என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    காலையில் சத்தான உணவு சாப்பிட விரும்பினால் தஹி அவல் பழ சாட் செய்து சாப்பிடலாம். இந்த சாட் ரெசிபியை சாப்பிட்டால் விரைவில் பசி எடுக்காது.
    தேவையான பொருட்கள்:

    சிவப்பு அவல் - அரை கப்
    புளிப்பில்லாத தயிர் - ஒரு கப்
    மாதுளை முத்துகள் - 2 டேபிள்ஸ்பூன்
    நறுக்கிய ஆப்பிள் - ஒரு டேபிள்ஸ்பூன்
    வாழைப்பழம் (வட்டமாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்
    உலர்திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன்
    சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
    சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
    வறுத்த உலர் விதை (பூசணி, வெள்ளரி விதை போன்றவை) - ஒரு டேபிள்ஸ்பூன்
    உப்பு - ஒரு சிட்டிகை.

    செய்முறை:

    சிவப்பு அவலை தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து நீரை ஒட்டப் பிழிந்துள்ளவும்.

    தயிரைக் கடைந்து வாய் அகன்ற பவுலில் சேர்த்து மற்ற அனைத்துப் பொருள்களையும் அதனுடன் சேர்த்துப் பரிமாறவும்.

    ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து `ஜில்’லென்றும் பரிமாறலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அம்மை நோய் காற்றில் எளிதாகப் பரவக்கூடிய நோய். அம்மையால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமும், இருமல், தும்மல் மூலமும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து வைரஸ் பரவும்
    பொதுவாகவே வெப்பத்தை தாங்கக்கூடிய வைரஸ், வெப்பத்தைத் தாங்க இயலாத வைரஸ் என வைரஸ்கள் இருவகைப்படும். வெப்பத்தைத் தாங்க முடியாத வைரஸ்கள் மூலம் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் உருவாகும். வெயில் காலத்தில் இந்த பிரச்சினைகளை அதிகம் பார்க்க முடியாது. ஆனால், அம்மை நோயை ஏற்படுத்தும் வைரஸ், வெப்பத்தைத் தாங்கக்கூடிய வைரஸ். சாதாரண பருவ நிலையிலும் பரவக்கூடியது. குறிப்பாக கோடை காலத்தில் அதிகரிக்கக்கூடியது.

    அம்மை நோயின் அறிகுறியாக முதலில் காய்ச்சல் வரும். அதைத் தொடர்ந்து பசியின்மை, உடல் பலவீனம் ஏற்படும். சின்னம்மையாக இருந்தால் உடலில் நீர்க்கட்டியைப் போன்ற சிறிய கொப்புளங்கள் தோன்றும். பின்னர் அவை கொஞ்சம் பெரிதாகி நீர்கோத்துக் காணப்படும். நிறம் மாறிக் கொப்புளங்களில் இருந்து நீர் வடியும். பின்னர், நீர் வறண்டு கொப்புளங்கள் உதிரும். கொப்புளம் உள்ள இடங்களில் வடு ஏற்படும். உடலில் அரிப்பு, தாங்க முடியாத வலி, தொடர்ந்து மிதமான காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் இந்த காலத்தில் இருக்கும். 7 முதல் 10 நாட்களுக்குள் கொப்புளங்கள் உலர்ந்துவிடும்.

    அம்மை தாக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தவும், வைத்தியர்கள் வந்து பார்க்க வசதியாகவும் அந்தக் காலத்தில் அவர்களைக் கோவில்களில் தங்க வைப்பார்கள். அதை பலர் இப்போதும் பின்பற்றுகிறார்கள். அம்மை நோயைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. உடல் வெப்பம் அதிகமாகி நுரையீரல் காய்ச்சல் (நிமோனியா), நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மூளை காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற மற்றப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தி விடலாம்.

    எனவே, அம்மை நோயால் பாதிக்கப்பட்டவரை வேப்பிலையில் படுக்க வைப்பது, வேப்பிலை அரைத்துப் போட்டுக்கொள்வதுடன் விட்டுவிடக்கூடாது. அம்மை நோய் வந்தால் அதைக் குணப்படுத்த மருந்து இல்லை. அதேநேரம் அதன் வீரியத்தை மட்டுப்படுத்தவும், அம்மை நோயால் வரக்கூடிய மற்ற நோய்களைத் தடுக்கவும் மாத்திரைகள் இருக்கின்றன. வலி, எரிச்சல் ஆகியவற்றைத் தடுக்கவும் மருந்துகள் உண்டு. எனவே மருத்துவர் பரிந்துரையின்பேரில் வாங்கி உட்கொள்ளலாம்.

    ஒருமுறை அம்மை நோய் வந்துவிட்டுப் போனால், பிறகு வாழ்நாள் முழுவதும் வராது என்று நம்புகிறோம். அது உண்மைதான், அம்மை நோய் அந்த அளவுக்கு நோய் எதிர்ப்புத் தன்மையை ஏற்படுத்திவிடும். அதேநேரம், நோய் எதிர்ப்புத் தன்மை குறைவாக இருப்போர், எச்..ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள், காசநோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு, ஏற்கெனவே அம்மை நோய் வந்திருந்தாலும்கூட மீண்டும் வருவதற்கான சாத்தியம் அதிகம். இதேபோல குழந்தைகள், முதியவர்களுக்கு நோய் எதிர்ப்புத் தன்மை குறைவாக இருக்கும் என்பதால், அவர்களுக்கும் மீண்டும் வரலாம். கர்ப்பிணிகளை அம்மை நோய் தாக்கினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.

