகுதியில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களை அணுகி அவர்களுடைய தயாரிப்புகளை பெற்று அவற்றை குறிப்பிட்ட எண்ணிக்கையில் அல்லது குறிப்பிட்ட அளவுகளில் முறையாக அடுக்கி பெரிய தொட்டிகளில் அடைத்து கச்சிதமாக பேக்கிங் செய்யும் தொழில் இதுவாகும். பெரிய அளவில் முதலீடுகள் தேவைப்படாத இந்த தொழிலை ஆர்வமுள்ள இளைஞர்கள் எளிதாக மேற்கொள்ளலாம்.

    * நெட்வொர்க் மார்க்கெட்டிங்

    அதீத அளவில் வளர்ச்சி பெற்றுள்ள சமீபத்திய தொழில் முயற்சிகளில் நெட்வொர்க் மார்க்கெட்டிங் என்பதும் ஒன்றாகும். உடல் நலம், அழகு சாதன பொருட்கள், சரும பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான துணை உணவுப் பொருட்கள் ஆகிய நுகர்வோர் பொருட்களை சமூக வலைத்தளங்களில் சந்தைப்படுத்தி, விற்பனை செய்யும் நவீன முயற்சி இதுவாகும். அதனால் வீட்டில் இருந்தபடியே பேஸ்புக், வாட்ஸ் ஆப் மூலமாக பொருட்களை வாங்கி, விற்கமுடியும்.
    ×