    அம்மை நோய் காற்றில் எளிதாகப் பரவக்கூடிய நோய். அம்மையால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமும், இருமல், தும்மல் மூலமும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து வைரஸ் பரவும். குறிப்பாக ஒருவர் அம்மை நோயால் முழுமையாகத் தாக்கப்படுவதற்கு முந்தைய முதல் மூன்று நாட்களும், வந்து சென்ற பின் இரண்டு நாட்களும்தான் அம்மை நோய் வேகமாகப் பரவும். எனவே, அம்மை நோயால் பாதிக்கப்பட்டவரை அப்போது தனிமைப்படுத்தி வைக்க வேண்டும்.
    சிறிய குடித்தனமாக இருந்தாலும், பெரிய வீடாக இருந்தாலும் அவற்றின் அமைப்பிற்கு ஏற்ப பொருத்தமான உள் அலங்கார பணிகளை செய்தால், வீடுகள் அழகாக தோற்றமளிக்கும்.
    குடியிருப்பது சிறிய வீடாக இருந்தாலும் அழகாக இருக்கவேண்டும் என்பது இன்றைய நகர வாழ்வில் அனைவரது விருப்பமாக உள்ளது. சிறிய குடித்தனமாக இருந்தாலும், பெரிய வீடாக இருந்தாலும் அவற்றின் அமைப்பிற்கு ஏற்ப பொருத்தமான உள் அலங்கார பணிகளை செய்தால், வீடுகள் அழகாக தோற்றமளிக்கும் என்பது உள் அலங்கார நிபுணர்களின் கருத்தாகும். அதற்கேற்ப அவர்கள் அளிக்கும் எளிமையான குறிப்புகளை காணலாம்.

    * வரவேற்பறை சுவர்களுக்கு அடர்த்தியான நிறம் கொண்ட ‘பெயிண்டிங்’ செய்வது பொருத்தமாக இருக்காது. அடர்த்தியான நிறங்கள் சம்பந்தப்பட்ட அறையை வெளிச்சம் குறைவானதாகவும், சிறிய அளவு கொண்டதாகவும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை. அதனால், வீடுகளின் முன் அறைகளுக்கு அடர்த்தியான நிற ‘பெயிண்டிங்’ பொருத்தமாக இருக்காது.

    * வெளிர் நிறங்கள் அறைகளுக்கு ‘பளிச்’ என்ற தோற்றத்தை அளிக்கின்றன. அதனால், வரவேற்பறைகளுக்கு வெளிர் நிற ‘பெயிண்டிங்’ செய்து கொள்ளலாம். அதனால், சிறிய அறையாக இருந்தாலும்கூட, அது அழகாகவும், வெளிச்சமாகவும், பெரியதாகவும் காட்சி தரும்.

    *வரவேற்பறையில் டி.வி, சோபா செட், டீபாய் போன்றவையும், படுக்கை அறையில் ‘வார்டுரோப்’ மற்றும் ‘டிரஸ்ஸிங் டேபிள்’ ஆகியவையும், சமையலறையில் மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு உள் அலங்கார பணிகளை திட்டமிட்டுக் கொள்ளவேண்டும்.

    * இப்போது சந்தையில் பல வடிவங்களில் கிடைக்கக்கூடிய சிறிய ‘ஷெல்ப்’ அமைப்பை ஆங்காங்கே சுவர்களில் பொருத்தி வைத்து, அதில் கலைப்பொருட்கள் மற்றும் புகைப்படங்களை அழகாக இடம் பெறச்செய்யலாம்.

    * அறைகளின் ‘கார்னர்’ பகுதிகளில் ‘ட’ வடிவ ‘வார்டுரோப்’ அமைத்தால், நிறையப் பொருட்களை உள்ளே வைப்பதற்கு வசதியாக இருக்கும்.

    * அடுக்குமாடி குடியிருப்புகளில் மாடித்தோட்டம் அமைக்க விரும்புபவர்கள், ‘வெர்ட்டிகல் கார்டன்’ என்ற நவீன தோட்டக்கலை மூலம்சுவர்களில் செங்குத்தாக தொட்டிகளை பொருத்தி அதில் செடிகளை வளர்க்கும் முறையை கடைபிடிக்கலாம்.

    * நவீன ‘வெர்டிகல் கார்டன்’முறையில் வீட்டின் பால்கனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சிறிய அளவு கொண்ட தொட்டிகளில் செடிகளை வளர்த்து அழகு செய்யலாம். பால்கனி இல்லாத நிலையில் வீட்டின் வரவேற்பறை பகுதியில், இடத்திற்கு பொருத்தமாகவும் இந்த முறையை அமைத்துக் கொள்ளலாம்.
    கொரோனாவின் லேசான பாதிப்பிற்கு ஆளாவோர் உடனடியாக ஆஸ்பத்திரிகளுக்கு வரத்தேவையில்லை. அவர்கள் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளலாம். இது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
    புதுடெல்லி :

    கொரோனாவின் லேசான பாதிப்பிற்கு ஆளாவோர் உடனடியாக ஆஸ்பத்திரிகளுக்கு வரத்தேவையில்லை. அவர்கள் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளலாம். இது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அவற்றில் முக்கியமானவை வருமாறு:-

    * லேசான பாதிப்பில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டவர்களுக்கு 7 நாட்களுக்கு மேல் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் நீடித்தால் டாக்டரை கலந்தாலோசித்து குறைந்த அளவிலான ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம்.

    * 60 வயதுக்கு மேற்பட்டோர் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, நாள்பட்ட நுரையீரல் அல்லது கல்லீரல் அல்லது சிறுநீரக நோய், பெருமூளை நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனாவாலும் பாதிக்கப்படுகிறபோது, டாக்டரின் ஆலோசனை பெற்றுத்தான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆக்சிஜன் செறிவு குறைந்தால், மூச்சுத்திணறலால் அவதியுற்றால் உடனே ஆஸ்பத்திரியில் சேர்ந்து விட வேண்டும்.

    * வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் சூடான நீர் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும் அல்லது 2 முறை ஆவி பிடிக்க வேண்டும்.

    * தினமும் 4 முறை பாரசிட்டமால் 650 மி.கி. மாத்திரை எடுத்தும் காய்ச்சல் குறையாதபோது, டாக்டரை கலந்தாலோசிக்க வேண்டும். அவர் தினமும் 2 முறை நாப்ராக்சன் 250 மி.கி. மாத்திரை எடுக்க பரிந்துரைக்கலாம்.

    * 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல், இருமல் தொடர்ந்தால் புடசோனைட் மருந்தை தினமும் 2 முறை வீதம் 5 முதல் 7 நாட்களுக்கு இன்ஹேலர் மூலம் உள்ளிழுக்க வேண்டும்.

    கொரோனா வைரஸ்

    * ரெம்டெசிவிர் போன்ற மருந்தை டாக்டர் பரிந்துரை பேரில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் ஆஸ்பத்திரி அமைப்பில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    * கொரோனா நோயாளியை வீட்டில் கவனிப்போர், நெருங்கிய தொடர்பில் இருப்போர் நெறிமுறைகள்படி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * நோயாளிகள் வீட்டில் நல்ல காற்றோட்டமுள்ள அறையில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். எப்போதும் அவர்கள் 3 அடுக்கு முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். நோயாளியும், பராமரிப்பாளரும் என்-95 முகக்கவசம் அணிவது நல்லது.

    * எச்.ஐ.வி. நோயாளிகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், புற்றுநோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள பரிந்துரைக்கப்பட மாட்டார்கள். அவர்கள் டாக்டர்களின் மதிப்பீட்டுக்குப் பின்னர்தான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள பரிந்துரைக்கப்படுவார்கள்.

    * நோயாளிகள் வீட்டில் நன்றாக ஓய்வு எடுப்பதுடன் நிறைய பானங்களை குடிக்கலாம்.

    * வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட நோயாளிகள் உடல்நிலை மோசமடைந்தால் உடனே டாக்டரிடம் தெரியப்படுத்த வேண்டும்.

    * வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டவர்கள் அறிகுறிகள் தோன்றி 10 நாட்களான பின்னர் அல்லது அறிகுறியற்றவர்கள் கொரோனா மாதிரி எடுக்கப்பட்ட 10 நாட்களுக்கு பின்னர், 3 நாட்கள் காய்ச்சல் இல்லாத நிலையில் வெளியே வந்துவிடலாம். வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டது முடிவு அடைந்தபின்னர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள தேவையில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் இன்றைய சூழலில், தங்களது அனுபவங்களையும், உறவுகளையும் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி தலைமுறையின் தொடர்ச்சிகளை தக்க வைத்துக்கொள்ளும் பொறுப்பு தாத்தா, பாட்டிகளுக்கே உள்ளது.
    பெரும்பாலான இளைய தலைமுறையினர் தற்போது கல்வி, பணி, சம்பளம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் விருப்பத்திற்கேற்ற இடங்களுக்கு தங்கள் வாழ்க்கையை தேடிச் செல்கிறார்கள். சிலர் உணர்வுரீதியான பிணைப்புடன் ஊர் மற்றும் உறவுகளுக்கு மத்தியில் தங்களுக்கான வாழ்க்கை பயணத்தை தொடர்கிறார்கள். அவர்களில் குறிப்பிட்ட சதவிகிதம் பேர் நகரம் மற்றும் கிராமம் ஆகிய இரு வேறுபட்ட வாழ்க்கை சூழலில் வீட்டில் உள்ள வயதான பெற்றோர்கள் மற்றும் மனைவி- குழந்தைகளுடன் வாழ்கிறார்கள். 30 முதல் 42 வயதுக்குள் உள்ள அவர்களை ‘சாண்ட்விச் தலைமுறையினர்’ என்று சமூக உளவியல் வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    சமூக அளவில் வயதான பெற்றோர்கள் பல வகைகளில் இருக்கிறார்கள். அரசுப் பணி அல்லது தனியார் பணியிலிருந்து ஓய்வு பெற்று மாதாந்திர ஓய்வூதியம் பெறும் பெற்றோர்கள் ஒரு வகை. அமைப்பு சாரா தொழில்கள் செய்து ஒரு குறிப்பிட்ட வயதில் உடல் தளர்ந்து வேலை செய்ய முடியாமல் ஓய்வு பெற்றவர்கள் இன்னொரு வகை. விவசாயத்தை தொழிலாகக் கொண்டவர்கள் முதுமை காரணமாக பிள்ளைகளுக்கு நிலத்தை கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்பவர்கள் மற்றொரு வகை.

    இப்படிப்பட்ட பெற்றோர்களால் வளர்க்கப் பட்டவர்கள் படித்து, பணியிலோ அல்லது தொழிலிலோ அமர்ந்த பின்னர் குடும்பத்தை கவனித்துக்கொள்ளும் நிலைக்கு வருகிறார்கள். அந்த நிலையில் வயதான பெற் றோர்களை கவனித்துக்கொள்வது, தங்கள் திருமண வாழ்க்கையை தொடர்வது ஆகிய இரு பொறுப்புகளையும் அவர்கள் ஒருசேர கவனிக்கவேண்டியதிருக்கிறது.

    குடும்பத்தில் ஒரு பக்கம் வயதான பெற்றோர், இன்னொரு பக்கம் தனது மனைவி குழந்தைகள் என்று இரு தரப்பு எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவது சாண்ட்விச் தலைமுறைக்கு சவாலான விஷயம். யாரை முதலில் கவனிப்பது, பெற்றோரை டாக்டரிடம் அழைத்துச் செல்வதா அல்லது குழந்தையின் பள்ளி ஆண்டு விழாவுக்கு செல்வதா என்பதில் ஆரம்பித்து இரு தலைமுறையின் மாறுபட்ட தேவைகளை நிறைவேற்றுவதில் மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும்.

    அதே நேரத்தில் வயதான காலத்திலும் பல பெற்றோர் தொழிலில் தங்கள் பிள்ளைகளுக்கு உதவும் வகையில் பொறுப்புகளை எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். அதேபோல வீட்டு வேலைகளையும், இதர பொறுப்புகளையும் பகிர்ந்துகொண்டு தம்மால் முடிந்தவரை குடும்பத்துக்கு உதவி வரும் பாட்டிகளும் பல ஊர்களில் இருக்கிறார்கள். எப்போதுமே குழந்தைகள், பெற்றோர், தாத்தா, பாட்டி போன்ற பலரும் ஒருங்கிணைந்து அமைந்துள்ள குடும்பம்தான் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனநிலையை இளைய தலைமுறைக்கு அளிக்கும். சின்னக் குழந்தைகள் பெற்றோர்களிடம் வெளிப்படுத்தாத எண்ணங்களை தாத்தா, பாட்டியிடம் எளிதாக வெளிக்காட்டுவார்கள். அப்படிப்பட்ட உணர்வு ரீதியான ஆதரவு குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. அதை அருமையாக ஒருங்கிணைக்கும் பொறுப்பு சாண்ட்விச் தலைமுறையினருக்கு இருக்கிறது.

    ஒவ்வொருவரின் வாழ்விலும் குழந்தைப் பருவத்தில் முதன்மையான இடத்தை பெறுவது தாத்தா மற்றும் பாட்டியாகத்தான் இருப்பார்கள். பேரக்குழந்தைகளை சரியாக கவனிக்காத அவர்களது மகன் அல்லது மகள்களை கடிந்துகொள்வதுடன், குழந்தைகளை அரவணைத்து, பாசத்தை காட்டுவதும் வீட்டுப் பெரியவர்கள்தான். கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் இன்றைய சூழலில், தங்களது அனுபவங்களையும், உறவுகளையும் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி தலைமுறையின் தொடர்ச்சிகளை தக்க வைத்துக்கொள்ளும் பொறுப்பு தாத்தா, பாட்டிகளுக்கே உள்ளது.

    பெற்றோர்கள் மற்றும் அவர்கள் பேரக்குழந்தைகளுக்கு மத்தியில் ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பை உறுதி செய்வது சாண்ட்விச் தலைமுறையினருக்கு அவசியமான ஒன்று. தூரம், காலம் போன்ற சிக்கல்கள் எல்லாம் இன்றைய தொழில்நுட்ப வசதிகள் முன் ஒன்றுமில்லாததாக ஆகி விட்டது. உலகம் உள்ளங்கைக்குள் அடங்கி விட்டது. வீடியோ கால் மூலம் தாத்தா, பாட்டிகள் தங்கள் மேல்நாட்டு பேரன், பேத்திகளுடன் உரையாடுகிறார்கள். வாட்ஸ் அப் மூலம் உள்ளூர் செய்திகள் மற்றும் படங்களை தங்கள் பேரக்குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். எப்படியோ உணர்வுபூர்வமான கலாசார தொடர்புகள் அறுந்து விடாமல் இருப்பது மிக முக்கியம்.
    உடலுக்கு வெளியே தலைகளில் ஒட்டுண்ணி வகை பேன்களால் முடிகளுக்கு பாதிப்பு வந்தால், அதற்கான முறையான மருத்துவத்தை எடுத்து பிரச்சனையை சரி செய்யலாம்.
    முக்கியமாய் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள். இவர்களுக்கு தங்கள் முடியினை பராமரிக்கத் தெரியாது. அவர்கள் படிக்கும் பள்ளி மற்றும் பொது வெளிகளில் நெருங்கி அமர்ந்தே படிக்கவும், விளையாடவும் செய்வார்கள். குழுவாகவே இவர்கள் இருக்கும் காரணத்தால், பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பேன் தொல்லை அதிகமாகவே இருக்கும்.

    முடி வளர்ச்சி அதிகமாக உள்ளவர்களுக்கும், கூந்தலை சுத்தமாக பராமரிக்காதவர்களுக்கும் பேன் அதிகம் வரும் வாய்ப்புகள் உள்ளது. தலைமுடிகளில் ஈரம், பிசுபிசுப்பு, அழுக்கு போன்றவை சேர்ந்தால் கட்டாயமாக பேன் பரவும். நமது முடிகளில் அழுக்கு சேரச்சேர அந்த இடம் பேன்கள் வசிக்க ஏற்ற இடமாய் மிகவும் வசதியாய் பேன்களுக்கு அமைந்துவிடுகிறது.

    மேலும் ஒருவர் பயன்படுத்திய டவல், சீப்பு, ஹேர் பிரஷ் போன்றவற்றை எடுத்துப் பயன்படுத்தினாலும் அதன் வழியே பேன் ஒட்டிக்கொண்டு நமது முடிகளுக்குள் நுழைந்து விரைவாகப் பரவத் தொடங்குகிறது. ஒரே தலையணையில் அருகருகே தலை வைத்துப் படுப்பது, தலைகளை ஒட்டி வைத்து அருகருகே நெருங்கி அமருதல், ஒருவரின் ஹெட்போனை மற்றொருவர் பயன்படுத்துதல், ஒருவர் உடையினை மற்றொருவர் பயன்படுத்துதல், ஹேர் பேண்ட், ஹேர் க்ளிப். தலைப்பாகை, தொப்பி இவற்றின் வழியாகவும் பேன்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    பேன் தொல்லை அதிகமானால் சரிசெய்யும் முறை

    வயிற்றில் பூச்சியினால் பாதிப்பு வந்தால் நாம் மருந்து எடுத்துக்கொள்கிறோம். அதுபோல, உடலுக்கு வெளியே தலைகளில் ஒட்டுண்ணி வகை பேன்களால் முடிகளுக்கு பாதிப்பு வந்தால், அதற்கான முறையான மருத்துவத்தை எடுத்து பிரச்சனையை சரி செய்யலாம். இரண்டு வழிகளில் பேன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். பேன் தொல்லை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகமாக  இருந்தால் மருத்துவரை அணுகுவது. மற்றொன்று நாமாகவே இயற்கை முறையில் வீட்டில் மருத்துவம் செய்வது.

    * பேன் தொல்லை அதிகமாய் உள்ள இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு permethrin lotion எனும் ஆயின்மென்டையும், இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தையாக இருந்தால் Phrethrins lotion எனும் ஆயின்மென்டையும் மருத்துவரின் ஆலோசனையில் மருந்துக்கடையில் வாங்கி  ஈரமுடியில் தடவி 10 நிமிடம் கழித்து அலசி சுத்தம் செய்ய வேண்டும்.

    * ஆலிவ் ஆயிலை முடிகளில் படுமாறு தடவி, காற்றுபுகா வண்ணம் பாத் கேப் கொண்டு(bath cap) கவர் செய்தால், முடியை விடாமல் இறுகப் பற்றி, ஒட்டியிருக்கும் முட்டைகளின் பிடிமானத்தை ஆலிவ் ஆயில் தளர்த்தி வெளியே கொண்டு வரும்.

    * எலுமிச்சைச் சாறு, வெங்காயச் சாறு இரண்டையும் சம அளவில் எடுத்து, பஞ்சில் நனைத்து ஸ்கால்ப்பில் படுமாறு தடவி பாத் கேப்பில் கவர் செய்துவிட்டால், அதன் வாடை தாங்காமல், முடியினை அலசும்போது பேன்கள் தானாகவே வெளியேறும்.

    * துளசி இலைப் பொடி, மருதாணி பூவின் பொடி, வசம்பு பொடி, வேப்பம்பூ பொடி, வேப்பங் கொட்டைப் பொடி, சீத்தாபழக் கொட்டை பொடி இவற்றில் ஏதாவது ஒன்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து முடிகளில் தடவி வெளியேற்றலாம்.

    * அதேபோல் வெள்ளை மிளகுடன் பால், காட்டு சீரகத்துடன் பால் இவற்றில் எளிதாய் கிடைக்கும் ஒன்றைத் தலையில் தடவி பாத் கேப் பயன்படுத்தி கவர் செய்து, ஒரு மணி நேரத்தில் அலசி சுத்தம் செய்து பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

    * லிஸ்டரின் மவுத் வாஷ் கொஞ்சமாக எடுத்து தலையில் தடவி ஒரு மணி நேரத்தில், ஆப்பிள் சிடர் வினிகரை போட்டு முடியினை அலசினாலும் பேன் தொல்லை குறையும்.

    * ஹேர் டிரையரின் வெப்பத்திலும் பேன்கள் குறைய வாய்ப்பு உண்டு.

    பேன்களே வராமல் தடுப்பது எப்படி?

    * கூந்தல் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் மட்டும் போதாது, சுத்தமாகவும் இருக்க வேண்டும்.

    * பேன் தொல்லை அதிகம் இருப்பவர்கள், மேலே குறிப்பிட்ட இயற்கை முறைகளில் ஏதாவது ஒன்றினை அடிக்கடியும், குறைவாக இருப்பவர்கள் மாதம் இருமுறையும் எடுப்பது நல்லது.

    * முடியினை அடிக்கடி பேன் சீப்பு கொண்டு சீவி சுத்தம் செய்தல் வேண்டும்.
    நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து இருப்பது அவசியம். வாரத்திற்கு ஒரு முறையாவது ஓட்ஸ் கஞ்சி, கூழ் போன்றவற்றை செய்து சாப்பிட்டு வருவது வயிற்றில் இருக்கும் நச்சுகள் வெளியேற செய்யும்.
    தேவையான பொருள்கள்

    துருவிய கேரட் - அரை கப்
    கோஸ் - அரை கப்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    ஓட்ஸ் - 1 கப்
    பச்சை மிளகாய் - 2
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு தாளித்தபின்னர் துருவிய கேரட், கோஸ் சேர்த்து 5 நிமிடம் வதக்கி ஆற வைத்து அரைத்து கொள்ளவும்.

    ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து மிக்சியில் போட்டு பொடித்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் அரைத்த விழுது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை சற்று தடியாக அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

    இதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின், மினரல்கள் உள்ளன.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண்களை அதிகம் பாதிக்கும் வெள்ளைப்படுதல் பிரச்சினை ஏற்பட காரணம் என்ன? இவற்றை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
    இன்றைய சூழலில் 15 வயது முதல் 45 வயது வரையிலான பெண்கள் அதிகமாக சந்திக்கும் பிரச்சனை வெள்ளைப்படுதல் ஆகும். பருவம் அடைந்த பெண்களின் மாதவிலக்கு நாட்களுக்கு முன்னதாகவும், கருவுற்றிருக்கும் சமயத்திலும் வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படுகிறது.

    இது பெரும் நோயாக இல்லாவிட்டாலும் சரிவரக்கவனிக்காவிட்டால் கர்ப்பப்பையை இழக்கும் அபாயம் கூட ஏற்படக்கூடும். எனவே இந்த பிரச்சினை ஏற்பட காரணம் என்ன? இவற்றை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.


    தவறான உணவுப்பழக்கங்கள், கெட்டுப்போன உணவு பொருட்களை உண்ணுதல், சுகாதாரமற்ற உள்ளாடைகள் அணிதல், சுயஇன்பம் பழக்கம், மாதவிடாயை தூண்டும் மருந்துகளை உண்ணுதல், ஊசைச்சதை, ரத்தசோகை, அதிக உடல் சூடு, உடலுறவில் அடிக்கடி ஈடுபடுதல் ஆகியவற்றால் இந்த பிரச்சனை ஏற்படலாம்.

    மேலும் கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல், தூக்கமின்மை போன்றவையும் காரணமாக இருக்கக்கூடும்.

    சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழிப்பது, பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிக்காதது ஆகியவையும் முக்கிய காரணங்கள்.
    இவற்றை தடுக்க என்ன செய்யலாம்?

    * மாதவிடாய் காலத்திலும், உடலுறவுக்கு பின்பும் பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிப்பது முக்கியம்.

    * பருத்தி துணிகளால் ஆன உள்ளாடைகளை அணிவது சிறந்தது.

    * நீண்ட நாட்களாக கருத்தடை சிகிச்சை பெறுபவர்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படலாம். கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துபவர்கள் மருந்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

    வீட்டு வைத்தியம் உண்டா?

    * கீழா நெல்லியை அரைத்து பசும்பாலில் கலந்து 7 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

    * உளுந்து, பார்லி இரண்டையும் தலா 100 கிராம் எடுத்து கொண்டு மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தலா 10 கிராம் அளவு சேர்த்து பொடியாக அரைத்து கஞ்சி காய்ச்சி தினமும் ஒருமுறை குடித்து வரலாம்.

    * தினமும் எலுமிச்சை சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகிய ஏதேனும் ஒன்றின் ஜூஸ் அருந்தலாம். அவற்றில் உள்ள வைட்டமின் டி, ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகியவை பாக்டீரியா வளர்ச்சியை தடுப்பதுடன், அந்தரங்க உறுப்பில் ஏற்படும் துர்நாற்றதையும் அகற்றி விடும்.
    சொத்துகளை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரம் இருந்தால் மட்டும், சொத்து பத்திரமாக இருப்பதாக அர்த்தம் கொள்ள முடியாது.
    நீங்கள் புதிதாக வீடு, மனை என சொத்து வாங்கியிருக்கிறீர்களா, அந்த சொத்தை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து அந்த ஆவணத்தை பத்திரமாக வைத்திருக்கிறீர்களா, பத்திரவுப் பதிவு மட்டும் இருந்தால் போதுமா, அந்தச் சொத்துக்குரிய பட்டா வைத்திருக்கிறீர்களா?

    சொத்துகளை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரம் இருந்தால் மட்டும், சொத்து பத்திரமாக இருப்பதாக அர்த்தம் கொள்ள முடியாது. அது சொத்து வாங்குவதன் முதல் படிதான். அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாக சொந்தமாகும். சரி, சொத்துக்கான பட்டாவை யாரிடம் எங்கே பெறுவது?

    பட்டா வழங்குவது வருவாய் துறைக்குக் கீழ் வருகிறது. எனவே வருவாய் துறையில்தான் பட்டாக்களைப் பெற வேண்டும். பட்டா பெறுவதற்கு அந்தப் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் (வி.ஏ.ஓ.) மனுக்களை வழங்க வேண்டும். நீங்கள் அளிக்கும் மனுவுடன், ஆவணங்களின் நகலை அளிக்க வேண்டும். மூல ஆவணங்களை கொடுக்க வேண்டியதில்லை.

    இந்த மனுவின் மீது தனது அறிக்கையுடன், தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ. சென்று சம்பந்தப்பட்ட மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைப்பார். ஆவணங்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து, மனுதாரருக்கு பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல்களை வழங்குவார்கள்.

    சரி ஏன் பட்டா வேண்டும், பட்டா இல்லாவிட்டால் என்னவாகும்? ஒருவர் அதிகார பத்திரம் மூலம், ஒரு சொத்தை பலருக்கும் விற்கும் காலம் இது. அவ்வாறு சொத்து பெறும் நபர்கள், பதிவு அலுவலகத்துக்கு சென்றால், அதே சொத்தை எல்லோருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது. இதனால், சொத்து உண்மையிலேயே யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் ஏற்படும். ஒரு சொத்தை பதிவு செய்யும் நபர், அதை பட்டாவாக மாற்றிக்கொண்டுவிட்டால், அந்தப் பிரச்சினை இருக்காது.

    தற்போது ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஏராளமான மனை போட்டு விற்கிறார்கள். உதாரணமாக 50 மனைகளை விற்கிறார் என வைத்துக்கொள்வோம். பிளாட்டுகளை பெறுவோர், அதை பத்திரப்பதிவு செய்து வைத்துக் கொள்வார்கள். அந்தச் சொத்துக்கு பட்டா பெறவில்லை என்றால் என்னவாகும், அந்த 50 மனைகளில் சிலவற்றை, பூங்காவுக்கும், சமுதாயக் கூடங்களுக்கும் வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்ய வாய்ப்புண்டு. 50 மனைகளில் ஏதாவது 10 மனைகள் அப்படி ஒதுக்கப்பட்டுவிடலாம்.

    அது தெரியாமல் பதிவுப் பத்திரம் உள்ளது என்ற நம்பிக்கையில், சொத்து வாங்கியவர் இருப்பார். ஒரு கட்டத்தில், அங்கு வீடு கட்ட செல்லும்போது தான், தனது மனை பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது தெரியவரும். எனவே, பத்திரப் பதிவு முடிந்ததும், அதை வைத்து, வருவாய்த் துறையில் பட்டா மாறுதல் பெற்றுக்கொண்டால், இந்தச் சிக்கலிலிருந்து தப்பிக்கலாம்.
    பணிக்கு செல்லும் பெண்கள் இன்னும் கூடுதலாக நேர நிர்வாகத்தை கடைப்பிடிக்கின்றனர். பணியிடத்துக்கு ஒரு நாளும் தாமதமாக போகாமல் முன்கூட்டியே செல்வதையும் பார்க்கலாம்.
    பெண்கள் தங்களை அலங்கரித்து கொள்ள அதிக நேரம் எடுத்து கொள்கிறார்கள் என்பது ஆண்களின் பொதுவான குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும். அலங்காரம் செய்வதற்கு பெண்ணுக்கு நேரம் தேவைதான். கூந்தலை வாரி பூவைத்து, பொட்டு வைத்து உடைகளை தேர்வு செய்து அதற்கேற்ப அணிகலன்களை அணிந்து தயாராகி வருதவற்கு பெண்கள் தாமதம் செய்வதால் கணவன் கூட்டம் பொறுமையிழக்கின்றது.

    ஆனால் உண்மையில் பெண்கள்தான் நேர நிர்வாகத்தில் சிறந்து விளங்குகின்றனர் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

    காலையில் எல்லோரையும் விட பெண்கள் தான் முதலில் கண் விழிக்கிறாள். இரவில் அவள் தான் கடைசியாக கண்ணுறங்குகிறாள்.

    சினிமா, ரெயில் என்று செல்லும போது அவளுக்கு நேரத்தை பற்றிய சிந்தனை இல்லாமல் இல்லை. மருத்துவரிடம் செல்வது வங்கி போன்ற குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வது என்று பெண் தனக்குள் ஒரு கடிகாரத்தை மனதுக்குள் ஒடவிட்டபடிதான் இருக்கிறாள். பள்ளியில் குழந்தைகளை விட்டு வருவதிலும், அழைத்து வருவதிலும் பெண்கள் அனைவரும் அற்புதமான நேர நிர்வாகத்தை கடைப்பிடிக்கின்றனர்.

    குடும்பத்தினருக்கு சமையத்து போடுவதும், அவர்கள் தேவை அறிந்து உணவு பரிமாறுவதும் பெண்களின் நேர நிர்வாகத்துக்கு சிறந்த சான்று.

    பணிக்கு செல்லும் பெண்கள் இன்னும் கூடுதலாக நேர நிர்வாகத்தை கடைப்பிடிக்கின்றனர். பணியிடத்துக்கு ஒரு நாளும் தாமதமாக போகாமல் முன்கூட்டியே செல்வதையும் பார்க்கலாம்.

    ஆண்களில் சிலர் தங்களுக்கு நேரமே இல்லை. பிஸியாக இருக்கிறேன் என்று கூறி நேர நிர்வாகத்தை கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டுவார்கள். பெண்கள் அப்படியில்லை. கடிகாரத்தின் ஒவ்வொரு மணித்துளியிலும் தான் செய்ய வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து தான் செயல் படுகிறார்கள்.

    எனவே கணவரும், குடும்பத்தினரும் வீட்டை நிர்வகிக்கும் பெண்ணுக்கு தோள் கொடுத்து நேரத்தை திட்டமிட்டு செயல்படுத்தினால் வாழ்வில் முன்னேறலாம்.
    அதிக வெப்பம் கொண்ட காலத்தில் சருமம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது. தேவையான அளவு தண்ணீர் பருகுவது, கோடைக்கேற்ற குளிர்ச்சியான உணவுமுறை, மிதமான உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.
    பருவ கால மாற்றங்களின் போது உடலில் அதிக அளவு பாதிக்கப்படுவது சருமம் தான். அதிக வெப்பம் கொண்ட காலத்தில் சருமம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது. தேவையான அளவு தண்ணீர் பருகுவது, கோடைக்கேற்ற குளிர்ச்சியான உணவுமுறை, மிதமான உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்கலாம். அவை தவிர சருமத்தில் பூசப்படும்  பேஸ்பேக், மாஸ்க் பழங்களை கொண்டு பேஸ்பேக் தயாரித்து பயன்படுத்துவது நல்ல பலன்களை அளிக்கிறது. சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும் சில குறிப்புகள்...

    வெள்ளிரி மற்றும் பால் பேக்

    ஒரு சிறிய அளவு வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி மிச்சியில் போட்டு அதனுடன் 50 மிலி பால் மற்றும் 1 டீஸ்பூன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இந்த விழுதை முகத்தில் பூசி 20 முதல் 25 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.

    வெள்ளிக்காயின் சாறு சரும பாதிப்புகளை குணமாக்குகிறது. மற்றும் வெயிலால் கருத்த சருமத்தை அதன் இயல்பு நிலைக்கு திரும்ப செய்கிறது. இந்த பேஸ்பேக் சருமத்துக்கு புத்துணர்வை அளித்து வறட்சி ஏற்படுத்தாமல் மென்மையாக பராமரிக்க உதவுகிறது.

    மாம்பழ மற்றும் தயிர் பேக்

    நன்குபழுத்த மாம்பழத்தின் சதைப்பகுதியை ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதனுடன்  2 டீஸ்பூன் கெட்டியான தயிர் சேர்த்து நன்கு குழைத்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை காத்திருந்த பின்னர் முகத்தை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.

    மாம்பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஈ சத்துக்கள் புற ஊதாக்கதிர்களின் பாதிப்பிலிருந்து சருமத்தை காக்கின்றன. சருமத்தின் இயல்பான தன்மையை மீட்க உதவுகின்றன. முகப்பரு ஏற்படாமல் தடுக்கின்றன. தயிரிலுள்ள லாக்டிக் ஆசிட் சருமத்தை மென்மையாக்குகிறது.

    தக்காளி பேக்

    2 டீஸ்பூன் தக்காளி சாறுடன், ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கெட்டியான கலவையாக தயார் செய்யவும். இந்த கலவையை முகத்தில் பூசிவிட்டு 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவலாம்.

    தக்காளியில் நிறைய உயிர்சத்துக்களும், வைட்டமின் சியும் உள்ளன. அதிலுள்ள அஸ்கார்பிக் ஆசிட் எனும் ஆன்டி ஆக்சிடன்ட் சருமத்தின் துளைகளுக்குள் பரவி சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது.

    நெல்லிக்காய் தயிர் பேக்

    2 டீஸ்பூன் அரைத்த நெல்லிக்காய் விழுதுடன் ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பூசவும். இந்த கலவை நன்றாக உலர்ந்ததும் முகத்தை கழுவவும்.

    நெல்லிக்காய் சருமத்தில் கொலாஜின் உற்பத்தியை அதிகரித்து இளமையுடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும் சருமத்தின் தளர்ச்சியை அகற்றி அதன் இயல்பான நிலைக்கு மாற்றவும் உதவுகிறது.
    தாய்மையடைந்திருந்தால் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உண்டு. கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்கள் அதாவது முதல் 90 நாட்கள் மிகவும் முக்கியமானவை.
    கொரோனா பீதியால் மாதக் கணக்கில் குடும்பத்தினர் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததால் புதிய சவால் ஒன்று உலகிற்கு ஏற்பட்டிருக்கிறது. அதாவது தம்பதிகள் அனைவரும் ஒன்றாகவே இருந்ததால், அதிக அளவில் கர்ப்பிணிகள் உருவானார்கள். அதனால் அடுத்தடுத்த மாதங்களில் உலகம் முழுக்க லட்சக்கணக்கில் குழந்தைகள் பிறக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் கணித்திருக்கிறது. அந்த அடிப்படையில் இந்தியாவிலும் கர்ப்பிணிகள் அதிகரித்து மக்கள் தொகை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் 90 நாட்களில்..

    நீங்கள் ஒருவேளை தாய்மையடைந்திருந்தால் கவனிக்க வேண்டியவிஷயங்கள் சில உண்டு. கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்கள் அதாவது முதல் 90 நாட்கள் மிகவும் முக்கியமானவை. கரு உருவாகி கர்ப்பப்பையில் நிலைக்கும் காலம் அது. இந்த காலகட்டத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருக்கும். அதனால் வெளியில் இருந்து நோய்க்கிருமிகள் பாதித்துவிட்டால் உடனடி விளைவுகள் ஏற்படும். அதனால் மிகுந்த கவனம் தேவை. பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்திடவேண்டும். இருமல், சளி போன்றவை தோன்றாமல் பார்த்துக்கொள்வதும் நல்லது.

    நோய்க்கிருமிகள் காற்று மற்றும் நீர் மூலமாகவே பெருமளவு பரவும். அதனால் நோய்க்கிருமிகள் எந்த வகையிலும் அணுகாதவாறு உடலை பாதுகாத்துக்கொள்ளவேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீரை பருகி, உடலில் நீர்ச் சத்து குறையாமல் கவனித்துக்கொள்வது அவசியம். முதல் மூன்று மாதங்கள் வளர்ப்பு பிராணிகளிடம் அதிக நெருக்கத்தை உருவாக்கிக்கொள்ளக்கூடாது. அவைகளை பராமரிப்பதையும் தவிர்த்திடுவது நல்லது.

    கர்ப்பத்தின் தொடக்க காலத்தில் சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் கிருமித் தொற்றால் நிறைய பெண்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் கழிப்பிடத்தை சுத்தமாகவைத்து பயன்படுத்துங்கள். பொது கழிப்பிடத்தை பயன்படுத்துவதை தவிர்த்திடலாம். சிறுநீரை அடக்கிவைப்பதையும் தவிர்க்கவேண்டும். போதுமான அளவு தண்ணீர் பருகுவதோடு, அந்தரங்க சுத்தத்தையும் பேணவேண்டும்.

    உணவிலும் அதிக கவனம் அவசியம். முடிந்த அளவுக்கு வீட்டில் தயாரிக்கும் உணவுகளையே சாப்பிடுங்கள். வெளி உணவுகளை தவிர்த்திடுங்கள். முதல் மூன்று மாதங்களில் நிறைய பெண்கள் வாந்தி தொந்தரவால் அவதிப்படுவார்கள். அதனால் அவர்கள் கெட்டியான உணவுகளை சாப்பிட விரும்புவதில்லை. சாப்பிட விரும்பினாலும் அதற்கு உடல் ஒத்துழைக்காது. வாந்தியும், இதர நெருக்கடிகளும் இருந்துகொண்டிருந்தாலும் போதுமான அளவில் சாப்பிட்டுதான் ஆகவேண்டும்.

    பிடித்தமான, எளிதில் செரிமானமாகும் உணவினை அவ்வப்போது குறைந்த அளவுகளில் சாப்பிட்டு வரலாம். அவை சமச்சீரான சத்துணவாகவும் இருக்கவேண்டும். கர்ப்ப காலத்தில் தாயின் உடல் நலத்தோடு, வயிற்றில் இருக்கும் சிசுவின் நலனையும் கருத்தில்கொண்டு அதற்கு ஏற்ற உணவினை உண்ணுவது அவசியம். பழம், காய்கறி, சாலட், சத்து மாவு கஞ்சி போன்றவைகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவது நல்லது. வாந்தி எடுத்தாலும் இத்தகைய உணவுகளை சிறிது சிறிதாக சாப்பிட்டுக்கொண்டிருக்கவேண்டும்.

    இந்த காலகட்டத்தில் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் முடிந்த அளவு டாக்டரின் ஆலோசனையை பெற்று செயல்படுவது நல்லது. பொது மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு சென்றால், தாய்மையடைந்திருக்கும் தகவலை மறந்திடாமல் கூறவேண்டும். உடலை வருத்தும் எந்த வேலையையும் செய்யக்கூடாது. சமையல் அறையில் அதிக நேரம் நின்றுகொண்டே வேலைபார்ப்பதை தவிர்த்திடுங்கள்.

    அவ்வப்போது உட்கார்ந்தோ, படுத்தோ உடலுக்கு ஓய்வுகொடுக்கவேண்டும். தேவையில்லாமல் பயந்து உடலையோ, மனதையோ வருத்திக்கொள்ளக்கூடாது. குறிப்பாக மனதை பதறவைக்கும் செய்திகளை டெலிவிஷன்களில் பார்க்கக்கூடாது. மனதிற்கு பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடவேண்டும். இசையை கேட்டு மனதை எப்போதும் இயல்பாக வைத்திருப்பதும் அவசியம்.

    முதல் மூன்று மாதங்கள் கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் அமர்ந்து வேலைபார்ப்பது நல்லதல்ல. அவ்வப்போது எழுந்து சில நிமிடங்கள் நடந்துவிட்டு மீண்டும் வந்து வேலையை செய்யவேண்டும். மனதிற்கும், உடலுக்கும் சோர்வினை ஏற்படுத்தக்கூடிய எந்த வேலையையும் செய்யவேண்டாம். பயணங்களையும் முடிந்த அளவு தவிர்த்திடலாம். அடிவயிற்றில் வலியோ, ரத்தக் கசிவோ இருந்தால் உடனடியாக மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையை பெறுங்கள். தாயின் கவனம் எப்போதும் தன் வயிற்றில் வளரும் குழந்தை மீது இருக்கவேண்டும். முதல் மூன்று மாதங்கள் மட்டுமின்றி மொத்த பத்து மாதங்களும் கர்ப்பிணிகள் கவனமாகத்தான் இருக்கவேண்டும்.
    ×